TNPSC Current Affairs – Sep 17, 2022

0
28

CA 17.09.2022(Tamil Version)

முக்கிய தினங்கள்

1. 17.09.2022 

 • சமூக நீதி நாள்
 • தந்தை பெரியர் பிறந்த தினம்

மாநில செய்திகள்

1. திருச்சியில் பெரியார் உலகம்

 • பெரியார் பிறந்த தினத்தை ஒட்டி திருச்சியில் அமையுள்ள பெரியார் உலகம் கட்டுமான பணிகள் தொடங்கப்பட உள்ளன.
 • திருச்சி – சென்னை நெடுஞ்சாலையில் உள்ள சிறுகனூரில் பெரியார் உலகம் அமைக்கப்பட உள்ளது.
 • சுமார் 30 ஏக்கருக்கும் கூடுதலான பரப்பில் அமைய உள்ள இந்த பெரியார் உலகத்தில், 95 அடி உயரச்சிலை, ஆய்வகம், பயிலகம் அதை ஒட்டிய நூலகம் முதலிய பல்வேறு அம்சங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன.
 • இதன் கட்டுமான பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைக்க உள்ளார்.
 • பெரியாரின் பிறந்த தினம் சமூக நீதி நாளாக கடைப்பிடிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

2. மதுரையில் ரூபாய் 600 கோடியில் டைட்டில் பூங்கா

 • குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் தோள் கொடுப்போம் தொழில்களுக்கு தென்மண்டல மாநாடு மதுரையில் நடைபெற்றது.
 • புதிய தொழில் குழுமங்கள் தொடக்கம்:
 • அந்தந்த பகுதிக்குரிய சிறு தொழில்களை ஊக்குவிக்கும் வகையில் தொழில் குழுமங்கள் உருவாக்கப்படுகின்றன.
 • காஞ்சிபுரம் நரிக்குறவர் பாசிமணி குழுமம்,
 • திருநெல்வேலியில் சமையல் பாத்திரக் குழுமம்
 • திருப்பத்தூரில் ஊதுபத்தி குழுமம்
 • சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில் மரச் சிற்பக் குழுமம்
 • கிருஷ்ணகிரியில் மூலப்பொருள்கள் கிடங்கு குழுமம்
 • ஈரோட்டில் மஞ்சள் தூள் உற்பத்தி செய்யும் குறுந்தொழில் குழுமம்
 • ஈரோடு மாவட்டம் பவானியில் ஜமக்காளம் உற்பத்தி செய்யும் குறுந்தொழில் குழுமம்

      ஆகியவற்றுக்கு பொது வசதி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு

      வருகிறது.

 • தொழில் வளர்ச்சியில் முன்னேற்றம்:
 • நாட்டில் எளிமையாக தொழில் புரிதல் பட்டியலில் தமிழகம் 14வது இடத்தில் இருந்து இப்போது மூன்றாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது.
 • முதல் இடத்தை பிடிப்பதே தமிழக அரசின் இலக்கு.
 • ஸ்டார்ட் அப் இந்தியா வெளியிட்ட தரவரிசை பட்டியலில் சிறந்த புத்தொழில் செயல்பாடுக்கான லீடர் அங்கீகாரத்தை தற்போது தமிழகம் பெற்று இருக்கிறது.
 • கடந்த 2000 – இல் அப்போதய முதல்வர் மு.கருணாநிதி சென்னையில் திறந்து வைத்த டைடல் பூங்கா தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பு புரட்சியை ஏற்படுத்தியது.
 • இதைத் தொடர்ந்து கோவையில் தகவல் தொழில்நுட்ப பூங்கா உருவாக்கப்பட்டது.
 • இப்போது திருப்பூர், விழுப்புரம், தூத்துக்குடி, தஞ்சாவூர், சேலம், வேலூர் மற்றும் உதகை ஆகிய இடங்களில் புதிய டைடல் பூங்காக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
 • இதன் தொடர்ச்சியாக மதுரை நகரின் மையப்பகுதியான மாட்டுத்தாவணியில் இரண்டு கட்டங்களாக இந்த பூங்கா கட்டப்படும்.
 • முதற்கட்டமாக ரூபாய் 600 கோடியில் 5 ஏக்கரில் இது அமைக்கப்படும்.
 • இரண்டாம் கட்டத்தில் மேலும் ஐந்து ஏக்கரில் விரிவாக்கம் செய்யப்படும்.
 • இந்த பூங்காவானது தகவல் தொழில்நுட்பம் மற்றும் புதிய தொழில்நுட்பங்களுக்கு தரமான உள் கட்டமைப்பு வசதிகளை வழங்குவதுடன் மதுரை மண்டலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் வகுக்கும்.
 • முதல் கட்டத்தில் பத்தாயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறுவர் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.

