TNPSC Current Affairs – Nov 22, 2022

0
28

CA 22.11.2022 (Tamil Version)

மாநில செய்திகள்

 1. யானைகள் பராமரிப்பு: பாகன்களுக்கு தாய்லாந்தில் பயிற்சி

  • யானைகள் பராமரிப்பு தொடர்பாக, பாகன்கள், உதவியாளர்களுக்கு தாய்லாந்தில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
  • இதற்காக, தமிழகத்தின் ஆனைமலை, முதுமலை புலிகள் காப்பகத்தைச் சேர்ந்த 13 பாகன்கள், உதவியாளர்கள், அதிகாரிகள் தலைமையில் விரைவில் தாய்லாந்து செல்லவுள்ளனர்.
  • தமிழகத்தில், முதுமலை, ஆனைமலை, வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல்பூங்கா, திருச்சிராப்பள்ளி யானைகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் ஆகியவற்றில் யானைகள் முகாம்கள் செயல்படுகின்றன.
  • இவற்றில் 63 யானைகள் பராமரிக்கப்படுகின்றன. இங்கு 37 பாகன்கள், 28 உதவியாளர்கள் மற்றும் 56 பேர் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். தற்போது உள்ளூர் மலைவாழ் மக்களை தற்காலிக பணியாளர்களாக நியமித்து யானைகள் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகின்றன.
  • இந்நிலையில், யானைகள் பராமரிப்பானது கால மாறுபாடுக்கு ஏற்ப அறிவியல் மற்றும் விலங்கு நலவாழ்வு அடிப்படையில் மாற்றியமைக்கப்பட வேண்டியுள்ளது.
  • இதன் அடிப்படையில், தாய்லாந்தில் உள்ள தாய் யானைகள் பாதுகாப்பு மையத்தில், தமிழக யானை பாகன்கள், உதவியளர்களுக்கு பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
  • இதற்காக ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய செய்திகள்

 1. ஏர் சுவிதா படிவத்தை பூர்த்தி செய்யும் நடைமுறை ரத்து

  • விமானப் பயணிகள் ஏர் சுவிதா படிவத்தை பூர்த்தி செய்யும் நடைமுறை ரத்து வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் விமானப் பயணிகள் ஏர் சுவிதா படிவத்தை பூர்த்தி செய்யும் நடைமுறையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.
  • கரோனா பரவல் காரணமாக வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் விமானப் பயணிகள் ஏர் சுவிதா படிவத்தை பூர்த்தி செய்யும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.
  • அந்த நடைமுறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. அதேவேளையில், பயணிகள் தமது நாடுகளில் கரோனா தடுப்பூசியின் இரண்டு தவணைகளையும் செலுத்திக் கொள்வது நல்லது. விமான நிலையத்தில் பரிசோதனையின்போது கரோனா அறிகுறிகள் தென்பட்டால், சம்பந்தப்பட்ட பயணி உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவார்.
  • ஒருவேளை கரோனா அறிகுறிகள் தென்பட்டால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவர்கள் செல்ல வேண்டும் அல்லது தேசிய உதவி எண் (1075), மாநில உதவி எண்ணை தொடர்புகொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • உலகின் பெரும்பாலான பகுதிகளில் கரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஏர் சுவிதா படிவ நடைமுறை கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு செய்திகள்

 1. விஜய்ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டி

  • விஜய்ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் அருணாசல பிரதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் தமிழகம் 435 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தின் மூலம் உலக அளவிலும், இந்திய அளவிலும் பல்வேறு புதிய சாதனைகள் தமிழக அணியாலும், அணி வீரர் நாராயண் ஜெகதீசனாலும் படைக்கப்பட்டுள்ளன.
  • பெங்களூரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் தமிழகம் 50 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 506 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய அருணாசல பிரதேசம் 28.4 ஓவர்களில் 71 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்தது.
  • சாதனைகள்:
  • தமிழக வீரர் நாராயண் ஜெகதீசன் 141 பந்துகளில் 25 பவுண்டரிகள், 15 சிக்ஸர்களுடன் 277 ரன்கள் விளாசி, உலக அளவில் ஆடவருக்கான லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் (ஒன் டே) அதிகபட்ச தனிநபர் ஸ்கோரை எட்டியிருக்கிறார்.
  • இந்த இன்னிங்ஸில் ஜெகதீசன் விளாசிய 15 சிக்ஸர்களே, இதுவரையிலான விஜய் ஹஸாரே கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் ஒரு பேட்டரால் அடிக்கப்பட்ட அதிக சிக்ஸர்களாகும்.
  • இந்த எடிஷன் விஜய் ஹஸாரே போட்டியில் இதுவரையிலான 6 ஆட்டங்களில் ஜெகதீசன் 5-இல் சதமடித்துள்ளார். இதன் மூலம், உலக லிஸ்ட் ஏ கிரிக்கெட் வரலாற்றிலேயே தொடர்ந்து 5 இன்னிங்ஸ்களில் சதம் விளாசிய முதல் கிரிக்கெட்டர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
  • தமிழக இன்னிங்ஸில் முதல் விக்கெட்டுக்கு சாய் சுதர்சன் – நாராயண் ஜெகதீசன் கூட்டணி 416 ரன்கள் சேர்த்தது. உலகின் லிஸ்ட் ஏ கிரிக்கெட் வரலாற்றில் இதுவே அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ஸ்கோர் ஆகும்.
  • இந்த ஆட்டத்தில் தமிழகம் பதிவு செய்துள்ள ஸ்கோரே (506/2), லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் ஒரு உள்நாட்டு அணி பதிவு செய்த அதிகபட்ச ஸ்கோராகும்.
  • தமிழக அணியும் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் (435) வென்ற புதிய உலக சாதனையை எட்டியிருக்கிறது.

