Home TNPSC TNPSC Current Affairs – Nov 21, 2022

TNPSC Current Affairs – Nov 21, 2022

0
46

CA 21.11.2022 (Tamil Version)

மத்திய செய்திகள்

 1. அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் தொடரும் ‘ஸ்டென்ட்’

  • ரத்த நாள அடைப்பு நீக்க சிகிச்சையில் பயன்படுத்தப்படும் ‘ஸ்டென்ட்’ உபகரணம், தேசிய அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் தொடர்ந்து இடம் பெறும் வகையில் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவிக்கை வெளி யிட்டுள்ளது.
  • இந்தியாவில் தேசிய அத்தியாவசிய மருந்துகள் பட்டியல் முதல்முறையாக கடந்த 1996-இல் வகுக்கப்பட்டது. அதன்பிறகு, 2003, 2011, 2015 ஆகிய ஆண்டுகளில் திருத்திய மைக்கப்பட்டது.
  • இந்நிலையில், 2015-ஆம் ஆண்டு பட்டியல் மீண்டும் திருத்தியமைக்கப்பட்டு, தேசிய அத்தியாவசிய மருந்துகள் பட்டியல்-2022 கடந்த செப்டம்பரில் வெளியிடப்பட்டது. இதில், புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள், தடுப்பூசிகள் என 34 புதிய மருந்துகள் சேர்க்கப்பட்டதுடன், 26 மருந்துகள் நீக்கப்பட்டன.
  • இதய தமனி நோய், பொது சுகாதார பிரச்னையாக நீடித்து வருகிறது. உயிரிழப்புகளுக்கான முக்கிய காரணமாக இந்நோய் உள்ளது.
  • எனவே, ஸ்டென்ட் சிகிச்சைக்கான தேவை அதிகம் இருப்பதால், அது அத்தியாவசிய மருத்துவ உபகரணமாக தொடரவேண்டும் என்று குறிப்பிடப்பட்டது.
  • இதன் மூலம் ஸ்டென்ட் உபகரணங்கள் மேலும் மலிவான விலையில் கிடைக்கும்

ராக்கெட்

 1. பி.எஸ்.எல்.வி.சி-54 ராக்கெட்

  • இந்த நிலையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ, ‘பி.எஸ்.எல்.வி.சி-54’ என்ற ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கு திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளில் இறங்கி உள்ளது.
  • இந்த ராக்கெட் ‘ஓசன் சாட்03 என்ற புவி செயற்கைக்கோள் மற்றும் 8 நானோ செயற்கைகக்கோள்களை சுமந்து செல்லும்.
  • அமெரிக்க நாட்டின் ஆஸ்ட்ரோகாஸ்ட்-2 செயற்கைக்கோள்கள்-4, துருவா விண்வெளி நிறுவனத்தின் தைபோல்ட் 1 மற்றும் தைபோல்ட் 2 என்னும் 2 செயற்கைக்கோள்கள், ஐ.என்.எஸ்.பூட்டான் சாட், பிக்ஸெல் நிறுவனத்தின் ஆனந்த் செயற்கைக்கோள் ஆகியவை 8 நானோ செயற்கைக்கோள் நவ26-ந் தேதி விண்ணில் பாய்கிறது
  • ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-54 ராக்கெட், நவ26-ந் தேதி (சனிக்கிழமை) காலை 11.56 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது.
  • இந்த பி.எஸ்.எல்.வி.சி-54 ராக்கெட், 4 நிலைகளைக் கொண்டது. ஒவ்வொரு நிலையும் தனித்தனி உந்துவிசை அமைப்புடன் செயல்படும் திறன் கொண்டது.
  • முதல் மற்றும் 3-வது உந்து நிலைகளில் திட எரிபொருளும்.
  • 2-வது மற்றும் 4-வது நிலை திரவ உந்துசக்தியும் பயன்படுத்தப்படுகிறது.

மாநாடு

 1. ஐ.நா. பருவநிலை மாநாடு

  • ஐ.நா. பருவநிலை தீர்மானத்தின் (யுஎன்எஃப்சிசிசி) உறுப்பு நாடுகள் பங்கேற்ற 27-ஆவது மாநாடு எகிப்தின் ஷார்ம் அல்-ஷேக் நகரில் கடந்த இரு வாரங்களாக நடைபெற்றது. மாநாட்டின் இறுதி அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
  • பூமியின் வெப்பநிலை உயர்வை தொழிற்புரட்சிக்கு முந்தைய நிலையை விட 1.5 டிகிரி செல்சியஸுக்குள் கட்டுப்படுத்த வேண்டுமென பாரீஸில் 2015-ஆம் ஆண்டில் நடைபெற்ற ஐ.நா. பருவநிலை மாநாட்டில் உறுதி ஏற்கப்பட்டது.
  • அந்த இலக்கை எட்டும் வகையில் வளர்ந்து வரும் நாடுகள் உள்ளிட்டவற்றுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.8 லட்சம் கோடியை வழங்க அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட வளர்ச்சியடைந்த நாடுகள் உறுதியேற்றன. ஆனால்,அத்தொகையை இதுவரை அந்நாடுகள் வழங்கவில்லை.
  • இது தொடர்பாக வளர்ந்து வரும் நாடுகள், தீவு நாடுகள் உள்ளிட்டவை கடும் அதிருப்தியை வெளிப்படுத்திவந்தன.
  • பல நாடுகள் கோரிக்கை விடுத்தன. அக்கோரிக்கையை ஏற்று பருவ நிலை இழப்பீட்டு நிதி குறித்து விவாதிக்கப்படும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. வளர்ந்து வரும் நாடுகள், தீவு நாடுகள் உள்ளிட்டவற்றின் கடும் அழுத்தத்தால் பருவநிலை இழப்பீட்டு நிதியை உருவாக்குவதற்கு வளர்ச்சியடைந்த நாடுகள் ஆதரவு தெரிவித்தன.
  • அதையடுத்து அந்த நிதிக்கு ஐ.நா. பருவநிலை மாநாட்டில் அதிகாரபூர்வ ஒப்புதல் வழங்கப்பட்டது.