3. காலை உணவு திட்டத்திற்கு விவசாயிகளிடம் சிறுதானியங்கள் கொள்முதல்

 • முதலமைச்சரின் காலை உணவு திட்டத்திற்கு விவசாயிகளிடம் சிறுதானியங்களை கொள்முதல் செய்ய வேண்டுமென தமிழக அரசின் தலைமைச் செயலர் வெ.இறையன்பு அறிவுறுத்தியுள்ளார்.
 • இது தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த ஆலோசனை கூட்டம் தலைமைச் செயலகத்தில் தலைமை செயலர் இறையன்பு தலைமையில் நடைபெற்றது.
 • பொதுமக்கள் உடைய அரிசி உணவு பயன்பாடு அதிகரித்து சோளம், கம்பு, கேழ்வரகு, தென்னை, வரகு, சாமை, குதிரைவாலி போன்ற சிறுதானியங்களையும் பயன்பாடு வெகுவாக குறைந்து விட்டது.
 • ஐக்கிய நாடுகள் சபை 2023 ஆம் ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ளது.

4. பள்ளிப் புத்தகம் மேம்பாட்டு திட்டம்

 • பள்ளி பருவத்திலேயே மாணவர்களின் சிந்தனை உடையவர்களாக உருவாக்கும் பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.
 • பள்ளி புத்தாக்கம் மேம்பாட்டு திட்டம்:
 • தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனமும் பள்ளி கல்வித்துறையும் யுனிசெப் நிறுவனத்துடன் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளன.
 • நிகழாண்டில் முதல் கட்டமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் அனைத்து மேல்நிலைப் பள்ளிகளில் ஒன்பது முதல் 12 ஆம் வகுப்பு வரையில் பயிலும் 1.56 லட்சம் மாணவர்களுக்கும், 1320 ஆசிரியர்களுக்கும் தொழில் முனைதல் பற்றிய விழிப்புணர்வு அளிக்கப்படும்.
 • மாணவர்களிடையே புத்தாக்க சிந்தனையை ஊக்குவிக்கும் வகையில் சிறந்த 40 புத்தாக்க சிந்தனைகளுக்கு ரூபாய் 25 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை ரொக்கப் பரிசு வழங்கப்படும்.
 • தொழில் முனைவோருக்கு விருதுகள் 2021 – 22 ஆம் ஆண்டிற்கான மாநில அளவிலான சிறந்த தொழில் முனைவோருக்கான விருதுகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
 • சிறந்த தொழில் முனைவோர் விருது (தூத்துக்குடி கல்பகா கெமிக்கல்ஸ்)
 • வேளாண் சார்ந்த தொழில் விருது (திருப்பத்தூர் மாவட்டம் ப்ரெஸ்ரா பிக்கில்ஸ்)
 • தரம் மற்றும் ஏற்றுமதி விருது (தூத்துக்குடி ரமேஷ் ஃபிளவர்ஸ்)
 • சிறந்த மகளிர் தொழில் முனைவோர் விருது (செங்கல்பட்டு மாவட்டம் ஐசிஏ ஸ்பெஷாலிட்டி)
 • சிறப்பு பிரிவினருக்கான விருது (புதுக்கோட்டை மாவட்டம் பிரபு இண்டஸ்ட்ரியல்) ஆகிய விருதுகள் வழங்கப்பட்டன.
 • குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அதிக கடன் வழங்கிய முதல் மூன்று வங்கிகளான முறையை இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பரோடா வங்கி ஆகிய வங்கிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

