TNPSC Current Affairs – Sep 03, 2022

0
30

CA 03.09.2022(Tamil Version)

மாநில செய்திகள் 

1. பெரியார் அண்ணா விருதுகள் அறிவிப்பு  

 • பெரியார் விருது:  
 • கோபி தொகுதி முன்னாள் எம்.பி பி..சாமிநாதனின் மனைவி சம்பூரணத்துக்கு பெரியார் விருது வழங்கப்படுகிறது.  
 • அண்ணா விருது 
 • கோவை தொகுதி முன்னாள் எம்.பி இரா.மோகனுக்கு அண்ணா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.  
 • இந்தி எதிர்ப்பு போராட்ட காலத்திலும் மிசா சட்டத்தின் கீழ் சிறை சென்றார்.  
 • கலைஞர் விருது:  
 • திமுக நாடாளுமன்ற குழு தலைவரும் கட்சியின் பொருளாளருமான டி.ஆர்.பாலுவுக்கு கலைஞர் விருது அளிக்கப்படுகிறது.  
 • இந்தி எதிர்ப்பு போராட்டம் அவசரநிலை காலம் என பல்வேறு தருணங்களில் சிறை சென்றவர்.  
 • பாவேந்தர் விருது:  
 • புதுச்சேரியைச் சேர்ந்த சி.பி.திருநாவுக்கரசுக்கு பாவேந்தர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.  
 • பேராசிரியர் விருது:  
 • விருதுநகர் மாவட்டம் குன்னூர் கிராமத்தைச் சேர்ந்த, குன்னூர் சீனிவாசன் பேராசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  

2. குற்றமும் கருணையும்  

 • நாம் எப்படி பணிபுரிய வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக குற்றமும் கருணையும் நூல் விளங்குகிறது என்று உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தெரிவித்தார்.  
 • காவல்துறை முன்னால் இயக்குனரான அனூப் ஜெய்ஸ்வாலின் காவல் பணி அனுபவங்கள் குறித்து ஊடகவியலாளர் வி.சுதர்சன் எழுதிய இளம் ஐபிஎஸ் அதிகாரியின் தூத்துக்குடி அனுபவங்கள் ஆங்கில நூலின் தமிழாக்கமான ‘குற்றமும் கருணையும்’ நூல் வெளியீட்டு விழா மதுரையில் நடைபெற்றது.  

3. பாடகர் பம்பா பாக்கியா காலமானார்  

 • பிரபல பின்னணி பாடகர் பம்பா பாக்யா மாரடைப்பு காரணமாக சென்னையில் நள்ளிரவு காலமானார்.  
 • பம்பா பாக்யா ஏ.ஆர்.ரகுமான் இசையில் ராவணன் படத்தில் பாடகர் ஆக அறிமுகமானார். 

மத்திய செய்திகள் 

1. விக்ராந்த் போர்க்கப்பல் அர்ப்பணிப்பு  

 • உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் நரேந்திர மோடி இந்தியர்களுக்கான நவீன எதிர்காலம் உதயமாகியுள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.  
 • விமானம் தாங்கி போர்க்கப்பல்களை உள்நாட்டிலேயே கட்டுவதற்கான திட்டத்தை கடந்த 2007 ஆம் ஆண்டு மத்திய அரசு செயல்படுத்தியது.  
 • இத்திட்டத்தின் கீழ் முதல் விமானம் தாங்கி போர்க் கப்பலான விக்ராந்த் சுமார் ரூபாய் 20,000 கோடி மதிப்பில் கட்டப்பட்டது.  
 • கொச்சி கப்பல் கட்டுமான நிறுவனம் அந்த கப்பல் கட்டும் பணியை 2009 ஆம் ஆண்டு தொடங்கியது.  
 • போர்க்கப்பலில் பயன்படுத்தப்பட்ட ஸ்டீல் முதல் பல்வேறு பொருள்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டவை.  
 • கப்பலை கட்டமைத்ததில் கொச்சி கப்பல் கட்டும் நிறுவனத்தின் பொறியாளர்கள் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) விஞ்ஞானிகள் கடற்படை என பல்வேறு தரப்பினரின் பங்களிப்பு காணப்படுகிறது.  
 • சிறப்பம்சங்கள்  
 • நீளம்                                                              262.5  மீட்டர்  
 • அகலம்                                                        62.5 மீட்டர்  
 • உயரம்                                                          59 மீட்டர்  
 • எடை                                                            சுமார் 43,000 டன்  
 • டர்பைன்களின் எண்ணிக்கை  4  
 • எஞ்சின் திறன்                                       88 மெகாவாட்  
 • அதிகபட்ச வேகம்                              மணிக்கு 28 கடல் மைல் (சுமார் 52         

