TNPSC Current Affairs – Oct 16, 2022

0
30

CA 16.10.2022(Tamil Version)

மாநில செய்திகள்

1. நடக்கலாம் வாங்க கோரிக்கை மனுக்களை தாங்க

 • சென்னை மாநகராட்சி சார்பில் நடந்து சென்று பொதுமக்களிடம் குறைகள் கேட்கும் நடக்கலாம் வாங்க கோரிக்கை மனுக்களை தாங்க என்ற திட்டத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடக்கி வைத்தார்.
 • அனைத்துவித சாலைகளிலும் பொதுமக்களுடனே நடந்து சென்று அவர்களிடம் குறைகளை கேட்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்வதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
 • மேலும் தினமும் நடை பயிற்சி மேற்கொண்டு உடல் நலத்தின் அவசியத்தையும் மக்களிடம் உணர்த்தப்படும்.
 • இதுகுறித்து அந்தந்த பகுதியின் பொதுமக்களுக்கு முன்பாகவே தகவல் தெரிவிக்கப்படும்.
 • முதியோர் உதவித்தொகை போன்ற கோரிக்கைகளும் இந்த நேரடி குறைத்தீர் திட்டத்தில் நிறைவேற்றப்படும்.
 • அதிகாரிகளும் உடன் வருவதால் மனுக்களை ஆய்வு செய்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

2. உலக உணவு நாள்

 • தமிழகத்தில் கடந்த ஓராண்டில் 13.49 லட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்தார்.
 • ஐக்கிய நாடுகள் சபை சார்பாக 1979 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் அக்டோபர் 16ஆம் தேதி உலக உணவு நாள் கடைபிடிக்கப்படுகிறது.
 • இந்த ஆண்டு எல்லோருக்கும் எல்லாம்சிறந்த உற்பத்தி, சிறந்த சத்துணவு, சிறந்த சூழல் மற்றும் வாழ்வு என்பதை நோக்கி செயல்பட வேண்டுமென ஐநா உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

மத்திய செய்திகள்

1. சர்வதேச பட்டினி குறியீடு

 • சர்வதேச பட்டினி குறியீடு அறிக்கையை வெளியிடப்பட்டுள்ளது. சர்வதேச பிராந்திய, தேசிய அளவில் பசியால் வாடும் மக்களின் நிலை குறித்து கண்டறிவதற்கு இந்த அறிக்கை பெரிதும் உதவுகிறது.
 • தரவுகள் திரட்டப்பட்ட 121 நாடுகளுக்கான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
 • அதில் இந்தியா 107வது இடத்தில் உள்ளது. கடந்த 2020ல் இந்தியா 94வது இடத்தில் இருந்தது.
 • பசி விவகாரத்தில் இந்தியா ‘தீவிர அபாயம்’ கொண்ட நாடாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
 • பட்டியலில் முதல் 20 நாடுகள்
 • பெல்லாரஸ்
 • போஸ்னியா
 • சிலி
 • சீனா
 • குரோஷியா
 • எஸ்டோனியா
 • ஹங்கேரி
 • குவைத்
 • லாத்வியா
 • லிதுவேனியா
 • மானாடிநீக்ரோ
 • வடக்கு மாசிடோனியா
 • ருமேனியா
 • செர்பியா
 • ஸ்லோவேகியா
 • துருக்கி
 • உருகுவே
 • கோஸ்டாரிகா
 • ஐக்கிய அரபு அமீரகம்
 • பிரேசில்
 • முக்கிய நாடுகளின் நிலை
நாடுகள்பிடித்துள்ள இடம்
ரஷ்யா28
சவூதி அரேபியா30
உக்கிரைன்36
தாய்லாந்து56
எகிப்து57
மலேசியா58
தென் ஆப்பிரிக்கா59
பிலிப்பைன்ஸ்69
இந்தோனேசியா77
தென் கொரியா97
 • இந்திய அண்டை நாடுகளின் நிலை
நாடுகள்பிடித்துள்ள இடம்
இலங்கை64
மியான்மர்71
நேபாளம்81
வங்காளதேசம்84
பாகிஸ்தான்99
ஆப்கானிஸ்தான்100
 • பசி கொடுமை மிக தீவிரமாக உள்ள நாடுகள்
நாடுகள்பிடித்துள்ள இடம்
ஏமன்121
மத்திய ஆப்பிரிக்க குடியரசு120
மடகாஸ்கர்119
காங்கோ ஜனநாயக குடியரசு118
சாட்117
 • குறியீடுக்கான கணக்கீடுகள்
 • ஊட்டச்சத்து குறைபாடு
 • குழந்தைகள் இறப்பு விகிதம்
 • உயரத்துக்கு ஏற்ற எடை இல்லாத குழந்தைகளின் விகிதம்
 • வயதுக்கு ஏற்ற உயரம் இல்லாத குழந்தைகளின் விகிதம்
 • இந்தியாவின் நிலை
 • 2022-107 (121 நாடுகள்)
 • 2021-101 (116 நாடுகள்)
 • 2020-94 (107 நாடுகள்)
 • வயதுக்கு ஏற்ற உயரம் இல்லாத குழந்தைகளின் விகிதம் (2017-2021)
நாடுகள்பிடித்துள்ள இடம்
ஏமன்55.5
தைமூர் லெஸ்தே46.7
நைஜர்44.4
காங்கோ41.8
மத்திய ஆப்பிரிக்க குடியரசு40.0
மடகாஸ்கர்39.8
பப்புவா நியூகினியா39.6
ஆப்கானிஸ்தான்38.2
கௌதமாலா38.2
 • உயரத்துக்கு ஏற்ற எடை இல்லாத குழந்தைகளின் விகிதம் (2017-2021)
நாடுகள்பிடித்துள்ள இடம்
இந்தியா19.3
சூடான்16.9
ஏமன்16.1
இலங்கை15.0
நேபாளம்12.0
மோரீசியஸ்11.5
நைஜர்11.5
கோமோராஸ்10.4
சாட்10.2
இந்தோனேசியா10.2
 • ஊட்டச்சத்து குறைபாடு விகிதம் (2019-2021)
நாடுகள்பிடித்துள்ள இடம்
மத்திய ஆப்பிரிக்க குடியரசு52.2
மடகாஸ்கர்48.5
ஹைட்டி47.2
தென்கொரியா41.6
ஏமன்41.4
காங்கோ39.8
லைபீரியா38.3
ருவாண்டா35.8
லெசோதா34.7
சாட்32.7
 • குழந்தை இறப்பு விகிதம் (2020)
நாடுகள்பிடித்துள்ள இடம்
சோமாலியா11.5
நைஜீரியா11.4
சாட்11.0
சியாரா லியோன்10.8
மத்திய ஆப்பிரிக்க குடியரசு10.3
தெற்கு சூடான்9.8
கினியா9.6
மாலி9.1
லெசோதோ9.0
பெனின்8.6

