TNPSC Current Affairs – Sep 23, 2022

0
39

CA 23.09.2022(Tamil Version)

முக்கிய தினங்கள்

1. 23.09.2022

 • இன்று தேசிய திரைப்பட தினம்.
 • சவுதி அரேபியாவின் தேசிய (1932) தினம்.
 • நெப்டியூன் கோள் பிரெஞ்சு வானியியலாளர் உர்பைன் லே வெரியர் மற்றும் பிரிட்டிஷ் வானியியலாளர் ஜோஹன் கோட்ஃபிரீட் ஆகியோரால் (1846) கண்டுபிடிக்கப்பட்டது.
 • Mozilla Firefox Web browser (2002) வெளியிடப்பட்டது. 
 • தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த முன்னாள் நீதிபதியும், ஐ.நா வின் முன்னாள் மனித உரிமை ஆணையாளருமான நவநீதம் பிள்ளை (1941), நவீன இந்திய இலக்கியத்தின் முக்கியத் தூண்களில் ஒருவரும், தேசிய கவி எனப் போற்றப்பட்ட ராம்தாரி சிங் தின்கர் (1908) ஆகியோரின் பிறந்த தினம்.

மாநில செய்திகள்

1. பரம்பரை மருத்துவர்கள் ஓய்வூதியம் ரூபாய் 3000 ஆக உயர்வு

 • பரம்பரை மருத்துவர்களுக்கு ரூபாய் 3000 ஆக உயர்த்தப்பட்ட மாத ஓய்வூதியத்துக்கான உத்தரவுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
 • இப்போது நிலவிவரும் பொருளாதாரச் சூழல் அடிப்படையில் மாத ஓய்வூதியத் தொகையை ஆயிரம் ரூபாயிலிருந்து ரூபாய் 3000 ஆக உயர்த்தி வழங்கிட வேண்டும் என பதிவு பெற்ற பரம்பரை ஆயுர்வேதம் யுனானி ஹோமியோபதி மருத்துவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்.
 • இந்த கோரிக்கையை ஏற்று, இதற்கான அறிவிப்பு சுகாதாரத் துறையின் மானிய கோரிக்கையின் போது வெளியிடப்பட்டது.

மத்திய செய்திகள்

1. நிஸ்தார், நிபுன்

 • ஆழ்கடல் பயிற்சி மற்றும் நீர்மூழ்கி கப்பல்களை மீட்கும் பணியில் ஈடுபடும் வகைகள் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ‘நிஸ்தார்’,’நிபுன்’ ஆகிய இரு கப்பல்கள் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கடற்படை  தலைமை தளபதி ஆர்.ஹரிகுமார் முன்னிலையில் கடற்படையில் இணைக்கப்பட்டது.
 • உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட இவ்விரு கப்பல்களும் விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ள ஹிந்துஸ்தான் கப்பல் கட்டுமான நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டன.
 • இந்திய தொழில் நிறுவனங்கள் குறிப்பாக சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் பங்களிப்புடன் இவ்விரு பயிற்சி கப்பல்களும் தயாரிக்கப்பட்டன.
 • இந்தியா முழுவதும் உள்ள 120 க்கும் மேற்பட்ட இத்தகைய நிறுவனங்கள் இத்திட்டத்தில் பங்காற்றி உள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

2. உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரணைகள் செப்டம்பர் 27 முதல் நேரடி ஒளிபரப்பு