5. கி.ரா விருது

 • கோவை விஜயா வாசகர் வட்டம் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த எழுத்தாளருக்கு ரூபாய் 5 லட்சம் ரொக்க பரிசுடன் கி.ரா விருது வழங்கப்பட்டு வருகிறது.
 • சக்தி மசாலா நிறுவனம் வழங்கும் விஜயா வாசகர் வட்டத்தில் 2022 ஆம் ஆண்டுக்கான கி.ரா விருதுக்கு கனடாவில் வசிக்கும் எழுத்தாளர் .முத்துலிங்கம்  தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மத்திய செய்திகள்

1. எஸ்சிஓ மாநாடு கூட்டறிக்கை

 • இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான் தஜிகிஸ்தான், கிர்கஸ் குடியரசு ஆகிய எட்டு நாடுகளைக் கொண்ட எஸ்சிஓ (ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு) மாநாட்டின் முடிவில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கை:
 • பயங்கரவாதம், பிரிவினைவாதத்தின் அனைத்து வடிவங்களாலும் ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து எஸ்சிஓ உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கவலை தெரிவித்தனர்.
 • அந்த நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள பயங்கரவாதிகள், பிரிவினைவாதிகள் விவரம் அடங்கிய ஒரே பட்டியலை தயாரிக்க எஸ்சிஓ அமைப்பு திட்டமிட்டுள்ளது.
 • எஸ்சிஓ உறுப்பு நாடுகள் அமைந்துள்ள பிராந்தியத்திற்கு பயங்கரவாதிகள், பிரிவினைவாதிகளால் ஏற்படும் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் நோக்கில் இந்த பட்டியலை தயாரிக்க தீர்மானிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2. சிடாக்லிப்டின்

 • சர்க்கரை நோய் சிகிச்சைக்கான மிகக் குறைந்த விலையிலான சிடாக்லிப்டின் பாஸ்பேட் கூட்டு மருந்து மக்கள் மருந்தகங்களில் கிடைக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

3. எஸ்சிஓ தலைமை பொறுப்பை ஏற்றது

 • இந்தியா ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை உறுப்பினர்கள் சுழற்சி முறையில் வகுத்து வருகின்றன.
 • நடைபாண்டுக்கான தலைமை பொறுப்பே உஸ்பெகிஸ்தான் வகித்த நிலையில் 2023 ஆம் ஆண்டுக்கான தலைமை பொறுப்பு இந்தியா ஏற்றது.
 • அதன்படி அடுத்த ஆண்டுக்கான எஸ்சிஓ மாநாட்டை இந்தியா நடத்த உள்ளது.
 • கடந்த 2017 ஆம் ஆண்டில் எஸ்சிஓ கூட்டமைப்பில் நிரந்தர உறுப்பினராக இணைந்த இந்தியா முதல் முறையாக கூட்டமைப்புக்கு தலைமை ஏற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
 • தலைமை பொறுப்பை ஏற்று இந்தியாவுக்கு சீனா அதிபர் ஷி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின்  உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
 • இந்தியாவை இயற்கையாகவே போட்டி மிக்கதாக மாற்றியுள்ளது.
 • நிகழ் 2022-23 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 7.5% வளர்ச்சிக்கான உள்ளது.
 • நாட்டில் தற்போது 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தாக்க ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உள்ளன.
 • நூறுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் யூனிகான் விற்று முதல் மதிப்பு சுமார் ரூபாய் 7500 கோடி அந்தஸ்தை பெற்றுள்ளன.
 • உலக சுகாதார அமைப்பின் சர்வதேச பாரம்பரிய மருந்துகள் மையம் குஜராத்தில் கடந்த ஏப்ரலில் தொடங்கி வைக்கப்பட்டது.
 • உலக சுகாதார அமைப்பின் கீழ் இயங்கும் ஒரே பாரம்பரிய மருந்துகள் மருந்துகளுக்கான மையம் இதுவே.

