TNPSC Current Affairs – Sep 26, 2022

0
28

CA 26.09.2022(Tamil Version)

மாநில செய்திகள்

1. பருந்து செயலி

 • குற்ற செயல்களை முன்னரே கண்டறிந்து தடுக்கும் வகையிலும், ரவுடிகளின் நடவடிக்கைகளை கண்காணிக்கும் வகையில் தமிழக காவல்துறையில் ‘பருந்து’ என்ற செயலி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

2. சைகை மொழி அகராதி

 • காதுக்கு கேளாத வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகளோக்கு பெரும் ஆதரவாக இருப்பது சைய்கை மொழி.
 • ஆனால் இந்தியாவில் சைகை மொழிக்காக தெளிவான விதிகளும், கொள்கைகளும் இல்லாதது பெரும் பிரச்சனையாக இருந்தது.
 • அதற்கு தீர்வு காணும் நோக்கில் இந்திய சைகை மொழி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் 2013 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. 
 • சைகை மொழி தினம் செப்டம்பர் 23ஆம் தேதி கொண்டாடப்பட்ட போது பல பள்ளிகளில் சைய்கை மொழி படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

3. மக்களை தேடி மருத்துவம்: 90 லட்சம் பேர் பயன்

 • கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம், சமணப்பள்ளி கிராமத்தில் ‘மக்களை தேடி மருத்துவம்’ என்கிற திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்.
 • ஒட்டுமொத்தமாக மக்களைத் தேடி மருத்துவத் திட்டம் 74% பொதுமக்கள் பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறார்கள்.
 • சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், நோய் ஆதரவு சிகிச்சை, இயன்முறை சிகிச்சை, சிறுநீரக பாதிப்பினால் டயாலிசிஸ் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்து பெட்டகங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.
 • மீதமுள்ள 26 சதவீதம் பொதுமக்களும் முழுவதுமாக பரிசோதனை செய்யப்பட்ட பிறகு பயனாளிகளின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டும் என்று நம்பிக்கை இருக்கிறது.

மத்திய செய்திகள்

1. கோடீஸ்வர இந்தியர்கள்

 • இந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்தபடி செல்கிறது.
 • 2021 நிலவரப்படி இந்தியாவில் ரூபாய் 8 கோடிக்கு மேல் சொத்து மதிப்பை கொண்டவர்களின் எண்ணிக்கை 7.96 லட்சமாக உள்ளது.
 • இந்த எண்ணிக்கை அடுத்த நான்கு ஆண்டுகளில் 2 மடங்கு உயர்ந்து 16.23 லட்சமாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
 • சமீபத்தில் ஐஎஃப்எல் 12 கோடிக்கு மேல் சொத்து மதிப்பு கொண்ட இந்தியர்களின் பட்டியலை வெளியிட்டது. இந்த பட்டியலில் 113 பேர் இடம் பெற்றுள்ளன.
 • சென்ற ஆண்டை விட கூடுதலாக 96 பேர் இந்த பட்டியலில் இணைந்துள்ளனர். ரியல் எஸ்டேட், மருந்து தயாரிப்பு, பெட்ரோ கெமிக்கல், மென்பொருள் ஆகிய துறைகள் அதிக எண்ணிக்கையில் கோடீஸ்வரர்களை உருவாக்கியுள்ளது.
 • டாப் 5 கோடிஸ்வரர்கள்
பெயர்கள்ரூபாய் லட்சம் கோடியில்
கௌதம் அதானி 10.94
முகேஷ் அம்பானி 7.94
சைரஸ் பூனாவாலா 2.05
ஷிவ் நாடார் 1.85
ராதாகிஷான் நமனி 1.75
 • இந்தியாவின் பணக்கார பெண் பால்குனி நாயர் ரூபாய் 38 ஆயிரம் கோடி.
 • இளம் வயது கோடீஸ்வர ஆண் கைவல்யா ரூபாய் ஆயிரம் கோடி .
 • இளம் வயது கோடீஸ்வர பெண் நேகா நர்கடே ரூபாய் 4700 கோடி .
 • அதிக சொத்து கொண்ட வெளிநாடு வாழ் இந்தியர் வினோத் சாந்திலால் அதானி ரூபாய் 1.69 லட்சம் கோடி .
 • கௌதம் அதானியின்  சகோதரரான இவரது ஒரு நாள் வருவாய் ரூபாய் 102 கோடி.
 • ஆயிரம் கோடிக்கு மேல் சொத்து கொண்டவர்கள் உள்ள டாப் 5 நகரங்கள்
நகரங்கள்எண்ணிக்கை
மும்பை 280
டெல்லி185
பெங்களூரு89
ஹைதராபாத்64
சென்னை51
 • இந்தியர்களின் சொத்து மதிப்பு உயர்வு பற்றி உலக ஏற்றத்தாழ்வு அறிக்கை 2022 என்ன சொல்கிறது?
 • பொருளாதார ரீதியாக மேல் நிலையில் உள்ள 10 சதவீதத்தினரிடம் நாட்டின் மொத்த வருவாயில் 57 சதவீதம் செல்கிறது.
 • பொருளாதார ரீதியாக கீழ் நிலையில் உள்ள 50 சதவீத மக்களிடம் நாட்டின் மொத்த வருவாயில் 13 சதவீதம் மட்டுமே செல்கிறது.
 • அந்த வகையில் உலகின் மிக மோசமான ஏற்றத்தாழ்வு நிலவும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது.

