Home TNPSC TNPSC Current Affairs – Nov 19, 2022

TNPSC Current Affairs – Nov 19, 2022

0
33

CA 19.11.2022 (Tamil Version)

மத்திய செய்திகள் 

 1. பஞ்சாபில் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்அமைச்சரவை ஒப்புதல்

 • பஞ்சாபில் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதற்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது 
 • பஞ்சாபில் முதல்வர் பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாநில அமைச்சரவையின் கூட்டம் பகவந்த் மான் தலைமையில் நடைபெற்றது. 
 • அதேபோல், கரும்பு ஒரு குவிண்டாலுக்கு ரூ.380 விலை நிர்ணயிக்கும் அறிவிக்கைக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டது என்றார். 
 • பஞ்சாபில் பழைய ஓய்வூதியத் திட்ட அமலாக்கத்தின் மூலம் சுமார் 1.75 லட்சம் அரசு ஊழியர்கள் நேரடியாக பலனடைவர்.  
 • ஓய்வூதியத் தொகை முழுவதையும் அரசே வழங்கும் இத்திட்டம், கடந்த 2004-இல் கைவிடப்பட்டதாக மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். 

மாநில செய்திகள் 

 1.நான் முதல்வன் 

 • சென்னை தலைமைச்செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி முன்னிலையில், ‘நான் முதல்வன்’ திட்ட அறிவிப்பின் கீழ் பொறியியல், பாலிடெக்னிக் மாணவர்கள் படிக்கும்போதே பயிற்சி பெற 6 தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 
 • இந்த ஒப்பந்தத்தில்  
 • மேண்டோ (ஸ்ரீபெரும்புதூர்) நிறுவனம், 
 • வீவீடி என்(பொள்ளாச்சி),  
 • கண்ணபிரான் மில்ஸ் (கோவை, மதுரை, பெருந்துறை),  
 • கேஜி குழுமம், லட்சுமி மிசின் ஒர்க்ஸ்(கோவை),  
 • கேப்ரியல் (விழுப்புரம், ஓசூர்)  
 • ஆகிய 6 நிறுவங்கள் மூலம் சுமார் 1,560 மாணவர்கள் பயன் பெறுவர் என தெரிவிக்கப்பட்டது. 
 • முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.358.44 கோடி செலவில் 5,035 செவித்திறன் பாதித்த குழந்தைகளுக்கு இலவசமாக காக்ளியர் இம்ப்ளான்ட் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். 
 • சென்னை மருத்துவக் கல்லூரியில் அங்கம் வகித்த புகழ்பெற்ற மருத்துவர்கள் டாக்டர் மோகன் காமேஸ்வரன், டாக்டர் கே.கே.ராமலிங்கம் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதையும், டாக்டர் பாலகுமாருக்கு சிறந்த சேவைக்கான விருதையும் அமைச்சர் வழங்கினார். 
 • 2010-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதியால் காக்ளியர் இம்ப்ளான்ட் (செவிமடு சுருள் கருவி) திட்டம் தொடங்கப்பட்டது.  
 • தற்போது முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத்திட்டத்துடன் அது இணைக்கப்பட்டுள்ளது. 

நூற்றாண்டு விழா 

 1. நூற்றாண்டு நிறைவு விழா 

 • தென்னிந்திய வேலையளிப்போர் கூட்டமைப்பின் நூற்றாண்டு நிறைவு விழா, சென்னையில்  நடைபெற்றது.  
 • திராவிட இயக்கத்தின் தாய் அமைப்பான தென்னிந்திய நல உரிமைச் சங்கம் எனப்படும் நீதிக்கட்சி, முதல் முதலாக ஆட்சி அமைத்தது.  
 • 1920-ஆம் ஆண்டு அப்போதுதான் பல்வேறு தொழில் அமைப்புகள் இங்கு உருவாகின. 