4. இந்தியாவில் மீண்டும் சிவிங்கிப் புலிகள்

 • இந்தியாவில் அழிந்து போன இனமான சிவிங்கிப்புலிகளை (சீட்டா) பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் அறிமுகப்படுத்த உள்ளார்.
 • அதன்படி நமீபியாவில் இருந்து விமான மூலம் கொண்டுவரப்படும் ஐந்து பெண் சிவிங்கிப்புலிகள் மற்றும் 3 ஆண் சிவிங்கிப்புலிகள் பிரதமர் மோடியால் மத்திய பிரதேச மாநிலம் குனோ தேசிய பூங்காவில் விடப்பட உள்ளன.
 • உலகிலேயே வேகமாக ஓடக்கூடிய உயிரினமான சிவிங்கிப்புலிகள் ஒரு காலத்தில் இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் காணப்பட்டன.
 • நாட்டில் கடைசியாக காணப்பட்ட சிவிங்கிப்புலி இன்றைய சத்தீஸ்கர் பகுதியில் கடந்த 1947 இல் கண்டறியப்பட்டது.
 • இந்தியாவில் இந்த இனம் முற்றிலும் அழிந்து விட்டதாக கடந்த 1952ல் அறிவிக்கப்பட்டது.

5. தடுப்பூசிகள்

 • கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஓர் அறிவியல் புனை கதையை எதிர்கொண்டது போன்ற சூழலை மனிதகுலம் சந்தித்தது.
 • கரோனா தொற்றால் ஏற்பட்ட அந்த பாதிப்பின் மூலம் மிகப்பெரிய அனுபவத்தையும், பாடத்தையும் கற்றுக் கொண்டோம்.
 • சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா நிறுவனமானது துளியும் சோர்வடையாமல் 200 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசிகளை உற்பத்தி செய்தது.
 • இது உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதி மக்களுக்கு தடுப்பூசி வழங்கியதற்கு நிகரான எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.
 • தடுப்பூசி செலுத்துவதற்கும் அதை முறைப்படுத்துவதற்கும் கோவிட் செயலியில் மிகப்பெரிய உறுதுணையாக அமைந்தது.
 • மக்கள் தொகையில் உலகிலேயே இரண்டாவது பெரிய நாடாக திகழும் இந்தியாவில் 96.7 சதவீத பொதுமக்களுக்கு முதல் தவணை தடுப்ப தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது.
 • 89.2 சதவீதம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியை செலுத்தியுள்ளனர்.
 • இதுவரை 18.7 கோடி முன்னெச்சரிக்கை தவணைகள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
 • உலக அளவில் கரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி திட்டங்களால் சுமார் 2 கோடி மரணங்கள் தடுக்கப்பட்டுள்ளன.