2.ஆயுஷ்மான் பாரத்மருத்துவ காப்பீடு திட்டம்

 • மத்திய அரசு சார்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டம் தொடங்கப்பட்டது.
 • இதன்படி ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூபாய் 5 லட்சம் வரை காப்பீடு வழங்கப்படுகிறது.
 • பொதுமக்களின் உடல்நிலை தொடர்பான அனைத்து விவரங்களும் ஒரே டிஜிட்டல் அட்டையில் சேமித்து வைக்கப்படும்.
 • மருத்துவரை சந்தித்து ஆலோசனை கேட்கும் நோயாளி இனி காகித ஆவணங்களை எடுத்துச் செல்ல தேவை இல்லை.
 • டிஜிட்டல் அட்டை மூலம் நோயாளியின் உடல்நிலை தொடர்பான அனைத்து விவரங்களையும் மருத்துவர் எளிதாக அறிந்து கொள்ள முடியும்.
 • முதல் கட்டமாக ஆறு யூனியன் பிரதேசங்களில் சோதனை அடிப்படையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.
 • பின்னர் கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி தேசிய அளவில் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கம் என்ற பெயரில் தேசிய டிஜிட்டல் சுகாதாரம் திட்டம் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது.
 • தினமும் 10 லட்சம் அட்டைகளை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
 • இதுவரை 19 கோடி பேருக்கு மருத்துவ காப்பீடு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
 • நாடு முழுவதும் சுகாதார துறையை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
 • இதன் ஒரு பகுதியாக ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் ஒரு மாவட்டத்திற்கு ரூபாய் 100 கோடி செலவிடப்படும்.
 • ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டத்தில் பயனாளிகளுக்கு 14 இலக்கங்கள் கொண்ட அடையாள எண் வழங்கப்படுகிறது.
 • இதன் அடிப்படையில் பொது சேவை மையங்கள் மூலம் இலவசமாக டிஜிட்டல் அட்டைகள் வினியோகம் செய்யப்படுகின்றன.

3. நோரு புயல்

 • வடகிழக்கு பகுதியை சக்தி வாய்ந்த நோரு புயல் தாக்கியது. பொலிலோ தீவின் கியூஸான் மாகாணத்தின் பர்டியோஸ் நகரத்தை புயல் தாக்கியது.
 • அப்போது மணிக்கு 195 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது.

