TNPSC Current Affairs – Aug 30, 2022

0
25

CA 30.08.2022(Tamil Version)

மாநில செய்திகள் 

1. தேசிய தர உறுதி அங்கீகாரம்  

  • தமிழகத்தில் செயல்படும் ஐந்து ஆரம்ப சுகாதார நிலையம் ஆய்வகங்களுக்கு நாட்டிலேயே முதல்முறையாக தேசிய தர உறுதி அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.  
  • அதனை தேசிய தர நிர்ணய அங்கீகார வாரியம் (என்ஏபிஎல்) வழங்கியது. 
  • தமிழகத்தில் புதிய முயற்சியாக, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் கீழ் இயங்கும்  
  • திருப்பூர் மாவட்டம், தளவாய்பட்டினம் கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையம்  
  • திருப்பத்தூர் மாவட்டம், பாச்சூர் ஆரம்ப சுகாதார நிலையம்  
  • ராமநாதபுரம் மாவட்டம், வெங்கிட்டாங்குறிச்சி கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையம்  
  • தூத்துக்குடி மாவட்டம், மாப்பிள்ளையூரணி கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும்  
  • கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய ஐந்து ஆரம்ப சுகாதார நிலையம் ஆய்வகங்கள் தேசிய தர நிர்ணய அங்கீகார வாரிய அங்கீகாரத்துக்கு விண்ணப்பித்து நாட்டிலேயே முதல் முறையாக தர உறுதிச் சான்றிதழை பெற்றுள்ளன. 
  • பெங்களூரில் நடைபெற்ற தேசிய அளவிலான மாநாட்டில் பொது சுகாதாரத்துறை இயக்குனர் மற்றும் ஐந்து ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு தேசிய தர நிர்ணய அங்கீகார வாரியம் இந்த தரச் சான்றிதழ்களை வழங்கியது.  

2. மாஸ்டர் பிளான்  

  • தமிழகத்தில் உள்ள அனைத்து முதல் நிலை திருக்கோயில்களையும் மாஸ்டர் பிளான் திட்டம் மூலம் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறினார்.  
  • 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆகம விதிப்படி குடமுழுக்கு நடத்தப்பட வேண்டிய திருக்கோவிலுக்கு திருமண மண்டப வசதி செய்து தருதல், திருக்கோயில்களில் இருக்கின்ற பசு மடங்களை புதுப்பிக்கின்ற பணிகள், பயன்பாட்டில் இல்லாத நிலங்களை வாடகைக்கு விட்டு திருக்கோயிலின் வருவாயை பெருக்குதல் போன்றவை குறித்து கலந்தாய்வு கூட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.  
  • திருக்கோயில்களில் பணியாற்றி வரும் பணியாளர்களுக்கு புத்தாக்க பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  
  • தவில் மற்றும் நாதஸ்வர பயிற்சி பள்ளி அமைக்கப்படும்.  
  • பக்தர்கள் தங்கும் விடுதியை புணரமைப்பதற்கும், புதிதாக விடுதிகள் கட்டுவதற்கும் துறை ஒப்புதல் வழங்கியுள்ளது.  
  • நாள் முழுவதும் அன்னதானத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.  
  • இதுபோன்ற அடுக்கடுக்கான திட்டங்களை அனைத்து முதுநிலை திருக்கோயில்களிலும் ‘மாஸ்டர் பிளான்’ மூலம் ஏற்படுத்த பணிகள் நடைபெற்று வருகின்றன.  

மத்திய செய்திகள் 

1. பாரத் அதிவேக ரயில் சாதனை  

  • இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் அதிவேக ரயில் 183 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்து (ஒரு சொட்டு தண்ணீர் கூட சிந்தாமல்) சாதனை புரிந்துள்ளது.  

2. நாடு முழுவதும் ஒரே மாதிரியான சர்வதேச ஓட்டுனர் உரிமம்  

  • நாடு முழுவதும் ஒரே மாதிரியான சர்வதேச ஓட்டுனர் உரிமத்தை (ஐடிபி) அளிக்க மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.  
  • 1949 ஆம் ஆண்டு ஜெனிவா சர்வதேச சாலை போக்குவரத்து ஒப்பந்தத்தில் இந்தியா கையொப்பமிடப்பட்டுள்ளது. 
  • இந்த மாநாட்டில் பங்கேற்ற நாடுகளுடனான பரஸ்பர ஒப்பந்த அடிப்படையில் சர்வதேச ஓட்டுனர் உரிமம் பெர்மிட் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.  
  • தற்போது நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் அளிக்கப்படும் சர்வதேச ஓட்டுனர் உரிமத்தின் வடிவம், அளவு, முறை, வண்ணம் ஆகியவற்றில் வேறுபாடுகள் இருந்து வருகின்றன.  
  • இதன் காரணமாக இந்த சர்வதேச ஓட்டுனர் உரிமத்தை பயன்படுத்துவதில் வெளிநாடு செல்லும் இந்திய வாகன ஓட்டிகள் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.  
  • இப்போது இந்த திருத்தத்தின் மூலம் சர்வதேச ஓட்டுனர் உரிமத்துக்கான வடிவம், அளவு, நிறம் போன்றவை இந்தியா முழுவதும் ஒரே மாதிரி வழங்கப்படும் என மத்திய சாலை போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.  
  • இந்திய ஓட்டுனர் உரிமத்துடன் சர்வதேச ஓட்டுனர் உரிமத்தை இணைக்க QR’ குறியீட்டுக்கான வசதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  
  • 1989 ஆம் ஆண்டு மத்திய மோட்டார் வாகன விதிகளின்படி பல்வேறு வாகன வகைகளின் கீழும் இந்த உரிமத்தை (ஐடிபி) வழங்கும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது.  

