TNPSC Current Affairs – Aug 29, 2022

0
43

CA 29.08.2022(Tamil Version)

மத்திய செய்திகள் 

1. மனதின் குரல்  

  • செப்டம்பர் மாதம் ஆனது ஊட்டச்சத்துக்கான மாதமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.  
  • நாட்டில் ஊட்டச்சத்து குறைபாட்டை ஒழிப்பது மிகவும் அவசியம்.  
  • தகவல் தொழில்நுட்பத்தின் சிறப்பான பயன்பாடும் மக்களின் பங்கேற்பும் போஷன் இந்தியா திட்டத்தின் முக்கிய பகுதியாக மாறி உள்ளன.  
  • வீடு தோறும் குழாய் மூலமாக குடிநீர் விநியோகிக்கும் ஜல்ஜீவன் திட்டமானது ஊட்டச்சத்து குறைபாட்டை போக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும். 
  • இந்தியாவின் கோரிக்கையை ஏற்று 2023 ஆம் ஆண்டு சர்வதேச சிறு தானியங்கள் ஆண்டு என ஐநா அறிவித்துள்ளது.  
  • உடல் நலனை பாதுகாப்பதில் சிறுதானியங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. 
  • கிராமங்களிலும் இணைய வசதி:  
  • அருணாச்சலப் பிரதேசத்தின் ஜோர்சிங் கிராமத்தில் சுதந்திர தினத்தில் இருந்து 4ஜி இணைய சேவை தொடங்கப்பட்டுள்ளது.  
  • முன்பெல்லாம் இணைய வசதியானது பெரு நகரங்களில் மட்டுமே காணப்பட்டது.  
  • தற்போது எண்ம இந்தியா திட்டத்தின் வாயிலாக நாட்டில் உள்ள பல்வேறு கிராமங்களும் இணைய வசதியை பெற்றுள்ளன.  
  • சுதந்திர தின கொண்டாட்டம்:  
  • மத்திய பிரதேசத்தின் இந்தூரில் இந்திய வரைபட வடிவில் மனித சங்கிலியை ஏற்படுத்திக் கொண்டாடியுள்ளனர்.  
  • நூற்றுக்கணக்கான மக்கள் தேசியக் கொடியை பிரதிபலிக்கும் வகையில் ஒன்று திரண்டு சுதந்திரதினத்தை கொண்டாடியுள்ளனர். 
  • இவை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளன.  
  • வெளிநாடு வாழ் இந்தியர்களும் சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாடினர்.  
  • போட்ஸ்வாலா நாட்டில் உள்ள உள்ளூர் பாடகர்கள் இந்திய சுதந்திரத்தின் 75வது சுதந்திர ஆண்டை ஒட்டி 75 நாட்டுப்பற்று மிக்க பாடல்களை பாடினர்.  

2. ஸ்மிருதி வனம் நினைவிடம்  திறப்பு  

  • குஜராத்தின் கட்ச் பகுதியில் கடந்த 2001 இல் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 13,000 பேர் உயிரிழந்தனர்.  
  • பெரிய அளவில் பொருள் சேதங்கள் ஏற்பட்டன.  
  • இந்த பேரழிவிலிருந்து மீண்டு வந்த மக்களின் மனவலிமைக்கு பெருமை சேர்க்கும் வகையில் புஜ் அருகே உள்ள புஜியோ மலைப்பகுதியில் ஸ்மிருதி வனம் என்ற பெயரில் 470 ஏக்கரில் பிரம்மாண்ட நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.  
  • இதில் நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் பெயர்களும் நிலநடுக்கத்துக்கு பிறகு கட்ச்ப் பகுதியை கட்டி எழுப்பிய வெற்றிக் கதைகளும் இடம் பெற்றுள்ளன.  