4. பாதுகாப்பு தளவாடங்கள் ஏற்றுமதி 334% உயர்வு

 • பாதுகாப்பு தளவாடங்கள் ஏற்றுமதி கடந்த ஐந்து ஆண்டுகளில் 334% அதிகரித்துள்ளது.
 • கூட்டுழைப்பு முயற்சியின் காரணமாக இந்தியா தற்போது 75க்கும் அதிகமான நாடுகளுக்கு பாதுகாப்பு தளவாடங்களை ஏற்றுமதி செய்து வருகிறது.
 • இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் கீழ் உள்நாட்டில் தளவாடங்களை தயாரிப்பதன் மூலம் தனது தேவையை இந்தியா பூர்த்தி செய்து வருகிறது.
 • இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் விமானம் தாங்கிக் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் கடற்படையில் இணைக்கப்பட்டது.
 • மேம்படுத்தப்பட்ட இலகுரக மிக்-3ஹெலிகாப்டர் இந்திய கடலோர காவல் படையில் இணைக்கப்பட உள்ளது.
 • அணு ஆயுதத்தை சுமந்து செல்லும் புதிய தலைமுறை அக்னிபி ஏவுகணை சோதனையும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது என குறிப்பிடப்பட்டுள்ளது.

5. ஸ்வச் டாய்கேத்தோன்

 • மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை ஸ்வச் டாய்கேத்தோன் என்ற பெயரில் கழிவுகளில் இருந்து பொம்மைகளை உருவாக்கும் தனித்துவமான போட்டியை அறிமுகப்படுத்துகிறது.
 • இந்தியாவை உலகளாவிய பொம்மை மையமாக நிறுவும் நோக்கத்துடன் பாரம்பரிய கைவினை பொருள்கள் மற்றும் கையால் செய்யப்பட்ட பொம்மைகள் உள்ளிட்ட இந்திய பொம்மை தொழிலை மேம்படுத்துவதற்காக பொம்மைகளுக்கான தேசிய செயல் திட்டம் (என்ஏபிடி) 2020 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.
 • இரண்டாம் கட்ட தூய்மை இந்தியா இயக்கத்தின்படி 2026 ஆம் ஆண்டுக்குள் குப்பை இல்லாத நகரங்கள் என்கிற பார்வையை பிரதமர் அறிவித்துள்ளார்.

6. மனதின் குரல்

 • நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய பகத்சிங்கின் பிறந்த தினம் செப்டம்பர் 28ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
 • அவரது தியாகத்தை போற்றும் வகையில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
 • அவரது பெயர் சண்டிகர் விமான நிலையத்துக்கு சூட்டப்பட உள்ளது.
 • தில்லியில் உள்ள கடமை பாதையில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் சிலை சில நாட்களுக்கு முன் திறந்து வைக்கப்பட்டது.

CA 26.09.2022(English Version)

State news

1. Parundhu App

 • An app called ‘Parundhu’ is soon to be introduced in the Tamil Nadu Police to detect and prevent criminal activities and to monitor the activities of the raiders.

2. Sign Language Dictionary

 • Sign language is a great support for deaf and dumb people.
 • But lack of clear rules and policies for sign language in India was a major problem.
 • Indian Sign Language Research and Training Center was set up in 2013 to address this.
 • Sign language courses were introduced in many schools when Sign Language Day was celebrated on 23rd September.

3. Medicine in search of people: 90 lakh people benefited

 • On August 5, 2021, the Chief Minister launched a program called ‘Medicine in search of people’ in Samanapalli village of Krishnagiri district.
 • Overall 74% of the population has been screened by the medical program.
 • Medicine cabinets are provided for people suffering from diseases like diabetes, high blood pressure, supportive care, systemic therapy, dialysis due to kidney damage.
 • It is hoped that the number of beneficiaries will cross one crore once the remaining 26 percent public is fully tested.

