TNPSC Current Affairs – Oct 06, 2022

0
35

CA 06.10.2022(Tamil Version)

முக்கிய தினங்கள்

1. 06.10.2022

 • 1977மிக்-29 போர் விமானம் முதல் முறையாக வானில் பறந்தது.
 • 1987பிஜி குடியரசு ஆகிறது.
 • 1989 – உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியாக பாத்திமா பீவி பதவி ஏற்றார்.
 • 2010– instagram ஆரம்பிக்கப்பட்டது.

மாநில செய்திகள்

1. கைவிடப்படும் குண்டர் சட்டம் 

 • தமிழகத்தில் குண்டர் தடுப்புச் சட்டம் சுமையாக மாறி வருவதால் காவல்துறையினர் அதை பயன்படுத்துவதை குறைத்து குற்றவியல் நடைமுறை சட்டத்தை அதிகமாக பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
 • தமிழகத்தில் கடந்த நான்கரை ஆண்டுகளில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் 11,233 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 • அதே வேளையில் குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவுகள் 107, 109, 110 ஆகியவற்றின் கீழ் 1,27,924 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 • இதில் குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 110ன் கீழ் மட்டும் 76,578 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 • குண்டர் தடுப்புச் சட்டம்:
 • 1923 பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் மேற்கு வங்காளத்தில் குற்றம் செய்வதையே வழக்கமாகக் கொண்டவர்களுக்கு நீதிமன்றத்தில் அவர்களுக்கு அவர்களுடைய தரப்பை எடுத்துச் சொல்லும் வாய்ப்பை அளிக்காமல் ஓராண்டு ஜாமினில் வெளியே வர முடியாத வகையில் சிறையில் அடைக்கும் உரிமையை காவல்துறைக்கு குண்டர் தடுப்பு சட்டம் வழங்கியது.
 • தமிழகத்தில் கடந்த 1982 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்த சட்டம் தமிழ்நாடு கள்ளச்சாராயம் காய்ச்சுவோர், போதைப் பொருள் குற்றவாளிகள், குண்டர்கள், பாலியல் தொழில் குற்றவாளிகள், குடிசை பகுதி நிலங்களை பறிப்போர், மணல் திருட்டு குற்றவாளிகள் உள்ளிட்ட அபாயகர செயல்கள் தடுப்புச் சட்டம் என்ற பெயரில் நடைமுறைக்கு வந்தது.
 • இதன் பின்னர் பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்ட இந்த சட்டம் 2014 ஆம் ஆண்டு முதல் முறையாக குற்றங்களில் ஈடுபடுபவர்களையும் கைது செய்ய முடியும் என்று திருத்தப்பட்டு கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.
 • மீறினால் கைது:
 • குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 107 இன் படி ஒருவர் பொது அமைதிக்கு ஊறு விளைவிப்பவர் என்று கருதும் சூழலில் அவர் அவ்வாறு செய்திருக்க உரிய ஜாமினையோ அல்லது உத்தரவாதத்தையோ கோரும் அதிகாரம் நிர்வாக நடுவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
 • அதேபோல 109 படி ஒரு நபர் எதிர்காலத்தில் ஒரு பெரும் குற்றத்தை புரிவார் (காக்னிஸைபில் அஃபனஸ்) என்று நிர்வாக நடுவர் கருதும் போது ஓராண்டுக்கு அதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடமாட்டேன் என ஜாமின் பத்திரம் எழுதி வாங்கப்படுகிறது.
 • பிரிவு 110 ன் படி தொடர் குற்றம் புரிபவர்கள், திருடுபவர்கள், திருட்டுப் பொருள்களை வாங்கி விற்பவர்கள், பெண்களுக்கு எதிரான குற்றம் புரிபவர்கள், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள், உணவு கலப்படம் செய்பவர்கள், அந்நிய செலாவணி மோசடியில் ஈடுபடுபவர்கள் ஆகியோரிடம் நிர்வாக நடுவர் மூலம் ஜாமீன் பத்திரம் பெறப்படுகிறது. 
 • ஆனால் 110 பிரிவின்படி ஒருவரிடம் மூன்று ஆண்டுகளுக்கு ஜாமீன் பத்திரம் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

