Home TNPSC TNPSC Current Affairs – Dec 05, 2022

TNPSC Current Affairs – Dec 05, 2022

0

CA 05.12.2022 (Tamil Version)

முக்கிய தினங்கள்

 1. 05-12-22

  • உலக மண் தினம் 2022
  • அதன் பிரச்சாரம் “மண்கள்: உணவு எங்கு தொடங்குகிறது”

மத்திய செய்திகள்

1. இந்தியாவிலிருந்து அதிக தேயிலை இறக்குமதி

  • இந்தியாவிடம் இருந்து தேயிலை அதிகம் இறக்குமதி செய்யும் நாடுகள் பட்டியலில் ஐக்கிய அரபு அமீரகம் 2-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
  • ரஷியா மற்றும் முன்னாள் சோவியத் நாடுகள் கூட்டமைப்பு இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
  • இந்நாடுகளுக்கு கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் வரை 38.06 மில்லியன் கிலோ தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
  • இந்தியாவின் ஒட்டுமொத்த தேயிலை ஏற்றுமதி கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் வரை 165.58 மில்லியன் கிலோவாக உயர்ந்துள்ளது.
  • கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 142.55 மில்லியன் கிலோவாக இருந்தது.
  • கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு தேயிலை ஏற்றுமதி அதிகரித்துள்ளது.

2. ரயில்வே தேர்வு – யுபிஎஸ்சி நடத்த உள்ளது

  • ‘ரயில்வே மேலாண்மைப்  பணிகளுக்கென தனித்துவத்துடன் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்திய ரயில்வே மேலாண்மைப் பணித் தேர்வை (ஐஆர்எம்எஸ்இ) வரும் 2023-ஆம் ஆண்டு முதல் மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்த உள்ளது’ என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
  • புதிதாக அறிமுகம் செய்யப்படும் ஐஆர் எம்எஸ் தேர்வானது முதல்நிலை மதிப்பீடு தேர்வு, பிரதான எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என்று இரண்டு கட்டங்களாக நடத்தப்படும்.
  • அதாவது தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள், முதல் கட்டமாக யுபிஎஸ்சி சார்பில் ஏற்கெனவே நடத்தப்பட்டு வரும் குடிமைப் பணிகள் (முதல்நிலை) தேர்வில் தகுதி பெற வேண்டும். இதில் தகுதி பெறும் மாணவர்கள் மட்டுமே ஐஆர்எம்எஸ் பிரதான எழுத்துத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர்.

விருது

1. ‘மகாகவி பாரதியார் விருது’

  • மகாகவி பாரதியார் குறித்து விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு அரிய தகவல்களைத் திரட்டி வெளியிட்டு வரும் பாரதி ஆய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலப்திக்கு இந்த ஆண்டு தினமணியின் ‘மகாகவி பாரதியார் விருது’ வழங்கப்படுகிறது.
  • பாரதி பிறந்த நாளான டிச. 11-ஆம் தேதி தூத்துக்குடியில் நடைபெறும் விழாவில் இந்த விருதை தெலங்கானா மாநில ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் வழங்குகிறார்.
  • பாரதி தொடர்பாக இவர், பாரதியின் ‘இந்தியா’ கருத்துப்படங்கள், பாரதியும் வ.உ.சி.யும், பாரதி: ‘விஜயா’ கட்டுரைகள், பாரதியின் சுயசரிதைகள்: கனவு, சின்ன சங்கரன் கதை, பாரதி கருவூலம்: பாரதி: கவிஞனும் காப்புரிமையும்; எழுக, நீ புலவன் ஆகிய நூல்களைத் தமிழிலும் Who Owns That Song?: The Battle for Subramania Bharati’s Copyright என்ற நூலை ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார்.

மாநாடு

1. ஜி20 உயரதிகாரிகள் கூட்டம் உதய்பூரில் தொடக்கம்

  • உலகின் வலிமைமிக்க ஜி20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ள நிலையில் அதன் உயரதிகாரிகள் கூட்டம் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தொடங்கியது.
  • அடுத்த ஆண்டு செப்டம்பரில் இந்தியாவில் நடைபெற இருக்கும் ஜி20 தலைவர்களின் உச்சி மாநாட்டில் முன்வைக்கப்படவிருக்கும் வளர்த்துவரும் நாடுகளின் தீர்மானத்தை இறுதி செய்வதற்கான வாய்ப்பாக இந்த உயரதிகாரிகள் கூட்டம் அமைத்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
  • இந்த நான்கு நாள்கள் கூட்டத்தில் ஜி20 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மற்றும் விருந்தினர்களாக பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் வங்கதேசம். எகிப்து, மோரீஷஸ், நெதர் லாந்து, தைஜீரியா, ஓமன், சிங்கப்பூர், ஸ்பெயின் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 9 நாடுகளின் அதிகாரிகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.

CA 05.12.2022 (English Version)

Important days

   1. 05-12-22

  • World Soil Day 2022 
  • its campaign “Soils: Where food begins”

Central News

  1. High import of tea from India

  • United Arab Emirates has advanced to the 2nd place in the list of countries that import the most tea from India.
  • Russia and the former Soviet Union topped the list.
  • 38.06 million kg of tea has been exported to these countries from last January to September.
  • India’s overall tea exports rose to 165.58 million kg from January to September last year.
  • It was 142.55 million kg during the same period last year.
  • Export of tea has increased this year compared to last year.

   2. Railway Exam – UPSC is going to conduct

  • ‘The Union Staff Selection Commission (UPSC) is going to conduct the Indian Railway Management Services Examination (IRMSE) from 2023, which is uniquely designed for railway management jobs,’ the Ministry of Railways said.
  • The newly introduced IR MS exam will be conducted in two stages namely Preliminary Assessment Exam, Main Written Exam and Interview Exam.
  • That is, the eligible candidates must first qualify the Civil Services (Primary) examination which is already conducted by UPSC. Only those students who qualify in this will be admitted to the IRMS Main Written Test.

Award

 1. ‘Mahkavi Bharatiyar Award’

  • This year Dinamani’s ‘Mahakavi Bharatiyar Award’ is given to Bharathi analyst A.Ira Venkatasalapati who has done extensive research on Mahakavi Bharatiyar and has collected and published rare information.
  • Telangana Governor Dr. Tamilisai Soundararajan will present this award at a function to be held in Thoothukudi on December 11, Bharathi’s birthday.
  • In relation to Bharathi, Bharathi’s paratiyin intiya’ karuttuppatankal, paratiyum va.u.ciyum, bharathi: ‘Vijaya’ katturaikaḷ, paratiyin cuyacaritaikaḷ: Kanavu, cinna cankaran katai, parati karuvulam: bharathi: Kavinanum kappurimaiyum; eluka, ni pulavan  and Who Owns That Song?: The Battle for Subramania Bharati’s Copyright in English.

Conference

   1. G20 summit begins in Udaipur

  • As India assumed the presidency of the world’s most powerful G20, its high-level meeting began in Rajasthan’s Udaipur.
  • Officials said the high-level meeting was an opportunity to finalize the resolution of developing countries to be presented at the G20 leaders’ summit in India in September next year.
  • Bangladesh has been invited to participate in this four-day meeting with the leaders of the G20 member states and as guests. Officials of 9 countries including Egypt, Mauritius, Netherlands, Tajikistan, Oman, Singapore, Spain and United Arab Emirates and representatives of international organizations will participate.

Exit mobile version