3. பொதுத்துறை நிறுவனங்களின் பங்களிப்பு 20% ஊதியம் 40%  

  • தேசிய வருவாயில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்களிப்பு சுமார் 20 சதவீதமாக உள்ள நிலையில் அத்துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கான ஊதியம் மொத்த ஊதியத்தில் சுமார் 40% உள்ளதென மதிப்பீட்டு நிறுவன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  
  • கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்து இந்தியா ரேட்டிங் அண்ட் ரிசர்ச் என்ற மதிப்பீட்டு நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது. 
  • அதன் அறிக்கையை அண்மையில் வெளியிடப்பட்டது.  
  • அந்த காலகட்டத்தில் ஒட்டுமொத்தமாக தேசிய வருவாயில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்களிப்பு 19.2 சதவீதமாக இருந்தது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  
  • அதே வேளையில், பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கான ஊதியம் ஒட்டுமொத்த ஊதியத்தில் 39.2 சதவீதமாக இருந்ததாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  
  • அதே வேளையில் தனியார் துறை நிறுவனங்களின் பங்களிப்பும் ஊதியமும் கிட்டத்தட்ட சமமாகவே இருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  
  • சம்பந்தப்பட்ட காலகட்டத்தில் தனியார் துறை நிறுவனங்களின் தேசிய வருவாய் பங்களிப்பு 36.3 சதவீதமாகவும், ஊதிய பங்கு 35.2% ஆகவும் இருந்தது. 

4.வோஸ்டாக் 2022’ போர்ப் பயிற்சி  

  • ‘வோஸ்டாக் 2022’ போர்ப் பயிற்சியில் இந்தியா – சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைவீரர்கள் பங்கேற்க உள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.  
  • 2022 போர்ப் பயிற்சி செப்டம்பர் 1 முதல் 7ஆம் தேதி வரை கிழக்கிந்திய ராணுவ மாவட்டத்தின் ஏழு பயிற்சி மைதானங்களிலும், ஓகோட்ஸ்க் கடல், ஜப்பான் கடல் ஆகிய பகுதிகளிலும் நடைபெறும்.  
  • கடந்த ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற ஸ்பாட் 2021’ போர்ப் பயிற்சியில் சீனா பாகிஸ்தான் உள்ளிட்ட 17 நாடுகள் பங்கேற்றன.  
  • அப்பயிற்சியில் இந்தியாவும் இடம் பெற்றது.  

விளையாட்டு செய்திகள் 

1. யு20 மகளிர் கால்பந்து  

  • கோஸ்டாரிகாவில் நடைபெற்ற 20 வயதுக்கு உட்பட்ட மகளிருக்காண யு-20 உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் ஸ்பெயின் வாகை சூடியது.  
  • ஸ்பெயின் 3-1 என்ற கோல்கணக்கில் ஜப்பானை வீழ்த்தியது.  
  • இதன் மூலம் கடந்த 2018 உலகக்கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஜப்பானிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்துள்ளது ஸ்பெயின்.  
  • சிறப்பு விருது:  
  • இப்போட்டியில் சிறப்பாக கோல்கள் அடித்ததற்காக  
  • தங்கப்பந்து விருது ஜப்பானின் மாய்கா ஹமானோவுக்கும், 
  • வெள்ளிப்பந்து விருது ஸ்பெயின் இன்மா கபாரோவுக்கும்,  
  • வெண்கலப்பந்து விருது பிரேசிலின் டார்சியேனுக்கும் வழங்கப்பட்டன.  
  • அதிக கோல்கள் அடித்தோரில் ஸ்பெயினின் இன்மா கபாராவுக்கு (எட்டு கோல்கள்)தங்க பூட் விருதும்,  
  • ஜப்பானின் மாய்கா ஹமானோவுக்கும் (நான்கு கோல்கள்)வெள்ளி பூட் விருதும், 
  • யுஸூகி யமாமோடோவுக்கு (மூன்று கோல்கள்)வெண்கல பூட் விருதும் வழங்கப்பட்டன.  
  • சிறந்த கோல் கீப்பர் விருது ஸ்பெயினின் மெரிட்ஸெல் ஃபாட்ன்டுக்கு கிடைத்தது. 

