Home TNPSC TNPSC Current Affairs – Sep 04, 2022

TNPSC Current Affairs – Sep 04, 2022

0

CA 04.09.2022(Tamil Version)

மாநில செய்திகள் 

1.ஒரு வார்த்தை  

  • ட்விட்டரில் பரபரப்பாக நடைபெற்ற ஒரு வார்த்தை சவாலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட தமிழக அரசியல் கட்சி தலைவர்களும் பங்கேற்றனர்.  
  • அமெரிக்காவைச் சேர்ந்த ரயில் நிறுவனம் முதலில், ரயில் என்கிற ஒரு வார்த்தையை twitter-ல் பதிவிட்டு அனைவரையும் சவாலுக்கு அழைத்தது.  
  • அமெரிக்க அதிபர் ஜோபைடனும் ஜனநாயகம் என்கிற வார்த்தையை பதிவு செய்தார்.  
  • கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் என்கிற வார்த்தையை பதிவு செய்தார்.  
  • இந்தச் சவாலில் தமிழக முதல்வர் மு..ஸ்டாலின் திராவிடம் என்கிற வார்த்தையை பதிவு செய்தார்.  

2. உண்டு உறைவிட பள்ளி திட்டம்  

  • அரசு பள்ளி மாணவ மாணவியருக்கு உயர்கல்வி குறித்த வழிகாட்டுதலை வழங்கும் வகையில் உண்டு உறைவிட பள்ளி எனும் புதிய திட்டம் நாட்டிலேயே முதன்முறையாக தமிழகத்தில் 14 மாவட்டங்களில் தொடங்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.  
  • மாநில அளவில் கடந்த 2021 – 22 ஆம் ஆண்டு சோதனை அடிப்படையில் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய பிரிவினர் அதிகம் வாழும்  
  • விழுப்புரம்  
  • கடலூர்  
  • அரியலூர்  
  • பெரம்பலூர்  
  • திருச்சி  
  • சேலம்  
  • கிருஷ்ணகிரி  
  • தர்மபுரி  
  • திருவண்ணாமலை  
  • கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.  

மத்திய செய்திகள் 

1. உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடு இந்தியா  

  • பிரிட்டனை பின்னுக்கு தள்ளி உலகின் ஐந்தாவது மிகப் பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.  
  • சர்வதேச நிதியத்தின் (ஐஎம்எஃப்) தரவுகளின் அடிப்படையில் ப்ளூம்பெர்க் ஊடக நிறுவனம் இதனை கூறியுள்ளது.  
  • கடந்த மார்ச் மாதம் வரையிலான கணக்கீட்டின்படி இந்தியாவின் பொருளாதார மதிப்பு 85,470 கோடி அமெரிக்க டாலராக இருந்தது.  
  • அதே காலகட்டத்தில் பிரிட்டனின் பொருளாதார மதிப்பு 81,600 கோடி அமெரிக்க டாலராக இருந்தது.  
  • நடப்பு 2022 – 23 நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதலாவது காலாண்டில் இந்திய பொருளாதாரம் 13.5% வளர்ச்சி கண்டிருந்தது.  
  • முதல் 10 நாடுகள்  
  • அமெரிக்கா 
  • சீனா  
  • ஜப்பான்  
  • ஜெர்மனி  
  • இந்தியா  
  • பிரிட்டன்  
  • பிரான்ஸ்  
  • இத்தாலி  
  • பிரேசில்  
  • கனடா  

