TNPSC Current Affairs – Aug 19, 2022

0
36

CA 19.08.2022(Tamil Version)

 
முக்கிய தினங்கள் 

1. 19.08.2022  

 • உலக புகைப்பட தினம் 
 • 2022 உலக புகைப்பட தினத்தின் கருத்துரு “லென்ஸ் மூலம் தொற்றுநோய் பூட்டுதல்” என்பதாகும். 

மாநில செய்திகள் 

1. கருடா செயலி  

 • வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகளை வாக்குச்சாவடி அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று மேற்கொண்டு வருகின்றனர்.  
 • இதற்காக அவர்கள் தங்களது கைபேசியில் கருடா என்ற செயலியை பயன்படுத்துகிறார்கள்.  
 • இந்த செயலி மூலம் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கலாம்.  
 • ஆனால் இந்த செயலி வசதியை வாக்குச்சாவடி அலுவலர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்.  
 • தமிழ்நாடு முழுவதும் கடந்த 17ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை 37 லட்சத்து 81 ஆயிரத்து 498 பேர் இணைத்துள்ளனர்.  
 • இது மொத்த வாக்காளர்களுடன் ஒப்பிடும்போது 6.08 சதவீதம். 

2. ஆன்லைன் ரம்மிக்கு தடை 

 • ஆன்லைன் ரம்மியை தடை செய்வது தொடர்பாக அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.  
 • ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பாக புதிய அவசர சட்டம் இயற்றுவதற்காக தமிழக அரசுக்கு பரிந்துரைகள் வழங்க சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு குழு அமைத்தது. 
 • அக்குழுவின் அறிக்கை அரசின் தீவிர பரிசீலனையில் உள்ளது.  
 • இதனிடையில் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வது, ஒழுங்குபடுத்துவது தொடர்பாக கருத்துக்களை தெரிவிக்கலாம் என தமிழக அரசு கேட்டுக் கொண்டது. 

3. காலமானார் தமிழறிஞர் நெல்லை கண்ணன்  

 • தமிழறிஞர், இலக்கிய பேச்சாளர், பட்டிமன்ற பேச்சாளர், நடுவர், ஆன்மீக சொற்பொழிவாளர், அரசியல்வாதி என பன்முகத்திறமை கொண்டவர்.  
 • குறுக்குத்துறை ரகசியங்கள் 1, குறுக்குத்துறை ரகசியங்கள் 2, ஆகிய நூல்களையும் வடிவுடை காந்திமதியே, காதல் செய்யாதவர்கள் கல்லெறியுங்கள், திக்கணைத்தும் சடைவீசி, பழம் பாடல் உள்ளிட்ட கவிதை நூல்களையும் எழுதியுள்ளார்.  
 • இவருக்கு 2022 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் இளங்கோவடிகள் விருது வழங்கப்பட்டது. 

4. 65 ஆவது காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாடு  

 • கனடா நாட்டின் ஹாலிக்பேக்ஸ் நகரில் 65 ஆவது காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாடு வரும் ஆகஸ்ட் 22 முதல் 26 வரை நடைபெற உள்ளது.  
 • இந்த மாநாட்டில் தமிழகத்தின் பிரதிநிதியாக பேரவை தலைவர் மு.அப்பாவு கலந்து கொள்கிறார். 

மத்திய செய்திகள் 

1. ‘ஸ்வராஜ் 

 • நாட்டின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின நிறைவு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அதிகம் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்களின் முழுமையான வரலாற்றை ஸ்வராஜ் என்ற தலைப்பில் 75 வாரங்களுக்கு தொலைக்காட்சி  தொடராக ஒளிபரப்ப தூர்தர்ஷன் திட்டமிட்டுள்ளது. 

2. பாஸ் ஸ்கேம் 

 • தமிழகத்தில் புதிதாக உருவாகியுள்ள பாஸ் ஸ்கேம் என்ற மோசடியில் பொதுமக்கள் சிக்காமல் எச்சரிக்கையுடன் இருக்கும்படி தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் சி.சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.  
 • ஆன்லைனில் புதிய வகை மோசடி தற்போது நடைபெறுகிறது.  
 • நீங்கள் வேலை செய்யும் இடத்தில் உள்ள பெரிய அதிகாரி அல்லது மாவட்ட ஆட்சியர், டிஜிபி போன்றவர்கள் கைபேசி மூலமாக உங்களிடம் பேசுவது போன்று பேசி 
 • நான் ஆலோசனை கூட்டத்தில் இருக்கிறேன்.  
 • எனக்கு அவசரமாக அமேசான் பரிசு கூப்பன் தேவைப்படுகிறது.  
 • ஒரு கூப்பன் விலை ரூபாய் 10,000 எனக்கு 10 கூப்பன் வாங்கி அனுப்புங்கள் நான் அப்புறம் பணம் கொடுத்து விடுகிறேன் என்று தெரிவிப்பார்.  
 • காவலன் செயலியை உங்களுடைய கைபேசியில் பதிவிறக்கம் செய்து புகாரை பதிவு செய்யுங்கள்.  
 • மேலும் இதில் ஆன்லைன் மோசடி என்பதை தொட்டாலே 1930 என்ற இலவச தொலைபேசி எண்ணுக்கு அழைப்பு சென்றுவிடும்.  
 • இதன் மூலம் உங்களுடைய பணத்தை நீங்கள் காப்பாற்றிக் கொள்ளலாம். 