2. அருட்பிரகாச வள்ளலாரின் முப்பெரும் விழா

 • வள்ளலார் பிறந்து 200 ஆண்டுகள் ஆனதையும், அவர் தொடங்கிய தர்மசாலைக்கு 156 ஆண்டுகள், அவர் ஏற்றிய தீபத்துக்கு 152 ஆண்டுகள் நிறைவடைந்ததையும் கொண்டாடும் வகையில் முப்பெரும் விழா நடத்தப்படுகிறது. 
 • வள்ளலருக்கு முப்பெரும் விழாவை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது.
 • 52 வாரங்களுக்கு முப்பெரும் விழா பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது. ஓராண்டுக்கு தொடர் அன்னதானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்காக ₹3.25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
 • வடலூரில் ரூபாய் 100 கோடியில் வள்ளலார் சர்வதேச மையத்துக்கான கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

மத்திய செய்திகள்

1. துபாயில் பிரம்மாண்ட கோயில் திறப்பு

 • ஐக்கிய அரபு அமீரகத்தில் (யுஏஇ) துபாய் நகரில் பிரம்மாண்டமான இந்து கோயில் திறக்கப்பட்டது.
 • கோயில் அமைந்துள்ள பகுதிக்கு வழிபாட்டு நகரம் என பெயரிடப்பட்டுள்ளது.
 • துபாயில் ஜெபல் அலி பகுதியில் அமைந்திருக்கும் குரு நானக் தர்பார் என்ற சீக்கிய குருத்வாராவுக்கு அருகே இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது.
 • இந்த கோயிலை துபை அமைச்சர் ஷேக் நயான் பின் முபாரக் அல் நயான் திறந்து வைத்தார்.

2. புதிய பாரத் சீரிஸ்வாகனப்பதிவு நடைமுறை

 • நாடு முழுவதும் எந்தவித தடையும் இன்றி சொந்த வாகனத்தில் பயணம் செய்ய வசதியாக அறிமுகம் செய்யப்பட்ட புதிய பாரத் சீரிஸ் வாகன பதிவு நடைமுறை 24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
 • ஒருவர் தனது சொந்த வாகனத்தில் ஒரு மாநிலத்தில் இருந்து வேறு மாநிலத்துக்கு அல்லது யூனியன் பிரதேசத்துக்கு குடிப்பெயரும் போது அந்த வாகனத்தை மறுப்பதிவு செய்ய வேண்டும்.
 • இதனால் பல்வேறு சிக்கல்களை வாகன ஓட்டிகள் சந்தித்து வந்தனர்.
 • வாகன உரிமையாளர்களுக்கு ஏற்படும் இந்த சிரமத்தை போக்கும் வகையில் புதிய வாகன பதிவு நடைமுறை தொடர்பான அறிவிக்கையை மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிட்டது.
 • வாகன வேகம் அதிகரிப்பு:
 • மேலும், தேசிய விரைவு சாலைகளில் வாகனங்களில் இயக்க வேகத்தை மணிக்கு 140 கிலோ மீட்டர் என்ற அளவுக்கு உயர்த்த மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் திட்டமிட்டிருப்பதாக அந்த துறையின் அமைச்சர் நிதின் கட்கரி அண்மையில் கூறியிருந்தார்.
 • மேலும் நான்கு வழி தேசிய சாலைகளில் வாகன இயக்க வேகம் குறைந்தபட்சம் மணிக்கு 100 கிலோமீட்டர் என்று அளவிலும் இரண்டு வழி தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களின் வேகம் மணிக்கு 80 கிலோமீட்டர் முதல் 75 கிலோமீட்டர் வரை இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.