2. ஏற்றுமதியில் 9.25 சதவீதம் தமிழகத்தின் பங்களிப்பு  

  • இந்தியாவின் ஒட்டு மொத்த ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்களிப்பு 9.25 சதவீதம் என்றார் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர்  தா.மோ.அன்பரசன்.  
  • கரூரில் நடைபெற்ற இந்திய தொழில் கூட்டமைப்பின் 13 ஆவது குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் மாநாட்டை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், வி.செந்தில் பாலாஜி தொடக்கி வைத்தனர்.  
  • தமிழகம் இந்திய அளவில் தொழில் வளர்ச்சியில் மூன்றாவது இடத்தில் உள்ளது.  
  • தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் மூலம் வழங்கப்பட்ட ரூபாய் 2,113 கோடி கடனுதவியில் 86 சதவீத கடனுதவியை குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளார்.  
  • தொழில் முனைவோர்கள் வங்கி கடன் பெறுவதில் உள்ள சிரமங்களை குறைக்க இந்தியாவில் முதல் முறையாக ரூபாய் 100 கோடியில் தமிழ்நாடு கடன் உத்தரவாத திட்டத்தை தமிழக முதல்வர் அண்மையில் தொடங்கி வைத்தார்.  
  • குறு, சிறு, நடுத்தர தொழில் துறையின் மூலம் நீட்ஸ், இளையோர் சுய வேலைவாய்ப்பு திட்டம் பிஎம்இஜிபி ஆகிய மூன்று வகையான சுய வேலை வாய்ப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.  

3. இரவு வான் சரணாலயம்  

  • இந்தியாவின் முதலாவது இரவு வான் சரணாலயம் லடாக்கின் ஹான்லேயில் மூன்று மாதங்களுக்குள் அமைக்கப்படும் என்றும், இது இந்தியாவில் வானியல் சுற்றுலாவை மேம்படுத்தும் என்றும் மத்திய அறிவியல் தொழில்நுட்ப இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.  
  • லடாக்கில் அமையும் இரவு வான் சரணாலயம், சாங்தான் வனவிலங்கு சரணாலயத்தின் ஒரு பகுதியாக லடாக்கில் உள்ள ஹான்லேயில் அமைக்கப்படும்.  
  • இது இந்தியாவில் வானியல் சுற்றுலாவை அதிகரிக்கும்.  
  • மேலும் இது ஆப்டிகல், இன்ஃப்ராரெட் மற்றும் காமாரே தொலைநோக்கிகளுக்கான உலகின் மிக உயர்ந்த தளங்களில் ஒன்றாக இருக்கும்.  

4. ஏஐஎஃப்எஃப் பொதுச்செயலாளர்  

  • அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் பொதுச்செயலாளராக ஷாஜி பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.  
  • புதிய தலைவராக முன்னாள் இந்திய வீரர் கல்யாண் சௌபே தேர்வு செய்யப்பட்டார்.  
  • புதிய நிர்வாகக் குழுவும் தேர்வு செய்யப்பட்டது.  
  • இந்நிலையில் புதிய பொதுச் செயலாளராக ஷாஜி பிரபாகரன் நியமிக்கப்பட்டார்.  
  • துணை பொதுச்செயலாளராக சுனந்தோ தர் நியமிக்கப்பட்டார்.  
  • ஏஐஎஃப்எஃப் வரலாற்றில் முதன்முதலாக வீரர் ஒருவர் தலைவராகி உள்ளார்.  
  • மேலும் 6 முன்னால் வீரர்களும் கால் பந்து கூட்டமைப்பு நிர்வாகத்தில் பங்கேற்றுள்ளனர்.  
  • ஐஎம் விஜயன், சபீர் அலி ஆகியோரும் இதில் அடங்குவர் 

விளையாட்டு செய்திகள் 

1. ஓய்வு பெற்றார் செரீனா வில்லியம்ஸ்  

  • மகளிர் ஒற்றையர் பிரிவில் முடிசூடா ராணியாக திகழ்ந்த அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் மொத்தம் 23 கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டங்களை கைப்பற்றியுள்ளார்.  
  • உலகின் நண்பர் ஒன் வீராங்கனையாக நீண்ட காலம் இருந்த பெருமையும் அவர் வசம் உள்ளது.  