3. இரு அடுக்கு குளிர்சாதன மின்சார பேருந்து  

 • நாட்டின் முதல் இரு அடுக்கு குளிர்சாதன மின்சார பேருந்து மும்பையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிமுகப்படுத்தினார்.   
 • நாட்டில் ஏற்படும் காற்று மாசில் 35 சதவீதம் டீசல் மற்றும் பெட்ரோல் பயன்பாட்டால் ஏற்படுகிறது.  
 • அதன் காரணமாகத்தான் இறக்குமதியை குறைத்து காற்று மாசை ஏற்படுத்தாத முழுவதும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட குறைந்த விலையிலான மாற்று எரிபொருள் நமக்கு அவசியமாகிறது என்றும் அவர் கூறினார்.  
 • மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மின்சாரத்தில் இயங்கக்கூடிய நாட்டின் முதல் இரட்டை அடிக்கு குளிர்சாதன பேருந்து சேவையை  மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தொடக்கி வைத்தார்.  
 • வாகனங்களுக்கு மின்சாரம், எத்தனால், மெத்தனால், பயோ-டீசல், பயோ-சிஎன்ஜி (இயற்கைஎரிவாயு),  பயோ-எல்என்ஜி (திரவ இயற்கை எரிவாயு), ஹைட்ரஜன் போன்ற மாற்று எதிர் பொருள் பயன்பாட்டை தொடங்க வேண்டிய நேரம் இது. 

4. நேதாஜியின் அஸ்தியில் மரபணு சோதனை  

 • ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள ரெங்கோஜி ஆலய அஸ்தியை மரபணு சோதனைக்கு உட்படுத்துமாறு இந்தியா, ஜப்பான் அரசுகளிடம் கோரவுள்ளதாக நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் மகளான அனிதா போஸ் தெரிவித்துள்ளார். 
 • அதிநவீன மரபணு சோதனையை செய்ய நவீன தொழில்நுட்பம் வழிவகுக்கிறது.  
 • கடந்த 1945 இல் நேதாஜி இறந்தாரா? இல்லையா? என்று இன்னமும் சந்தேகப்பவர்களுக்கு ரெங்கோஜி ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளது நேதாஜியின் அஸ்தி தான் என்பதை நிரூபிக்க இது ஒரு வாய்ப்பாகும் என்றார். 

5. அன்னை நாயகி 

 • ரஷ்யாவில் சரிந்து வரும் மக்கள் தொகையை மீண்டும் அதிகரிக்க பத்து குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ளும் பெண்களுக்கு 10 லட்சம் ரூபில் (ரூபாய் 13.30 லட்சம்) வெகுமதியுடன் கூடிய அன்னை நாயகி என்ற விருதை அளிக்க இருப்பதாக அதிபர் விளாதிமீர் அறிவித்துள்ளார்.  
 • இரண்டாம் உலகப் போரின்போது ஸ்டாலின் அறிமுகப்படுத்திய இந்த விருது தற்போது மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

6. பெயர் மாற்றம் பெற்றன குரங்கு அம்மை ரகங்கள்  

 • குரங்கு அம்மை தீநுண்மியின் துணை ரகங்களுக்கு காங்கோ படுகை, தென்ஆப்பிரிக்க கிளேட் என்றிருந்த பெயர்களை ‘கிளேட் 1, கிளேட் 2’ என உலக சுகாதார அமைப்பு மாற்றியுள்ளது. 

விளையாட்டு செய்திகள் 

1. பாரா துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு மூன்று பதக்கங்கள் 

 • தென் கொரியாவில் நடைபெறும் பாரா உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் முதல் நாளில் இந்தியா 1 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் என மூன்று பதக்கங்கள் வென்றன.  
 • இதில் கலப்பு பி 325 மீட்டர் பிஸ்டல் எஸ்ஹெச் 1 பிரிவில் இந்தியாவின் ராகுல் ஜாக்கர் 20 புள்ளிகள் உடன் தங்கம் வெல்ல அதே பிரிவில் இந்திய வீராங்கனை பூஜா அகர்வால் 14 புள்ளிகளுடன் வெண்கல பதக்கம் பெற்றார். 