6. பிண்ணாக்கு ஏற்றுமதி 71% அதிகரிப்பு

 • இந்தியாவின் பிண்ணாக்கு ஏற்றுமதி ஆகஸ்ட் மாதத்தில் 71% உயர்ந்துள்ளது.
 • இது குறித்து இந்திய செக்கு உரிமையாளர்கள் சங்கம் எஸ்இஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
 • கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் பிண்ணாக்கு ஏற்றுமதி 2,82,498 டன்னாக உள்ளது.
 • இது கடந்த ஆண்டின் இதே மாத ஏற்றுமதியான 1,64,831 டன்னுடன் ஒப்பிடுகையில் 71% அதிகமாகும்.
 • ராப் சீட் பிண்ணாக்கு ஏற்றுமதி
 • கடந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தின் 5,42,630 டன்களுடன் ஒப்பிடும்போது இந்த ஆகஸ்டில் 10,80,172 டன் என இரட்டிப்பாகியுள்ளது.
 • சோயா பிண்ணாக்கு ஏற்றுமதி
 • இந்த நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்களில் 1,55,757ல் இருந்து 1,08,258 டன் ஆக குறைந்துள்ளது.
 • ஆமணக்கு பிண்ணாக்கு ஏற்றுமதி
 • 1,27,371 டன்னிலிருந்து 1,29,350 டன்னாக உயர்ந்துள்ளது என்று இந்த அறிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது.

7. அமெரிக்க கடலோர காவல் படை கப்பல் கூட்டுப் பயிற்சி

 • கூட்டு பயிற்சியில் ஈடுபடுவதற்காக அமெரிக்க நாட்டின் கடலோர காவல்படை கப்பலான மிட்ஜெட் 757 சென்னை துறைமுகத்திற்கு வந்தடைந்தது.
 • சென்னைக்கு அருகே நடுகடலில் கூட்டு பயிற்சி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 • அமெரிக்க கடலோர காவல் படைகள் பணியாற்றி மறைந்த துணை தளபதியான ஜான் ஆலன் மிட்ஜெட்டின் நினைவாக மிட்ஜெட் 757 என பெயரிடப்பட்ட கப்பல் இந்திய கடலோர காவல் படையினருடன் கூட்டுப்பயிற்சியில் ஈடுபடவும் நல்லெண்ண பயணமாகவும் சென்னை துறைமுகம் வந்தடைந்தது.

விளையாட்டு செய்திகள்

1. 76 ஆவது கிராண்ட் மாஸ்டர்

 • கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த இளம் செஸ் போட்டியாளர் பிரணவ் ஆனந்த்.
 • இந்தியாவில் 76 வது கிராண்ட் மாஸ்டர் ஆனார்.
 • ருமேனியாவில் தற்போது நடைபெற்று வரும் உலக யூத் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் மூலம் 2500 ஈலோ மார்க்கை அவர் எட்டியதை அடுத்து கிராண்ட் மாஸ்டர் ஆகும் தகுதியை பூர்த்தி செய்தார்.
 • ஒரு செஸ்வீரர் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறுவதற்கு 2500 ஈலோ புள்ளிகளை எட்டுவதுடன், தலா ஒன்பது சுற்றுகள் கொண்ட மூன்று போட்டிகளில், இரு முறை சாதகமான முடிவுகளை (நார்ம்) பெற்றிருக்க வேண்டும்.

CA 17.09.2022(English Version)

Important days

1. 17.09.2022

 • Social Justice Day
 • Thanthai Periyar’s birthday

State news

1. World of Periyar in Trichy

 • On the occasion of Periyar’s birthday, the construction work of ‘Periyar Ulagam’ in Trichy has started.
 • Periyar World is going to be set up at Sirukanur on the Trichy-Chennai highway.
 • In this Periyar world, which is spread over an area of ​​about 30 acres, various features like a 95 feet high statue, a laboratory, a library attached to it, etc. have been established.
 • Chief Minister M.K.Stalin is going to start the construction work.
 • The Tamil Nadu government has announced that Periyar’s birthday will be observed as Social Justice Day.

2. Title Park in Madurai at Rs 600 Crores

 • The South Regional Conference for ‘Thol Koduppom’ industries was held in Madurai on behalf of Micro, Small and Medium Enterprises Department.
 • Start of new industrial groups:
 • Industry groups are formed to promote small scale industries in their respective areas.
 • Kanchipuram Narikkuvar Pasimani Group,
 • Cookware Group at Tirunelveli
 • Oodupathi Group in Tiruppathur
 • Wood Sculpture Ensemble at Dhamambatti, Salem District
 • Raw Materials Warehouse Group in Krishnagiri
 • Small scale industrial group manufacturing turmeric powder in Erode
 • Jamakalam producing small scale industrial group in Bhawani, Erode district

