Home TNPSC TNPSC Current Affairs – Sep 16, 2022

TNPSC Current Affairs – Sep 16, 2022

0

CA 16.09.2022(Tamil Version)

முக்கிய தினங்கள்

1. 16.09.2022 

  • உலக ஓசோன் தினம்

மாநில செய்திகள்

1. காலை உணவு திட்டம்

  • அரசு பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான காலை உணவு வழங்கும் திட்டத்தை மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் முதல்வர் தொடக்கி வைத்தார்.
  • அமெரிக்காவின் பல மாநிலங்களில் ஐரோப்பிய நாடுகளில் உணவு வழங்கும் திட்டம் அமலில் உள்ளது.
  • பிரான்ஸ் நாட்டில் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
  • 1920ல் நீதி கட்சி ஆட்சியின் போது சென்னை மேயராக இருந்த சர்பிட்டி தியாகராயர் சென்னை ஆயிரம் விளக்கு மாநகராட்சி பள்ளியில் மதிய உணவுத் திட்டத்தை தொடக்கி வைத்தார்.
  • இது ஆங்கிலேயர் ஆட்சியின்போது நிறுத்தப்பட்டு 1956 முதல்வர் காமராஜரால் மதிய உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது.
  • நூற்றாண்டில் பசிப்பிணி போக்கிய பாதை:
  • 1922: சென்னை மாநகராட்சியில் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள ஆரம்பப் பள்ளியில் சோதனை முயற்சியாக மதிய உணவு திட்டம் தொடக்கம்.
  • 1925: சென்னை மாநகராட்சி மொழிக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டது.
  • 1956: தமிழ்நாட்டில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மதிய உணவுத் திட்டம் துவக்கப்பட்டது.
  • 1962: தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களும் மதிய உணவு திட்ட பயனாளர்களாக சேர்க்கப்பட்டன.
  • 1984: ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.
  • 1989: பள்ளி செல்லும் அனைத்து குழந்தைகளுக்கும் இரு வாரங்களுக்கு ஒரு முறை முட்டை வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
  • 1998: இரண்டு வயது முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு வாரம் ஒரு முறை முட்டை வழங்கும் திட்டம் அறிமுகம்.
  • 2006: இரண்டு வயது முதல் 15 வரையிலான 15 வயது வரையிலான குழந்தைகளுக்கு வாரம் இருமுறை முட்டை திட்டம் தொடக்கம்.
  • 2007: 2 முதல் 15 வயது வரையிலான குழந்தைகளுக்கு வாரம் மூன்று முறை முட்டை திட்டம் அறிமுகம்.
  • 2010: ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு அனைத்து பள்ளி வேலை நாள்களிலும் முட்டை வழங்கும் திட்டம் துவக்கம்.
  • 2014: பயனாளிகளுக்கு பல்வகை உணர் கலவை சாதம் மசாலா முட்டையுடன் வழங்கும் திட்டம் நடைமுறை.
  • 2022: பள்ளி மாணவர்களுக்கு காலேஜ் சிற்றுண்டி திட்டம் தொடக்கம்.

2. விருது

  • பெரியார் விருது சம்பூர்ணம் சாமிநாதனுக்கும்,
  • அண்ணா விருது கோவை இரா.மோகனுக்கும்,
  • கலைஞர் விருது திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவுக்கும்,
  • பாவேந்தர் பாரதிதாசன் விருது புதுச்சேரி சி.பி.திருநாவுக்கரசுக்கும்,
  • பேராசிரியர் விருது குன்னூர் சீனிவாசனுக்கும் வழங்கப்பட்டது.

மத்திய செய்திகள்

1. டத்தோ சாமிவேலு மறைவு

  • டத்தோ எஸ்.சாமிவேலு 1974 முதல் 2008 வரை தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அவர் சுமார் 29 ஆண்டுகள் பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கேபினட் அமைச்சராகவும், பொறுப்பு வகித்தவர்.
  • மலேசியா இந்திய காங்கிரஸ் கட்சியின் ஏழாவது தலைவராக பொறுப்பேற்ற டத்தோ எஸ்.சாமிவேலு தொடர்ந்து 31 ஆண்டுகள் அப்ப பதவியை வகித்தார்.
  • வயது மூப்பு காரணமாக கடந்த 2019 அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற அவர் தொடர்ந்து மலேசியாவிலேயே வசித்து வந்தார்.
  • இந்திய அரசின் சார்பில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான பாரதிய பிரவாசி சம்மான்  விருதும் பெற்றவர்.

