Home GOVERNMENT EXAMS TNPSC Current Affairs – May 15, 2022

TNPSC Current Affairs – May 15, 2022

0
35

C.A.15.05.2022 (Tamil Version)

 1. சென்னை நுங்கம்பாக்கத்தில் சர்வதேச டென்னிஸ் போட்டி நடைபெற அனுமதி கிடைத்துள்ளதாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பட்டு துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அறிவித்துள்ளார்
 1. சென்னை மாநகராட்சி பள்ளியில் 100 ஆண்டுகளுக்கு முன்னரே காலை உணவு திட்டம் நடைமுறைக்கு வந்தது. சென்னை மாகாண சட்ட மேலவை உறுப்பினராக இருந்த எல்.சி.குருசாமி பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு உணவு அளிப்பதன் அவசியத்தை வலியுறுத்தினார். இதையடுத்து சென்னை மாநகராட்சி பள்ளிகளில் அப்போதைய மேயராக இருந்த சர்.பிட்டி.தியாகராயர் செயல்படுத்தி இருந்தார். இதனை பாராட்டி சர்.பிட்டி.தியாகராயருக்கு அமைக்கப்பட்ட நினைவு கல்வெட்டை முதல்வர் ஸ்டாலின் நேற்று (14.5.2022) திறந்து வைத்தார்.
 1. திரிபுரா முதல்வர் விப்லாப்குமார் தேவ் தனது பதவியை நேற்று (14.5.2022) ராஜினாமா செய்ததை அடுத்து புதிய முதல்வராக மாணிக் சாகா இன்று (15.5.2022) பதவியேற்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 1. உத்திரபிரதேசம் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் உச்சநீதிமன்ற உத்தரவின்படி அளவிடுவதற்கு வீடியோ எடுக்கும் பணி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அமைதியான முறையில் நடைபெற்றது. மேலும் பணிகள் இன்றும் (15.5.2022) தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 1. இந்திய முழுவதும் விசாரணை காவல், நீதிமன்ற காவல் மரணங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த 4 ஆண்டுகளில் இது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் இந்திய அளவில் உத்திர பிரதேசமும், தென்னிந்திய அளவில் தமிழகமும் ம்ட்டுகளிடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
 1. மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு விஸ்வநாதன் ஆனந்த்-போரிஸ் கெல்ஃப் பாண்ட் தலைமையில் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணியினர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்
 1. ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய அதிபராக ஷேக் முகமது பின் சையது அல் நாஹ்யான் நேற்று (14.5.2022) தேர்வு செய்யப்பட்டார்.
 1. சென்னை பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை உலக அளவில் பிரபலமான ரயில் பெட்டி தொழிற்சாலை. இங்கு நடப்பு ஆண்டில் (2022-23) 4,275 ரயில் பெட்டிகள் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021-22-ம் ஆண்டில் 3,101 ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டது குறிப்பிட தக்கது.

C.A.15.05.2022 (English Version)

 

 1. Minister of Youth Welfare and Sports Development Siva Meyyanathan has announced that permission has been granted to hold an international tennis tournament in Nungambakkam, Chennai.
 1. The breakfast program was implemented 100 years ago at the Chennai Corporation School. LC Kurusami, who was a member of the Chennai Provincial Legislative Council, stressed the need to provide food to school-going children. Following this, Sir Pitti Thiagarayar, who was the then mayor of Chennai Corporation schools, was in charge. Chief Minister Stalin yesterday (14.5.2022) unveiled a memorial inscription to Sir Pitti Thiagarayar in appreciation of this.
 1. Manik Saga is expected to take over as the new Chief Minister today (15.5.2022) following the resignation of Tripura Chief Minister Viplob Kumar Dev yesterday (14.5.2022).
 1. The videotaping operation for the measurement was carried out peacefully at the Gnanavapi Mosque in Varanasi, Uttar Pradesh, with heavy police security. It has been informed that further works will continue today (15.5.2022).
 1. Investigative police and court custody deaths are on the rise across India. It has been reported that Uttar Pradesh at the Indian level and Tamil Nadu at the South Indian level are among the cases registered in this regard in the last 4 years.
 1. The Indian men’s and women’s teams, led by Viswanathan Anand-Boris Golf Bond, are in intensive training ahead of the Chess Olympiad in Mamallapuram.
 1. Sheikh Mohammed bin Zayed Al Nahyan was elected the new President of the United Arab Emirates yesterday (14.5.2022).
 1. Chennai Perambur Railway Box Factory is a world renowned railway box factory. It has set a target of producing 4,275 coaches in the current year (2022-23). In the year 2021-22, 3,101 train sets were produced and a record was set.

Click here to download PDF material: CA 15.05.2022