3. வேதியியல் மூவருக்கு நோபல்

 • மருந்துகளை தயாரிக்க உதவியாக மூலக்கூறுகளை ஒன்றிணைக்கும் வழியை உருவாக்கியதற்காக கரோலின் ஆர்.பெர்டோஸி, மோர்டென் மெல்டன் மற்றும் பாரி ஷார்ப்லெஸ் ஆகிய மூவருக்கு வேதியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.
 • புற்று நோய்க்கான மருந்தை உருவாக்கவும் டிஎன்ஏ வரைபடமாக்கல் மற்றும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்கான மிகவும் பொருத்தமான பொருள்களை உருவாக்குவதற்கும் பயன்படும் க்ளிக் கெமிஸ்ட்ரிமற்றும் உயிரி ஆர்த்தோகனல் எதிர்வினைகள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டதற்காக இந்த நோபல் பரிசு அவர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.
 • இவர்களில் ஷார்ப்லெஸ் ஏற்கனவே நடந்த 2001 ஆம் ஆண்டும் நோபல் பரிசை வென்றுள்ளார்.
 • இதன் மூலம் நோபல் பரிசு இரண்டு முறை வென்ற ஐந்தாவது நபர் என்று பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

4. தேசிய கட்சியை தொடங்கினார் சந்திரசேகர் ராவ்

 • தெலுங்கானாவில் ஆளும் தெலுங்கானா ராஷ்ட்ர சமிதி கட்சியின் (டிஆர்எஸ்) செயல்பாடுகளை தேசிய அளவில் விரிவுபடுத்தும் வகையில் பாரத் ராஷ்ட்ர சமிதி (பிஆர்எஸ்) என பெயரை மாற்றம் செய்து அக்கட்சியின் தலைவரும் தெலுங்கானா மாநில முதல்வருமான சந்திரசேகர் ராவ் அறிவித்தார்.

5. இயற்பலுக்கான நோபல் பரிசு

 • குவாண்டம் தகவல் அறிவியல் தொடர்பான ஆராய்ச்சியை மேற்கொண்ட பிரான்ஸை சேர்ந்த அலைன் ஆஸ்பெக்ட், அமெரிக்காவை சேர்ந்த ஜான் கிளாசெர், ஆஸ்திரியாவை சேர்ந்த ஆன்டன் சீலிங்கெர் ஆகிய மூவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

6. செவ்வாய் கிரகத்தில் தண்ணீர்

 • 2018 ஆம் ஆண்டு மார்ஸ் எக்ஸ்பிரஸ் என்ற ஆர்பிட்டர் செவ்வாய் கிரகத்தின் தென்தருவத்தில் பனிக்கட்டியின் (மூடுபனி) மேற்பரப்பு தாழ்வதையும், உயர்வதையும் கண்டறிந்து அதன் அடியில் திரவ வடிவில் தண்ணீர் இருக்கலாம் என கூறியது.
 • ஆனால் அதை அந்த காலகட்டத்தில் விஞ்ஞானிகள் நம்பவில்லை.
 • அதே நேரத்தில் மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆர்பிட்டர் கண்டுபிடித்த நேரத்தில் விண்கலம் அளவிட்ட விசித்திரமான ரேடார் சமிக்ஞையை அவர்கள் மூடுபனியின் கீழே உலர்ந்த பொருள் இருக்கலாம் என கருதினர்.
 • ஆனால் சமீபத்தில் இங்கிலாந்து நாட்டின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தலைமையிலான சர்வதேச விஞ்ஞானிகள் குழு செவ்வாயில் அல்டிமிஸ் ஸ்காபிலி என்று அறியப்படுகிற பனிபடலத்தால் மூடப்பட்ட பகுதியை வேறு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆய்வு செய்தனர்.
 • அதில்தான் அவர்கள் செவ்வாய் கிரகத்தில் திரவ வடிவிலான தண்ணீர் இருப்பதற்கு சாத்தியம் உண்டு என்று கண்டறிந்தன. 

7. உலக சுகாதார நிறுவனத்தில் இந்திய வம்சாவளி விவேக் மூர்த்திக்கு பதவி

 • டாக்டர் விவேக் மூர்த்தி தான் அமெரிக்காவின் சர்ஜன் ஜெனரல் (தலைமை அறுவை மருத்துவர் நிபுணர்) பதவியையும் வகிக்கிறார்.
 • இந்த பதவியுடன் அவர் உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் அமெரிக்க பிரதிநிதியாகவும் இருப்பார் என வாஷிங்டன் வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