காலமானார்

1. மூத்த தமிழறிஞர் அவ்வை நடராசன் காலமானார்.

  • தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், செம்மொழி நிறுவனத்தின் முன்னாள் துணைத் தலைவருமான மூத்த தமிழறிஞர் அவ்வை நடராசன் (86) உடல்நலக் குறைவு, வயது மூப்பு காரணமாக சென்னையில் திங்கள்கிழமை காலமானார்.
  • அவ்வை நடராசன் 1936- ஆம் ஆண்டு ஏப்ரல் 24-ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டம் (அன்றைய வட ஆற்காடு மாவட்டம்) செய்யாறு அருகில் உள்ள ஒளவையார் குப்பம் என்னும் சிற்றூரில் ஒளவை துரைசாமி – லோகாம்பாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார்.
  • இவரின் இயற்பெயர் சிவபாதசேகரன். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இவரின் தந்தையார் பேராசிரியராகப் பணியாற்றும் போது, நடராசன் என்று பெயரை மாற்றினார்.
  • கல்வி:
  • அவ்வை நடராசன் பச்சையப்பன் கல்லூரியில் தமிழில் முதுநிலைப் பட்டம் (1955) பெற்றார்.
  • ‘திருக்கோவையார் என்னும் தலைப்பில் ஆய்வு செய்து, 1958- ஆம் ஆண்டில் ‘ஆய்வியல் நிறைஞர் பட்டம் (1965) பெற்றார்.
  • அதன் பின்னர் ‘சங்கக் காலப் பெண்பாற் புலவர்கள்’ என்னும் பொருளில் ஆய்வு செய்து முனை வர் பட்டம் (1974) பெற்றார்.
  • பத்மஸ்ரீ உள்ளிட்ட விருதுகள்:
  • தமிழக அரசின் கலைமாமணி விருது
  • பேரறிஞர் அண்ணா விருது (2010)
  • மத்திய அரசின் பத்மஸ்ரீ (2011) விருது
  • அருட் செல்வர் மகாலிங்கம் விருது, (2018)
  • திருக்குறள் நெறிச்செம்மல் விருது (2020)
  • படைப்புகள்:
  • வாழ்விக்க வந்த வள்ளலார்,
  • பேரறிஞர் அண்ணா,
  • கம்பர் காட்சி,
  • பாரதி பல்சுவை,
  • கம்பர் விருந்து,
  • திருப்பாவை விளக்கம்,
  • திருவெம்பாவை விளக்கம்,
  • சங்க இலக்கியப் பெண்பாற் புலவர்கள்,
  • அருளுக்கு அவ்வை சொன்னது,
  • திருக்கோவையார் (ஆங்கிலம்),
  • புலமைச் செல்வியர்

நியமனம்

 1. புதிய தேர்தல் கமிஷனராக அருண் கோயல் பதவியேற்பு

  • இந்திய தேர்தல் கமிஷன், தலைமை கமிஷனர் உள்பட 3 கமிஷனர்களை கொண்ட தன்னாட்சி அமைப்பாகும்.
  • தற்போது தலைமை தேர்தல் கமிஷனராக இருக்கும் ராஜீவ்குமார், முன்பு தேர்தல் கமிஷனராக இருந்தார்.
  • இந்த காலிப்பணியிடம் ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவின்பேரில் தற்போது நிரப்பப்பட்டு இருக்கிறது.
  • இதன்படி புதிய தேர்தல் கமிஷனராக அருண்கோயல் நேற்று பதவியேற்று கொண்டார். இவருடன் ஏற்கனவே உள்ள அனுப்சந்திரபாண்டேயும் கமிஷனர் பதவியை வகிக்கிறார்.

