Home TNPSC TNPSC Current Affairs – Sep 22, 2022

TNPSC Current Affairs – Sep 22, 2022

0
37

CA 22.09.2022(Tamil Version)

மாநில செய்திகள்

1.வள்ளலார்-200

 • வள்ளலாரை சிறப்பிக்கும் வகையில் வரும் அக்டோபர் ஐந்தாம் தேதி சென்னையில் நடைபெற உள்ள விழாவில் ‘வள்ளலார்-200’ என்ற இலட்சினை, தபால் உறையை வெளியிட்டு ஆண்டு முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
 • இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அருட்பிரகாச வள்ளலாரின் முப்பெரும் விழாவை சிறப்பாக நடத்துவதற்காக பி.கே.கிருஷ்ணாராஜ்வானவராயர் தலைமையில் 14 உறுப்பினர்களை கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டது.
 • இந்த உலகுக்கு வருவிக்க உற்ற நாளின் 200-வது ஆண்டு அவர் தர்மசாலை தொடங்கிய 156-ஆம் ஆண்டு ஜோதி தரிசனம் காட்டுவித்த 152-ஆம் ஆண்டு ஆகியவற்றை கொண்டாடும் வகையில் முப்பெரும் விழா கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது.

2. இந்தியாவின் முதல் கடற்பசு பாதுகாப்பகம்

 • தமிழக கடலோரப் பகுதிகளில் அழிந்து வரும் நிலையில் உள்ள மிக அரிதான கடற்பசு இனத்தையும் அதன் கடல் வாழ்விடங்களையும் பாதுகாக்கும் பொருட்டு, மன்னார் வளைகுடா, பாக் விரிகுடா பகுதியில் கடற்பசு பாதுகாப்பகம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.
 • இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் 448 சதுர கிலோமீட்டர் பரப்பில் தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் கடலோரப் பகுதிகளை உள்ளடக்கிய பாக் விரிகுடாவில் கடற்பசு பாதுகாப்பகம் அறிவித்து தமிழக அரசு அறிவிக்கை செய்துள்ளது.
 • கடற்பசுவின் சிறப்பு:
 • உலகின் மிகப்பெரிய தாவர வகை கடல் பாலூட்டிகளான கடற்பசுக்கள், கடல் புற்களை உண்டு வளர்ந்து வருகின்றன.
 • கடற்பசு இனங்களை பாதுகாப்பதனால், கடல் பகுதிகளுக்கு அடியில் உள்ள கடல் பொருட்களை பாதுகாக்கவும், மேம்படுத்தவும், வளிமண்டல கார்பனை அதிக அளவில் நிலைப்படுத்தவும் உதவி செய்கிறது.
 • கடல் புல் படுக்கைகள் வணிக ரீதியாக மதிப்புமிக்க பல மீன்கள் மற்றும் கடல் வாழ் உயிரினங்களுக்கு இனபெருக்கம் செய்ய ஏதுவாகவும், உணவளிக்கும் இடமாகவும் உள்ளது.
 • இப்போது சுமார் 240 கடற்பசுக்கள் மட்டுமே இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
 • அவற்றில் பெரும்பான்மையானவை தமிழ்நாட்டின் கடற்கரையில் காணப்படுகின்றன.

3. உலக திருக்குறள் மாநாடு

 • கம்போடியா நாட்டில் விஜிபி உலக தமிழ்ச் சங்கம் கம்போடியா தமிழ்நாடு தொண்டு நிறுவனம், அங்கோர் தமிழ் சங்கம் ஆகியவை இணைந்து செப்டம்பர் 28 முதல் அக்டோபர் மூன்றாம் தேதி வரை உலக திருக்குறள் மாநாட்டை நடத்தி இருக்கின்றன.
 • இந்த மாநாட்டை ஒட்டி செப்டம்பர் 29ஆம் தேதி அங்கோர் நகரில் திருவள்ளுவர் சிலை திறக்கப்படுகிறது.

4. முன்னாள் பேரவைத் தலைவர் சேடப்பட்டி முத்தையா காலமானார்

 • இவர் கடந்த 1991 முதல் 1996 ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சி காலத்தில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது தமிழக சட்டப்பேரவை தலைவராக பதவி வகித்தார்.
 • கடந்த 1977, 1980, 1984, 1991 ஆகிய ஆண்டுகளில் நான்கு முறை சேடப்பட்டி சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
 • கடந்த 1999 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் மத்திய தரைவழி போக்குவரத்து துறை அமைச்சராகவும் இருந்துள்ளார்.

மத்திய செய்திகள்

1. இன்குபேஷன் மையம்

 • ஜவுளிகள், கைவினைப் பொருட்கள் மற்றும் தொழில்நுட்ப ஜவுளிகளை பிரபலப்படுத்தும் நோக்கில் குளோபல்ஸ்பின்என்ற பெயரில் இரண்டு நாள் வர்த்தக மாநாடு மற்றும் கண்காட்சி சென்னையில் செப்டம்பர் 21ஆம் தேதி தொடங்கியது.
 • சர்வதேச குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு ஐ.எம்.காதி பவுண்டேஷன் என்ஐஎஃப்டி பவுண்டேசன் இணைந்து இதை நடத்தினர்.
 • விசைத்தறிகளை அதிகம் கொண்டிருக்கும் மாநிலங்களில் தமிழகம் நாட்டிலேயே இரண்டாவது இடத்தில் உள்ளது. கிராமப் பகுதிகளில் அதிக அளவு வேலைவாய்ப்பு வழங்குவதில் நாட்டில் இரண்டாவது மிகப்பெரிய துறையாக கைத்தறி மற்றும் கைவினைத் துறை உள்ளது.
 • இத்துறையில் சுமார் 30 லட்சம் பேர் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.

