TNPSC Current Affairs – Nov 15, 2022

0
46

CA 15.11.2022 (Tamil Version)

முக்கிய தினங்கள் 

 1. 15-11-22 

 • பீகார் மாநிலத்திலிருந்து பிரித்து ஜார்க்கண்ட்மாநிலம் (2000) உருவாக்கப்பட்டது.  
 • இண்டெல் நிறுவனம் உலகின் வர்த்தக ரீதியிலான முதலாவது 4004 என்ற single chip (1971) microprocessor ஐ வெளியிட்டது.  
 • சுதந்திர போராட்ட வீரர் வினோபா பாவே (1982) நினைவு தினம். 

விருது 

 1. கோவா சர்வதேச திரைப்பட விழா 

 • கோவாவில் நவம்பர் 20-இல் தொடங்கவுள்ள 53-ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் சத்யஜித்ரே வாழ்நாள் சாதனையாளர் விருது, ஸ்பெயின் திரைப்பட இயக்குநர் கார்லோஸ் சௌராவுக்கு வழங்கி கௌரவிக்கப்படுகிறார். 
 • மேலும், சமீபத்தில் தாதாசாகேப் பால்கே விருது பெற்ற முதுபெரும் நடிகை ஆஷா பரேக்கின் மூன்று படங்கள் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு கௌரவிக்கப்பட இருப்பதாக மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். 
 • திரைப்பட விழாவில் ‘புத்தகத் தழுவல் திட்டம்’ அறிமுகப்படுத்தபடுகிறது. வெனிஸ் திரைப்பட விழாவில் இருந்ததைப் போன்று, ‘புக்ஸ் டு பாக்ஸ் ஆபிஸ்’ என்கிற பெயரில் புத்தகங்கள் நாவல்களாக வெளியான நல்ல கதைகளுக்கும் அவற்றைத்தழுவி எடுக்கப்படும் திரைப்படங்களுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்கும் முயற்சியாக இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

 2. கேல் ரத்னா விருது 

 • மத்திய அரசு சார்பில் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருதுக்கு மூத்த டேபிள் டென்னிஸ் வீரரும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான சரத் கமல் தேர்வாகி உள்ளார். 
 • தமிழக செஸ் வீரர் பிரக்ஞானந்தா உள்பட 25 பேருக்கு அர்ஜுனா விருதுகளும், 4 பேருக்கு துரோணச்சார்யா விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. 
 • அர்ஜுனா விருது 
 • தமிழக இளம் செஸ் வீரரும், முன்னாள் உலக சாம்பியனுமான ஆர். பிரக்ஞானந்தாவுக்கு அர்ஜுனா விருது வழங்கப்படுகிறது. 
 • சீமா புனியா, எதோஸ் பால், அவினாஷ் சாப்லே (தடகளம்), லக் ஷயா சென், பிரணாய் (பாட்மின் டன்), அமித், நிஹால் சரீன் (குத்துச் சண்டை), 
 • பக்தி குல்கர்னி (செஸ்), தீப் கிரேஸ் எக்கா (ஹாக்கி), ஷிலா தேவி ( ஜூடோ ), சாக்ஷி குமாரி (கபடி), நயன் சைக்கியா (லான் பௌல்), சாகர் காளிதாஸ் (மல் லர்கம்பம்),  
 • இளவேனில் வாலறிவன், ஓம் பிரகாஷ் (துப்பாக்கி சுடுதல்), ஸ்ரீஜா அகுலா (டேபிள் டென்னிஸ்), விகாஸ் தாகுர் (பளுதூக்குதல்),அன்ஷு, சரிதா (மல் யுத்தம்),  
 • பர்வீன் (வுஷு), மானஸி ஜோஷி, தருண் தில்லான் (பாராபாட்மின்டன்), ஸ்வப்நில் பாட்டீல் (பாரா நீச்சல்), ஜெர்லின் அனிகா (காது கேளாதோர் பாட்மின்டன்). 
 • துரோணாச்சார்யா விருதுகள்:  
 • ஜீவன் ஜோத் சிங் தேஜா (வில் வித்தை), முகமது அலி (குத்துச் சண்டை), சுமா சித்தார்த் (துப்பாக்கி சுடுதல்), சுஜித் மான் (மல்யுத்தம்). 
 • வாழ்நாள்சாதனையாளர்: 
 • தினேஷ் ஜவஹர் (கிரிக்கெட்), பிமால் பிரஃபுல்லா (கால்பந்து), ராஜ்சிங் (மல்யுத்தம்). 
 • தயான் சந்த் வாழ்நாள் சாதனையாளர் விருது 
 • அஸ்வினி அக்குன்ஜி (தடகளம்), தரம்வீர் சிங் (ஹாக்கி), சுரேஷ் (கபடி), நிர் பகதூர் குருங் (பாரா தடகளம்). 
 • மௌலானா அபுல் கலாம் ஆஸாத் விருது 
 • குருநானக் தேவ் பல்கலைக்கழகம், அமிர்தசரஸ். 
 • நவ. 30-இல் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறவுள்ள விழாவில் விருதுகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கவுள்ளார். 