Central News

1. Billionaire Indians

 • The number of millionaires in India is increasing year by year.
 • As of 2021, the number of people with assets worth more than Rs 8 crore in India is 7.96 lakh.
 • This number is estimated to double in the next four years to 16.23 lakh.
 • Recently IFL published a list of Indians with net worth above 12 crores. There are 113 people in this list.
 • More than last year 96 people have joined this list. Real estate, pharmaceuticals, petrochemicals, and software have produced the highest number of billionaires.
 • Top 5 Billionaires
NamesRupees lakh crores
Gautam Adhani10.94
Mukesh Ambani7.94
Cyrus Poonawala2.05
Shiv Nadar1.85
Radhakishan Namani1.75
 • India’s richest woman Falkuni Nair is Rs 38 thousand crores.
 • Young millionaire male Kaivalya Rs one thousand crores .
 • Young Billionaire Girl Neka Narkade Rs 4700 Crores .
 • Vinod Shantilal Adani is the richest Indian expatriate with a net worth of Rs 1.69 lakh crore.
 • Brother of Gautam Adhani, his daily earnings are Rs 102 crores.
 • Top 5 cities with people with assets above 1000 crores
CitiesNumber of people
Mumbai280
Delhi185
Bangalore89
Hyderabad64
Chennai51
 • What does the World Inequality Report 2022 say about rising wealth of Indians?
 • Economically the top 10 percent receive 57 percent of the country’s total income.
 • Only 13 percent of the country’s total income goes to the economically bottom 50 percent.
 • India is one of the most unequal countries in the world in that respect.

2. ‘Ayushman Bharat’ Medical Insurance Scheme

 • Ayushman Bharat Medical Insurance Scheme was launched by the Central Government on 23rd September 2018.
 • According to this the poor families are provided with insurance up to Rs 5 lakh per annum.
 • All health related details of the public will be stored in a single digital card.
 • A patient who consults a doctor no longer needs to carry paper documents.
 • The doctor can easily know all the details related to the health of the patient through the digital card.
 • In the first phase, the scheme was implemented on pilot basis in six Union Territories.
 • Then on 27th September 2021, the National Digital Health Program was officially launched at the national level under the name of ‘Ayushman Bharat Digital Movement’.
 • A target of issuing 10 lakh cards per day has been set.
 • So far 19 crore people have been given medical insurance cards.
 • The central government is taking various measures to improve the health sector across the country.
 • As part of this, Rs 100 crore will be spent per district under the Ayushman Bharat scheme.
 • Beneficiaries of Ayushman Bharat Health Insurance Scheme are given a 14-digit identification number.
 • Based on this digital cards are distributed free of cost through Public Service Centers.

3. Storm Noru

 • Powerful Cyclone Noru hits North East region. The typhoon hit Purdios City, Quezon Province, Bolillo Island.
 • At that time the wind was blowing at a speed of 195 kilometers per hour.

4. Defense logistics exports up 334%

 • Defense logistics exports have grown by 334% in the last five years.
 • India currently exports defense logistics to more than 75 countries due to cooperative efforts.
 • India is meeting its demand by manufacturing logistics domestically under ‘Make in India’ programme.
 • INS Vikrant, the first aircraft carrier made in India, was commissioned into the Navy.
 • Upgraded light ‘MIG-3’ helicopter to be inducted into Indian Coast Guard.
 • It has been mentioned that the new generation missile carrying nuclear warhead ‘Agni-B’ was successfully test-fired.

5. Swatch Doikethon

 • Central Department of Housing and Urban Development is launching a unique competition to make toys out of waste named Swach Toykethon.
 • The National Action Plan for Toys (NAPD) was launched in 2020 to promote the Indian toy industry, including traditional handicrafts and handmade toys, with the aim of establishing India as a global toy hub.
 • The Prime Minister has announced the vision of ‘Garbage Free Cities’ by 2026 under the second phase of Clean India.

6. The voice of the mind

 • The birth anniversary of Bhagat Singh who fought for the freedom of the country is going to be celebrated on 28th September.
 • The important decision has been taken to honor his sacrifice.
 • Chandigarh Airport to be named after him.
 • A statue of Netaji Subhash Chandra Bose was unveiled a few days ago on Duty Road in Delhi.