TNPSC Current Affairs – Aug 20, 2022

0
38

CA 20.08.2022(Tamil Version)

 
முக்கிய தினங்கள் 

1. 20.08.2022 

  • சத்பவ்னா திவாஸ் அல்லது நல்லிணக்க தினம்.  
  • இந்திய மக்கள் மற்றும் அனைத்து மதங்களுக்கிடையில் தேசிய ஒருமைப்பாடு, அமைதி, பாசம் மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது 

மாநில செய்திகள் 

1. விவசாயிகள் ஊரகத்தொழிலாளர்களுக்கானசில்லறைப் பணவீக்கம் அதிகரிப்பு  

  • தமிழகம் முதலிடம் 
  • விவசாய தொழிலாளர்களுக்கான பணவீக்க மதிப்பு நாட்டிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் 1.301 புள்ளிகளாக இருந்தது. 
  • ஹிமாச்சலில் குறைந்தபட்சமாக 890 புள்ளிகளாக இருந்தது. 
  • ஊரகத் தொழிலாளர்களுக்கான பணவீக்க மதிப்பில் 1.290 புள்ளிகளுடன் தமிழகம் முதலிடத்திலும், 942 புள்ளிகளுடன் ஹிமாச்சல் கடைசி இடத்திலும் இருந்தன. 
  • விவசாய தொழிலாளர்களுக்கான பணவீக்கம் (சிபிஐ – ஏஎல்) 6.60 சதவீதமாக அதிகரித்துள்ளது.  
  • இது கடந்த ஜூனில் 6.43 சதவீதமாக இருந்தது.ஊரகத்தொழிலாளர்களுக்கான பணவீக்கம் (சிபிஐ–ஆர்எல்) 6.82 சதவீதமாக அதிகரித்துள்ளது.  
  • இது கடந்த ஜுனில் 6.76 சதவீதமாக இருந்தது.  
  • கடந்த ஜூலை மாதத்தில் விவசாயம் மற்றும் கிராமப்புற தொழிலாளர்களுக்கான ஒட்டுமொத்த பணவீக்க மதிப்பு 6 புள்ளிகள் அதிகரித்து முறையே 1131 மற்றும் 1143 ஆக இருந்தது. 

2. தமிழகம் மின்வாரியத்திற்கு விருது  

  • அதிக நிலக்கரி கையாண்டதற்காக, தமிழக மின்வாரியத்திற்கு, ஒடிசாபாரதீப் துறைமுகம் விருது வழங்கியுள்ளது.  
  • தமிழக மின்வாரியத்திற்கு, 4,320 மெகாவாட்திறனில், 5 அனல் மின் நிலையங்கள் உள்ளன. 
  • பாரதீப்துறைமுக ஆணையம், 2021-22 ஆம் நிதி ஆண்டில், ‘பெஸ்ட்எக்ஸ்போர்ட்டர் என்ற பிரிவின்கீழ் அதிக நிலக்கரியை கையாண்டதற்காக, தமிழக மின்வாரியத்திற்கு விருது வழங்கியுள்ளது. 

3. வீரம் விவேகத்திற்கு அடையாளம்  

  • ஒண்டிவீரன் வீரத்துக்கும் விவேகத்துக்கும் அடையாளமாக விளங்கி, முதல் சுதந்திரத் தீயை மூட்டிய ஒண்டிவீரன், தன் 61 வது வயதில், 1771 ஆகஸ்ட் 20-ல் மறைந்தார்.  
  • அவரின் 251 வது நினைவு நாள் இன்று.  
  • தபால் தலை வெளியீடு.  
  • இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முன்னோடியான ஒண்டிவீரனின் நினைவு தபால் தலையை வெளியிட மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சர்  அஸ்வினி வைஷ்ணவ் ஒப்புதல் அளித்தார். 
  • அதன்படி, திருநெல்வேலியில், ஒண்டிவீரனின் நினைவு தபால் தலையை, மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் முருகன்  என்று  வெளியிடுகிறார். 

மத்திய செய்திகள் 

1. ஜல் ஜீவன் திட்டம் 

  • கோவா அரசின் அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டமானது கிராமப்புறங்களில் 100% நிறைவேற்றப்பட்டது.   
  • கடந்த மூன்று ஆண்டுகளில் ஜல் ஜீவன் திட்டம் மூலம் நாடு முழுவதும் உள்ள ஏழு கோடி கிராம குடும்பங்களுக்கு குழாய் வழி குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 

CA 20.08.2022(English Version)

Important days 

1. 20.08.2022  

  • Satbhavna Diwas or Reconciliation Day. 
  • The day is observed with the aim of promoting national unity, peace, affection and harmony among the people of India and all religions. 

State news 

1. Increase in retail inflation for farmers and rural workers 

  • Tamil Nadu is number one 
  • Inflation rate for agricultural workers was highest in the country at 1.301 points in Tamil Nadu. 
  • Himachal had the lowest score of 890 points. 
  • Tamil Nadu ranked first with 1.290 points and Himachal ranked last with 942 points in inflation value for rural workers. 
  • Inflation for agricultural laborers (CPI – AL) increased to 6.60 percent. 
  • It was 6.43 percent in last June.Inflation for rural workers (CPI-RL) increased to 6.82 percent. 
  • It was 6.76 percent last June. 
  • The overall inflation rate for agriculture and rural labor rose by 6 points to 1131 and 1143 respectively in July last month. 

2. Award to Tamil Nadu Power Board 

  • Odisha Paradeep Port awarded to Tamil Nadu Power Board for high coal handling. 
  • Tamil Nadu Power Board has 5 thermal power plants with a capacity of 4,320 MW. 
  • India Ports Authority has awarded Tamil Nadu Power Board under the category of ‘Best Exporter’ for handling the most coal in the financial year 2021-22. 

3. Valor is a sign of prudence 

  • Ondiveeran A symbol of bravery and wisdom, Ondiveeran, who lit the first flame of independence, died on 20 August 1771 at the age of 61. 
  • Today is his 251st death anniversary. 
  • Issuance of postage stamps. 
  • Union Telecom Minister Ashwini Vaishnav approves release of commemorative postage stamp of Ondiveeran, pioneer of Indian freedom struggle. 
  • Accordingly, in Tirunelveli, the Union Minister of State for Information and Broadcasting is issuing a commemorative postage stamp of Ondivieran Murugan. 

Central News 

1. Jal Jeevan Scheme 

  • Government of Goa’s scheme to provide piped water to all households has been implemented 100% in rural areas. 
  • In the last three years, piped water connections have been provided to seven crore rural households across the country through the Jal Jeevan scheme.