 • கடந்த 2018 இல் ஸ்வப்னீல் திரிபாதி வழக்கில் வழங்கப்பட்ட முன்னோடி தீர்ப்பை அமல்படுத்தும் வகையில் உச்ச நீதிமன்றம் இந்த முடிவை மேற்கொண்டுள்ளது.
 • தீர்ப்பு வெளியாகி நான்காண்டுகள் ஆன நிலையில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 • உச்சநீதிமன்ற செயல்பாடுகளில் வெளிப்படை தன்மையை உறுதி செய்யும் வகையில் கடந்த 2018 செப்டம்பர் 26-இல் திருப்புமுனை வாய்ந்த தீர்ப்பபை உச்ச நீதிமன்றம் வழங்கி இருந்தது.
 • அதில் அரசியல் சாசனம் மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளின் விசாரணை நேரடியாக ஒளிபரப்பப்பட வேண்டும்.
 • வெளிப்படை தன்மைக்கான இத்தீர்ப்பு,  தலைசிறந்த கிருமிநாசினியான சூரிய ஒளியை போன்றது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
 • அதேசமயம் திருமணம் சார்ந்த பிரச்சினைகள், பாலியல் தாக்குதல் உள்ளிட்ட உணவுப்பூர்வமான வழக்குகளின் விசாரணை நேரடியாக ஒளிபரப்பப்படக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
 • தொடக்கத்தில் youtube மூலம் வழக்கு விசாரணைகள் ஒளிபரப்பப்படும்: பின்னர் உச்ச நீதிமன்றத்தின் சர்வர் வாயிலாக ஒளிபரப்பை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
 • கைபேசிகள், மடிக்கணினிகள் மற்றும் கணினிகள் மூலம் வழக்கு விசாரணையை மக்கள் காணலாம் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தனர்.
 • முற்பட்ட வகுப்பினரில் பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் அரசமைப்புச் சட்டத்தின் 103 வது திருத்தத்திற்கு எதிரான வழக்கு குடியுரிமை சட்டத்தின் அரசியல் சாசன செல்லுபடி தன்மையை கேள்விக்குள்ளாக்கும் வழக்கு உள்ளிட்டவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

3. கோடீஸ்வரர்கள் அதிகம் வசிக்கும் நகரங்களில் மும்பைக்கு 25வது இடம்

 • உலக அளவில் அதிக கோடீஸ்வரர்களைக் கொண்ட நகரங்களின் பட்டியலில் மும்பை 25ஆம் இடத்தில் உள்ளது.
 • விரைவில் முதல் 20 இடங்களுக்குள் மும்பை முன்னேறும் என்று லண்டனை தலைமை இடமாகக் கொண்ட முதலீட்டு நிறுவனமான ஹென்லி பார்ட்னர்ஸ் தெரிவித்துள்ளது.
 • அதேசமயம், சொந்தநாடு பிடிக்காமல் நாட்டை விட்டு வெளியேறும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையில் இந்தியா உலக அளவில் மூன்றாம் இடத்தில் இருப்பதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
 • இந்நிறுவனம் வெளியிட்டுள்ள பட்டியலில் 10 லட்சம் டாலருக்கு (ரூபாய் எட்டு கோடி) மேல் சொத்து மதிப்பை கொண்டவர்களின் எண்ணிக்கையில் நியூயார்க் முதல் இடத்தில் உள்ளது.
 • அங்கு 3.45 லட்சம் பேர் 10 லட்சம் டாலருக்கு மேல் சொத்து மதிப்பைக் கொண்டுள்ளனர்.
 • இரண்டாவது இடத்தில் ஜப்பான் தலைநகர் டோக்கியோ,
 • மூன்றாவது இடத்தில் சான் பிரான்சிஸ்கோ,
 • நான்காவது இடத்தில் லண்டன்,
 • ஐந்தாவது இடத்தில் சிங்கப்பூர் இடம் பெற்றுள்ளன.
 • சொந்த நாடு பிடிக்காமல் வெளியேறுபவர்களின் எண்ணிக்கையில் ரஷ்யா, சீனா முதல் இரண்டு இடங்களில் இருப்பதாகவும் ஹென்லி & பார்ட்னர்ஸ் தெரிவித்துள்ளது.

4. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 81 ஆக சரிவு

 • அந்நிய செலாவணி சந்தையில் செப்டம்பர் 22-இல் நடைபெற்ற வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் 81 வரை வீழ்ச்சி கண்டது.
 • அமெரிக்காவில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவது அந்நாட்டுப் பொருளாதாரத்தில் கடும் பாதிப்பை உருவாக்கியுள்ளது.
 • பண வீக்கத்தை குறைக்க அமெரிக்க மத்திய வங்கி நிதி சார்ந்த பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
 • எனினும், பணவீக்கம் கட்டுக்குள் வராமல் தொடர்ந்து அதிகரித்தே காணப்படுகிறது.
 • வர்த்தகத்தின் தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 80.28 ஆக இருந்தது.
 • சர்வதேச சந்தையில் டாலருக்கான தேவை மிகவும் அதிகரித்ததையடுத்து ரூபாய் மதிப்பு 81 வரை வீழ்ச்சி அடைந்தது.
 • செப்டம்பர் 21ஆம் தேதி வர்த்தகத்தில் ரூபாய் மதிப்பு ரூபாய் 79.96 ல் நிலை பெற்றது குறிப்பிடத்தக்கது.

