TNPSC Current Affairs – Oct 07, 2022

0
31

CA 07.10.2022(Tamil Version)

மத்திய செய்திகள்

1. பிரெஞ்சு எழுத்தாளருக்கு நோபல் பரிசு.

 • பிரெஞ்சு எழுத்தாளர் ஆன்னி எர்னாக்ஸ்க்கு நடப்பாண்டுக்குரிய இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
 • எழுத்தாளர் ஆன்னி எர்னாக்ஸ் தொடக்கத்தில் சுயசரிதைகள் சார்ந்த புனைக் கதைகளை பிரஞ்சு மொழியில் எழுதி வந்தார்.
 • பின்னர் புனைவை கைவிட்டு தன் வாழ்க்கையில் நிகழ்ந்த முக்கிய சம்பவங்களின் மூலமாக பெற்ற அனுபவங்களை இயல்பான எழுத்து நடையில் புத்தகங்களாக வெளியிட தொடங்கினார்.
 • அவை மக்களிடையே மிகவும் பிரபலமாகின.
 •   மேன்ஸ் பிளேஸ்‘, ‘தி இயர்ஸ்உள்ளிட்ட  20 க்கும் மேற்பட்ட புத்தகங்களை இதுவரை அவர் எழுதியுள்ளார்.
 • பாலியல் சார்ந்த உணர்வுகள், கருக்கலைப்புகள், நோய்வாய்ப்படுதல் பெற்றோரின் இறப்பு உள்ளிட்ட பலவித உணர்வுகளை அவர் பதிவு செய்துள்ளார்.
 • சமூகம் குடும்பம் சார்ந்த விஷயங்களையும் தனது புத்தகங்களில் அவர் பதிவு செய்துள்ளார்.
 • இலக்கிய நோபல் பரிசு பெறும் முதல் பிரெஞ்சு பெண் எழுத்தாளர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

2. சர்ச்சைக்குரிய இந்தியாவின் நான்கு இருமல் மருந்துகள்

 • மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள காம்பியா நாட்டில் 66 குழந்தைகள் உயிரிழந்ததாகவும், அதற்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்துகளை உட்கொண்டதன் எதிர் விளைவு காரணமாக இருக்கலாம் எனவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்து இருந்தது.
 • ஹரியானாவின் மெய்டன் பார்மா சூட்டிக்கல்ஸ் லிமிடெட் தயாரித்த ப்ரோ மெய்தாஸைன், காஃபெக்ஸ்மெலின்மேக் ஆஃப், மேக்ரிஃப் என் ஆகிய இருமல் மற்றும் சளி மருந்துகளில் அளவுக்கு அதிகமான அளவு டையத்லின் க்ளைகால் மற்றும் எத்தலின் க்ளைகால் வேதிப்பொருள் இருப்பது கண்டறியப்பட்டது.
 • அவை சிறுநீரக செயலிழப்புக்கு காரணமாக அமையக்கூடியவை. அதன் அடிப்படையில் இந்த எச்சரிக்கையை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது.

3. புரிந்துணர்வு ஒப்பந்தம்

 • மருத்துவ ஆராய்ச்சி தொழில் நுட்ப பகிர்வு, வேலை வாய்ப்புகள் தொடர்பாக மால்டா நாட்டின் மருத்துவ பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் இடையே விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவிருக்கிறது.
 • மால்டா மருத்துவத்துறையில் பல்வேறு வேலை வாய்ப்புகள் உள்ளன. இரு நாடுகளுக்கும் இடையேயான மருத்துவ பயணமும் அதிகரிக்கும்.