விளையாட்டு செய்திகள்

1. வரலாறு படைத்த இந்திய நீச்சல் வீரர்கள்

 • இந்தியாவைச் சேர்ந்த நீண்ட தூர நீச்சல் வீரர்களான எல்விஸ் அலி ஹஸாரிகா, ரிமோ சாஹா ஆகியோர் ரிலே நீச்சல் மூலமாக நார்த் சேனல் நீரிணையை கடந்து வரலாறு படைத்தனர்.
 • ஐரோப்பிய கண்டத்தில் உள்ள அந்த நீரிணை பகுதியை நீந்திக் கடந்த, இந்தியா மற்றும் ஆசியாவை சேர்ந்த முதல் ரிலே அணி என்ற சாதனையை அவர்கள் எட்டியுள்ளனர்.
 • இதில் எல்விஸ் அஸ்ஸாமையும், ரிமோ மேற்கு வங்கத்தையும் சேர்ந்தவர்களாவர்.
 • நார்த் சேனலானது, வடக்கு அயர்லாந்தையும், ஸ்காட்லாந்தையும் இணைக்கும் 42 கிலோமீட்டர் தூரம் உள்ள நீரிணை பகுதியாகும். இதை அவர்கள் 14 மணி நேரம் 38 நிமிடங்களில் நடந்துள்ளனர்.
 • வடக்கு அயர்லாந்தின் டோனாகாடி பகுதியில் தொடங்கி, ஸ்காட்லாந்தில் உள்ள போர்டேப்ட்ரிக் என்ற இடத்தில் இந்த ரிலேவை இருவரும் நிறைவு செய்துள்ளனர்.

CA 22.09.2022(English Version)

State news

1. ‘Vallalar-200’

 • Minister of Hindu Religious Charities Shekharbabu said that Chief Minister M.K.Stalin is going to inaugurate the scheme of giving food throughout the year by issuing a postal envelope named ‘Vallalar-200’ in a ceremony to be held in Chennai on the fifth of October to highlight Vallalar.
 • A special committee of 14 members was formed under the leadership of P.K.Krishnarajwanavarayar on behalf of the Department of Hindu Religious Charitable Institutions to properly conduct the triennial ceremony of Aruprakasa Vallalar.
 • It has been announced that the triple festival will be celebrated to celebrate the 200th year of his birth into this world, the 156th year of his establishment of Dharmasala and the 152nd year of his Jyoti Darshan.

2. India’s first seaweed sanctuary

 • In order to protect the very rare species of sea sponge and its marine habitats which are endangered in the coastal areas of Tamil Nadu, it was announced in the Legislative Assembly that a sea sponge sanctuary will be established in the Gulf of Mannar and Bagh Bay.
 • In order to implement this notification, the Government of Tamil Nadu has announced a sea sponge conservation in Pak Bay covering an area of ​​448 square kilometers in the coastal areas of Thanjavur and Pudukottai districts.
 • Specialty of seaweed:
 • Seaweeds, the world’s largest herbivorous marine mammals, thrive on sea grasses.
 • By conserving seaweed species, it helps to protect and enhance marine life on the bottom of the oceans and to stabilize more atmospheric carbon.
 • Seagrass beds provide breeding and feeding grounds for many commercially valuable fish and marine life.
 • Only about 240 species of sponges are estimated to exist now.
 • Majority of them are found along the coast of Tamil Nadu.

3. World Torture Conference

 • In Cambodia, VGP World Tamil Association, Cambodia Tamil Nadu Charities and Angkor Tamil Association are jointly organizing the World Thirukkural Conference from September 28th to October 3rd.
 • Thiruvalluvar statue is inaugurated in Angkor on 29th September in connection with this conference.

4. Former assembly president Sedapatti Muthiah passed away

 • He served as the Speaker of the Tamil Nadu Legislative Assembly from 1991 to 1996 during the AIADMK regime when Jayalalithaa was the Chief Minister.
 • In the years 1977, 1980, 1984, 1991 he contested and won on behalf of AIADMK in the Sedapatti Legislative Assembly constituency four times.
 • In 1999, he was also the Minister of Central Road Transport in the then Prime Minister Vajpayee’s cabinet.

Central News

1. Incubation Center

 • A two-day trade conference and exhibition named ‘GlobalSpin’ to promote textiles, handicrafts and technical textiles started in Chennai on 21st September.
 • Organized by International Federation of Micro, Small and Medium Enterprises, IM Khadi Foundation and NIFT Foundation.
 • Tamil Nadu ranks second in the country in the number of power loom states. Handloom and Handicrafts sector is the second largest sector in the country providing the highest level of employment in rural areas.
 • About 30 lakh people are directly and indirectly employed in this sector.

Sports news

1. Indian swimmers who made history

 • Indian long-distance swimmers Elvis Ali Hazarika and Rimo Saha created history by crossing the North Channel in a relay swim.
 • They have achieved the feat of becoming the first relay team from India and Asia to swim across the strait in the European continent.
 • In which Elvis is from Assam and Rimo is from West Bengal.
 • The North Channel is a 42 kilometer stretch of strait that connects Northern Ireland and Scotland. They did this in 14 hours and 38 minutes.
 • The relay started in Donaghady, Northern Ireland and finished at Portabdrick in Scotland.