CA 19.08.2022(English Version)

Important days 

1. 19.08.2022 

 • World Photography Day 
 • The theme of World Photography Day 2022 is “Pandemic Lockdown through the lens.” 

State news 

1. Garuda app 

 • Polling officers are going door to door to link Aadhaar number with voter list. 
 • For this they use an app called Garuda on their mobile phone. 
 • Through this app you can link Aadhaar number with voter list. 
 • But this app facility can be used only by Polling Officers. 
 • 37 lakh 81 thousand 498 people have linked Aadhaar number with voter list till 17th across Tamil Nadu. 
 • It is 6.08 percent compared to total electorate. 

2. Ban on Online Rummy 

 • Chief Minister M.K.Stalin held a consultation with officials regarding the ban on online rummy. 
 • A committee headed by retired Madras High Court judge K. Chanduru was formed to make recommendations to the Tamil Nadu government for enacting a new Ordinance regarding online games. 
 • The committee’s report is under serious consideration by the government 
 • In the meantime, the Tamil Nadu government has asked for feedback on banning and regulating online games. 

3. Tamil scholar Nellai Kannan passed away 

 • Multi-talented Tamil Scholar, Literary Orator, Bar Speaker, Arbiter, Spiritual Orator, Politician. 
 • He has written books such as Krassutharya Secrets 1, Krassatharya Secrets 2, Vadivudai Gandhimatiye, Loveless People Are Killed, Thikkanithuthu Sadaiveesi and Pasam Song. 
 • He was awarded the Elangovadilar Award of the Tamil Nadu Government for the year 2022. 

4. 65th Commonwealth Parliamentary Conference 

 • The 65th Commonwealth Parliamentary Conference is scheduled to be held from August 22 to 26 in Halifax, Canada
 • Assembly President M. Appavu is participating in this conference as the representative of Tamil Nadu. 

Central News 

1. ‘Swaraj’ 

 • Doordarshan plans to telecast the complete history of little-known freedom fighters titled ‘Swaraj’ for 75 weeks as part of the country’s 75th Independence Day celebrations. 

2. Boss Scam 

 • Director General of Tamil Nadu Police C. Shailendrababu has said that the public should be careful not to get caught in the scam called Boss Scam which has recently developed in Tamil Nadu. 
 • A new type of fraud is taking place online. 
 • Talk as if senior officer or District Collector, DGP etc. at your place of work are talking to you through mobile phone. 
 • I am in a consultation meeting. 
 • I urgently need amazon gift coupon. 
 • The price of one coupon is Rs 10,000, buy 10 coupons and send me and I will pay later. 
 • Download Kavalan app on your mobile and register a complaint. 
 • Also if you touch the online scam, the call will go to the toll free number 1930. 
 • By this you can save your money. 

3. Double Decker Refrigerated Electric Bus 

 • Union Minister Nitin Gadkari launched the country’s first double-decker refrigerated electric bus in Mumbai. 
 • 35 percent of air mass in the country is caused by diesel and petrol use. 
 • That is why we need low cost alternative fuel which is domestically produced and does not cause air pollution by reducing imports, he said. 
 • Union Minister Nitin Gadkari inaugurated the country’s first electric double-decker air-conditioned bus service at an event in Mumbai. 
 • It is time to start using alternative counter fuel like Ethanol, Methanol, Bio-Diesel, Bio-CNG (Natural Gas), Bio-LNG (Liquefied Natural Gas), Hydrogen etc. for vehicles. 

4. Genetic testing on Netaji’s remains 

 • Anita Bose, daughter of Netaji Subhash Chandra Bose, has said that she will request the governments of India and Japan to undergo a genetic test on the remains of Rengoji Temple in Tokyo, the capital of Japan. 
 • Modern technology leads to sophisticated genetic testing. 
 • Did Netaji die in 1945 Is it? or Isn’t it? He said that this is an opportunity to prove to those who still doubt that it is Netaji’s ashes kept in Rengoji Temple. 

5. Mother heroine 

 • President Vladimir Puthin has announced a “Mother Heroine” award with a reward of 10 lakh rubles (Rs 13.30 lakh) for women who have more than 10 children to boost Russia’s declining population. 
 • This award, introduced by Stalin during the Second World War, has now been re-introduced. 

6. Renamed monkey measles varieties 

 • The World Health Organization has changed the names of monkey measles subspecies from ‘Congo Basin, South African Clade’ to ‘Clade 1, Clade 2’. 

Sports news 

1. Para Shooting: Three medals for India 

 • India bagged 1 gold, 1 silver and 1 bronze on the first day of the Para World Cup shooting competition in South Korea. 
 • In Mixed B 325m Pistol SH1 category India’s Rahul Jakar won gold with 20 points while Indian athlete Pooja Aggarwal bagged bronze medal with 14 points in the same category.