4. பிரிட்டன் ராயல் கல்லூரி மருத்துவ மாநாடு தொடக்கம்

 • பிரிட்டன் ராயல் காலேஜ் ஆஃப் சர்ஜன்ஸ் எடின்பரோ கல்வி நிறுவனத்தின் சர்வதேச மருத்துவ நிபுணர்கள் மற்றும் அறுவை சிகிச்சை வல்லுநர்கள் மாநாடு சென்னையில் தொடங்கியது.
 • 60க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து ஆயிரத்துக்கும் அதிகமான வல்லுநர்கள் அதில் பங்கேற்று உள்ளனர்.
 • அறுவை சிகிச்சை மருத்துவக் கல்லூரிகளில் உலகிலேயே தொன்மையானதாகவும், முதன்மையானதாகவும் கருதப்படுவது ராயல் காலேஜ் ஆப் சர்ஜன்ஸ், ஏறத்தாழ  500 ஆண்டுகள் பழமையான அக்கல்லூரியின் மாநாடு பிரட்டனை தாண்டி வெளிநாட்டில் நடைபெறுவதும் அதிலும் குறிப்பாக சென்னையில் நடைபெறுவதும் இதுவே முதன்முறை.
 • எதிர்கால தலைமுறைக்கு தரமான ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த மருத்துவ கல்வியை ராயல் காலேஜ் வழங்கி வருகிறது.
 • ரோபோட்டிக் நுட்பம், பல் மருத்துவ அறுவை சிகிச்சை, அதி நுட்ப அறுவை சிகிச்சை என ஏழு வகையான துறைகளை கொண்டு கல்வி நிறுவனம் இயங்கி வருகிறது.

5. 36 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துகிறது இஸ்ரோ

 • பிரிட்டனின் 36 செயற்கை கோள்களை ஜிஎஸ்எல்வி எம்-3 கனரக ராக்கெட் மூலம் இந்த மாத இறுதிக்குள் விண்ணில் செலுத்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) திட்டமிட்டுள்ளது.
 • வணிக பயன்பாட்டுக்காக செயல்படுத்தப்பட உள்ள திட்டமானது இஸ்ரோவின் நியூ ஸ்பேஸ் இந்தியா நிறுவனம் மற்றும் பிரிட்டனின் ஒன் வெப் நிறுவனம் இடையே மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் அடிப்படையில் முன்னெடுக்கப்படுகிறது.
 • விண்ணில் ஏவப்பட உள்ளன ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் இரண்டாம் ஏவுதளத்தில் இருந்து இந்த மாதம் மூன்று அல்லது நான்காம் வாரத்தில் 36 செயற்கைக்கோள்கள் செலுத்தப்படவிருக்கின்றன.

CA 07.10.2022(English Version)

Central News

1. Nobel Prize for French writer.

 • French author Anne Ernaux has been awarded the Nobel Prize for Literature this year.
 • Author Anne Ernaux initially wrote autobiographical fiction in French.
 • Later he gave up fiction and started publishing the experiences he got through the important events of his life in a natural writing style.
 • They became very popular among people.
 • So far he has written more than 20 books including ‘A Man’s Place’, ‘The Years’.
 • He has recorded various emotions including sexual feelings, abortions, illness and death of parents.
 • In his books he also recorded social and family matters.
 • It is noteworthy that she was the first French woman writer to win the Nobel Prize for Literature.

2. Four Controversial Cough Medicines of India

 • The World Health Organization had reported that 66 children died in the West African country of Gambia, which may have been caused by the side effect of taking cough medicines made in India.
 • Promethazine, Caffexmelin, Make Off, Magrif N cough and cold medicines manufactured by Maiden Pharma Pharmaceuticals Ltd., Haryana were found to contain high levels of diethylene glycol and ethylene glycol.
 • They can cause kidney failure. Based on this, the World Health Organization has issued this warning.

3. Memorandum of Understanding

 • A memorandum of understanding is soon to be signed between the Medical University of Malta and Dr. MGR Medical University of Tamil Nadu regarding the sharing of medical research technology and job opportunities.
 • There are various job opportunities in the medical sector in Malta. Medical travel between the two countries will also increase.

4. British Royal College Medical Conference begins

 • British Royal College of Surgeons Edinburgh International Conference of Medical Specialists and Surgeons started in Chennai.
 • More than thousand experts from more than 60 countries participated in it.
 • This is the first time that the conference of the Royal College of Surgeons, considered to be the oldest and foremost of the surgical colleges in the world, is being held outside Britain and especially in Chennai, which is almost 500 years old.
 • The Royal College is providing quality research and technology based medical education for future generations.
 • The institute is running with seven departments like Robotics, Dental Surgery, Advanced Surgery.

5. ISRO launches 36 satellites

 • The Indian Space Research Organization (ISRO) plans to launch 36 British satellites by the end of this month on a GSLV M-3 heavy rocket.
 • The project to be implemented for commercial use is being carried out on the basis of MoUs between ISRO’s ‘New Space India’ and UK’s ‘One Web’.
 • To be launched 36 satellites are scheduled to be launched from the Satish Dhawan II launch pad in Sriharikota, Andhra Pradesh in the third or fourth week of this month.