TNPSC Current Affairs – Oct 22, 2022

0
33

CA 22.10.2022(Tamil Version)

மாநில செய்திகள்

1. சென்னையில் சாலை விபத்து உயிரிழப்பு 12.5% குறைந்துள்ளது

 • சென்னையில் சாலை விபத்து உயிரிழப்பு 12.5 சதவீதம் குறைந்துள்ளதாக பெருநகர காவல் துறையின் போக்குவரத்து பிரிவு கூடுதல் ஆணையர் கபில்குமார் சி.சரத்கர் தெரிவித்தார்.
 • மோட்டார் வாகன சட்ட திருத்தம் 2019 இன் படி உயர்த்தப்பட்ட அபராத தொகை, சென்னையில் இம்மாதம் 28ஆம் தேதி முதல் வசூலிக்கப்படும்.
 • புதிய கருவி:
 • மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை பிரீத் அனலைசர் கருவி மூலம் கண்டுபிடிக்கிறோம்.
 • ஆனால், தற்போது கஞ்சா, போதை மாத்திரை பயன்படுத்திவிட்டு பலர் வாகனம் ஓட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
 • பரீத் அனலைசர் கருவி மூலம் அதை கண்டுபிடிக்க வசதி இல்லை.
 • எனவே, கஞ்சா, போதை மாத்திரை பயன்படுத்துவோரை பிடிக்க புதிதாக வேறு கருவி பயன்படுத்துவது தொடர்பாக ஆலோசித்து வருவதாக கூறினார்.

மத்திய செய்திகள்

1. ‘சித்ரங்’ புயல்

 • இந்த புயல், ஒடிசாவை தாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
 • ஆனால் ஒடிசாவை தவிர்த்து விட்டு மேற்கு வங்காளத்தை நோக்கி நகரும் என்று தெரிகிறது. 

2. இம்ரான் கான் தகுதி நீக்கம்

 • தன்னிடம் இருந்த விலையுயர்ந்த வெளிநாட்டு பரிசுப் பொருள்களை வேட்பு மனுவில் குறிப்பிடாமல் மறைத்த குற்றத்திற்காக, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை ஐந்தாண்டுகளுக்கு தகுதி நீக்கம் செய்து அந்த நாட்டு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
 • அதையடுத்து தற்போதுள்ள எம்.பி. பதவியை அவர் இழந்துள்ளதுடன், இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு நாடாளுமன்றத்துக்கோ, மாகாண பேரவைகளுக்கோ நடைபெறும் எந்த தேர்தலிலும் அவர் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

3. நாளை விண்ணில் பாய்கிறது ஜிஎஸ்எல்வி எம்-3

 • பிரிட்டனின் 36 செயற்கை கோள்களுடன் ஜிஎஸ்எல்வி எம்-3 கனரக ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான பணிகள் நிறைவடைந்துள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு இஸ்ரோ தெரிவித்துள்ளது.
 • வணிக பயன்பாட்டுக்காக செயல்படுத்தப்பட உள்ள திட்டமானது இஸ்ரோவின் ‘நியூ ஸ்பேஸ் இந்தியா நிறுவனம்’ மற்றும் பிரிட்டனின் ஒன் வெப்நிறுவனம் இடையே மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் அடிப்படையில் முன்னெடுக்கப்படுகிறது.
 • ஜிஎஸ்எல்வி மார்க்3 ராக்கெட் 43.5 மீட்டர் உயரமும், 640 டன் எடையும் கொண்டது.
 • அதனை வடிவமைக்கும் பணிகளும், செயற்கைக்கோள்களை நிறுவும் பணிகளும் நிறைவடைந்துள்ளன.
 • உலகின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஒன் வெப் நிறுவனமானது அரசு, வர்த்தகம், கல்வி பயன்பாட்டுக்கான தொலைத்தொடர்பு சேவைக்காக இந்த செயற்கைக்கோள்களை அனுப்பவிருக்கிறது.
 • இந்தியாவின் பார்தி தொலைதொடர்பு சேவை நிறுவனமானது ஒன் வெப் நிறுவனத்தின் முக்கிய பங்குதாரராகவும், முதலீட்டாளராகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