விருது 

 1. குடும்பக் கட்டுப்பாடு செயலாக்கத்தில் இந்தியாவுக்கு சர்வதேச விருது 

 • குடும்பக்கட்டுப்பாட்டை செயல்படுத்துவதில் சிறப்பான தலைமைத்துவத்துக்கான விருதை இந்தியா வென்றுள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். 
 • ‘குடும்பக் கட்டுப்பாட்டை அமல்படுத்துவதில் சிறப்பான தலைமைத்துவத்துக்கான விருது 2022″ தாய்லாந்தின் பட்டாயா நகரில் நடைபெற்ற குடும்பக்கட்டுப்பாடு தொடர்பான சர்வதேச மாநாட்டில் (ஐசிஎஃப்பி) இந்தியாவுக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை பெற்ற ஒரே நாடு இந்தியாவாகும். 
 • நாட்டில் குடும்பக்கட்டுப்பாடு செய்து கொள்ளும் திருமணமான பெண்களின் விகிதம் 2015-16ஆம் ஆண்டில் 66 சதவீதமாக இருந்தது. 2019-21 ஆண்டில் அது 76 சதவீதமாக அதிகரித்தது. 
 • உலகளவில் 2030ஆம் ஆண்டில் இந்த சதவீதம் 75ஆக இருக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இந்தியா ஏற்கெனவே அந்த இலக்கை எட்டியுள்ளது. 
 • பரிவார் விகாஸ் எனும் முன்னோடி திட்டம் குடும்பக் கட்டுப்பாடு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி இதில் முன்னேற்றங்களை அடைய வழிவகுத்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

ராக்கெட் 

1. விக்ரம்எஸ் 

 • இந்திய விண்வெளி ஆய்வு வரலாற்றில் முதல்முறையாக தனியார் நிறுவனம் தயாரித்த ‘விக்ரம் – எஸ்’ ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. 
 • ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் ஏவுதளத்திலிருந்து செலுத்தப்பட்ட அந்த ராக்கெட் திட்டமிட்டபடி இலக்கை அடைந்ததைத் தொடர்ந்து, இந்தத்திட்டம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 
 • இதற்காக 2020- ஆம் ஆண்டு இன்ஸ்பேஸ் என்ற அமைப்பு நிறுவப்பட்டு, ராக்கெட், செயற்கைக்கோள்கள் வடிவமைக்கும் பணிகளை மேற்கொள்ள தனியார் நிறுவனங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது. 
 • அதன்படி, தெலங்கானா மாநிலம், ஹைதராபாதைச் சேர்ந்த ‘ஸ்கைரூட்’ என்ற ஏரோஸ்பேஸ் நிறுவனம் தனது ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்துவதற்காக இஸ்ரோவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டது. 
 • 545 கிலோ எடையை சுமந்து செல்லக்கூடிய ‘விக்ரம் எஸ்’ ராக்கெட்டை வடிவமைத்து, அதை சோதனை முயற்சியாக விண்ணில் செலுத்த முடிவானது. அதற்கு ஆரம்பம் எனப் பொருள்படும் வகையில் பிராரம்ப் திட்டம் எனப் பெயரிடப்பட்டது. 
 • அதிநவீன நுட்பங்களான முப்பரிமாண அச்சு மற்றும் கார்பன் சேர்ம உலோகங்களைக்கொண்டு 6 மீட்டர் உயரத்தில் அந்த ராக்கெட் வடிவமைக்கப்பட்டது. 
 • அதனுடன் 83 கிலோ எடை கொண்ட 3 ஆய்வு சாதனங்களை அனுப்பவும் திட்டமிடப்பட்டது. ஆந்திரத்தின் ‘என் ஸ்பேஸ் டெக், சென்னையின் ‘ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா’, ‘பஸும் க்யூ ஆர்மேனியன்’ ஆகிய புத்தாக்க நிறுவனங்கள் ஆய்வு சாதனங்களை உருவாக்கியிருந்தன. 

