TNPSC Current Affairs – May 12, 2022

0
38

C.A.12.05.2022 (Tamil Version)

 

 1. தேச துரோக சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிய இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

* ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட தேச துரோக சட்டப்பிரிவை மாரு ஆய்வு செய்ய உள்ளதாக மத்திய அரசு தெரிவித்ததையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

* முன்னதாக தேச துரோக வழக்கு செல்லுபடியாகும் என கேதார்நாத் சிங் வழக்கில் 5 நீதிபதிகள் கொண்ட சாசன அமர்வு 1962-ம் ஆண்டு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை மாரு சீராய்வு செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

* 124ஏ சட்டப்பிரிவு மாரு ஆய்வு செய்யப்படும் வரை தேச துரோக சட்டப்பிரிவின் கீழ் புதிதாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவும், விசாரணையை தொடரவும், கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவும் மத்திய அரசுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது

* இந்த சட்டப்பிரிவின் கீழ் நிலுவையில் உள்ள விசாரணைகள், மேல்முறையீடு மற்றும் வழக்குகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது

 

 1. ஒவ்வொரு ஆண்டும் தேசிய அளவில் சிறப்பாக செயல்படும் ஊராட்சிகளுக்கு மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் விருதுகள் வழங்கப்படுகிறது. அவற்றில்,

* மூன்றடுக்கு ஊராட்சிகளை வலிமைப்படுத்தும் விருது திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது

* ஊராட்சி ஒன்றிய விருது திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியம் மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது

* கிராம ஊராட்சி விருது திண்டுக்கல் மாவட்டம் அக்கரைப்பட்டி, கரூர் மாவட்டம் மண்மங்களம், மதுரை மாவட்டம் சின்னப்பட்டி,கன்னியாகுமாரி மாவட்டம் அத்திக்காட்டுவிளை, கிருஷ்ணகிரி மாவட்டம் கங்கலேரி, புதுக்கோட்டை மாவட்டம் காட்டாத்தி ஆகிய ஊராட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது

* சிறந்த கிராம சபைக்கான விருது ராமநாதபுரம் மாவட்டம் சாத்தனுர் கிராம ஊராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது

* கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டத்துக்கான விருது சிவகங்கை மாவட்டம் துவார் கிராம ஊராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது

* குழந்தைகள் நேய கிராம ஊராட்சிக்கான விருது நீலகிரி மாவட்ட குஞ்சப்பனை கிராம ஊராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது

 

 1. இந்தியாவில் 2000 குழந்தைகளுக்கு விழித்திரை புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த புற்றுநோய் “ரெட்டினோபிளாஸ்டொமோ”என்று அழைக்கப்படுகிறது.

 

 1. ஆவடி அருகே கோயில்பதாகையில் 25 ஏக்கர் பரப்பளவில் பசு மேடம் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்

 

 1. 2022-24-ம் ஆண்டுக்கான ஆசிய தேர்தல் ஆணையங்கள் சங்கங்களின் தலைமையாக இந்திய தேர்தல் ஆணையம் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளது

 

 1. டெல்லியில் நேற்று (11.5.2022) “மோடி 20: ட்ரீம்ஸ் மீட்டிங் டெலிவரி”என்ற புத்தக வெளியீட்டு விழா நடந்தது. இந்த புத்தகம் பிரதமர் மோடியின் தனித்துவம் மிக்க சிந்தனை, தலைமைத்துவம் உள்ளிட்ட பல்வேறு பண்புகளை விவரிக்கிறது.

 

 1. பிக்ஹாட் நிறுவனம், தமிழக விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு தமிழ் வழியிலான செயலியை அறிமுகம் செய்துள்ளது.

 

 1. 13 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய ஹாக்கி அணியில் தமிழக வீரர்கள் கோவில்பட்டி மாரீஸ்வரன், மற்றும் அரியலூர் கார்த்திக் ஆகிய இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

 

C.A.12.05.2022 (English Version)

 

 1. The Supreme Court has ordered an interim injunction to file cases under the Treason Act.

* The order was issued after the Central Government said that Maru was to study the treason law introduced during the British rule.

* The five-judge Constitutional Court in 1962 ruled that the earlier treason case was valid in the case of Kedarnath Singh. A case has been filed in the Supreme Court seeking revision of the judgment.

* Section 124A prohibits the Central Government from registering a new First Information Report, continuing an investigation and taking drastic action under the Sedition Act until Maru is examined.

* All pending hearings, appeals and cases under this Act are suspended

 

 1. Each year, the Central Rural Development and Panchayat Department presents awards to the best performing panchayats nationally. Among them,

* Award for strengthening three tier panchayats has been given to Thiruvannamalai district panchayat

* Panchayat Union Award has been given to Mannachanallur Panchayat Union of Trichy District and Ramanathapuram District Mandapam Panchayat Union

* Grama Panchayat Award has been given to Dindigul District Akkaraipatti, Karur District Manmangalam, Madurai District Chinnappatti, Kanyakumari District Athikkattuvilai, Krishnagiri District Gangaleri, Pudukottai District Kattathi Panchayats

* Award for Best Grama Niladhari has been given to Sathanur Grama Panchayat, Ramanathapuram District

* Award for Rural Panchayat Development Project has been given to Dwar Grama Panchayat, Sivagangai District

* Award for Children’s Grama Panchayat has been given to Kunchappanai Grama Panchayat, Nilgiris District

 

 1. 2000 children in India have been diagnosed with retinal cancer. This cancer is called a “retinoblastoma”.

 

 1. Minister Sekar Babu has said that Madam Basu Madam has been set up on an area of ​​25 acres at the temple near Avadi

 

 1. The Election Commission of India has unanimously elected the Chairman of the Asian Electoral Commission Associations for the year 2022-24

 

 1. The book launch of “Modi 20: Dreams Meeting Delivery” took place in Delhi yesterday (11.5.2022). This book describes various characteristics of Prime Minister Modi, including his unique thinking and leadership.

 

 1. Bighat has introduced a Tamil based processor for the benefit of Tamil Nadu farmers.

 

 1. Kovilpatti Mariswaran and Ariyalur Karthik have been selected in the Indian hockey team after 13 years.

Click here to download PDF material : CA 12.05.2022