CA 22.11.2022 (English Version)

State News

  1. Elephant Care: Training for Pagans in Thailand

  • Pagans and helpers are to be trained in Thailand regarding elephant care.
  • For this purpose, 13 Pagans, assistants and officials from Anaimalai and Mudumalai Tiger Reserve of Tamil Nadu will soon go to Thailand.
  • In Tamil Nadu, elephant camps are functioning at Mudumalai, Anaimalai, Vandalur Arignar  Anna Zoo, Tiruchirappalli Elephant Rescue and Rehabilitation Centre.
  • Of these 63 elephants are maintained. There are 37 Pagans, 28 assistants and 56 contract workers working here. Currently the elephants are well cared for by hiring local hill people as temporary staff.
  • In this case, elephant management needs to be modified based on science and animal welfare as per the changing times.
  • Based on this, steps have been taken to train Tamil Nadu elephant guards and assistants at the Thai Elephant Conservation Center in Thailand.
  • According to the government order, a fund of Rs.50 lakh has been allocated for this purpose.

Central News

  1. Abolition of procedure of filling Air Suvita form

  • Abolition of procedure of air passengers filling Air Suvita form
  • The central government has abolished the procedure of filling the Air Suvita form for air passengers coming to India from abroad.
  • Due to the spread of Corona, a procedure was introduced for air passengers coming to India from abroad to fill the Air Suvita form.
  • That practice is now repealed. Meanwhile, travelers are advised to get both doses of the Corona vaccine in their home countries. If corona symptoms are found during screening at the airport, the concerned passenger will be immediately quarantined and sent to the hospital.
  • They are advised to go to the nearest hospital or contact the national helpline number (1075), state helpline number if they are showing possible corona symptoms.
  • In most parts of the world, it has been announced that the procedure of Air Suvita form will be abandoned as the corona virus is decreasing.

Sports News

  1. Vijay Hazare Cup Cricket Match

  • Tamil Nadu won by 435 runs against Arunachal Pradesh in the Vijay Hazare Cup cricket match. Through this game, many new records have been created by the Tamil Nadu team and team player Narayan Jagadeesan at the world level and at the Indian level.
  • Tamil Nadu first scored 506 runs for the loss of 2 wickets in 50 overs in this match held in Bangalore. Arunachal Pradesh, who bowled next, lost 10 wickets for 71 runs in 28.4 overs.
  • Achievements:
  • Tamil Nadu player Narayan Jagatheesan scored 277 runs off 141 balls with 25 fours and 15 sixes to reach the highest individual score in men’s List A cricket (One Day) worldwide.
  • Jagatheesan hit 15 sixes in this innings, the most sixes hit by a batsman in a single innings by Vijay Hazare so far.
  • In this edition of Vijay Hazare tournament, Jagatheesan has scored 5 centuries out of 6 games so far. With this, he has also created the record of being the first cricketer in the history of List A cricket to score a century in 5 consecutive innings.
  • Sai Sudarsan – Narayan Jagatheesan added 416 runs for the first wicket in Tamil Nadu innings. This is the highest partnership score in the history of List A cricket in the world.
  • Tamil Nadu’s score (506/2) in this match is the highest by a domestic team in List A cricket.
  • The Tamil Nadu team has also achieved a new world record for the highest margin of runs (435) in List A cricket.

Passed Away

  1. Senior Tamil scholar Avvai Natarasan passed away.

  • Senior Tamil scholar Avvai Natarasan (86), former vice-chancellor of Tanjore Tamil University and former vice-president of Semmozhi Institute, passed away in Chennai due to ill health and old age.
  • Avvai Natarasan was born on April 24, 1936 at Olavaiyar Kuppam near Seyyar in Tiruvannamalai District (then North Arcot District) as the son of Olavai Duraisamy and Lokampal.
  • His original name was Sivapadasekaran. When his father was working as a professor in Annamalai University, he changed his name to Natarasan.
  • Education:
  • Avvai Natarasan did his MA in Tamil (1955) from Pachaiyappan College.
  • Researched on the topic ‘Thirukovaiyar’ (1958) and received the ‘Science degree (1965)
  • After that she studied on ‘Sangak Period Feminist Poets’ and obtained PhD (1974).
  • Awards including Padma Shri:
  • Tamil Nadu Govt Kalaimamani Award
  • perarinar aṇṇa Award (2010)
  • Awarded Padma Shri (2011) by Central Govt
  • arut celvar makalinkam Award (2018)
  • tirukkuraḷ nericcemmal Award (2020)
  • Books:
  • Valvikka vanta vaḷḷalar
  • perarinar aṇṇa
  • kampar katci
  • parati palcuvai
  • kampar viruntu
  • tiruppavai vilakkam
  • tiruvempavai vilakkam
  • sanka ilakkiyappenpar pulavarkaḷ
  • arulukku avvai connatu
  • tirukkovaiyar (ankilam)
  • pulamaiccelviyar

Appointment

  1. Arun Goyal sworn in as the new Election Commissioner

  • The Election Commission of India is an autonomous body consisting of 3 Commissioners including the Chief Commissioner.
  • Rajeev Kumar, who is currently the Chief Election Commissioner, was earlier the Election Commissioner.
  • This vacancy is currently filled as per the order of President Drabupati Murmu.
  • According to this, Arun Goyal was sworn in as the new Election Commissioner yesterday. Anupchandra Pandey will also hold the post of commissioner along with him.