TNPSC Current Affairs – Sep 18, 2022

0
32

CA 18.09.2022(Tamil Version)

மாநில செய்திகள்

1. நூல் வெளியீடு

 • மயிலை திருவள்ளுவர் தமிழ் சங்கம் சார்பில் தமிழக ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற மனம் நிறைந்த மக்கள் சேவை என்ற நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் நூலாசிரியரும், ஒடிசா மாநில முன்னாள் ஆளுநருமான எம்.எம்.ராஜேந்திரன் பங்கேற்றார்.

2. கீழடி அகழாய்வு

 • சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் எட்டாம் கட்ட அகழாய்வில் தந்தத்தால் ஆன பெரிய மணி கண்டெடுக்கப்பட்டது.
 • கீழடி கொந்தகை, அகரம் ஆகிய மூன்று இடங்களில் தமிழக தொல்லியல் துறை சார்பில் எட்டாம் கட்ட அகழாய்வு பணி நடந்து வருகிறது.
 • ஏற்கனவே கீழடியில் 10 குழிகள் தோண்டப்பட்டு சுடுமண்ணால் ஆன மனித தலை உருவம், தந்ததால் ஆன பகடை, காதணி, கண்ணாடி மணிகள் உள்ளிட்ட பொருள்கள் கண்டறியப்பட்டன.

மத்திய செய்திகள்

1. தேசிய சரக்கு கையாளுகை கொள்கை

 • நாடு முழுவதும் சரக்குகளை தடையின்றி எடுத்துச் செல்ல வழிவகுக்கும் தேசிய சரக்கு கையாளுகை (லாஜிஸ்டிக்ஸ்) கொள்கையை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.
 • இக்கொள்கையானது சரக்கு போக்குவரத்துக்கான செலவை 13 – 14 சதவீதம் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) மதிப்பிலிருந்து ஒற்றை இலக்கத்திற்கு கொண்டுவரும்.
 • நாட்டின் தொலைதூர பகுதிகளுக்கு சரக்குகளை எடுத்துச் செல்வதற்கான சிக்கல்களை இக்கொள்கை போக்கும்.
 • சரக்குகளை எடுத்துச் செல்வதற்கு ஆகும் நேரத்தையும், செலவையும் குறைக்க தொழில் நிறுவனங்களுக்கு இக்கொள்கை உதவும்.
 • போக்குவரத்து துறை எதிர்கொண்டு வரும் சவால்களுக்கு தீர்வு காண்பதோடு மட்டுமல்லாமல் பிஎம் துரித சக்தி திட்டத்தையும் இக்கொள்கை ஊக்குவிக்கும்.
 • வணிகத் துறையிலும் இ-வே ரசீதுகளை செலுத்தும் இடங்களிலும் தொலைதொடர்பு ஆய்வு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
 • அதன் காரணமாக ரசீதுகளின் ஆய்வின்போது வாடிக்கையாளர்கள் நேரில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
 • சுங்க கட்டணத்தை செலுத்த அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஃபாஸ்டேக் முறையானது போக்குவரத்து துறையின் திறனை மேம்படுத்தி உள்ளது.
 • சாகர்மாலா திட்டமானது முக்கிய துறைமுகங்களை ஒருங்கிணைப்பதோடு மட்டுமல்லாமல் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தவும் வாய்ப்புள்ளது.
 • அதனால் வர்த்தக வழிதடங்களுடனான தொடர்பு வலுவடைந்து போக்குவரத்து வசதிகளும் மேம்பட்டு உள்ளன.
 • ஊக்கத்தொகை திட்டம்:
 • உலகின் ஐந்தாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உயர்ந்துள்ளது.

2. காந்தியடிகளின் ஆடை புரட்சி நூற்றாண்டு நிறைவு விழா

 • மகாத்மா காந்தியடிகளின் ஆடை புரட்சி நூற்றாண்டு நிறைவு விழா மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் செப்டம்பர் 22ஆம் தேதி நடைபெறுகிறது.
 • மகாத்மா காந்தியடிகள் 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி மதுரைக்கு வருகை தந்த போது அரை ஆடை மனிதராக மாறினார்.
 • இந்நாள் ஆடை புரட்சி தினமாக அனுசரிக்கப்படுகிறது.
 • இதன் நூற்றாண்டு நிறைவு விழா காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் செப்டம்பர் 22ஆம் தேதி நடைபெறுகிறது.
 • பூடான் முன்னாள் பிரதமர் ஜிக்மி தின்லே இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
 • காந்தி நினைவு அருங்காட்சியக தலைவர் .மாணிக்கம் தலைமை வகிக்கிறார்.

