Home TNPSC TNPSC Current Affairs – SEP 02, 2022

TNPSC Current Affairs – SEP 02, 2022

0
20

CA 02.09.2022(Tamil Version)

மாநில செய்திகள் 

1. அதிக மழைப்பதிவு  

  • கடந்த 122 ஆண்டுகளில் தென்மேற்கு பருவமழை காலத்தில் மூன்றாவது முறையாக ஆகஸ்ட் மாதத்தில் அதிகமான மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.  
  • திருநெல்வேலி, நாமக்கல், தர்மபுரி, ஈரோடு, திருப்பூர், விருதுநகர், சிவகங்கை உள்ள 18 மாவட்டங்களில் தென்மேற்கு பருவகாலத்தில் 100 சதவீதத்திற்கும் அதிகமாக மழை அளவு பதிவாகியுள்ளது.  
  • 1906 ஆம் ஆண்டில் 112cm, 1909ஆம் ஆண்டில் 127 சென்டிமீட்டர் பதிவாகியுள்ளது.  

மத்திய செய்திகள் 

1. ஆகஸ்ட் ஜிஎஸ்டி வசூல் ரூபாய் 1.43 லட்சம் கோடி  

  • கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நாடு முழுவதும் ரூபாய் 1,43,612 கோடி ஜிஎஸ்டி வசூலாகியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.  
  • இது கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தை ஒப்பிடுகையில் 28 சதவீதம் அதிகமாகும்.  
  • நாடு முழுவதும் ஆகஸ்ட் மாதத்தில் ரூபாய் 1,43,612 கோடி ஜிஎஸ்டி வருவாய் வசூல் ஆகியுள்ளது.  
  • இதில் மத்திய ஜிஎஸ்டி ரூபாய் 24,710 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூபாய் 30,951 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி (இறக்குமதி பொருள்கள் மூலம் வசூலிக்கப்பட்ட ரூபாய் 42,067 கோடி உள்பட) ரூபாய் 77,782 கோடி, கூடுதல் வரி (செஸ்) ரூபாய் 10,168 கோடி (இறக்குமதி பொருள்கள் மூலம் வசூலிக்கப்பட்ட ரூபாய் 1,018 கோடி உள்பட).  
  • ஜிஎஸ்டி வருவாய் ரூபாய் கோடியில் 
மாதம் 2021 2022 
ஏப்ரல் 1,39,708 1,67,540 
மே 97,821 1,40,885 
ஜூன் 92,800 1,44,616 
ஜூலை 1,16,393 1,48,995 
ஆகஸ்ட் 1,12,020 1,43,612 

2. அரசு பள்ளிகளில் ஈரானிய திரைப்படம்  

  • தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சில்ட்ரன் ஆஃப் ஹெவன் ஈரானிய திரைப்படம் திரையிடப்பட்டது.  
  • அரசு பள்ளி குழந்தைகளின் திறனை மேம்படுத்துதல், படைப்பாற்றலையும் மேம்படுத்துதல், தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் மாதம் ஒருமுறை குழந்தைகள் தொடர்பான திரைப்படங்கள் திரையிடப்படும். 
  • அவ்வாறு திரையிடப்படும் அந்த படத்தின் மீது சிறந்த விமர்சனம் செய்யும் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு மாநில அளவில் இறுதி செய்யப்பட்டு வெற்றி பெறுபவர்கள் வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லப்படுவர் என தமிழக அரசு அறிவித்திருந்தது.  

3. கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பு சி குறைந்த விலையில் கிடைக்கும்  

  • இந்தியாவில் 15 முதல் 44 வயது வரையிலான பெண்களுக்கு ஏற்படும் புற்று நோய்களில் கருப்பை வாய் புற்றுநோய் இரண்டாம் இடத்தில் உள்ளது.  
  • இந்த புற்று நோய்க்கான முக்கிய காரணியான ஹியூமன் பாப்பிலோமா தீநுண்மிக்கு எதிராக தடுப்பாற்றலை அளிக்கும் தடுப்பூசியை சீரம் இந்தியா உருவாக்கியுள்ளது.  
  • ‘தற்சார்பு இந்தியா’ என்ற பிரதமர் மோடியின் தொலைநோக்கு திட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் செர்வாவேக் தடுப்பூசி உருவாக்கம் அமைந்துள்ளது. 
  • மக்களுக்கு குறைந்த விலையில் இந்த தடுப்பூசி கிடைப்பது உறுதி செய்யப்படும் என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். 
  • அதார் பூனாவாலா கூறுகையில், ரூ. 200 முதல் ரூபாய் 400 விலையில் அடுத்த சில மாதங்களில் தடுப்பூசி கிடைக்கும்.  
  • அரசுடன் ஆலோசித்த பிறகு இறுதி விலை நிர்ணயிக்கப்படும் என்றார் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங். 

CA 02.09.2022(English Version)

State news 

1. High rainfall 

  • Balachandran, head of the South Zone of the Meteorological Center, said that for the third time in the Southwest Monsoon season in the last 122 years, more rain has been recorded in August. 
  • 18 districts including Tirunelveli, Namakkal, Dharmapuri, Erode, Tirupur, Virudhunagar and Sivaganga have recorded more than 100 percent rainfall during the southwest monsoon. 
  • 112 cm in 1906 and 127 cm in 1909. 

Central News 

1. August GST collection at Rs 1.43 lakh crore 

  • The Union Finance Ministry has reported that the GST collection of Rs 1,43,612 crore across the country in the month of August. 
  • This is 28 percent higher than August last year. 
  • GST revenue collection of Rs 1,43,612 crore in August across the country. 
  • Out of which Central GST is Rs 24,710 crore, State GST is Rs 30,951 crore, Integrated GST (including Rs 42,067 crore collected on imported goods) is Rs 77,782 crore, Additional Tax (cess) is Rs 10,168 crore (including Rs 1,018 crore collected on imported goods). 
  • GST Revenue in Crore 
Month 2021 2022 
April 1,39,708 1,67,540 
May 97,821 1,40,885 
June 92,800 1,44,616 
July 1,16,393 1,48,995 
August 1,12,020 1,43,612 

2. Iranian film in public schools 

  • Iranian film Children of Heaven was screened for the students of class VI to class IX in government schools in Tamil Nadu. 
  • Films related to children will be screened once a month to improve the ability, creativity and self-confidence of government school children. 
  • The Tamil Nadu government had announced that the students who give the best reviews on the film that will be screened will be selected and finalized at the state level and the winners will be taken abroad. 

3. Cervical cancer prevention c is available at low cost 

  • Cervical cancer is the second most common cancer among women aged 15 to 44 years in India. 
  • Serum India has developed a vaccine that provides immunity against human papilloma virus, the main cause of this cancer. 
  • Development of ‘Cervavec’ vaccine is aimed at strengthening Prime Minister Modi’s visionary plan of ‘Self-reliant India’. 
  • Union Minister Jitendra Singh said that it will be ensured that people get this vaccine at low cost. 
  • Athar Poonawala said, The vaccine will be available in the next few months for a price of Rs 200 to Rs 400. 
  • Union Minister Jitendra Singh said the final price will be fixed after consultation with the government.