2. ஸ்ரீஹரிகோட்டாவில் அமைகிறது தனியார் ராக்கெட் ஏவுதளம்! 

 • தனியார் நிறுவனம் சார்பில் விக்ரம்-எஸ் ராக்கெட் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட நிலையில், அடுத்தகட்டமாக மற்றொரு தனியார் நிறுவனம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் புதிய ஏவுதளத்தை கட்டமைத்து வருகிறது
 • சென்னை ஐஐடியுடன் ஒருங்கிணைந்து செயல்படும் ‘அக்னிகுல் காஸ்மோஸ்’ எனும் நிறுவனம் இதற்கான முயற்சியை முன்னெடுத்துள்ளது. 
 • பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுகளை ஏவக்கூடிய மிகப்பெரிய ஏவுதளமோ அல்லது இஸ்ரோவால் அமைக்கப்பட்ட மற்ற ஏவுதளமோ எங்களது தேவைக்கு ஏற்புடையதாக இல்லாததால் நாங்களே பிரத்யேகமாக ஒரு ஏவுதளத்தை வடிவமைக்கத் திட்டமிட்டோம். 
 • அக்னிபான்’ எனப்படும் எங்களது ராக்கெட், காப்புரிமை பெற்ற பகுதி கிரயோஜெனிக் என்ஜினைக் கொண்டு வடிவமைக்கப்பட்டது. அதனை ஏவுவதற்கு பிரத்யேகமாக இருக்கக் கூடிய ஏவுதளம் தேவை. அதனைப் பூர்த்தி செய்யவே அந்த ஏவுதளத்தை கட்டமைத்துள்ளோம் என்றார் இஸ்ரோ தலைவர் சோம்நாத். 

மாநாடு 

 1. பயங்கரவாத நிதித்தடுப்புக்கான சர்வதேச மாநாட்டில் 

 • பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளிடமிருந்து இழப்பீடு வசூலிக்க வேண்டியது அவசியம் என்று தில்லியில் தொடங்கிய பயங்கரவாத நிதித்தடுப்புக்கான சர்வதேச மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். 
 • இந்திய உள்துறை அமைச்சகம் சார்பில், ‘பயங்கரவாதத்துக்கு நிதி கிடைக்கக்கூடாது’ என்ற கருப்பொருளில் 2 நாள் சர்வதேச அமைச்சர்கள் நிலையிலான மாநாடு தில்லியில் தொடங்கியது.  
 • உலகம் முழுவதும் இருந்து 70 நாடுகள் மற்றும் இன்டர்போல் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த 450 பிரதிநிதிகள் பங்கேற்றுள்ள. 

CA 19.11.2022 (English Version)

Central News 

   1. Old Pension Scheme Reintroduced in Punjab- Cabinet Approval. 

 • State cabinet approves re-implementation of old pension scheme in Punjab 
 • Aam Aadmi Party is ruling Punjab under the leadership of Chief Minister Bhagwant Mann. In this case, the meeting of the state cabinet was held under the chairmanship of Bhagwant Maan. 
 • Similarly, approval was also given to the notification fixing the price of sugarcane at Rs.380 per quintal, he said. 
 • About 1.75 lakh government employees will be directly benefited by implementation of Old Pension Scheme in Punjab. 
 • State government officials said that this scheme, in which the government provides the entire pension amount, was abandoned in 2004. 

State news 

 1. ‘Nan Muthavan’ project. 