2. கடுமையாகும் மாசு கட்டுப்பாட்டு விதிகள்

 • அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வரவிருக்கும் மத்திய அரசின் கடுமையான மாசுக்கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கு ஏற்ப வாகன உற்பத்தியாளர்கள் தங்களது தயாரிப்புகளின் தரத்தை மேம்படுத்தி வருவதால் இந்திய சந்தையில் கார்கள் மற்றும் வர்த்தக வாகனங்களின் விலை கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 • வாகனங்கள் வெளியிடும் மாசு கட்டுப்பாடுகளின் அளவை நிர்ணயிக்கும் இந்தியாவின் புதிய தர அளவான பாரத் ஸ்டேஜ் 6ன் இரண்டாவது கட்டம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வரவிருக்கிறது.
 • ஐரோப்பிய தர அளவான யூரோ 6க்கு இணையாக பாரத் ஸ்டேஜ் 6-ன் இரண்டாவது கட்டத்தில் தர அளவுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
 • புதிய கட்டுப்பாட்டு விதிமுறைகளின் படி இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் வாகனங்களில் அவை இயங்கும்போது என்னென்ன மாசுகளை வெளியிடுகின்றன என்பதை உடனுக்குடன் வெளிக்காட்டும் நவீன கருவிகளை பொருத்த வேண்டியது அவசியமாகும்.
 • இரண்டாம் கட்ட பாரத் ஸ்டேஜ்-6 தர நிர்ணயங்களுக்கு ஏற்ப அந்த வாகனங்கள் செயல்படுகின்றனவா என்பதை துல்லியமாக கணிப்பதற்காக இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
 • ஒருவேளை வாகனத்தை இயக்கும்போது இரண்டாம் கட்ட பாரத் ஸ்டேஜ்-6 நிர்ணயத்துள்ள அளவுக்கு மேல் மாசுக்கள் வெளியேறினால் அந்த கருவி எச்சரிக்கை ஒலி எழுப்பும் அதனைத் தொடர்ந்து மாசு வெளியேற்றத்தை குறைக்கும் வகையில் வாகனங்களை பழுது பார்த்த பிறகு அவற்றை தொடர்ந்து இயக்க முடியும்.

விளையாட்டு செய்திகள்

1. ஆசிய மகளிர் டி20 சாம்பியன் இந்தியா

 • ஆசிய மகளிர் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா ஏழாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 
 • வங்கதேசத்தின் சைலன்ட் நகரில் ஆசிய மகளிர் டி20 கோப்பை போட்டிகள் நடைபெற்றன.
 • ஆட்டத்தொடர் நாயகி:
 • ரேணுகா சிங் ஆட்டநாயகியாகவும், தீப்தி ஷர்மா தொடர் நாயகியாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
 • ஏழாவது முறையாக சாம்பியன்:
 • இதுவரை எட்டு முறை நடைபெற்ற ஆசிய டி20 உலகக்கோப்பை போட்டிகளில் இந்தியா ஏழாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

CA 16.10.2022(English Version)

State news

1. Endurance of walk-through purchase requests

 • People’s Welfare Minister M. Subramanian started the project ‘Nadakkalam Vanga to bear petitions’ where Chennai Municipal Corporation walks and listens to the public’s grievances.
 • The aim of this project is to walk with the public on all kinds of roads and ask them about their grievances and address them.
 • Also the need of physical health will be made known to the people by conducting daily walking exercise.
 • Information about this will be given before the public of the respective area.
 • Claims like old age stipend will also be fulfilled in this direct reduction scheme.
 • He said that the petitions will be scrutinized and action will be taken quickly as the officials are also coming along.

