Home TNPSC TNPSC Current Affairs – Nov 16, 2022

TNPSC Current Affairs – Nov 16, 2022

0
37

CA 16.11.2022 (Tamil Version)

முக்கிய தினங்கள் 

 1. 16-11-22 

  • சர்வதேச சகிப்புத்தன்மை (1995 முதல்) தினம்.  
  • ஜான் பிளெமிங் வெற்றிடக் குழாயைக் (1904) கண்டுபிடித்தார்.  
  • யுனெஸ்கோ நிறுவனம் (1945) தொடங்கப்பட்டது. 

மாநாடு 

 1. தேசிய இந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்களுக்கான மாநாடு 

  • தேசிய இந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்களுக்கான இரு நாள் மாநாடு தில்லி சூரஜ்குண்ட்டில் நடைபெற்றது. 
  • தீப்பெட்டி உற்பத்தித் தொழிலுக்கு ஜிஎஸ்டி (சரக்கு மற்றும்சேவை வரி) 18 சதவீதமாக இருந்தது. இந்த வரி 12 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. 
  • இதையொட்டி, தேசிய தீப்பெட்டிஉற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற பாராட்டு விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு பேசினார்.  
  • அப்போது அவர் கூறியதாவது: உலக அளவில் நூறு தீப்பெட்டிகள் இருந்தால் அதில் 30 சிவகாசி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தயாரிக்கப்பட்டவையாக இருக்கும். 
  • சங்கத் தலைவர் பரமசிவம் வரவேற்றுப் பேசுகையில், ‘இந்திய தீப்பெட்டித் தொழிலுக்கு மற்றொரு சவாலாக சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் லைட்டர்கள் வந்துள்ளன.  
  • சீனாவில் ரூ.5-க்கு கிடைக்கும் இந்த லைட்டர்கள் ஒரு ரூபாய் (ரூ.1) இன்வாய்ஸுடன் வரி ஏய்ப்புடன் இறக்குமதி செய்யப்படுவதோடு, ஒரு லைட்டர் 30 தீப்பெட்டிகளின் உற்பத்தியை அழித்துவிடும் நிலையை ஏற்படுத்துகிறது.  
  • இதற்குத் தடைவிதிக்க மத்திய வர்த்தக அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்றார். 

இந்திய செய்திகள் 

 1. உலகின் மொத்த மக்கள்தொகை 800 கோடியை எட்டியது. 

  • உலகின் ஒட்டு மொத்த மக்கள்தொகை (நவ.15) 800 கோடியை எட்டியது. கடந்த 12 ஆண்டுகளில் மட்டும் மக்கள்தொகை 100 கோடி அதிகரித்துள்ளது. 
  • உலக நாடுகளில் வசித்து வரும் ஒட்டு மொத்த மக்களின் எண்ணிக்கை 800 கோடியை எட்டியுள்ளதாக ஐ.நா. மக்கள்தொகை நிதி அமைப்பு (யுஎன்எஃப்பிஏ) தெரிவித்துள்ளது. 
  • உலக மக்கள்தொகை 2037ஆம் ஆண்டில் 900 கோடியையும், 2058ஆம் ஆண்டில் 1,000 கோடியையும் எட்டும் என ஐ.நா. அறிக்கையில் கணிக்கப்பட்டுள்ளது. 
  • 2022-ஆம் ஆண்டு நிலவரப்படி, உலக மக்கள்தொகையில் 142.6 கோடி பேரைக் கொண்டு சீனா முதலிடத்தில் உள்ளது.  
  • இந்தியா 141.2 கோடி மக்கள்தொகையுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.  
  • 2023-ஆம் ஆண்டில் சீனாவைப் பின்னுக்குத் தள்ளி உலகின் பெரும் மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா மாறும் என ஐ.நா. தெரிவித்துள்ளது.  
  • அதே வேளையில், இந்தியாவில் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் குறைந்து வருவதாகவும் ஐ.நா. தெரிவித்துள்ளது. 
  • இந்தியாவில் சராசரி கருவுருதல் விகிதம் 2.2-லிருந்து 2-ஆக குறைந்துள்ளது. நாட்டில் உள்ள 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் நிலையான கருவுருதல் விகிதமான 2.1 என்ற நிலையை அடைந்துள்ளதாக ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  
  • நவீன குடும்ப கட்டுப்பாட்டு நடைமுறைகளே இந்தியாவில் கருவுருதல் விகிதம் குறைந்ததற்கான முக்கியக் காரணமாகக் கூறப்பட்டுள்ளது. 
  • மக்களின் சராசரி வயது 
  • இந்தியா—————28.7 
  • சீனா———————-38.4 
  • ஜப்பான்—————-48.6 
  • உலக அளவில்—30.3 
  • உலக மக்களின் சராசரி ஆயுள் காலம்  
  • 1990——64 
  • 2019——72.8 
  • 2050——-77.2 (கணிப்பு) 
  • உலக மக்கள்தொகையில் முதியோர் 
  • 2022———— 10% 
  • 2050———— 16% 
  • இந்திய மக்கள்தொகை 
  • 15 முதல் 64 வயது——-68% 
  • 65+————————————–7% 