 • In the presence of Higher Education Minister Ponmudi at Chennai Secretariat, MoU was signed with 6 industrial companies to train engineering and polytechnic students while studying under the announcement of ‘Nan Muthavan’ project. 
 • In this agreement 
 • Mando (Sriperumbudur) Company, 
 • Vvtn (Pollachi), 
 • Kannabran Mills (Coimbatore, Madurai, Perundurai), 
 • KG Group, Lakshmi Machine Works (Coimbatore), 
 • Gabriel (Villupuram, Hosur) 
 • About 1,560 students will be benefited through these 6 institutions. 
 • Under the Chief Minister’s Comprehensive Insurance Scheme, 5,035 hearing-impaired children have been fitted with cochlear implants free of cost at a cost of Rs 358.44 crore, according to Minister of People’s Welfare M. Subramanian. 
 • The Minister presented the Lifetime Achievement Award to Dr. Mohan Kameswaran and Dr. KK Ramalingam and Dr. Balakumar who were members of Chennai Medical College. 
 • In 2010, the then Chief Minister Karunanidhi launched the Cochlear Implant scheme. 
 • Now it is linked with Chief Minister’s Comprehensive Insurance Scheme. 

Centennial celebration 

1. Centenary Celebration 

 • Centenary Celebration of South Indian Employers Federation held in Chennai. 
 • The Justice Party, the mother organization of the Dravidian movement, the South Indian Welfare Rights Association, was the first to form the government. 
 • It was in the year 1920 that various industrial organizations were formed here. 

Award 

   1. International Award for India in Family Planning Implementation 

 • Union Health Minister Mansukh Mandavia said that India has won the award for best leadership in implementation of family planning. 
 • India was awarded the ‘Leadership in Family Planning Implementation Award 2022’ at the International Conference on Family Planning (ICFP) held in Pattaya, Thailand. India is the only country to have received this award. 
 • In 2015-16, the percentage of married women doing family planning in the country was 66 percent. This has increased to 76 percent in 2019-21. 
 • With a global target of 75 percent by 2030, India has already met that target. 
 • The central government has said that the pilot program called Parivar Vikas has created awareness about family planning and has made progress in it. 

Rocket 

  1. Vikram – S 

 • For the first time in the history of Indian space exploration, a private company 
 • The manufactured ‘Vikram-S’ rocket was successfully launched. 
 • The program was declared a success after the rocket, launched from the Satish Dhawan launch pad in Sriharikota, Andhra Pradesh, reached the target as planned. 
 • For this, an organization named Inspace was established in 2020 and permission was given to private companies to design rockets and satellites. 
 • Accordingly, ‘Skyroot’, an aerospace company based in Hyderabad, Telangana, entered into an MoU with ISRO to launch its rockets. 
 • Designed the ‘Vikram S’ rocket capable of carrying a payload of 545 kg and completed its test launch. It was named Praramb Project which means beginning. 
 • The rocket was designed at a height of 6 meters using advanced techniques like 3D printing and carbon composites. 
 • Also planned to send 3 probes weighing 83 kg. Andhra Pradesh’s ‘N Space Tech’, Chennai’s ‘Space Kids India’ and ‘Bases Q Armenian’ have developed probes. 

   2. Private rocket launch pad set up in Sriharikota 

 • While the Vikram-S rocket project has been successfully implemented by a private company, another private company is constructing a new launch pad at Sriharikota in Andhra Pradesh. 
 • A company called ‘Agnicool Cosmos’ working in coordination with IIT, Chennai has taken the initiative for this. 
 • We planned to design a dedicated launch pad ourselves as neither the huge launch pad that could launch PSLV, GSLV rockets or any other launch pad set up by ISRO was suitable for our requirement. 
 • Our rocket called ‘Agnipan’ is designed with a patented partial cryogenic engine. It requires a dedicated launch pad to launch it. ISRO chief Somnath said that we have built the launch pad to fulfill that. 

Conference 

   1. In International Conference on Countering the Financing of Terrorism 

 • Prime Minister Narendra Modi at the International Conference on Countering Terrorist Financing which started in Delhi said that ‘reparations must be collected from countries that support terrorism’. 
 • A 2-day international ministerial conference on the theme ‘No funding for terrorism’ has started in Delhi under the auspices of the Ministry of Home Affairs of India. 
 • 450 representatives from 70 countries and international organizations including Interpol participated from all over the world.