                                                கிலோமீட்டர்)  

 • ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் செல்லும் தொலைவு சுமார் 7,500 கடல் மைல்  
 • இயக்க வல்ல போர் விமானங்கள் மிக்29கே காமோவ்31 உள்ளிட்டவை.  
 • இயக்க வல்ல ஹெலிகாப்டர்கள் எம்ஹெச்60 ஆர் இலகுரக ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவை.  
 • நிறுத்தக்கூடிய போர் விமானங்கள் 30  
 • அறைகளின் எண்ணிக்கை சுமார் 2300  
 • அடுக்குமாடிகள் 18  

2. சர்வதேச பெருங்குடல் அறுவை சிகிச்சை மாநாடு தொடக்கம்  

 • சர்வதேச பெருங்குடல் அறுவை சிகிச்சை மாநாடு சென்னையில் தொடங்கியது.  
 • நூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேச மருத்துவ வல்லுநர்கள் பங்கேற்று சமகால மருத்துவ தொழில்நுட்பம் சிகிச்சை முறைகள் பரிசோதனை மற்றும் மருத்துவ நடவடிக்கைகள் குறித்து விரிவாக கலந்துரையாட உள்ளனர்.  

3. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்  

 • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் தெலுங்கானாவுக்கு கடந்த எட்டு ஆண்டுகளில் ரூபாய் 20000 கோடி கிடைக்க பெற்றுள்ளது.  
 • இந்த காலகட்டத்தில் நாடு முழுவதும் மத்திய அரசு ரூபாய் 5 லட்சம் கோடி செலவிட்டுள்ளது.  