 2. பழங்குடி இனத்தவர் கௌரவ தினம் 

  • பழங்குடி இனத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் பிர்சா முண்டாவின் பிறந்த தினமான நவ. 15-ஆம் தேதிபழங்குடி இனத்தவர் கௌரவ தினம் கொண்டாடப்படும் என்று மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்தது.  
  • அதன்படி மத்திய பிரதேசத்தின் ஷாடோல் மாவட்டத்தில் பழங்குடி இனத்தவர் கௌரவ தினம் கொண்டாடப்பட்டது.  
  • பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் வனப்பகுதிகளைப் பாதுகாக்க பழங்குடி இனத்தவர் போராடினர். இதற்காக அவர்கள் உயிர்த்தியாகமும் செய்தனர். 
  • பழங்குடி இனத்தவர் நலனுக்காக முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தனி அமைச்சகத்தை உருவாக்கினார். நாட்டில் உள்ள பழங்குடி இனப்பகுதிகளின் மேம்பாட்டுக்கு இது முக்கியப்பங்காற்றி வருகிறது. 

CA 16.11.2022 (English Version)

Important Days 

  1. 16-11-22 

  • International Day of Tolerance (since 1995). 
  • John Fleming invented the vacuum tube (1904). 
  • UNESCO was founded (1945). 

Conference 

 1. National Indian Matchbox Makers Conference 

  • A two-day National Indian Matchbox Makers Conference was held at Surajkund, Delhi. 
  • GST (Goods and Service Tax) for matchbox manufacturing industry was 18 percent. This tax was reduced to 12 percent. 
  • On this occasion, Union Finance Minister Nirmala Sitharaman spoke at the appreciation function organized by the National Matchbox Manufacturers Association. 
  • Then she said: If there were 100 matches in the world, 30 of them would be made in Sivakasi and its surrounding areas. 
  • President of the association Paramasivam while welcoming said, ‘Another challenge for the Indian match industry is the arrival of lighters imported from China. 
  • These lighters, which are available in China for Rs 5, are being imported with a one rupee (Rs 1) invoice and tax evasion, destroying the production of 30 matches per litghter. 
  • He said that a request has been made to the Union Commerce Minister to ban this. 

Indian News 

   1. The total population of the world reached 800 crores. 

  • The total population of the world (Nov.15) reached 800 crores. The population has increased by 100 crores in the last 12 years alone. 
  • The total number of people living in the countries of the world has reached 800 crores. According to the Population Fund Organization (UNFPA). 
  • World population will reach 900 crore in 2037 and 1,000 crore in 2058 according to UN. As predicted in the report. 
  • As of 2022, China will lead the world population with 142.6 crore people. 
  • India is second with a population of 141.2 crores. 
  • In 2023, India will overtake China to become the most populous country in the world, according to the UN. reported. 
  • At the same time, the population growth rate in India is decreasing and the UN reported. 
  • Average fertility rate in India has decreased from 2.2 to 2. According to the UN, 31 states and union territories in the country have achieved a stable fertility rate of 2.1. The report said. 
  • Modern family planning practices have been cited as the main reason for the declining fertility rate in India. 
  • Average age of population 
  • India—————–28.7 
  • China—————-38.4 
  • Japan—————-48.6 
  • Globally————-30.3 
  • Average life expectancy of world population 
  • 1990——64 
  • 2019——72.8 
  • 2050——-77.2 (Prediction) 
  • Aging in world population 
  • 2022———- 10% 
  • 2050———– 16% 
  • Population of India 
  • 15 to 64 years——-68% 
  • 65+———————-7% 

   2. Tribal Dignity Day 

  • Birth anniversary of tribal freedom fighter Birsa Munda on Nov. Last year, the central government had announced that the ‘Tribal Dignity Day’ would be celebrated on the 15th. 
  • Accordingly, Tribal Honor Day was celebrated in Shadol district of Madhya Pradesh. 
  • Tribals fought to protect forest areas during British rule. They sacrificed their lives for this. 
  • Former Prime Minister Vajpayee created a separate ministry for the welfare of tribals. It is playing an important role in the development of tribal areas in the country.