விளையாட்டு செய்திகள் 

 1. பிஃபா உலகக் கோப்பை கால்பந்து-2022  

 • உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான பிஃபா உலகக்கோப்பை போட்டிகள் கத்தாரில் வரும் நவ.20-ஆம் தேதி தொடங்கி டிச.18 வரை கோலாகலமாக நடைபெறவுள்ளது. 
 • ஒலிம்பிக் போட்டிகளில் கால்பந்து ஆட்டங்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்ட நிலையில், தானே உலகக் கோப்பை போட்டியை நடத்த பிஃபா தீர்மானித்தது. தென் அமெரிக்ககண்டத்தில் உள்ள உருகுவேயில் முதல் உலகக் கோப்பை போட்டி 1930-இல் நடத்தப்பட்டது. 13 நாடுகளின் அணிகள் இதில் பங்கேற்றன. 
 • முதல் சாம்பியன் உருகுவே (1930)  
 • நடப்புச் சாம்பியன் பிரான்ஸ் (2018) 

CA 15.11.2022 (English Version)

Important Days 

  1. 15-11-22 

 • Jharkhand State was formed (2000) after bifurcation from Bihar. 
 • Intel released the world’s first commercial single chip (1971) 4004 microprocessor. 
 • Freedom fighter Vinoba Bhave (1982) Memorial Day. 

Award 

  1. Goa International Film Festival 

 • Spanish film director Carlos Soura is being honored with the Satyajitre Lifetime Achievement Award at the 53rd International Film Festival of India starting November 20 in Goa. 
 • Also, Union Minister of State for Information and Broadcasting L. Murugan said that three films of veteran actress Asha Parekh, who recently won the Dadasaheb Phalke award, will be screened and honored at the International Film Festival of India. 
 • A ‘Book Adaptation Project’ is introduced at the film festival. It has been introduced as an attempt to bridge the gap between good stories published as novels and movies adapted from them under the name of ‘Books to Box Office’, as was the case at the Venice Film Festival. 

   2. Gal Ratna Award 

 • Veteran table tennis player Sarath Kamal from Tamil Nadu has been selected for Major Dayanchand Khel Ratna Award which is the highest award given to sportspersons by the Central Government. 
 • 25 people including Tamil Nadu chess player Pragnananda have been awarded Arjuna awards and 4 Dronacharya awards. 
 • Arjuna Award: 
 • Tamil Nadu Young Chess Player and Former World Champion  R. Pragnananda is awarded the Arjuna Award. 
 • Seema Punia, Ethos Paul, Avinash Chaple (Athletics), LuckShaya Sen, Pranai (Badmin Dunn), Amit, Nihal Sareen (Boxing), 
 • Bhakti Kulkarni (Chess), Deep Grace Ekka (Hockey), Sheela Devi (Judo), Sakshi Kumari (Kabaddi), Nayan Saikia (Lawn Bowl), Sagar Kalidas (Mal Larkambam), 
 • Ilavenil Walarivan, Om Prakash (Shooting), Sreeja Akula (Table Tennis), Vikas Tagore (Weightlifting), Anshu, Saritha (Mal Yuddha), 
 • Parveen (Wushu), Manasi Joshi, Tarun Dhillon (Para-Badminton), Swapnil Patil (Para-Swimming), Gerlin Anika (Deaf Badminton). 
 • Dronacharya Awards: 
 • Jeevan Jot Singh Teja (Archery), Muhammad Ali (Boxing), Suma Siddharth (Gun Shooting), Sujith Mann (Wrestling). 
 • Lifetime Achievement: 
 • Dinesh Jawahar (Cricket), Bimal Prafulla (Football), Raj Singh (Wrestling). 
 • Dayan Chand Lifetime Achievement Award: 
 • Ashwini Akkunji (Athletics), Dharamveer Singh (Hockey), Suresh (Kabaddi), Nir Bahadur Gurung (Para Athletics). 
 • Maulana Abul Kalam Azad Award: 
 • Guru Nanak Dev University, Amritsar. 
 • Nov. President Draupadi Murmu will present the awards at a function to be held at the President’s House on 30 

Sports News 

   1. FIFA World Cup Football-2022 

 • FIFA World Cup, the world’s biggest sports festival, will be held in Qatar from November 20 to December 18. 
 • FIFA decided to host the World Cup itself after the success of football matches at the Olympic Games. The first World Cup was held in Uruguay in South America in 1930. Teams from 13 countries participated in it. 
 • First champion Uruguay (1930) 
 • Defending champions France (2018)