4. இந்திய கடற்படையின் கொடி மாற்றியமைப்பு  

 • இந்திய கடற்படையின் பழைய கொடி மாற்றப்பட்டு புதிய கொடி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  
 • ஆங்கிலேயர் ஆட்சி காலத்து சின்னங்களுக்கு பதிலாக புதிய வடிவத்தை கொடி தாங்கியுள்ளது.  
 • சத்ரபதி சிவாஜி மன்னரால் கற்பனை செய்யப்பட்டபடி கடலில் இந்திய கடற்படையின் புதிய கொடி பறக்கும் என்று தெரிவித்தார் பிரதமர் நரேந்திர மோடி.  
 • இந்திய கடற்படையின் பழைய கொடியில் இடம்பெற்றிருந்த குறுக்கும் நடுக்கமான சிவப்பு கோடுகள் தற்போது நீக்கப்பட்டுள்ளன.  
 • அந்த கோடுகள் செயின்ட் ஜார்ஜ் மன்னரின் சிலுவையை குறிக்கும் வகையில் இருந்து வந்தன.  
 • தற்போது ஆட்சி அமைக்கப்பட்டுள்ள புதிய கொடியில் மராட்டிய மன்னரான சிவாஜியின் முத்திரை இடம்பெற்றுள்ளது.  
 • அதன் ஓரத்தில் இரண்டு தங்க நிற கோடுகள் இடம்பெற்றுள்ளன.  
 • புதிய கொடியில் தேசிய சின்னமான சிங்கங்கள் ஒரு நங்கூரத்தின் மீது இடம்பெற்றுள்ளன.  
 • அதன் கீழே சம் நோ வருண என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.  
 • கொடியில் உள்ள சின்னத்தை சுற்றியுள்ள எட்டு முனைகள் இந்திய கடற்படையின் பல்வேறு திசைகளில் செயல்படும் திறனை குறிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  
 • இந்தியாவில் கிழக்கு இந்திய கம்பெனி தனது செயல்பாடுகளை சூரத்தில் 1612 ஆம் ஆண்டு தொடங்கியது.  
 • 1707-ல் கடற்படையின் கொடியில் செயின்ட் ஜார்ஜ் மன்னரின் சிலுவைக்கு பதிலாக பிரிட்டிஷ் அரசின் தேசியக்கொடி இடம் பெற்றது.  
 • 1801ல் அதில் பிரிட்டிஷ் தேசியக் கொடியில் சிறிது மாற்றம் செய்யப்பட்டு சிவப்பு கோடுகள் இடம்பெற்றன.  
 • 1830-ல் பம்பாய் கடற்படையின் பெயர் இந்திய கடற்படை என்று மாற்றி அமைக்கப்பட்டது.  
 • மீண்டும் 1863 முதல் 1877 வரை அதன் பெயர் பம்பாய் கடற்படை என்று சூட்டப்பட்டிருந்தது.  
 • கடற்படையின் பல்வேறு சேவைகளை அங்கீகரிக்கும் வகையில் அதன் பெயர் ராயல் இந்தியன் மரைன் என்று 1892ல் மாற்றப்பட்டது.  
 • அப்போது கடற்படை வசம் 50 கப்பல்கள் இருந்தன.  
 • கடந்த 1934 ராயல் இந்தியன் மரைன் என்ற பெயர் ராயல் இந்தியன் நேவி என்று மாற்றப்பட்டது.  
 • முன்னதாக 1879ல் கடற்படைக்கு நீல நிறக் கொடி அறிமுகம் செய்யப்பட்டது.  
 • அது 1928 வரை அமலில் இருந்தது.  
 • 1947 இல் நடைபெற்ற பிரிவினையை தொடர்ந்து ‘ராயல் இந்தியன் நேவி’ என்றும் ‘ராயல் பாகிஸ்தான் நேவி’ என்றும் பிரிக்கப்பட்டது.  
 • இந்தியா 1950 ஜனவரி 26 குடியரசானதை தொடர்ந்து ராயல் என்ற வார்த்தை கைவிடப்பட்டு இந்திய கடற்படை என்று பெயரிடப்பட்டது.  
 • 1950 ஜனவரி 26 முதல் 2001 வரை பிரிட்டிஷ் கடற்படையின் மாற்றியமைக்கப்பட்ட கொடியையே இந்திய கடற்படை பெற்றிருந்தது.  
 • 2001 ஆகஸ்ட் 15 முதல் இந்திய கொடிக்கு பதிலாக வெள்ளைக்கொடி அறிமுகம் செய்யப்பட்டது.  
 • அது 2004 ஆம் ஆண்டு வரை நீடித்தது.  

5. மாசடைந்த காற்றை சுவாசிக்கும் 99 சதவீதம்  

 • இந்தியர்கள் நாட்டில் காற்று மாசுபாடு குறித்த ஆய்வே கிரீன் பீஸ் இந்தியா என்ற அமைப்பு நடத்தியது.  
 • காற்றில் 2.5 மைக்ரான் விட்டமுள்ள நுண்துகள்கள் பி.எம் 2.5 அதிக அளவில் கலந்துள்ளன உலக சுகாதார அமைப்பு அனுமதிக்கும் ஆண்டு சராசரி அளவைவிட ஐந்து மடங்குக்கும் அதிகமான நுண் துகள்கள் காற்றில் கலந்துள்ளன.  
 • அத்தகைய மாசடைந்த காற்றைத் தான் நாட்டில் உள்ள 99 சதவீதத்திற்கும் அதிகமானோர் சுவாசித்து வருகின்றனர்.  
 • பி.எம் 2.5 மாசு அதிகமாக காணப்படும் இடமாக தில்லி உள்ளது.  
 • பி.எம் 2.5 நுன்துகள்களை சுவாசிப்பதால் அவை நுரையீரல் சுவாச பாதை உள்ளிட்ட பகுதிகளை ஊடுருவி சென்று சுவாசக் கோளாறுகள், இதயம் சார்ந்த பிரச்சினைகளை ஏற்படுத்த அதிக வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.  