              Actions have been taken to set up a public facility center for

              is coming

 • Advancement in Industry Development:
 • Tamil Nadu has now moved up from 14th position to third position in the ease of career understanding in the country.
 • Tamil Nadu Government’s goal is to take first place.
 • Currently, Tamil Nadu has been recognized as a ‘Leader’ for the best innovation activity in the ranking list published by ‘Start Up’ India.
 • In the year 2000, the then Chief Minister M. Karunanidhi inaugurated the Tidal Park in Chennai which brought about an information technology revolution in Tamil Nadu.
 • Following this, IT Park was created in Coimbatore.
 • New Tidal Parks are now being developed at Tirupur, Villupuram, Thoothukudi, Thanjavur, Salem, Vellore and Udkai.
 • Following this, the park will be constructed in two phases in Maduthavani, the heart of Madurai city.
 • It will be set up on 5 acres at an initial cost of Rs 600 crores.
 • In the second phase, expansion will be done by another five acres.
 • The park will provide quality infrastructural facilities for information technology and new technologies and also contribute to the economic development of Madurai region.
 • He said that ten thousand people are expected to get employment in the first phase.

3. Small grains to farmers for breakfast scheme purchase

 • Tamil Nadu Chief Secretary V. Irayanbu has instructed to purchase small grains from the farmers for the Chief Minister’s breakfast program.
 • A consultation meeting was held in the Chief Secretariat under the leadership of Chief Secretary Theopanpu to create awareness among the public.
 • The consumption of rice food by the public has increased and the use of small grains such as corn, rye, sorghum, coconut, varaku, samaai, horseradish has also decreased drastically.
 • The United Nations has declared 2023 as the International Year of Small Grains.

4. School Book Development Project

 • Tamil Nadu Chief Minister M.K.Stalin started the School Innovation and Development Program to make students thinkers in their school years.
 • School Innovation Development Program:
 • Tamil Nadu Entrepreneurship Development and Innovation Corporation and Department of School Education in association with UNICEF to implement this project.
 • In the first phase this year 1.56 lakh students and 1320 teachers of classes nine to 12 in all government and government aided higher secondary schools will be imparted entrepreneurship awareness.
 • A cash prize of Rs 25 thousand to one lakh will be given to the best 40 innovative ideas to encourage innovative thinking among students.
 • Entrepreneur Awards 2021 – 22 CM Stalin presented State Level Best Entrepreneur Awards.
 • Best Entrepreneur Award (Tuticorin Kalpaka Chemicals)
 • Agribusiness Award (Tirupathur District Presra Pickles)
 • Quality and Export Award (Tuticorin Ramesh Flowers)
 • Best Women Entrepreneur Award (Chengalpattu District ICA Specialty)
 • Awards for Special Category (Pudukottai District Prabhu Industrial) were presented.
 • The awards were given to the top three banks which provided the most loans to MSMEs namely Method Indian Bank, Indian Overseas Bank and Bank of Baroda.

5. Kira Award

 • On behalf of Coimbatore Vijaya Reader’s Circle, KRA Award is given to the best writer with a cash prize of Rs 5 lakh every year.
 • Canada-based writer A. Muthulingam has been selected for the 2022 Kira Award in the Vijaya Reader Circle presented by Shakti Masala.

Central News

1. SCO Conference Joint Statement

 • Joint statement issued at the end of the SCO (Shanghai Cooperation Organization) conference comprising eight countries India, China, Russia, Pakistan, Uzbekistan, Kazakhstan, Tajikistan and Kyrgyz Republic:
 • Leaders of SCO Member States expressed concern over the security threat posed by all forms of terrorism and separatism.
 • The SEO organization plans to prepare a single list containing the details of terrorists and separatists banned in those countries.
 • It is said that it has been decided to prepare this list with a view to countering the threat posed by terrorists and separatists to the region where the SCO member states are located.

