TNPSC Current Affairs – Sep 27, 2022

0
40

CA 27.09.2022(Tamil Version)

முக்கிய தினங்கள்

1. 27.09.22

  • இன்று உலக சுற்றுலா தினம் (1980 முதல்).
  • ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் முதல்முறையாக ஆற்றலுக்கான சமன்பாட்டை (E=mc² ) (1905) அறிமுகப்படுத்தினார்.

மாநில செய்திகள்

1. எஸ்.வி.ரமணன் காலமானார்

  • ஒலி ஒளிப்பரப்புத்துறையில் புகழ்பெற்று விளங்கிய எஸ்.வி.ரமணன் காலமானார்.
  • தென்னிந்திய வானொலி மற்றும் தொலைக்காட்சி துறையின் மூத்த ஜாம்பவானாக மதிக்கப்படும் இவர் ஜெயஸ்ரீ பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தை நிறுவியதன் மூலம் குறும்படங்கள் மற்றும் தொடர்கள் தவிர ஆயிரக்கணக்கான வானொலி மற்றும் தொலைக்காட்சி விளம்பரங்களையும் தயாரித்துள்ளார்.
  • எங்கே அவள் என்பது அவரது முதல் தொலைக்காட்சி படமாகும் பல புராண சரித்திர தொடர்களை தயாரித்து இயக்கியுள்ளார்.
  • திருமலை திருப்பதி விளக்கப்படும், ரமண மகரிஷி, ஸ்ரீரடி சாய் பாபா போன்ற ஆன்மீக நிகழ்ச்சிகளை தயாரித்து மிகப்பெரிய அளவில் பார்வையாளர்களை ஈர்த்துள்ளார்.

மத்திய செய்திகள்

1. புதிய கட்சி தொடங்கினார் குலாம்நம்பி ஆசாத்

  • காங்கிரஸ் கட்சியில் 50 ஆண்டுகளாக இருந்து வந்த குலாம் நபி ஆசாத் கடந்த மாதம் 26 ஆம் தேதி அக்கட்சியிலிருந்து விலகினார்.
  • அவருக்கு ஆதரவு தெரிவித்து ஜம்மு காஷ்மீர் முன்னாள் துணை முதல்வர் தாரா சந்த் உள்ளிட்ட 20 காங்கிரஸ் பிரமுகர்கள் கட்சியிலிருந்து விலகினர்.
  • இந்நிலையில் ஜனநாயகம் சுதந்திர கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை குலாம்நபி ஆசாத் தொடங்கினார்.

2. இத்தாலியின் முதல் பெண் பிரதமர்

  • இத்தாலியின் முதல் பெண் பிரதமராக இத்தாலியின் சகோதரர்கள் கட்சியின் தலைவர் ஜியார்ஜியா மெலோனி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • தீவிர வலதுசாரி கொள்கைகளை கொண்ட அந்த கட்சியின் தலைமையில் அமையவிருக்கும் அரசு தான் இரண்டாம் உலகப் போருக்கு பிந்தையை இத்தாலியின் முதல் வலதுசாரி அரசு என்பது குறிப்பிடத்தக்கது.
  • பாசிச கொள்கைகளோடு தொடர்புடைய ஜியார்ஜியா மெலோனி இத்தாலியின் புதிய பிரதமராக பொறுப்பேற்கவிருப்பது ஐரோப்பிய அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

CA 27.09.2022(English Version)

Important days

1. 27.09.22

  • Today is World Tourism Day (since 1980).
  • Albert Einstein first formulated the equation for energy (E=mc² ) (1905) introduced

State news

1. SV Ramanan passed away

  • S.V.Ramanan, who was renowned in the field of sound-broadcasting, passed away.
  • Regarded as a veteran of the South Indian radio and television industry, he established Jayashree Pictures and produced thousands of radio and television commercials besides short films and serials.
  • ‘Enge Awal’ is his first television film and has produced and directed many mythological historical serials.
  • Tirumala Tirupati is explained by producing spiritual programs like Ramana Maharishi, Sriradi Sai Baba and attracting huge audiences.

Central News

1. Ghulamnambi Azad started a new party

  • Ghulam Nabi Azad, who was in the Congress party for 50 years, left the party on 26th of last month.
  • 20 Congress leaders including former Deputy Chief Minister of Jammu and Kashmir Tara Chand quit the party in support of him.
  • In this case, Ghulamnabi Azad started a new party named Democracy Freedom Party.

2. Italy’s first female Prime Minister

  • Italy’s first woman Prime Minister Giorgia Meloni, leader of the Italian Brothers Party, has been elected.
  • It is noteworthy that the government that will be headed by that party with extreme right-wing policies is Italy’s first right-wing government after World War II.
  • Fascist-affiliated Giorgia Meloni taking over as Italy’s new prime minister is expected to have an impact on European politics.