2. World Food Day

 • Food Minister A. Chakrapani said that 13.49 lakh new family cards have been issued in Tamil Nadu in the last one year.
 • World Food Day is observed on 16th October every year since 1979 on behalf of the United Nations.
 • The Food and Agriculture Organization of the United Nations has emphasized this year to work towards ‘Everything for All – Better Production, Better Nutrition, Better Environment and Livelihood’.

Central News

1. International Hunger Index

 • International Hunger Index report published. This report is very helpful in identifying the situation of hungry people at the international, regional and national level.
 • A report has been published for 121 countries for which data has been collected.
 • India ranks 107th in it. India was ranked 94th in 2020.
 • India has been classified as a ‘critical risk’ country on the issue of hunger.
 • Top 20 countries in the list

1. Belarus

2. Bosnia

3. Chile

4. China

5. Croatia

6. Estonia

7. Hungary

8. Kuwait

9. Latvia

10. Lithuania

11. Manatee Negro

12. North Macedonia

13. Romania

14. Serbia

15. Slovakia

16. Turkey

17. Uruguay

18. Costa Rica

19. United Arab Emirates

20. Brazil

 • Position of major countries
CountriesPlace
Russia28
Saudi Arabia30
Ukraine36
Thailand56
Egypt57
Malaysia58
South Africa59
Philippnes69
Indonesia77
South Korea97
 • Status of India’s Neighbors
CountriesPlace
Sri Lanka64
Myanmar71
Nepal81
Bangladesh84
Pakistan99
Afghanistan100
 • Countries where hunger is most severe
CountryPlace
Yemen121
Central African Republic120
Madagascar119
Democratic Republic of the Congo118
Saat117
 • Calculations for code
 • Malnutrition
 • Infant mortality rate
 • Proportion of children underweight for height
 • Proportion of children not height appropriate for age
 • Status of India
 • 2022-107 (121 countries)
 • 2021-101 (116 countries)
 • 2020-94 (107 countries)
 • Proportion of children not stunted for age (2017-2021)
CountryPlace
Yemen55.5
Timor Leste46.7
Niger44.4
Congo41.8
Central African Republic40.0
Madagascar39.8
Papua New Guinea39.6
Afghanistan38.2
Guatemala38.2
 • Proportion of children underweight for height (2017-2021)
CountryPlace
India19.3
Sudan16.9
Yemen16.1
Sri Lanka15.0
Nepal12.0
Mauritius11.5
Niger11.5
Comoros10.4
Saat10.2
Indonesia10.2
 • Malnutrition Rate (2019-2021)
CountryPlace
Central African Republic52.2
Madagascar48.5
Haiti47.2
South Korea41.6
Yemen41.4
Congo39.8
Liberia38.3
Rwanda35.8
Lesotho34.7
Saat32.7
 • Infant Mortality Rate (2020)
CountryPlace
Somalia11.5
Nigeria11.4
Saat11.0
Sierra Leone10.8
Central African Republic10.3
South Sudan9.8
Guinea9.6
Mali9.1
Lesotho9.0
Benin8.6

2. Stricter pollution control rules

 • Prices of cars and commercial vehicles in the Indian market are expected to increase significantly as automakers improve the quality of their products in line with the central government’s stringent pollution control regulations that will come into force from April next year.
 • The second phase of Bharat Stage 6, India’s new benchmark for vehicle emission control levels, will come into effect from April next year.
 • In the second phase of Bharat Stage 6, standards have been fixed at par with Euro 6, the European standard.
 • According to the new regulatory norms, vehicles sold in the Indian market are required to be fitted with modern devices that will instantly reveal what pollutants they emit while running.
 • This is mandated to accurately predict whether the vehicles are performing as per the Phase II Bharat Stage-6 standards.
 • Perhaps during the operation of the vehicle, if the emissions exceed the limit set by Bharat Stage-6, the device will sound a warning sound and then the vehicles can continue to be driven after repairs to reduce the emissions.

Sports news

1. Asian Women’s T20 Champions India

 • India won the Asian Women’s T20 Cricket Championship for the seventh time.
 • Asia Women’s T20 Cup matches were held in Silent City, Bangladesh.
 • Man of the Match:
 • Renuka Singh was chosen as the player of the match and Deepti Sharma as the player of the series.
 • Champion for the seventh time:
 • India has won the title of champion for the seventh time in the eight Asia T20 World Cups held so far.