TNPSC Current Affairs – Aug 31, 2022

0
21

CA 31.08.2022(Tamil Version)

மாநில செய்திகள் 

1. சென்னையில் சர்வதேச சுகாதாரத் தரவு மாநாடு  

  • சங்கர நேத்ராலயா மற்றும் சர்வதேச ஹெல்த் கேர் டேட்டா அனலெட்டிக்கல் சங்கம் ஆகியவை சார்பில் சென்னையில் சர்வதேச சுகாதார தரவு ஆய்வு மாநாடு அண்மையில் நடைபெற்றது.  
  • டேட்டா கான் 2022 என்ற பெயரில் நடைபெற்ற அந்த மாநாட்டில் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மருத்துவர்கள் நேரடியாகவும், ஆன்லைன் வாயிலாகவும் கலந்து கொண்டதாக சங்கர நேத்ராலயா நிர்வாகிகள் தெரிவித்தனர்.  

2. தமிழக அரசின் மூன்று கல்வி திட்டங்கள் தொடக்க விழா  

  • தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செப்டம்பர் 5ஆம் தேதி தொடங்கி வைக்கும் புதுமைப்பெண் திட்டவிழாவில் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.  
  • இந்த நிகழ்ச்சியில் தமிழக அரசின் 26 தகைசால் பள்ளிகள் மற்றும் 15 மாதிரி பள்ளிகள் திட்டத்தை கேஜரிவால் தொடக்கி வைக்கிறார்.  
  • திட்டங்கள் என்ன?  
  • தமிழக அரசு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ் அரசு பள்ளியில் படித்த அனைத்து மாணவிகளுக்கும் உயர்கல்விநிதி உதவித்தொகையாக மாதம் ரூபாய் 1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம்.  
  • சிறந்த பள்ளிகள் டெல்லியை போலவே, தமிழக அரசும் மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் அதிநவீன 26 தகைசால் பள்ளிகளை அறிமுகப்படுத்துகின்றது.  
  • தொலைநோக்கு பார்வையுடன் வலுவான அடித்தளத்தையும் கற்றலின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் மேம்படுத்தப்பட்டதாக இந்த பள்ளிகள் அமைக்கப்படுகின்றன. 
  • தமிழகத்தில் ஏற்கனவே கடந்த 2021 அக்டோபர் மாதம் தொழில்முறை படிப்புகளை வழங்கும் 10 ஸ்டீம் (விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல் கலை, மருத்துவம்) மாதிரி பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன.  
  • மேலும் 15 இடங்களில் ரூபாய் 125 கோடியில் இந்த மாதிரி பள்ளிகள் தொடங்கப்படுகின்றன.  

மத்திய செய்திகள் 

1. அபிஜித் சென் காலமானார்  

  • பிரபல பொருளாதார நிபுணரும், திட்டக்குழு முன்னாள் உறுப்பினருமான அபிஜித் காலமானார்.  
  • மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது 2004 முதல் 2014 வரை திட்டக்குழு உறுப்பினராக அபிஜித் சென் பதவி வகித்தார்.  
  • இவருடைய சிறந்த பொதுச் சேவையை பாராட்டி 2019 அவருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது.  
  • 2014 ஆம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஆட்சியில், நீண்ட கால தானிய கொள்கையை வடிவமைப்பதற்காக அமைக்கப்பட்ட உயர்நிலை பணிகளுக்கு சென் தலைமை பொறுப்பை வகித்தார்.  

2. தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கை   

  • கடந்த 2021 ஆம் ஆண்டு நாட்டில் நடைபெற்ற குற்றங்கள், தற்கொலைகள், விபத்துக்கள் உள்ளடவை தொடர்பான விவரங்களை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டது.  
  • அந்த காப்பக அறிவிக்கையின் படி கொலை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் உத்தர பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. 
  • தற்கொலை சம்பவங்கள் மற்றும் விபத்துகளில் பலியானோர் எண்ணிக்கையில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது.  
  • கடந்த ஆண்டு நாட்டில் நடைபெற்ற மொத்த குற்ற சம்பவங்கள் 
மாநிலங்கள் கொலைகளின் எண்ணிக்கை 
உத்தரபிரதேசம் 3717 
பீகார் 2799 
மகாராஷ்டிரம் 2330 
மத்திய பிரதேசம் 2034 
மேற்கு வங்கம் 1884 
  • 2021ல் தமிழ்நாட்டில் 1686 கொலைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. 
  • குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்  
மாநிலங்கள் குற்றங்களின் எண்ணிக்கை 
மத்திய பிரதேசம் 19,173 
மகாராஷ்டிரம் 17,261 
உத்தர பிரதேசம் 16,838 
மேற்குவங்கம் 9,523 
ஓடிஸா 7,899 
  • பெண்களுக்கு எதிரான குற்றங்கள்  
மாநிலங்கள் கொலைகளின் எண்ணிக்கை 
உத்தரபிரதேசம் 56,083 
ராஜஸ்தான் 40,738 
மகாராஷ்டிரம் 39,526 
மேற்கு வங்கம் 35,884 
ஓடிஸா 31,352 
  • 2021 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிராக 8,501 குற்றங்கள் நடைபெற்றுள்ளன.  
  • பாலியல் வன்கொடுமை  
மாநிலங்கள் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை/கூட்டு பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் 
உத்தரபிரதேசம் 48 
அசாம் 47 
மத்திய பிரதேசம் 38 
மகாராஷ்டிரம் 23 
ஜார்க்கண்ட் 22 
  • இந்த எண்ணிக்கை தமிழ்நாட்டில் ஐந்தாக உள்ளது.  
  • தற்கொலை சம்பவங்கள்  
மாநிலங்கள் தற்கொலைகளின் எண்ணிக்கை 
மகாராஷ்டிரம் 22,207 
தமிழ்நாடு 18,925 
மத்திய பிரதேசம் 14,965 
மேற்குவங்கம் 13,500 
கர்நாடகா 13,056 
  • விபத்துக்கள்  
மாநிலங்கள் விபத்துகளில் பலியானோர் எண்ணிக்கை 
உத்தரபிரதேசம் 24,711 
தமிழ்நாடு 16,685 
மகாராஷ்டிரம் 16,446 
மத்திய பிரதேசம் 13,755 
ராஜஸ்தான் 10,698 
  • கள்ள நோட்டு வழக்குகள்  
மாநிலங்கள் கள்ள நோட்டு வழக்குகள் எண்ணிக்கை 
மேற்குவங்கம் 82 
அஸ்ஸாம் 75 
தமிழ்நாடு 62 
மகாராஷ்டிரம் 55 
ராஜஸ்தான் 54 
  • முதியவர்களுக்கு எதிரான குற்றங்கள்  
  • 2021 ஆம் ஆண்டு நாட்டில் முதியவர்களுக்கு எதிராக 26,110 குற்றங்கள் நடைபெற்றுள்ளன.  
  • இதில் குற்றங்களின் எண்ணிக்கை அடிப்படையில் மகாராஷ்டிரமும் 6190 குற்றங்களின் விகிதசார அடிப்படையில் டெல்லியும் 101.7% முதலிடத்தில் உள்ளன.  
  • தமிழ்நாட்டில் முதியவர்களுக்கு எதிராக 1841 குற்றங்கள் நடைபெற்றுள்ளன.  
  • பட்டியல் இனத்தவருக்கு எதிரான குற்றங்கள்  
  • கடந்த ஆண்டு நாட்டில் பட்டியல் இனத்தவருக்கு எதிராக 5900 குற்றங்கள் நடைபெற்றுள்ளன.  
  • இதில் அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 13,146 குற்றங்கள் நடைபெற்றுள்ளன.  
  • தமிழ்நாட்டில் 1377 குற்றங்கள் பதிவாகியுள்ளன.  
  • பழங்குடிகளுக்கு எதிராக குற்றங்கள்  
  • 2021 ஆம் ஆண்டு நாட்டில் பழங்குடிகளுக்கு எதிராக மொத்தம் 802 குற்றங்கள் பதிவாகியுள்ளன.  
  • அதிகபட்சமாக மத்திய பிரதேசத்தில் 2627 குற்றங்கள், ராஜஸ்தானில் 2121 குற்றங்கள், நடைபெற்றுள்ளன.  
  • தமிழ்நாட்டில் 39 குற்றங்கள் பதிவாகியுள்ளன. 

3. உலகின் மூன்றாவது பெரும் பணக்காரர்  

  • புளூம்பெர்க் பில்லியனர்ஸ் இண்டெக்ஸ் என்பது அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஒவ்வொரு வர்த்தக நாளின் முடிவிலும் புதுப்பித்து வெளியிடப்படுகின்ற உலகப் பெரும் பணக்காரர்களின் தரவரிசை குறியீடு ஆகும்.  
  • இந்த பட்டியலில் உலகின் மூன்றாவது பெரும் பணக்காரராக இந்தியாவின் கௌதம் அதானி இடம் பெற்றுள்ளார்.  
  • இவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தொழிலதிபரும், முதலீட்டாளருமான பெர்னார்ட் ஜீன் அர்னால்டை பின்னுக்கு தள்ளி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.  
  • ப்ளூம்பெர்க் பணக்காரர்கள் பட்டியலில் முதல் மூன்று இடத்துக்குள் வந்துள்ள முதல் ஆசியர் கௌதம் அதானி தான்.  
  • தமிழ்நாட்டிலும் தடம்  
  • தமிழ்நாட்டில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் 2500 ஏக்கர் நில பரப்பில் உலகின் மிகப்பெரிய சூரிய மின்சக்தி ஆலை அமைத்திருக்கிறார் இவர் என்பது கூடுதல் தகவல்.  
  • இந்தியாவின் பாக்கெட் எண்ணெய் சந்தையில் அதானியின் வில்மர் 20 சதவீத பங்களிப்பை வைத்திருக்கிறது. 

CA 31.08.2022(English Version)

State news 

1. International Health Data Conference, Chennai 

  • The International Health Data Analytics Conference was recently held in Chennai under the auspices of Sankara Nethralaya and the International Health Care Data Analytical Association. 
  • Sankara Nethralaya administrators said that doctors from various countries around the world participated in the conference named ‘Data Con – 2022’ directly and online. 