8. இமாச்சலப் பிரதேச எய்ம்ஸ் ஆஸ்பத்திரியை பிரதமர் மோடி திறந்து   வைத்தார்

 • கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இமாச்சலப் பிரதேச எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு மோடி அடிக்கல் நாட்டினார்.
 • ரூபாய் 1470 கோடி செலவில் முற்றிலும் பணி முடிவடைந்து செயல்பாட்டுக்கு வந்துள்ள எய்ம்ஸ் ஆஸ்பத்திரியை பிரதமர் திறந்து வைத்தார். 
 • பிலாஸ்பூரில் ரூபாய் 140 கோடி செலவில் கட்டப்பட்ட அரசு ஹைட்ரோ இன்ஜினியரிங் கல்லூரியையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
 • அத்துடன் ரூபாய் 3,650 கோடி செலவிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வைத்தார்.
 • முடிவடைந்த திட்டங்களை திறந்து வைத்தார்.

விளையாட்டு செய்திகள்

1. 2026 ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் துப்பாக்கி சுடுதல் சேர்ப்பு மல்யுத்தம் நீக்கம்

 • 1930 ஆம் ஆண்டு முதல் காமன்வெல்த் விளையாட்டு போட்டி நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது.
 • கடைசியாக 22 ஆவது காமன்வெல்த் விளையாட்டு இங்கிலாந்தில் உள்ள பர்மிங்ஹார்மில் கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடந்தது.
 • அடுத்து 23வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள மெல்போர்ன் உள்பட நான்கு நகரங்களில் 2026 ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நடக்கிறது. 
 • சமீபத்தில் பர்மிங்ஹாமில்  நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இருந்து நீக்கப்பட்ட துப்பாக்கி சுடுதல் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது.

CA 06.10.2022(English Version)

Important days

1. 06.10.2022

 • 1977- The MiG-29 fighter jet flew for the first time.
 • 1987- Fiji becomes a republic.
 • 1989 – Fatima Beavi took office as the first woman judge of the Supreme Court.
 • 2010- Instagram launched.

State news

1. Abandoned Thug Act

 • In Tamil Nadu, the Anti-Hooliganism Act is becoming burdensome and the police have started using the Criminal Procedure Code less and less.
 • 11,233 people have been arrested under the Gangster Prevention Act in Tamil Nadu in the last four and a half years.
 • While action has been taken against 1,27,924 persons under Sections 107, 109, 110 of the Criminal Procedure Code.
 • Out of which action has been taken against 76,578 people only under Section 110 of the Criminal Procedure Code.
 • Anti-Hooliganism Act:
 • During British rule in West Bengal in 1923, the Anti-Hooliganism Act gave the police the right to imprison criminals without bail for one year without giving them an opportunity to present their case in court.
 • In Tamil Nadu, this Act was brought into effect in the year 1982 under the name of ‘Tamil Nadu Counterfeit Liquor, Drug Offenders, Gangsters, Sex Offenders, Slum Land Grabbers, Sand Theft Offenders Prevention Act’.
 • After this, this law, which was amended in various ways, was amended in 2014 for the first time to arrest those involved in crimes and came under heavy criticism.
 • Arrest for Violation:
 • Section 107 of the Code of Criminal Procedure empowers the Administrative Magistrate to require a person to furnish bail or surety where he is found to be disturbing the public peace.
 • Similarly under Section 109, when the Administrative Magistrate considers that a person will commit a serious crime (cognizable offence) in the future, a surety bond is issued stating that he will not engage in such activity for one year.
 • According to Section 110, bail bond is obtained through Administrative Arbitration from serial offenders, thieves, dealers in stolen goods, offenders against women, disturbers of public peace, adulterers of food, foreign exchange fraud.
 • But it is to be noted that under Section 110 one can get a bail bond for three years.

2. The triple festival of Aruprakasa Vallalar

 • The triple festival is held to celebrate 200 years of Vallalar’s birth, 156 years of the Dharamsala he started, and 152 years of the lamp lit by him.
 • A committee has been formed to conduct the triple festival for Vallalar.
 • For 52 weeks the three grand festival is going to be held in different cities. ₹3.25 crore has been earmarked for programs including continuous almsgiving for one year.
 • Chief Minister M.K.Stalin announced that the construction work of the Rs 100 crore Vallalar International Center in Vadalur will begin soon.