2. இந்திய வாகன தயாரிப்பு நிறுவனங்கள் சங்கத்தின் ஆண்டு கூட்டம்

  • வாகன தயாரிப்பில் இந்திய வாகன தயாரிப்பு நிறுவனங்கள் சங்கத்தின் ஆண்டு கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
  • வாகன தயாரிப்பில் சர்வதேச அளவில் இந்தியா நான்காவது இடத்தை பெற்றுள்ளது.
  • சிறப்பு திட்டங்கள்
  • ‘இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் வாயிலாக உள்நாட்டு வாகன உற்பத்தி நிறுவனங்களின் தயாரிப்பு அதிகரித்துள்ளது.
  • மின் வாகனங்களின் உற்பத்திக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதுடன் மட்டுமல்லாமல் பெட்ரோலில் எத்தனாலை கலப்பதற்கான நடவடிக்கைகளும் தீவிர படுத்தப்பட்டு வருகின்றன.
  • 2021-2022 மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பழைய வாகனங்கள் ஒழிப்புக் கொள்கை கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வந்தது.
  • இதன்படி 20 ஆண்டுகளுக்கும் மேலான தனியார் வாகனங்களுக்கும், 15 ஆண்டுகளுக்கு மேலான வர்த்தக வாகனங்களுக்கும் தகுதிச் சோதனை கட்டாயமாகும்.
  • இச்சோதனையை பூர்த்தி செய்யாத வாகனங்கள் ஒழிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

3. கட்டாயம் மதமாற்ற தடைச் சட்ட மசோதா: கர்நாடக மேலவையில் நிறைவேற்றம்

  • மதமாற்ற தடை சட்டம் யாருடைய மத சுதந்திரத்தையும் பறிக்க முற்படவில்லை.
  • மாறாக கட்டாயப்படுத்தி ஆசை வார்த்தைகளை கூறி மதமாற்றம் செய்வதை தடுக்கவே முற்படுகிறது.
  • கட்டாயப்படுத்தி மதம் மாற்றம் செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே கூறியுள்ளது.
  • மதமாற்றம் செய்து கொள்வதில் எவ்வித தடையும் இல்லை.
  • ஆனால் ஆசை காட்டி கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்வதை தடுக்கவே சட்ட மசோதா கொண்டுவரப்படுகின்றது.

4. அம்பேத்கரும் மோடியும்

  • ‘அம்பேத்கரும் மோடியும்’ புத்தகத்தை டெல்லியில் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிடுகிறார்.
  • சட்டமேதை பி.ஆர்.அம்பேத்கரின் வாழ்க்கை அவர் மேற்கொண்ட பணிகள் மற்றும் சாதனைகளை அறிவார்ந்த கண்ணோட்டத்தில் அம்பேத்கரும் மோடியும் நூல் ஆராய்ந்துள்ளது.
  • ப்ளூகிராஃப்ட் டிஜிட்டல் பவுண்டேஷன் தொகுத்துள்ள இந்த நூலில், அம்பேத்கரின் லட்சியங்களுக்கும் புதிய இந்தியாவின் வளர்ச்சி பயணத்திற்கும் இடையிலான மறுக்க முடியாத பிணைப்பு, இந்தியா குறித்த அவரின் தொலைநோக்கு பார்வையை அந்த நூல் விவரிக்கிறது.
  • அம்பேத்கரின் தொலைநோக்கு பார்வை திறம்பட அமலுக்கு கொண்டுவரப்பட்டதை எடுத்துக்காட்ட பிரதமர் மோடி தலைமையில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள் நூலில் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.
  • ‘அம்பேத்கரும் மோடியும்’ நூலுக்கு இசையமைப்பாளரும் மாநிலங்களவை நியமன உறுப்பினருமான இளையராஜா அணிந்துரை எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