CA 30.08.2022(English Version)

State news 

1. National Quality Assurance Accreditation 

  • For the first time in the country, five primary health center laboratories operating in Tamil Nadu have been awarded National Quality Assurance accreditation. 
  • It is issued by National Accreditation Board for Standardization (NAPL). 
  • As a new initiative in Tamil Nadu, it will run under the Department of Public Health and Disease Prevention 
  • Additional Primary Health Centre, Thalavaipatnam, Tirupur District  
  • Bachur Primary Health Centre, Tirupattur District Additional Primary Health Centre,  
  • Ramanathapuram District, Venkitanchurichi 
  • Tuticorin District, Mappillaiurani Additional Primary Health Center and 
  • Kanyakumari District, Dovalai Additional Primary Health Centre, five Primary Health Center laboratories have applied for National Standardization and Accreditation Board accreditation and obtained quality assurance certificate for the first time in the country. 
  • The National Standardization and Accreditation Board awarded these quality certificates to the Director of Public Health and five laboratory technicians at a national level conference held in Bangalore. 

2. Master Plan 

  • Endowment Minister PK Shekharbabu said that steps will be taken to improve all the first-level temples in Tamil Nadu through the ‘Master Plan project. 
  • In the consultation meeting, a study was carried out on the provision of a marriage hall for the temple, which has to be bathed once in 12 years as per the rules of Agama, the work of renovating the cow monasteries in the temples, increasing the income of the temple by renting unused lands, etc. 
  • Arrangements have been made to provide refresher training to the staff working in the temples. 
  • Thavil and Nataswara Training School will be set up. 
  • The department has given approval for the renovation of hostels and the construction of new hostels. 
  • A whole-day food donation scheme has been implemented. 
  • Work is underway to establish such tiered schemes in all the senior temples through ‘Master Plan. 

Central News 

1. Bharat High-Speed ​​Rail feat 

  • Vande Bharat high-speed train made in India has achieved a record by traveling at a speed of 183 km (without spilling a single drop of water). 

2. Uniform International Driving License across the country 

  • Union Ministry of Road Transport and Highways has decided to issue uniform International Driving License (IDP) across the country. 
  • India is a signatory to the 1949 Geneva Convention on International Road Transport. 
  • The International Driving License Permit is accepted on the basis of mutual agreement with the countries participating in this convention. 
  • At present, there are differences in the format, size, pattern, and color of International Driving licenses issued in different states across the country. 
  • Due to this, Indian motorists going abroad are facing difficulties in using this International Driving License. 
  • Now through this amendment, the format, size, color etc. of the International Driving License will be issued uniformly across India, the Central Road Transport Department said. 
  • Facility of ‘QR’ code to link International Driving License with Indian Driving License has also been informed. 
  • As per the Central Motor Vehicle Rules, 1989 the facility of issuing this license (IDP) under various vehicle categories has been added. 

3. Contribution of Public Sector Undertakings 20% Wages 40% 

  • While the contribution of public sector companies in the national income is about 20 percent, the salary of the employees working in the sector is about 40% of the total salary, according to the report of the evaluation agency. 
  • India Rating and Research, a rating agency, conducted a study on the country’s economic growth in the last 10 years. 
  • Released its report recently. 
  • According to the report, the contribution of PSUs to the overall national income during that period was 19.2 percent. 
  • At the same time, the report also mentioned that the wages of public sector employees were 39.2 percent of the total wages. 
  • Meanwhile, it is reported that the contribution and remuneration of the private sector companies were almost equal. 
  • National revenue contribution of private sector enterprises during the relevant period was 36.3% and wage share was 35.2%. 

4. ‘Vostok 2022’ combat exercise 

  • Russia has announced that more than 50,000 soldiers from countries including India and China will participate in the ‘Vostok 2022’ war exercise. 
  • The 2022 war exercise will be held from September 1 to 7 at seven training grounds of the East Indian Military District, Sea of ​​Okhotsk and Sea of ​​Japan
  • 17 countries including China Pakistan participated in the ‘SPOT 2021’ war exercise held in Russia last year. 
  • India also participated in the exercise. 

Sports news 

1. U-20 Women’s Football 

  • Spain has won the Women’s U-20 World Cup in Costa Rica
  • Spain beat Japan 3-1. 
  • With this, Spain has responded to the defeat against Japan in the final match of the 2018 World Cup. 
  • Special Award: 
  • For scoring the best goals in the tournament 
  • Golden Ball Award to Japan’s Maika Hamano, 
  • Silver Ball award to Spain’s Inma Caparro, 
  • The Bronze Ball award was also given to Brazil’s Tarsien. 
  • ‘Golden Boot’ award for top scorer Inma Capara of Spain (eight goals) 
  • Japan’s Maika Hamano (four goals) and ‘Silver Boot’ award, 
  • Yuzuki Yamamoto (three goals) was also awarded the ‘Bronze Boot’. 
  • The Best Goalkeeper award went to Spain’s Meritzel Faudnt.