TNPSC Current Affairs – Oct 11, 2022

0
26

CA 11.10.2022(Tamil Version)

மாநில செய்திகள்

1. தனுஷ்கோடியில் 30 ஜிகாவாட் மின் உற்பத்திக்கான காற்று வளம் கடலில் காற்றாலை அமைக்க இடம் தேர்வு: மத்திய எரிசக்தி துறை தகவல்

 • மின் உற்பத்திக்கான காற்று வளம் உள்ளதால் நாட்டில் முதன்முறையாக கடலில் காற்றாலை அமைக்க தனுஷ்கோடி கடற்பகுதியை மத்திய எரிசக்தி துறை தேர்வு செய்துள்ளது.
 • இந்தியாவில் கடலில் காற்றாலை அமைத்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை, மத்திய அரசு கடந்த 09.09.2015 அன்று வெளியிட்டது.
 • இதன்படி மத்திய எரிசக்தி துறையின் சார்பில் இந்த திட்டத்தை விரிவுபடுத்தும் நோக்கத்தில் நாட்டில் உள்ள 7600 km நீள கடற்பரப்பில் காற்றின் வேகத்தை அளவிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
 • இதன் முடிவுகள் அதிக காற்று வீசும் கடற்கரை உள்ள மாநிலங்களாக தமிழகம் மற்றும் குஜராத் தேர்வு செய்யப்பட்டனர்.
 • இதில் மன்னார் வளைகுடா தனுஷ்கோடி கடற்பகுதியில் மணிக்கு 29 கிலோமீட்டர் வேகத்திலும், குஜராத் மாநிலத்தில் உள்ள கட்ச் வளைகுடா பகுதியில் மணிக்கு 24.5 km வேகத்திலும் காற்று வீசுவது தெரியவந்தது.
 • இதற்காக ராமேஸ்வரம் அருகே மன்னார் வளைகுடா தனுஷ்கோடி அரிச்சல் முனை கடல் பகுதியில் உயர் கோபுரம் அமைத்து அதிநவீன கருவியை பொருத்தி காற்றின் வேகம் குறித்த ஆய்வு பணிகள் 2015ல் இருந்து 2020 ஆம் ஆண்டு வரையிலும் நடைபெற்றது. 
 • இந்திய கடலோரப் பகுதியில் 70 ஜிகாவாட் மின் உற்பத்திக்கான காற்று வளம் உள்ளது.
 • இதில் தமிழகத்திலும், குஜராத்திலும் தலா 35 ஜிகாவாட் காற்று வளம் உள்ளது.
 • குறிப்பாக தனுஷ்கோடியில் சுமார் 30 ஜிகாவாட் காற்று வளம் உள்ளது.
 • இங்கு இரண்டு காற்றாலை டர்பைன்களை நிறுவ உள்ளனர்.

மத்திய செய்திகள்

1. யு-17 மகளிர் உலகக் கோப்பை கால்பந்து

 • 17 வயதுக்கு உள்பட்ட மகளிருக்கான ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டி ஒடிசா மாநிலம், புவனேஸ்வரத்தில் தொடங்குகிறது.

2. பொருளாதாரம்: மூன்று அமெரிக்கர்களுக்கு நோபல்

 • வங்கிகள் குறித்தும் நிதி நெருக்கடி தொடர்பாகவும் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டதற்காக அமெரிக்காவை சேர்ந்த நிபுணர்கள் மூவருக்கு நடப்பாண்டுக்கான பொருளாதாரத்துக்குரிய நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.
 • அமெரிக்க மத்திய வங்கியின் தலைவராக 2006 முதல் 2014 வரை பணியாற்றிய பென் பெர்னன்கே, நிபுணர்கள் டக்ளஸ் டபிள்யூ.டைமண்ட், பிலிப் எச்.டிப்விக் ஆகியோருக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
 • உலக நாடுகள் 2008 ஆம் ஆண்டில் பொருளாதார நெருக்கடியை சந்தித்தபோது அதிலிருந்து மீள்வதற்கு மூவரின் ஆராய்ச்சிகளும் முக்கிய பங்கு வகித்தன என்றனர்.
 • முக்கிய ஆராய்ச்சி:
 • 1930 ஆம் ஆண்டில் உலக நாடுகள் சந்தித்த பொருளாதார நெருக்கடிக்கு வங்கிகளின் தோல்வியே முக்கிய காரணம் என தனது 1983 ஆம் ஆண்டு ஆய்வு அறிக்கையில் பெர்னன்கே வெளிப்படுத்தினார்.

3. முலாயம் சிங் யாதவ் மறைவு

 • உத்தரபிரதேச முதல்வர், பாதுகாப்பு துறை அமைச்சர் என பல்வேறு பதவிகளை வகித்தவரும் சமாஜவாதி கட்சி நிறுவனருமான முலாயம் சிங் யாதவ் உடல் நலக்குறைவால் காலமானார்.
 • ஃசைபயி கிராமத்தில் 1939 ஆம் ஆண்டு நவம்பர் 22ஆம் தேதி பிறந்த முலாயம், மாநிலத்தின் பெரும் அரசியல் செல்வாக்கு பெற்ற கட்சியான சமாஜவாதியை நிறுவிய பெருமையை பெற்றவர்.
 • பதின்பருவத்தில் இருந்தே அரசியலில் கவனம் செலுத்தியவர்.
 • 1967 ஆம் ஆண்டு முதல் முறையாக சட்டப்பேரவை உறுப்பினர் ஆனார்.
 • உத்திர பிரதேசத்தின் முதல்வராக 1989-91, 1993-95, 2003-07 ஆகிய காலகட்டங்களில் பதவி வகித்துள்ளார்.
 • பாதுகாப்பு துறை அமைச்சராக 1996 முதல் 1998 வரை செயல்பட்டுள்ளார்.
 • மாநில சட்டப்பேரவை உறுப்பினராக 10 முறையும், மக்களவை உறுப்பினராக ஏழு முறையும் முலாயம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