Central News

1. Inauguration of Grand Temple in Dubai

 • In the United Arab Emirates (UAE), a grand Hindu temple was inaugurated in Dubai.
 • The area where the temple is located is named as the city of worship.
 • This temple is built near Guru Nanak Darbar Sikh Gurdwara located in Jebel Ali area of ​​Dubai.
 • This temple was inaugurated by Sheikh Nayan bin Mubarak Al Nayan, Minister of Dubai.

2. New ‘Bharat Series’ Vehicle Registration Procedure

 • It has been revealed that the new ‘Bharat Series’ vehicle registration procedure, which was introduced to facilitate travel in own vehicles across the country without any hindrance, has been implemented in 24 states and union territories.
 • When a person moves his own vehicle from one state to another state or union territory, he has to re-register the vehicle.
 • Due to this the motorists were facing various problems.
 • In August last year, the central government issued a notification regarding the new vehicle registration procedure to alleviate this difficulty for vehicle owners.
 • Increase in vehicle speed:
 • Also, Union Minister of Road Transport and Highways Nitin Gadkari had recently said that the Union Ministry of Road Transport and Highways is planning to increase the speed of vehicles on national expressways to 140 kmph.
 • He also said that the speed of vehicles on four-lane national roads should be at least 100 kilometers per hour and on two-lane national highways, the speed of vehicles should be between 80 and 75 kilometers per hour.

3. Nobel for Chemistry Trio

 • The Nobel Prize in Chemistry has been shared with Carolyn R. Berdozzi, Morten Melton and Barry Sharpless for developing a way to combine molecules to help make drugs.
 • The Nobel Prize has been shared for research into ‘click chemistry’ and bio-orthogonal reactions, which can be used to develop cancer drugs and DNA mapping and to create more suitable materials for a specific purpose.
 • Among them, Sharpless has already won the Nobel Prize in 2001.
 • With this, he also became the fifth person to win the Nobel Prize twice.

4. Chandrasekhar Rao started the National Party

 • The ruling Telangana Rashtra Samithi Party (TRS) in Telangana has changed its name to ‘Bharat Rashtra Samithi (PRS)’ in order to expand its activities at the national level, party president and Telangana Chief Minister Chandrasekhar Rao announced.

5. Nobel Prize in Physics

 • It was announced that the Nobel Prize in Physics will be shared among three people, Alain Aspect from France, John Glaser from America, and Anton Seelinger from Austria, who carried out research related to quantum information science.

6. Water on Mars

 • In 2018, the Mars Express orbiter detected rising and falling ice (fog) surfaces at the south pole of Mars, suggesting that liquid water may lie beneath.
 • But scientists did not believe it at that time.
 • Around the same time the Mars Express orbiter detected a strange radar signal that the spacecraft measured, they speculated that there might be dry material beneath the haze.
 • But recently, an international team of scientists led by researchers from the University of Cambridge, England, used a different technique to study the ice-covered region known as Ultimis Scapeli on Mars.
 • In it they discovered that liquid water on Mars is possible.

7. Appointment of Indian-origin Vivek Murthy at the World Health Organization

 • Dr. Vivek Murthy also holds the post of Surgeon General (Surgeon-in-Chief) of the United States.
 • In addition to this position, he will also be the US representative on the Board of Directors of the World Health Organization, the Washington White House announced.

8. PM Modi inaugurated AIIMS Hospital Himachal Pradesh

 • In October 2017, Modi laid the foundation stone of AIIMS Hospital in Himachal Pradesh.
 • The Prime Minister inaugurated the AIIMS Hospital, which has been fully operationalized at a cost of Rs 1470 crores.
 • Prime Minister Modi also inaugurated the Government Hydro Engineering College in Bilaspur at a cost of Rs 140 crore.
 • He also laid foundation stones for various projects costing Rs 3,650 crore.
 • Inaugurated the completed projects.

Sports news

1. The inclusion of shooting in the 2026 Commonwealth Games and the elimination of wrestling

 • The Commonwealth Games have been held every four years since 1930.
 • The last 22nd Commonwealth Games were held in Birmingham, England last July and August.
 • The next 23rd Commonwealth Games will be held from 17th to 29th March 2026 in four cities including Melbourne in the state of Victoria, Australia.
 • Shooting, which was removed from the recent Commonwealth Games in Birmingham, has been reintroduced.