CA 23.09.2022(English Version)

Important days

1. 23.09.2022

 • Today is National Film Day.
 • National (1932) Day of Saudi Arabia.
 • The planet Neptune was discovered (1846) by French astronomer Urbain Le Verrier and British astronomer Johann Gottfried.
 • Mozilla Firefox Web browser (2002) released.
 • Birth anniversary of Navaneetham Pillai (1941), a former South African judge and former UN Human Rights Commissioner, one of the pillars of modern Indian literature, and Ramdari Singh Thinker (1908), hailed as the national poet.

State news

1. Increase in pension of hereditary doctors to Rs.3000

 • Chief Minister M.K.Stalin issued orders for increased monthly pension to 3000 rupees for family doctors.
 • The registered Paramparai Ayurvedic Unani Homeopathic doctors continued to demand that the monthly pension should be increased from Rs.1000 to Rs.3000 based on the current economic situation.
 • Acknowledging this request, a notification to this effect was issued during the call for grant by the Department of Health.

Central News

1. Nistar, Nibun

 • The types involved in deep sea training and rescue of submarines, two Indian-made ships ‘Nistar’ and ‘Nipun’ were commissioned in the Navy in the presence of Chief of Naval Staff R. Harikumar in a program held in Visakhapatnam.
 • Both these indigenously designed ships were manufactured at Hindustan Shipbuilding Company located in Visakhapatnam.
 • These two training ships were built with the participation of Indian industrial companies especially MSMEs.
 • The Navy said that more than 120 such companies across India have participated in the scheme.

2. Supreme Court Constitution bench hearings from September 27 Live broadcast

 • The Supreme Court has taken this decision to implement the precedent judgment given in the Swapneel Tripathi case in 2018.
 • This decision has been taken after four years of the verdict.
 • The Supreme Court had given a breakthrough judgment on September 26, 2018 to ensure transparency in the functioning of the Supreme Court.
 • In which the trial of constitutional and national importance cases should be telecasted live.
 • This judgment of transparency was said to be like sunlight, the great disinfectant.
 • On the other hand, the Supreme Court had said that the trial of food related cases including marital issues and sexual assault should not be telecast live.
 • Initially hearings will be telecasted through YouTube: Later steps will be taken to telecast through Supreme Court’s ‘server’.
 • Informed sources said that people can watch the proceedings through mobile phones, laptops and computers.
 • It is to be noted that the case against the 103rd Amendment of the Constitution which provides 10 percent reservation for the economically weaker sections of the upper classes and the case questioning the constitutional validity of the Citizenship Act is being taken up for investigation.

3. Mumbai ranks 25th among cities with the highest number of millionaires

 • Mumbai ranks 25th in the list of cities with the highest number of millionaires in the world.
 • London-headquartered investment firm ‘Henley and Partners’ predicts that Mumbai will soon enter the top 20.
 • On the other hand, India has the third highest number of millionaires who leave the country without knowing their country of origin, the company said.
 • In the list published by the company, New York is on the first place in the number of people with assets worth more than 10 lakh dollars (Rs eight crores).
 • There are 3.45 lakh people with assets worth more than 10 lakh dollars.
 • The second place is Tokyo, the capital of Japan.
 • In third place is San Francisco,
 • London at fourth place,
 • Singapore is ranked fifth.
 • Henley and partners said that Russia and China are in the top two places in the number of people who leave their country

4. Depreciation of rupee to 81 against the dollar

 • In the foreign exchange market on September 22, the rupee fell to a record low of 81 against the US dollar.
 • Inflation in the United States continues to rise and has created a severe impact on the country’s economy.
 • The US Federal Reserve is implementing various financial control measures to reduce inflation.
 • However, inflation continues to rise out of control.
 • The rupee was at 80.28 against the US dollar in early trade.
 • The rupee depreciated to 81 as the demand for the dollar in the international market rose sharply.
 • On September 21st, the value of the rupee stood at Rs 79.96.