6. மேற்குவங்கம் முதலிடம்  

 • நாட்டில் கடந்த ஆண்டு சமூக வலைத்தளங்களில் பொய்ச் செய்திகள் பரப்பியதாக அதிக வழக்குகள் பதிவான மாநிலங்களில் மேற்குவங்கம் முதலிடத்தில் உள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது.  
 • மேற்கு வங்கத்தில் மொத்தம் 43 வழக்குகள் பதிவாகியுள்ளன.  
 • இதில் 28 வழக்குகள் கொல்கத்தாவில் மட்டும் பதிவாகியுள்ளன.  
 • மக்களிடம் சென்றடைவதற்காக ஒழுக்கமற்ற பொய் பிரச்சாரங்களை அரசியல் கட்சிகள் மேற்கொண்டதே மேற்குவங்கத்தில் பொய் செய்திகள் அதிகம் பரவியதற்கு காரணம்.  
 • மேற்கு வங்கத்தை தொடர்ந்து தெலுங்கானாவில் 34 வழக்குகளும், உத்தர பிரதேசத்தில் 24 வழக்குகளும் அதிகபட்சமாக பதிவாகியுள்ளன.  
 • நாடு முழுவதும் பதிவான 129 வழக்குகளில் மேற்கு வங்கத்தில் மட்டும் 24 சதவீத வழக்குகள் உள்ளன.  

7. ஏஐஎஃப்எஃப் தலைவர்  

 • இந்திய கால்பந்து சம்மேளனத்தின் (ஏஐஎஃப்எஃப்) புதிய தலைவராக கல்யாண் செளபே தேர்வு செய்யப்பட்டார்.  
 • இந்திய கால்பந்தின் 85 ஆண்டுகால வரலாற்றில் முன்னாள் வீரர் ஒருவர் சம்மேளனத் தலைவராக இருப்பது இதுவே முதல் முறை.  
 • தலைவர் தேர்தலுக்கான போட்டியில் கல்யாண் செளபே 33-1 என்ற வாக்குகள் கணக்கில் முன்னாள் நட்சத்திர வீரரான பாய்ச்சங் பூட்டியாவை தோற்கடித்தார்.  

CA 03.09.2022(English Version)

State news 

1. Notification of Periyar Anna Awards 

 • Periyar Award: 
 • Sampoorana, wife of Gobi Constituency former MP BA Saminathan, is given Periyar award. 
 • Anna Award: 
 • Former Coimbatore MP Ira Mohan has been announced Anna award. 
 • Misa also went to jail under the Anti-Hindi Act. 
 • Artist Award: 
 • DMK Parliamentary Committee President and Party Treasurer DR Balu is given artist award. 
 • He went to jail at various times during the Anti-Hindi movement and during the Emergency. 
 • Bhavendar Award: 
 • Bavendar Award has been announced to C.P. Thirunavukaras from Puducherry. 
 • Professor Award: 
 • Coonoor Srinivasan from Coonoor village of Virudhunagar district has been selected for the Professor Award. 

2. Crime and mercy 

 • High Court Judge GR Swaminathan said that the book Crime and Mercy is an example of how we should work. 
 • The release ceremony of the Tamil version of the English book ‘Crime and Compassion’, written by mediaperson V. Sudarsan on the police work experiences of former Director of Police Anup Jaiswal, ‘Ilam IPS Adhikariin Thoothukudi Anubhavangal’, was held in Madurai. 

3. Singer Bamba Baghia passed away 

 • Popular playback singer Bamba Bhagya passed away in Chennai at midnight due to a heart attack. 
 • Bamba Bhagya made his debut as a singer in the film Raavanan with music by AR Raghuman. 

Central News 

1. Dedication of Vikrant warship 

 • Dedicating the first indigenously built aircraft carrier INS Vikrant to the country, Prime Minister Narendra Modi proudly expressed that a modern future has dawned for Indians. 
 • In 2007, the central government implemented a plan to build aircraft carriers locally. 
 • The first aircraft carrier Vikrant was built under this scheme at a cost of around Rs 20,000 crore. 
 • Cochin Shipbuilding Company started construction of that ship in 2009. 
 • The steel used in the warships is manufactured indigenously. 
 • Construction of the ship saw the participation of various parties like engineers of Cochin Shipbuilding Company, Defense Research Development Organization (DRDO) scientists and navy. 
 • Highlights 
 • Length 262.5 meters 
 • Width 62.5 meters 
 • Height 59 meters 
 • Weight about 43,000 tons 
 • Number of turbines 4 
 • Engine capacity is 88 MW 
 • Maximum speed is 28 nautical miles per hour (about 52 kilometers) 
 • Range on a single refueling is about 7,500 nautical miles 
 • Maneuverable fighter jets include the MiG-29K Kamov-31. 
 • Maneuverable helicopters include MH-60R light helicopters. 
 • Interceptable fighters 30 
 • Number of rooms is around 2300 
 • Flats 18 