3. நிலவு வெளிச்சம்

 • இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்பம் நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸ் அண்மையில் தனது பணியாளர்கள் அனைவருக்கும் அனுப்பிய மின்னஞ்சலில் ஓர் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
 • நினைவில் கொள்ளுங்கள் இனி யாரும் நிலவு வெளிச்சத்தை நாடக்கூடாது (ரிமெம்பர் நோ மோர் மூன் லைட்டிங்).
 • அது என்ன மூன் லைட்டிங்?
 • ஒரு நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருப்பவர்கள் பணிநேரம் முடிந்ததும் அந்த நிறுவனத்துக்கு தெரியாமலேயே மற்றொரு நிறுவனத்தில் பணியாற்றுவதுதான் மூன் லைட்டிங் என்று அழைக்கப்படுகிறது.
 • ஏற்கனவே கூடுதல் பகுதி நேர வேலை என்று பரவலாக அறியப்பட்டாலும் நிறுவனத்துக்கு தெரியாமல் இன்னொரு இடத்தில் வேலை பார்ப்பது அண்மைக்காலமாகத்தான் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
 • அதனால் தான் சூரிய ஒளிக்கு பிறகு நிலவு வெளிச்சத்தை பெறுவதை குறிப்பதுபோல் மூன் லைட்டிங் என்ற பெயரில் அது பரவலாக குறிக்கப்படுகிறது.
 • இந்த மூன் லைட்டிங்கால் அதிகம் பாதிக்கப்பட்டு இருப்பது தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள்தாம்.
 • கரோனா நெருக்கடி காரணமாக அந்த நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை வீடுகளில் தங்கி வேலை செய்ய ஊக்குவித்தன.
 • அதற்காக இணையதள இணைப்பு வசதி உள்ளிட்ட சலுகைகளையும் அளித்தன.
 • இந்தியாவில் மூன் லைட்டிங் என்பது சட்டப்படி குற்றம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
 • இந்திய தொழிலாளர்கள் சட்டப்படி ஒரு நிறுவனத்தின் முழு நேர பணியாளராக இருக்கும் ஒருவர் மற்றொரு நிறுவனத்தில் கூடுதலாக பணியாற்ற முடியாது என்று சட்ட வல்லுநர்கள் கூறுகின்றன.

CA 18.09.2022(English Version)

State news

1. Publication of the text

 • Writer and former Governor of Odisha State MM Rajendran participated in the book release program of ‘Manam Pramana Makkal Seva’ held at Tamil Nadu Governor’s House on behalf of Mailai Thiruvalluvar Tamil Sangam.

2. Underground Excavation

 • A large bell made of ivory was found in the eighth phase of excavation in Keezadi, Sivagangai district.
 • Eighth phase of excavation work is going on by the Department of Archeology of Tamil Nadu at three places namely Keezadi Kontakhai and Akaram.
 • Already, 10 pits have been dug underground and objects such as clay human head, ivory dice, earring and glass beads have been found.

Central News

1. National Cargo Handling Policy

 • Prime Minister Narendra Modi unveiled the National Logistics Policy which will lead to seamless movement of goods across the country.
 • This policy will bring down the cost of freight from 13 – 14 percent of Gross Domestic Product (GDP) to single digits.
 • This policy will eliminate the problems of transporting goods to remote areas of the country.
 • This policy will help companies to reduce the time and cost of transporting goods.
 • Apart from solving the challenges faced by the transport sector, this policy will also promote the PM Faster Shakti scheme.
 • Telecom inspection system has been implemented in commercial sector and e-way receipts.
 • Because of that there is no need for customers to visit in person while checking the receipts.
 • The FAST TAG system introduced to pay tolls has improved the efficiency of the transport sector.
 • The Sagarmala project is likely to improve infrastructure besides consolidating major ports.
 • Hence connectivity with trade routes has improved and transport facilities have also improved.
 • Incentive Scheme:
 • India has emerged as the fifth largest economy in the world.

2. Gandhiji’s Clothing Revolution Centenary Celebration

 • Mahatma Gandhi’s Clothing Revolution Centenary Celebration will be held at Madurai Gandhi Memorial Museum on 22nd September.
 • When Mahatma Gandhi visited Madurai on 22 September 1921, he became a half-clothed man.
 • This day is observed as Clothing Revolution Day.
 • Its centenary celebration will be held on September 22 at the Gandhi Memorial Museum.
 • Bhutan’s former Prime Minister Jigmi Thinle was the special guest on the occasion.
 • Gandhi Memorial Museum Chairman M. Manickam presides.

3. Moonlight

 • Infosys, one of India’s leading IT companies, recently issued a warning in an email to all its employees.
 • Remember No More Moonlighting.
 • What is moonlighting?
 • Moonlighting is when people working in one company work in another company after their working hours without the knowledge of that company.
 • Although it is already widely known as extra part-time work, it is said that it is only recently that there has been an increase in working in another place without the knowledge of the company.
 • That is why it is widely referred to as moon lighting as it refers to getting moonlight after sunlight.
 • IT companies are the most affected by this moonlighting.
 • Due to Corona crisis, the companies encouraged their employees to stay and work from home.
 • For that they also provided benefits including internet connection facility.
 • Moonlighting is a legal offense in India, say experts.
 • Legal experts say that under the Indian Labor Act, a person who is a full-time employee of one company cannot work in addition to another company.