2. Cidagliptin

 • The central government has announced that the cheapest combination drug Cidagliptin Phosphate for the treatment of diabetes will be available in people’s pharmacies.

3. Take the SEO lead

 • Members of the India-Shanghai Cooperation Council hold the presidency on a rotating basis.
 • While Uzbekistan held the lead role for the corridor, India has assumed the lead role for the year 2023.
 • Accordingly, India is going to host the next year’s SEO conference.
 • It is noteworthy that India, which joined the SEO Federation as a permanent member in 2017, is heading the Federation for the first time.
 • Chinese President Xi Jinping, Russian President Vladimir Putin and others congratulated India on assuming the leadership.
 • It has made India naturally competitive.
 • India’s economy is poised to grow by 7.5% in the current financial year 2022-23.
 • Currently there are more than 70 thousand innovative start up companies in the country.
 • More than a hundred companies have sold ‘Unicorn’ and acquired the status of first worth around Rs 7500 crore.
 • The World Health Organization International Center for Traditional Medicine was inaugurated in Gujarat last April.
 • It is the only Center for Traditional Medicines under the World Health Organization.

4. Chivingi tigers back in India

 • Prime Minister Narendra Modi is going to reintroduce the extinct species of Cheetah in India.
 • Accordingly, five female tigers and three male tigers brought from Namibia by air will be released by Prime Minister Modi in Kuno National Park in Madhya Pradesh.
 • The world’s fastest running animal, chives, were once found in large numbers in India.
 • The last spotted tiger in the country was discovered in present-day Chhattisgarh in 1947.
 • This species was declared extinct in India in 1952.

5. Vaccinations

 • For the past two and a half years, humanity has faced a science fiction scenario.
 • We have learned a great experience and lesson from the impact of corona virus.
 • ‘Serum Institute of India’ tirelessly produced more than 200 crore vaccines.
 • It is noteworthy that this number is equivalent to vaccinating one-third of the world’s population.
 • Made a huge contribution to the covid app for vaccination and its standardization.
 • In India, the second largest country in the world by population, 96.7 percent of the population has received the first dose of preventive vaccination.
 • 89.2 percent have administered the second dose of vaccine.
 • So far 18.7 crore precautionary installments have been disbursed.
 • Around 2 crore deaths have been prevented by vaccination programs against corona infection globally.

6. 71% increase in Punnaku export

 • India’s Punnaku exports rose 71% in August.
 • According to a statement released by the Indian Chekku Proprietors Association (SEA):
 • Last month of August, the country’s Punnaku export was 2,82,498 tonnes.
 • This is an increase of 71% compared to the export of 1,64,831 tonnes in the same month last year.
 • Export of rap seed Punnaku
 • It has doubled to 10,80,172 tonnes in August compared to 5,42,630 tonnes in August last year.
 • Export of soya Punnaku
 • It decreased from 1,55,757 to 1,08,258 tonnes in the first five months of this financial year.
 • Export of castor Punnaku
 • It has been mentioned in this report that there has been an increase from 1,27,371 tonnes to 1,29,350 tonnes.

7. US Coast Guard Ship Joint Exercise

 • US Coast Guard ship Midget 757 arrived at Chennai port for joint exercise.
 • It has also been reported that a joint exercise will take place in the Mediterranean Sea near Chennai.
 • A ship named Midget 757 in honor of the late US Coast Guard Vice Commander John Allan Midget arrived at Chennai port for a joint exercise and goodwill visit with the Indian Coast Guard.

Sports news

1. 76th Grand Master

 • Pranav Anand is a young chess competitor from Bengaluru, Karnataka.
 • Became the 76th Grand Master of India.
 • He qualified as a Grandmaster after reaching the 2500 elo mark at the ongoing World Youth Chess Championship in Romania.
 • A chess player must reach 2500 elo points and have two favorable results (norm) in three matches of nine rounds each to earn the title of Grandmaster.