3. யுனெஸ்கோ பாரம்பரிய நிகழ்வுகள்: குஜராத் கர்பா  நடனம் பரிந்துரை  

  • கொல்கத்தாவில் பாரம்பரியமாக நடத்தப்பட்டு வரும் துர்கா பூஜைக்கு கடந்த ஆண்டில் யுனெஸ்கோவின் கலாச்சார பாரம்பரிய நினைவு நிகழ்வுகள் என்று அங்கீகாரம் கிடைத்தது.  
  • இதன் ஓராண்டு நிறைவு பெறுவது ஒட்டி தில்லி தேசிய அருங்காட்சியகத்தில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.  
  • இதில் யுனெஸ்கோ கலாச்சார பாரம்பரிய குழு செயலர் டிம் குர்டிஸ் பங்கேற்று பேசுகையில் யுனெஸ்கோவின் கலாச்சார பாரம்பரிய பட்டியலுக்கு குஜராத்தின் கர்பா நடனம் பரிந்துரை செய்யப்படுகிறது.  
  • ஏற்கனவே இந்தியாவின் சார்பில் ராம்லீலா, வேத மந்திரங்கள், கும்பமேளா, கொல்கத்தாவில் துர்கா பூஜை உள்ளிட்ட 14 நிகழ்வுகள் யுனெஸ்கோவின் பாரம்பரிய பட்டியலில் இணைக்கப்பட்டு அங்கீகாரம் பெற்றுள்ளன.  
  • கொல்கத்தாவில் துர்கா பூஜைக்கு பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற யுனெஸ்கோ தேர்வு குழுவின் 16 ஆவது கூட்டத்தில் அங்கீகாரம் கிடைத்தது நினைவு கூறத்தக்கது.  

4. இந்திய அமெரிக்க சிறப்பு படைகள் கூட்டு பயிற்சி நிறைவு  

  • இமாச்சலப் பிரதேசத்தில் மூன்று வாரங்களாக நடைபெற்று வந்த இந்திய – அமெரிக்க சிறப்பு படைகளின் கூட்டுப் பயிற்சி நிறைவடைந்தது.  
  • இந்தியா – அமெரிக்கா சிறப்பு படைகள் இணைந்து ஆண்டுதோறும் வஜ்ர பிரஹார்  என்ற பெயரில் கூட்டு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.  
  • இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள பக்லோ பகுதியில் 13 வது ‘வஜ்ர பிரஹார்’ பயிற்சி தொடங்கியது.  

5. ஹிந்தியில் மருத்துவ படிப்பு  

  • தற்போது ஆங்கிலத்தில் மட்டுமே மருத்துவக் கல்வி கற்பிக்கப்பட்டு வரும் நிலையில் நாட்டிலேயே முதல் முறையாக ஹிந்தியில் எம்பிபிஎஸ் கற்பிக்கும் முயற்சி மத்திய பிரதேசம் மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ளதாக மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வாஸ் சாரங் தெரிவித்துள்ளார். 

விளையாட்டு செய்திகள் 

1. ஒலிம்பிக் அருங்காட்சியகம்  

  • இந்திய ஈட்டியெறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்று தந்த தனது ஈட்டியை ஒலிம்பிக் அருங்காட்சியத்திற்கு பரிசளித்தார்.  
  • அந்த அருங்காட்சியத்தில் இடம் பிடிக்கும் இரண்டாவது இந்திய வீரரின் விளையாட்டு உபகரணம் இதுவாகும்.  
  • முதலில், 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற இந்தியாவின் அபினவ் பிந்த்ரா தனது துப்பாக்கியை இவ்வாறு அருங்காட்சியகத்துக்கு வழங்கி இருக்கிறார்.  
  • கடந்த 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ரா 87.58 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கப்பதக்கம் வென்றார்.  
  • இதன் மூலம் ஒலிம்பிக் தடகளத்தில் இந்தியாவுக்கு முதல் தங்கம் வென்று தந்தவர்; ஒலிம்பிக்கில் தனிநபர் தங்கம் வென்ற இரண்டாவது இந்தியர் (முதலில் அபினவ் பிந்த்ரா) ஆகிய சாதனைகளை படைத்தார்.  
  • இந்நிலையில் டையமண்ட் லீக் போட்டியில் பங்கேற்பதற்காக சுவிட்சர்லாந்தின் லௌசேன் நகருக்கு சென்றிருக்கும் நீரஜ், அங்குள்ள சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் அருங்காட்சியகத்துக்கு தங்கம் வென்று தந்த தனது ஈட்டியை பரிசாக வழங்கினார்.  
  • அந்த நிகழ்ச்சியின் போது இந்திய முன்னாள் துப்பாக்கி சுடுதல் வீரரும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தடகள குழுவின் உறுப்பினருமான அபிநய் பிந்த்ராவும் உடன் இருந்தார்.  
  • ஒலிம்பிக்கின் 120 ஆண்டு கால வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த 90 ஆயிரம் பொருள்கள், 6.50 லட்சம் புகைப்படங்கள், 45 ஆயிரம் நிமிஷம் ஓடக்கூடிய காணொளிகள் உள்ளிட்டவை ஒலிம்பிக் அருங்காட்சியகத்தில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. 