4. கருப்பு பட்டியலில் இருந்து பாகிஸ்தான் நீக்கம்

 • பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளிப்பது மற்றும் பண பரிவர்த்தனை மோசடி தொடர்பாக கண்காணிக்க சர்வதேச அளவில் அமைக்கப்பட்டுள்ள நிதி நடவடிக்கை பணி குழுவின் (எஃப்ஏடிஎஃப்) கருப்பு பட்டியலில் இருந்து பாகிஸ்தான் நீக்கப்பட்டுள்ளது.
 • பயங்கரவாதத்துக்கு நிதி உதவி கிடைப்பதை தடுக்க போதிய நடவடிக்கை எடுக்காததன் அடிப்படையில் கடந்த நான்கு ஆண்டுகளாக கருப்பு பட்டியலில் பாகிஸ்தான் வைக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது அந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
 • அதுபோல, நிகராகுவாவும் கருப்பு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
 • அதே நேரம், இந்த கருப்பு பட்டியலில் மியான்மர் முதல் முறையாக வைக்கப்பட்டுள்ளது.
 • காங்கோ, தான்சானியா, மொஸாம்பிக் ஆகிய நாடுகளும் கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
 • ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு வரும் ரஷ்யா, எஃப்ஏடிஎஃப் அமைப்பின் வருங்கால ஆய்வுத் திட்டங்களில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
 • கருப்பு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருப்பதன் மூலமாக சர்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்டவைகளிடமிருந்து நிதி உதவியை பெறுவதற்கான முயற்சியை பாகிஸ்தான் மேற்கொள்ள வாய்ப்புள்ளது.

CA 22.10.2022(English Version)

State news

1. Road accident fatalities in Chennai reduced by 12.5%

 • Additional Commissioner of Traffic Division of Metropolitan Police Department Kapil Kumar C. Sarathkar said that road accident fatalities in Chennai have decreased by 12.5 percent.
 • Increased fine amount as per Motor Vehicle Act Amendment 2019 will be collected in Chennai from 28th of this month.
 • New tool:
 • We detect drunk drivers with ‘Breath Analyzer’.
 • But now there are allegations that many people are driving after using ganja and narcotic pills.
 • There is no facility to detect it with Parith Analyzer tool.
 • Therefore, Ganja said he is considering using a new tool to catch drug users.

Central News

1. ‘Chitrang’ storm

 • This storm was expected to hit Odisha.
 • But it seems to move towards West Bengal leaving Odisha.

2. Disqualification of Imran Khan

 • Pakistan’s Election Commission has disqualified former Prime Minister Imran Khan for five years for concealing his valuable foreign gifts in his nomination papers.
 • Then the present M.P. He has lost his post and will not be able to contest any election to Parliament or Provincial Assemblies for the next five years.

3. GSLV M-3 will launch tomorrow

 • India’s Space Research Organization (ISRO) has announced that the launch of the GSLV M-3 heavy rocket with 36 British satellites has been completed.
 • The project to be implemented for commercial use is being carried out on the basis of MoUs between ISRO’s ‘New Space India’ and UK’s ‘One Web’.
 • The GSLV Mark-3 rocket is 43.5 meters tall and weighs 640 tonnes.
 • Its design and installation of satellites have been completed.
 • One of the world’s leading telecommunication companies, OneWeb, will deploy these satellites for telecommunication services for government, commercial and educational use.
 • India’s Bharti Telecom is a major shareholder and investor in OneWeb.

4. Removal of Pakistan from blacklist

 • Pakistan has been removed from the Financial Action Task Force (FATF) blacklist, an international body to monitor terrorism financing and money laundering.
 • Pakistan has been blacklisted for the past four years for not doing enough to prevent the financing of terrorism, but now it has been removed from the list.
 • Likewise, Nicaragua has also been removed from the blacklist.
 • At the same time, Myanmar has been placed on this blacklist for the first time.
 • Congo, Tanzania, Mozambique are also included in the black list.
 • Russia, which is carrying out military operations, is barred from participating in future FATF inspection programs.
 • By being removed from the blacklist, Pakistan is likely to try to get financial assistance from the International Fund (IMF), World Bank, Asian Development Bank, European Union etc.