2. Inauguration of International Colorectal Surgery Conference 

 • International Colorectal Surgery Conference started in Chennai. 
 • More than hundred international medical experts will participate and discuss in detail about contemporary medical technology, treatment methods, testing and clinical procedures. 

3. Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme 

 • Under the Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme, Telangana has received Rs 20,000 crore in the last eight years. 
 • During this period the central government has spent Rs 5 lakh crore across the country. 

4. Change of Flag of Indian Navy 

 • The old flag of the Indian Navy has been replaced and a new flag has been introduced. 
 • The flag has replaced the symbols of British rule with a new design. 
 • Prime Minister Narendra Modi said that the new flag of the Indian Navy will fly at sea as envisioned by King Chhatrapati Shivaji. 
 • The criss-crossing red stripes on the old flag of the Indian Navy have now been removed. 
 • The lines came from the cross of St. George to represent the King. 
 • The new flag of the present government bears the seal of the Maratha king Shivaji. 
 • It has two golden stripes on its side. 
 • The new flag features the national emblem of lions on an anchor. 
 • Below it is engraved the words ‘Some no Varuna’. 
 • The eight points surrounding the symbol on the flag are said to represent the multi-directional capability of the Indian Navy. 
 • The East India Company started its operations in India in 1612 at Surat. 
 • In 1707, the British flag replaced the St George’s Cross on the naval ensign. 
 • In 1801 the British national flag was slightly modified to include red stripes. 
 • In 1830 Bombay Navy was renamed Indian Navy. 
 • Again from 1863 to 1877 it was named Bombay Navy. 
 • Its name was changed to ‘Royal Indian Marine’ in 1892 to recognize the various services of the Navy. 
 • At that time the navy had 50 ships. 
 • In 1934 the name Royal Indian Marine was changed to ‘Royal Indian Navy’. 
 • Earlier in 1879 the blue flag was introduced to the Navy. 
 • It remained in force till 1928. 
 • Following partition in 1947, it was divided into ‘Royal Indian Navy’ and ‘Royal Pakistan Navy’. 
 • After India became a republic on January 26, 1950, the word Royal was dropped and the name ‘Indian Navy’ was given. 
 • From 26 January 1950 to 2001, the Indian Navy had a modified flag of the British Navy. 
 • From 15th August 2001 white flag was introduced instead of Indian flag. 
 • It lasted till 2004. 

5. 99 percent breathe polluted air 

 • An organization called ‘Green Peace India’ conducted a study on air pollution in Indian country. 
 • Particulate matter with a diameter of 2.5 microns in the air contains high levels of PM 2.5, more than five times the annual average amount allowed by the World Health Organization. 
 • More than 99 percent of people in the country are breathing such polluted air. 
 • Delhi is the most polluted place of PM 2.5. 
 • Doctors warn that inhalation of PM 2.5 particles has a high chance of penetrating areas including the lungs and respiratory tract and causing respiratory problems and heart problems. 

6. West Bengal is number one 

 • According to the statistics released by the National Crime Records Bureau, West Bengal has the highest number of cases of spreading fake news on social media in the country last year. 
 • A total of 43 cases have been reported in West Bengal
 • Out of which 28 cases have been reported in Kolkata alone. 
 • The reason for the spread of fake news in West Bengal is that political parties have launched unscrupulous false campaigns to reach the people. 
 • West Bengal is followed by Telangana with 34 cases and Uttar Pradesh with 24 cases. 
 • Of the 129 cases reported across the country, West Bengal alone accounted for 24 percent of the cases. 

7. President of AIFF 

 • Kalyan Chelube has been elected as the new president of the Indian Football Federation (AIFF). 
 • This is the first time in the 85-year history of Indian football that a former player is the president of the federation. 
 • Kalyan Chelabe defeated ex-star Paichung Bhutia by a margin of 33-1 in the race for President.