4. 7100 ஒளி ஆண்டு தூரத்தில் உள்ள கண் கவரும் குமிழ் மூடிய நெபுலா

 • பூமியிலிருந்து விண்ணில் 7,100 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ள கண் கவரும் குமிழ்மூடிய நெபுலா புகைப்படத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் நாசா வெளியிட்டுள்ளது.
 • விண்ணில் உள்ள பல மர்மங்களை கண்டறிய உலக நாடுகள் பல செயற்கைக்கோள்களையும், தொலைநோக்குகளையும் அனுப்பிய தகவல்களை பெற்று வருகின்றன.
 • அந்த வரிசையில் அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனம் நாசா, கடந்த 1990 ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி ஹப்பிள் தொலைநோக்கியை விண்ணில் நிலை நிறுத்தியது.
 • தற்போது பூமியிலிருந்து 7,100 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ள பபுல் நெபுலாவை நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கி படம் எடுத்து அனுப்பியுள்ளது.
 • விண்மீன்கள் கூட்டத்திற்குள் உள்ள அந்த பபுள் நெபுலா கண் கவரும் வகையில் வண்ணமயமாக உள்ளது.
 • நெபுலாக்கள் என்பது விண்வெளியில் காணப்படும் நட்சத்திரங்கள், தூசி மற்றும் ஹைட்ரஜன், ஹீலியம் போன்ற வாயுக்களால் உருவாகும் பெரிய மேகத்தை குறிக்கும்.
 • இன்னும் ஒன்று முதல் இரண்டு கோடி ஆண்டுகளுக்குள் சூப்பர் நோவாவாக மாறிவிடும் என்று நாசா தெரிவித்துள்ளது.

CA 11.10.2022(English Version)

State news

1. Offshore wind resource for 30 GW power generation at Dhanushkodi Site Selection for Wind Farm: Central Energy Department Information

 • The Central Energy Department has selected the Dhanushkodi offshore area for setting up offshore wind farm for the first time in the country due to the availability of wind resources for power generation.
 • The central government announced the plan to set up offshore wind farms in India and generate electricity on 09.09.2015.
 • According to this, on behalf of the Central Energy Department, with the aim of expanding this project, a study was carried out by measuring the wind speed on the 7600 km long sea surface in the country.
 • The results showed that Tamil Nadu and Gujarat were selected as the states with the windiest coast.
 • In this, it was revealed that the wind speed was 29 km per hour in the Dhanushkodi area of ​​the Gulf of Mannar and 24.5 km per hour in the Gulf of Kutch region in the state of Gujarat.
 • For this purpose, a high tower was erected in the sea area of ​​Dhanushkodi Arichal Point near Rameswaram, Gulf of Mannar, and the study of wind speed was carried out from 2015 to 2020.
 • Indian coastal region has 70 GW wind power generation potential.
 • Of which Tamil Nadu and Gujarat have 35 GW of wind resources each.
 • Dhanushkodi in particular has about 30 GW of wind resources.
 • Two wind turbines are to be installed here.

Central News

1. U-17 Women’s World Cup Football

 • The FIFA Women’s Under-17 World Cup kicks off in Bhubaneswar, Odisha.

2. Economics: Nobel for three Americans

 • The current year’s Nobel Prize in Economics has been shared with three experts from the United States for their extensive research on banks and the financial crisis.
 • The Nobel Prize in Economics has been announced to Ben Bernanke, who served as the chairman of the US Federal Reserve from 2006 to 2014, and experts Douglas W. Diamond and Philip H. Dybwick.
 • When the world faced the economic crisis in 2008, the researches of the three played an important role in recovering from it.
 •  Main Research:
 • In his 1983 research report, Bernanke revealed that bank failures were the main cause of the global economic crisis in 1930.

3. Death of Mulayam Singh Yadav

 • Mulayam Singh Yadav, the founder of Samajwadi Party who held various posts like Chief Minister of Uttar Pradesh, Defense Minister passed away due to ill health.
 • Born on November 22, 1939 in Saibai village, Mulayam is credited with founding the state’s most politically influential party, Samajwadi.
 • Focused on politics since his teenage years.
 • Became a member of Legislative Assembly for the first time in 1967.
 • Served as Chief Minister of Uttar Pradesh in 1989-91, 1993-95, 2003-07.
 • Served as Defense Minister from 1996 to 1998.
 • Mulayam has been elected 10 times as a member of the state legislative assembly and seven times as a member of the Lok Sabha.

4. Eye-catching Bubble Nebula 7100 light-years away

 • The American space agency NASA has released a photo of the eye-catching bubble nebula 7,100 light-years away from Earth.
 • To discover many mysteries in the sky, countries of the world are receiving information by sending many satellites and telescopes.
 • In that line, the United States’ space exploration agency NASA launched the Hubble telescope on April 24, 1990.
 • NASA’s Hubble Space Telescope has imaged the Bubble Nebula, which is currently 7,100 light-years away from Earth.
 • The ‘Bubble Nebula’ within the constellation is eye-catchingly colorful.
 • Nebula refers to a large cloud of stars, dust and gasses like hydrogen and helium found in space.
 • According to NASA, it will become a supernova within one to two million years.