5. சிறந்த உயிரியல் பூங்கா

  • மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் இமயமலை பகுதியில் அமைந்துள்ள பத்மஜா நாயுடு இமாலயன் உயிரியல் பூங்கா நாட்டின் சிறந்த உயிரியல் பூங்காவாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
  • நாட்டில் 150க்கும் மேற்பட்ட உயிரியல் பூங்காக்கள் உள்ளன.
  • பூங்காக்களின் இயக்குனர்களுக்கான மாநாடு ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி நடைபெற்றது.
  • மத்திய உயிரியல் பூங்காக்களுக்கான ஆணையம் பூங்காக்களின் செயல்பாடுகளின் அடிப்படையில் தரப்பட்டியலை அம்மா நாட்டில் வெளியிட்டது.
  • அந்தப் பட்டியலில், மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் பகுதியில் அமைந்துள்ள பத்மஜா நாயுடு இமாலயன் உயிரியல் பூங்கா முதலிடத்தை பெற்றது.
  • சென்னை வண்டலூரில் உள்ள அண்ணா உயிரியல் பூங்கா இரண்டாவது இடத்தையும்,
  • கர்நாடகத்தின் மைசூரில் அமைந்துள்ள ஸ்ரீ சாமாராஜேந்திரா உயிரியல் தோற்றம் மூன்றாவது இடத்தையும் பெற்றன.
  • கொல்கத்தாவில் அமைந்துள்ள அலிப்பூர் உயிரியல் தோட்டம் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது.
  • டார்ஜிலிங் உயிரியல் பூங்கா 83 சதவீதம் மதிப்பெண்களை பெற்றிருந்தது.
  • கடந்த 1958 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட டார்ஜிலிங் உயிரியல் பூங்கா, கிழக்கு இமயமலையில் காணப்படும் பணி சிறுத்தை, சிவப்பு பாண்டா கரடி போன்ற அழிவுநிலையை எதிர்நோக்கியுள்ள உயிரினங்களை பாதுகாப்பதற்கான திட்டங்களை செயல்படுத்துவதில் சர்வதேச அங்கீகாரம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விளையாட்டு செய்திகள்

1. ஓய்வை அறிவித்தார் ரோஜர் ஃபெடரர்

  • டென்னிஸ் விளையாட்டில் எல்லா காலத்திலுமாக சிறந்த போட்டியாளராக கருதப்படுபொருள் ஒருவரும் சுவிட்ஸர்லாந்து நட்சத்திரமான ரோஜர் ஃபெடரர் தொழில்முறை டென்னிஸிலிருந்து ஓய்வு பெற போவதாக அறிவித்தார்.
  • டென்னிஸ் வாழ்க்கையில் 20 கிராம்ஸ் கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றதுடன் 5 சீசன்களை உலகின் நம்பர் ஒன் வீரராக நிறைவு செய்து அசத்தியவர் ரோஜர்.
  • 103 – ஏடிபி டூர் நிலையில் ஃபெடரர் வென்றுள்ள பட்டங்கள். 
  • 24 – தொழில் முறை டென்னிஸில் ஃபெடரர் களத்தில் இருந்த ஆண்டுகள்.
  • 36 – கடந்த 2018ல் தனது 36 வயதில் உலகின் நம்பர் ஒன் நிலையை எட்டி ஏடிபி தரவரிசை வரலாற்றில் முதல் இடத்துக்கு வந்த மிக வயதான வீரர் என்று சாதனை படைத்தார்.
  • 20 – ஃபெடரர் வென்ற கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள்.
  • 1251 – டென்னிஸ் வாழ்க்கையில் ஃபெடரர் பதிவு செய்துள்ள மொத்த வெற்றிகள்.
  • பெடரர் வென்ற கிரான்ஸ்லாம் பட்டங்கள்
  • ஆஸ்திரேலிய ஓபன் 2004, 2006, 2007, 2010, 2017, 2018
  • பிரஞ்சு ஓபன் 2009
  • விம்பிள்டன் 2003, 2004, 2005, 2006, 2007, 2009, 2012, 2017
  • யுஎஸ் ஓபன் 2004, 2005, 2006, 2007, 2008

CA 16.09.2022(English Version)

Important days

1. 16.09.2022

  • World Ozone Day

State news

1. Breakfast plan

  • The Principal started the program of providing breakfast to the students of class one to five in government schools at Corporation Primary School in Simmakkal area of ​​Madurai.
  • Many US states have food donation programs in European countries.
  • A breakfast program was started in France three years ago.
  • In 1920 Sarbiti Thiagarayar, who was the Mayor of Chennai during the Justice Party rule, started a mid-day meal program in the Chennai Ayaaram vilakku Corporation School.
  • It was stopped during the British rule and in 1956 the midday meal scheme was started by Chief Minister Kamaraj.
  • Path of hunger over the century:
  • 1922: Mid-day meal scheme started as an experimental initiative in a primary school in the Ayaar Lamp area of ​​the Chennai Corporation.
  • 1925: Expanded to Chennai Municipal Corporation.
  • 1956: In Tamil Nadu midday meal scheme was started in all districts of Tamil Nadu.
  • 1962: In addition to primary school students, students studying up to class VIII were included as beneficiaries of the mid-day meal scheme.
  • 1984: The scheme was extended to cover children studying from class VI to class X.
  • 1989: A fortnightly egg scheme was introduced to all school going children.
  • 1998: Introduction of once a week egg scheme for children aged two to 14 years.
  • 2006: Start of twice weekly egg program for children aged two to 15 years.
  • 2007: Launch of three times a week egg program for children aged 2 to 15 years.
  • 2010: Initiation of egg distribution program on all school working days for students studying from Class I to Class X.
  • 2014: Implementation of a scheme to provide multi-sensory mixed rice with masala egg to the beneficiaries.
  • 2022: Start of college snack program for school students.