CA 04.09.2022(English Version)

State news 

1. ‘One Word 

  • Tamil Nadu political party leaders including Chief Minister M. K. Stalin participated in a one-word challenge which was held sensationally on Twitter. 
  • A train company from America first posted a word train on twitter and invited everyone to the challenge. 
  • US President Joe Biden also registered the word democracy
  • Cricketer Sachin Tendulkar registered the word cricket
  • Tamil Nadu Chief Minister M. K. Stalin registered the word Dravidian in this challenge. 

2. Undu Uraivida School Scheme 

  • Officials said that for the first time in the country, a new program called Undu Uraivida Palli is being started in 14 districts of Tamil Nadu to provide guidance to the students of government schools regarding higher education. 
  • According to the last 2021-22 test at the state level, the most economically backward sections will live. 
  • Villupuram 
  • Cuddalore 
  • Ariyalur 
  • Perambalur 
  • Trichy 
  • Salem 
  • Krishnagiri 
  • Dharmapuri 
  • Tiruvannamalai 
  • The scheme has been implemented in Kallakurichi districts. 

Central News 

1. India is the fifth largest economy in the world 

  • India has emerged as the world’s fifth largest economy, overtaking Britain. 
  • Based on the data of the International Fund (IMF) ‘Bloomberg’ media company has said this. 
  • India’s economic value was US$ 85,470 crore as of last March. 
  • During the same period, the economic value of Britain was 81,600 crore US dollars. 
  • In the first quarter of the current financial year 2022-23 from April to June, the Indian economy grew by 13.5%. 
  • Top 10 countries 
  • America 
  • China 
  • Japan 
  • Germany 
  • India 
  • Britain 
  • France 
  • Italy 
  • Brazil 
  • Canada 

2. 9.25 percent contribution of Tamil Nadu in exports 

  • Tamil Nadu’s contribution to India’s total exports is 9.25 percent, said Minister of Micro, Small and Medium Enterprises Department T.M.Anparasan. 
  • Ministers T.M.Anparasan and V.Senthil Balaji inaugurated the 13th Micro, Small and Medium Enterprises Conference of Federation of Indian Industries held at Karur. 
  • Tamil Nadu ranks third in industrial development in India. 
  • Of the Rs 2,113 crore loan disbursed by the Tamil Nadu Industry Investment Corporation, 86 percent of the loan disbursement has been given to MSMEs. 
  • The Chief Minister of Tamil Nadu recently launched the Tamil Nadu Loan Guarantee Scheme of Rs.100 crore. 
  • There are three types of self-employment schemes being implemented by the Micro, Small and Medium Enterprises Department namely, NEETS, Youth Self-Employment Scheme (BMEGP). 

3. Sanctuary of the Night Air 

  • Union Minister of State for Science and Technology Jitendra Singh said that India’s first night air sanctuary will be set up at Honle in Ladakh within three months, which will boost astrotourism in India. 
  • Night Sky Sanctuary to be set up in Ladakh will be set up at Hanle in Ladakh as part of Changdan Wildlife Sanctuary. 
  • It will boost astrotourism in India. 
  •  It will also be one of the world’s most advanced platforms for optical, infrared and gamma-ray telescopes. 

4. AIFF Secretary General 

  • Shaji Prabhakaran has been appointed as the General Secretary of All India Football Federation. 
  • Former Indian player Kalyan Chaubey was chosen as the new president. 
  • A new management team was also elected. 
  • In this case, Shaji Prabhakaran was appointed as the new General Secretary. 
  • Sunantho Dhar was appointed as Deputy General Secretary. 
  • For the first time in the history of AIFF, a player has become the president. 
  • Also 6 forwards have participated in the management of the Football Federation. 
  • IM Vijayan and Sabir Ali are also included in this 

Sports news 

1. Serena Williams retired 

  • USA’s Serena Williams, the crowned queen of women’s singles, has won a total of 23 Grand Slam titles. 
  • She also has the honor of being the world’s Friend One player for the longest time. 

Exit mobile version