CA 29.08.2022(English Version)

Central News 

1. The voice of the mind 

  • September is observed as Nutrition Month. 
  • Eradication of malnutrition in the country is essential. 
  • Effective use of information technology and people’s participation has become an important part of the ‘Botion India’ programme. 
  • The Jaljeevan scheme, which distributes drinking water through pipes to every household, will play an important role in alleviating malnutrition. 
  • UN declared 2023 as International Year of Small Grains in response to India’s request. 
  • Small grains play an important role in maintaining health. 
  • Internet facility in villages also: 
  • 4G internet service started in Jhorsingh village of Arunachal Pradesh from Independence Day. 
  • Earlier internet facility was found only in big cities. 
  • Currently, various villages in the country have got internet facility through Namma India project. 
  • Independence Day Celebration: 
  • In Madhya Pradesh’s Indore, they celebrated by forming a human chain in the shape of Indian map. 
  • Hundreds of people have gathered to celebrate the Independence Day by reflecting the national flag. 
  • These are listed in the Guinness Book of Records. 
  • Non-resident Indians also celebrated Independence Day in a grand manner. 
  • Local singers in Botswana sang 75 patriotic songs to mark the 75th year of India’s independence. 

2. Inauguration of Smriti Vanam Memorial 

  • About 13,000 people died in the 2001 earthquake in Kutch, Gujarat. 
  • There was massive material damage. 
  • In honor of the resilience of the people who recovered from this calamity, a grand memorial has been set up in 470 acres in the name of Smriti Vanam in the Fujio Hills near Bhuj. 
  • It contains the names of those who died in the earthquake and the success stories of rebuilding the Kutch region after the earthquake. 

3. UNESCO Heritage Events: Gujarat Garba Dance Nomination 

  • The traditional Durga Puja in Kolkata was recognized as a UNESCO World Heritage Site last year. 
  • A program was organized at the National Museum, Delhi to mark its one year anniversary. 
  • In which UNESCO Cultural Heritage Committee Secretary Tim Kurtis participated and spoke, Gujarat’s garba dance is recommended for UNESCO’s cultural heritage list. 
  • Already on behalf of India, 14 events including Ramlila, Vedic chants, Kumbh Mela, Durga Puja in Kolkata have been included in UNESCO’s heritage list and have been recognized. 
  • It may be recalled that Durga Puja in Kolkata was approved in the 16th meeting of UNESCO selection committee held in Paris, France

4. Completion of Indo-US Special Forces joint exercise 

  • The three-week joint exercise of Indian-US special forces in Himachal Pradesh has concluded. 
  • India-US special forces have been participating in joint exercise called ‘Vajra Prahar’ every year. 
  • In this case, the 13th ‘Vajra Prahar’ exercise started on 8th August in Paklo area of ​​Himachal Pradesh. 

5. Medical course in Hindi 

  • State Higher Education Minister Vishwas Charang has said that the attempt to teach MBBS in Hindi for the first time in the country has been started in the state of Madhya Pradesh while medical education is taught only in English. 

Sports news 

1. Olympic Museum 

  • Indian javelin thrower Neeraj Chopra donates his gold-winning javelin at the Tokyo Olympics to the Olympic Museum. 
  • This is the second Indian cricketer’s sporting equipment to feature in the museum. 
  • First, India’s Abhinav Bindra, who won gold in shooting at the 2008 Beijing Olympics, has donated his gun to the museum. 
  • In the last 2020 Tokyo Olympics, Neeraj Chopra won the gold medal by throwing the javelin with a distance of 87.58 meters. 
  • Through this he won India’s first gold in Olympic athletics; He became the second Indian (first Abhinav Bindra) to win an individual gold at the Olympics. 
  • Meanwhile, Neeraj, who had gone to Lausanne, Switzerland to participate in the Diamond League, presented his gold-winning javelin to the museum of the International Olympic Committee there. 
  • Abhinay Bindra, former Indian shooter and member of the International Olympic Committee athletics team, was also present during the event. 
  • 90,000 objects, 6.50 lakh photographs, 45,000 minutes of videos are maintained in the Olympic Museum.