2. Inauguration ceremony of three educational programs of Tamil Nadu Government 

  • Delhi Chief Minister Arvind Kejriwal will be the special guest at the Innovator Women Program to be inaugurated by Tamil Nadu Chief Minister M.K.Stalin on 5th September. 
  • Kejriwal will inaugurate 26 ‘Takaisal Schools’ and 15 Model Schools Scheme of Tamil Nadu Government in this event. 
  • What are the plans? 
  • Government of Tamil Nadu Moovalur Ramamirtham Ammaiyar Memorial Higher Education Guarantee Scheme provides Rs 1000 per month as a higher education scholarship to all female students studying in government schools. 
  • Best Schools Like Delhi, Tamil Nadu Government is introducing 26 state-of-the-art Thakaisal Schools in Corporation and Municipal areas. 
  • These schools are being developed with a vision to provide a strong foundation and to meet the needs of learning. 
  • Tamil Nadu has already started 10 STEAM (Science, Technology, Engineering Arts, Medicine) model schools offering professional courses in October 2021. 
  • More schools of this type are being started in 15 places at a cost of Rs 125 crores. 

Central News 

1. Abhijit Sen passed away 

  • Eminent economist and former member of Planning Commission Abhijith passed away. 
  • Abhijit Sen served as a member of the Planning Commission from 2004 to 2014 when Manmohan Singh was Prime Minister. 
  • He was awarded Padma Bhushan in 2019 in recognition of his outstanding public service. 
  • In the NDA government in 2014, Sen headed the high-level task force set up to formulate a long-term grain policy. 

2. National Crime Records Bureau report 

  • The National Crime Archives has released the details related to crimes, suicides and accidents in the country in the year 2021. 
  • According to the archival report, Uttar Pradesh ranks first in murder and crimes against women. 
  • Tamil Nadu ranks second in the number of victims of suicide incidents and accidents. 
  • Total crime incidents in the country last year 
States Number of homicides 
Uttar Pradesh 3717 
Bihar 2799 
Maharashtra 2330 
Madhya Pradesh 2034 
West Bengal 1884 
  • In 2021, 1686 murders have taken place in Tamil Nadu. 
  • Offenses against children 
States Number of crimes 
Madhya Pradesh 19,173 
Maharashtra 17,261 
Uttar Pradesh 16,838 
West Bengal 9,523 
Odisha 7,899 
  • Crimes against women 
States Number of homicides 
Uttar Pradesh 56,083 
Rajasthan 40,738 
Maharashtra 39,526 
West Bengal 35,884 
Odisha 31,352 
  • In 2021, there were 8,501 crimes against women in Tamil Nadu. 
  • Sexual assault 
States Victims of sexual assault and murder/combined sexual assault  
Uttar Pradesh 48 
Assam 47 
Madhya Pradesh 38 
Maharashtra 23 
Jharkhand 22 
  • This number is five in Tamil Nadu. 
  • Incidents of suicide 
States Number of suicides 
Maharashtra 22,207 
Tamil Nadu 18,925 
Madhya Pradesh 14,965 
West Bengal 13,500 
Karnataka 13,056 
  • Accidents 
States Number of deaths in accidents 
Uttar Pradesh 24,711 
Tamil Nadu 16,685 
Maharashtra 16,446 
Madhya Pradesh 13,755 
Rajasthan 10,698 
  • Counterfeit note cases 
States Number of Counterfeit Note Cases 
West Bengal 82 
Assam 75 
Tamil Nadu 62 
Maharashtra 55 
Rajasthan 54 
  • Crimes against the elderly 
  • In 2021, there were 26,110 crimes against the elderly in the country. 
  • In terms of the number of crimes, Maharashtra is at the top and Delhi is at the top with a proportion of 6190 crimes at 101.7%. 
  • 1841 crimes have been committed against the elderly in Tamil Nadu. 
  • Offenses against Schedule Castes 
  • Last year 5900 crimes were committed against scheduled castes in the country. 
  • Out of this maximum 13,146 crimes have been committed in Uttar Pradesh. 
  • 1377 crimes were reported in Tamil Nadu. 
  • Offenses against tribals 
  • A total of 802 crimes against tribals were reported in the country in 2021. 
  • Maximum 2627 crimes in Madhya Pradesh, 2121 crimes in Rajasthan. 
  • 39 crimes were reported in Tamil Nadu 

3. The third richest man in the world 

  • The Bloomberg Billionaires Index is a ranking index of the world’s richest people, updated at the end of each trading day in New York City, USA. 
  • India’s Gautam Adani is ranked third richest in the world on this list. 
  • He is third behind French businessman and investor Bernard Jean Arnold
  • Gautam Adani is the first Asian to make it to the top three of the Bloomberg Rich List. 
  • Footprint in Tamil Nadu as well 
  • Additional information is that he has set up the world’s largest solar power plant on an area of ​​2500 acres of land at Kamudi in Ramanathapuram district in Tamil Nadu. 
  • Adani’s Wilmar has a 20 percent share in India’s pocket oil market.