2. Award

  • Periyar Award to Sampurnam Saminathan,
  • Anna award to Coimbatore I. Mohan,
  • kalainar Award to DMK Treasurer DR Balu,
  • Bavender Bharathidasan Award to CP Thirunavukaras of Puducherry,
  • Professor Award was also given to Coonoor Srinivasan.

Central News

1. Death of Datuk Samivelu

  • Datuk S.Samivelu was a Member of Parliament continuously from 1974 to 2008, He was a Cabinet Minister and held responsibility in various departments including Public Works for about 29 years.
  • Datuk S. Samiwelu, who took over as the seventh president of the Malaysian Indian Congress Party, held the position for 31 consecutive years.
  • He retired from politics in 2019 due to old age and continued to live in Malaysia.
  • He has also received the ‘Bharatiya Pravasi Samman’ Award for Overseas Indians from the Government of India.

2. Annual Meeting of Association of Automobile Manufacturers of India

  • Annual meeting of Automobile Manufacturers Association of India was held in Delhi.
  • India ranks fourth globally in automobile production.
  • SPECIAL PROJECTS
  • Through the ‘Make in India’ scheme, the production of domestic automobile manufacturers has increased.
  • Not only the production of electric vehicles is being given importance but also the steps to blend ethanol in petrol are being intensified.
  • The old vehicle elimination policy announced in the Union Budget 2021-2022 came into effect from April 1st.
  • According to this qualification test is mandatory for private vehicles of more than 20 years and commercial vehicles of more than 15 years.
  • It is noted that vehicles that do not meet this test will be scrapped.

3. Prohibition of Compulsory Conversion Bill: Karnataka Assembly Fulfillment

  • The Prohibition of Conversion Act does not seek to take away anyone’s freedom of religion.
  • On the contrary, it seeks to prevent conversion through coercion and wishful thinking.
  • The Supreme Court has already said that conversion cannot be forced.
  • There is no bar in conversion.
  • But the bill is brought to prevent forced conversion.

4. Ambedkar and Modi

  • Former President Ram Nath Kovind releases the book ‘Ambedkar and Modi’ in Delhi.
  • Ambedkar and Modi explores the life of legal genius BR Ambedkar, his work and achievements from an intellectual perspective.
  • Compiled by Bluecroft Digital Foundation, the book describes the undeniable link between Ambedkar’s ambitions and the development journey of a new India, his vision of India.
  • The achievements under the leadership of Prime Minister Modi are highlighted in the book to illustrate the effective implementation of Ambedkar’s vision.
  • It is noteworthy that Ilayaraja, a music composer and nominated member of the Rajya Sabha, composed the music for the book ‘Ambedkar and Modiyum’.

5. Best zoo

  • Padmaja Naidu Himalayan Zoo located in the Darjeeling Himalayan region of West Bengal has been selected as the best zoo in the country.
  • There are more than 150 zoos in the country.
  • A conference for directors of parks was held in Bhubaneswar, Odisha on 10th September.
  • The Central Zoological Authority has published a ranking of parks based on their activities in Amma Nadu.
  • Padmaja Naidu Himalayan Zoo located in West Bengal’s Darjeeling region topped the list.
  • Anna Zoological Park in Vandalur, Chennai took the second position.
  • Sri Samarajendra Biodiversity located in Mysore, Karnataka bagged the third position.
  • Alipore Biological Garden located in Kolkata is fourth in the list.
  • Darjeeling Zoo got 83 percent marks.
  • Darjeeling Zoo, established in 1958, has received international recognition for implementing projects to protect endangered species such as the working leopard and red panda found in the Eastern Himalayas.

Sports news

1. Roger Federer announces retirement

  • One of the greatest tennis players of all time, Swiss star Roger Federer has announced his retirement from professional tennis.
  • In his tennis career Roger won 20 Grams Grand Slam titles and completed 5 seasons as world number one player.
  • 103 – Titles won by Federer at ATP Tour level.
  • 24 – Federer’s years on court in professional tennis.
  • 36 – At the age of 36 in 2018, he reached the world number one position and became the oldest player in the history of the ATP rankings.
  • 20 – Grand Slam titles won by Federer.
  • 1251 – Total wins recorded by Federer in tennis career.
  • Grand Slam titles won by Federer
  • Australian Open 2004, 2006, 2007, 2010, 2017, 2018
  • French Open 2009
  • Wimbledon 2003, 2004, 2005, 2006, 2007, 2009, 2012, 2017
  • US Open 2004, 2005, 2006, 2007, 2008

Exit mobile version