C.A.12.05.2022 (Tamil Version)
- தேச துரோக சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிய இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
* ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட தேச துரோக சட்டப்பிரிவை மாரு ஆய்வு செய்ய உள்ளதாக மத்திய அரசு தெரிவித்ததையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
* முன்னதாக தேச துரோக வழக்கு செல்லுபடியாகும் என கேதார்நாத் சிங் வழக்கில் 5 நீதிபதிகள் கொண்ட சாசன அமர்வு 1962-ம் ஆண்டு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை மாரு சீராய்வு செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
* 124ஏ சட்டப்பிரிவு மாரு ஆய்வு செய்யப்படும் வரை தேச துரோக சட்டப்பிரிவின் கீழ் புதிதாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவும், விசாரணையை தொடரவும், கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவும் மத்திய அரசுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது
* இந்த சட்டப்பிரிவின் கீழ் நிலுவையில் உள்ள விசாரணைகள், மேல்முறையீடு மற்றும் வழக்குகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது
- ஒவ்வொரு ஆண்டும் தேசிய அளவில் சிறப்பாக செயல்படும் ஊராட்சிகளுக்கு மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் விருதுகள் வழங்கப்படுகிறது. அவற்றில்,
* மூன்றடுக்கு ஊராட்சிகளை வலிமைப்படுத்தும் விருது திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது
* ஊராட்சி ஒன்றிய விருது திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியம் மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது
* கிராம ஊராட்சி விருது திண்டுக்கல் மாவட்டம் அக்கரைப்பட்டி, கரூர் மாவட்டம் மண்மங்களம், மதுரை மாவட்டம் சின்னப்பட்டி,கன்னியாகுமாரி மாவட்டம் அத்திக்காட்டுவிளை, கிருஷ்ணகிரி மாவட்டம் கங்கலேரி, புதுக்கோட்டை மாவட்டம் காட்டாத்தி ஆகிய ஊராட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது
* சிறந்த கிராம சபைக்கான விருது ராமநாதபுரம் மாவட்டம் சாத்தனுர் கிராம ஊராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது
* கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டத்துக்கான விருது சிவகங்கை மாவட்டம் துவார் கிராம ஊராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது
* குழந்தைகள் நேய கிராம ஊராட்சிக்கான விருது நீலகிரி மாவட்ட குஞ்சப்பனை கிராம ஊராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது
- இந்தியாவில் 2000 குழந்தைகளுக்கு விழித்திரை புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த புற்றுநோய் “ரெட்டினோபிளாஸ்டொமோ”என்று அழைக்கப்படுகிறது.
- ஆவடி அருகே கோயில்பதாகையில் 25 ஏக்கர் பரப்பளவில் பசு மேடம் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்
- 2022-24-ம் ஆண்டுக்கான ஆசிய தேர்தல் ஆணையங்கள் சங்கங்களின் தலைமையாக இந்திய தேர்தல் ஆணையம் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளது
- டெல்லியில் நேற்று (11.5.2022) “மோடி 20: ட்ரீம்ஸ் மீட்டிங் டெலிவரி”என்ற புத்தக வெளியீட்டு விழா நடந்தது. இந்த புத்தகம் பிரதமர் மோடியின் தனித்துவம் மிக்க சிந்தனை, தலைமைத்துவம் உள்ளிட்ட பல்வேறு பண்புகளை விவரிக்கிறது.
- பிக்ஹாட் நிறுவனம், தமிழக விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு தமிழ் வழியிலான செயலியை அறிமுகம் செய்துள்ளது.
- 13 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய ஹாக்கி அணியில் தமிழக வீரர்கள் கோவில்பட்டி மாரீஸ்வரன், மற்றும் அரியலூர் கார்த்திக் ஆகிய இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
C.A.12.05.2022 (English Version)
- The Supreme Court has ordered an interim injunction to file cases under the Treason Act.
* The order was issued after the Central Government said that Maru was to study the treason law introduced during the British rule.
* The five-judge Constitutional Court in 1962 ruled that the earlier treason case was valid in the case of Kedarnath Singh. A case has been filed in the Supreme Court seeking revision of the judgment.
* Section 124A prohibits the Central Government from registering a new First Information Report, continuing an investigation and taking drastic action under the Sedition Act until Maru is examined.
* All pending hearings, appeals and cases under this Act are suspended
- Each year, the Central Rural Development and Panchayat Department presents awards to the best performing panchayats nationally. Among them,
* Award for strengthening three tier panchayats has been given to Thiruvannamalai district panchayat
* Panchayat Union Award has been given to Mannachanallur Panchayat Union of Trichy District and Ramanathapuram District Mandapam Panchayat Union
* Grama Panchayat Award has been given to Dindigul District Akkaraipatti, Karur District Manmangalam, Madurai District Chinnappatti, Kanyakumari District Athikkattuvilai, Krishnagiri District Gangaleri, Pudukottai District Kattathi Panchayats
* Award for Best Grama Niladhari has been given to Sathanur Grama Panchayat, Ramanathapuram District
* Award for Rural Panchayat Development Project has been given to Dwar Grama Panchayat, Sivagangai District
* Award for Children’s Grama Panchayat has been given to Kunchappanai Grama Panchayat, Nilgiris District
- 2000 children in India have been diagnosed with retinal cancer. This cancer is called a “retinoblastoma”.
- Minister Sekar Babu has said that Madam Basu Madam has been set up on an area of 25 acres at the temple near Avadi
- The Election Commission of India has unanimously elected the Chairman of the Asian Electoral Commission Associations for the year 2022-24
- The book launch of “Modi 20: Dreams Meeting Delivery” took place in Delhi yesterday (11.5.2022). This book describes various characteristics of Prime Minister Modi, including his unique thinking and leadership.
- Bighat has introduced a Tamil based processor for the benefit of Tamil Nadu farmers.
- Kovilpatti Mariswaran and Ariyalur Karthik have been selected in the Indian hockey team after 13 years.