 2. இந்தியா-ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாடு

  • இந்தியா-ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் கம்போடியாவுக்கு 2 நாள் பயணமாக நவ.22-இல் செல்லவிருக்கிறார்.
  • இந்தியா-ஆசியான் உறவுகளின் 30 ஆண்டுகளை குறிக்கும் வகையில், இந்தியா-ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டுக்கு இந்தியாவும் கம்போடியாவும் இணைந்து தலைமை தாங்கவிருக்கின்றன.
  • ஆசியான் அமைப்பில் பேச்சுவார்த்தைரீதியிலான கூட்டுறவு நாடாக 1992-இல் இந்தியா சேர்ந்தது.

விளையாட்டு செய்திகள்

 1. 22-ஆவது உலகக்கோப்பைகால்பந்து போட்டி

  • 22-ஆவது உலகக்கோப்பைகால்பந்து போட்டி கோலாகலமாகத் தொடங்கியது.
  • தோஹாவில் உள்ள அல் பேத் மைதானத்தில் தொடங்கியது.
  • பொம்மையாக வலம் வந்த உலகக் கோப்பை போட்டிக்கான மாஸ்காட் ‘லா ஈப்”,

CA 21.11.2022 (English Version)

Central News

   1. ‘Stent’ to continue on list of essential drugs

  • The Ministry of Health has issued a notification so that the ‘Stent’ device used in the treatment of blood vessel blockage will continue to be included in the National Essential Medicines List.
  • The National List of Essential Medicines in India was compiled for the first time in 1996. It was subsequently revised in 2003, 2011 and 2015.
  • In this case, the 2015 list was again revised and the National Essential Medicines List-2022 was published last September. In this, 34 new drugs such as anti-cancer drugs and vaccines were added and 26 drugs were deleted.
  • Cardiovascular disease continues to be a public health problem. The disease is the leading cause of death.
  • Therefore, it is indicated that the stent should continue to be an essential medical device due to its high demand for treatment.
  • This will make stent equipment available at a more affordable price

Rocket

 1. PSLVC-54 rocket

  • At this stage, the Indian Space Research Organization (ISRO) is planning to launch a rocket called ‘PSLVC-54’ and is preparing for it.
  • This rocket will carry a geosatellite ‘Ocean Sat 03’ and 8 nano satellites.
  • Astrocast-2 satellites-4 of USA, Thibold 1 and Thibold 2 satellites of Dhruva Space Agency, INS Bhutan Sat, Anand satellite of Pixel company 8 nano satellite will launch on November 26
  • PSLV from the launch pad at Sriharikota. The C-54 rocket will be launched on November 26 (Saturday) at 11.56 am.
  • This PSLVC-54 rocket has 4 stages. Each stage is capable of operating with a separate propulsion system.
  • Solid fuel in 1st and 3rd propulsion stages.
  • 2nd and 4th stage liquid propulsion is also used.

Conference

  1. UN Climate Conference

  • UN The 27th Conference of the Parties to the United Nations Framework Convention on Climate Change (UNFCCC) was held in Sharm Al-Sheikh, Egypt over the past two weeks. The final report of the conference was approved.
  • The 2015 United Nations Conference on Climate Change held in Paris called for limiting global warming to 1.5 degrees Celsius above pre-industrial levels. The commitment was adopted at the Climate Conference.
  • In order to reach that goal, the developed countries including the United States and Britain have committed to provide about Rs.8 lakh crore annually to the developing countries. However, those countries have not yet provided that amount.
  • In this regard, developing countries and island countries expressed their dissatisfaction.
  • Many countries requested. It was officially announced that the demand would be accepted and the Seasonal Compensation Fund would be discussed. Developed countries supported the creation of a climate compensation fund due to strong pressure from developing countries and island nations.
  • After that the UN Official approval was given at the Climate Change Conference.

   2. India-ASEAN Defense Ministers Conference

  • Defense Minister Rajnath Singh will be on a 2-day visit to Cambodia on November 22 to participate in the India-ASEAN Defense Ministers Conference.
  • To mark 30 years of India-ASEAN relations, India and Cambodia will co-chair the India-ASEAN Defense Ministers’ Conference.
  • India joined ASEAN as a negotiating partner in 1992.

Sports News

  1. 22nd FIFA World Cup

  • The 22nd edition of the World Cup started with a bang.
  • It started at the Al Bait Stadium in Doha.
  • World Cup mascot ‘La Eeb’, who crawled as a toy