TNPSC Current Affairs – Oct 02, 2022

0
47

CA 02.10.2022(Tamil Version)

முக்கிய தினங்கள்

1. 02.10.2022

  • அக்டோபர் 2 காந்திஜி மற்றும் சாஸ்திரி ஜி அவர்களின் பிறந்தநாளில் நாடு அவர்களுக்கு மரியாதை செலுத்துகிறது.

மத்திய செய்திகள்

1. 5G சேவை புதிய சகாப்தம்

  • தில்லியில் நடைபெற்ற இந்திய கைபேசி மாநாட்டில் 5G சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
  • முதல் கட்டமாக டெல்லி, சென்னை, மும்பை, கொல்கத்தா, லக்னோ, பூனே, காந்திநகர், குருகிராம், ஹைதராபாத், பெங்களூர், சண்டிகர், அகமதாபாத், ஜாம் நகர் ஆகிய 13 நகரங்களில் பயிற்சி சேவைகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
  • எண்ம இந்தியா:
  • மத்திய அரசின் எண்ம டிஜிட்டல் இந்தியா திட்டமானது கருவிகளின் விலை, இணைய தொடர்பு, இணைய சேவை கட்டணம், எண்ம சேவைகள் ஆகிய நான்கு தூண்களை அடிப்படையாகக் கொண்டது.
  • நாட்டை வளர்ச்சி அடைய செய்வதும் மக்களுக்கு தொழில்நுட்ப வசதிகளை கொண்டு சேர்ப்பதும் எண்ம இந்தியா திட்டத்தின் முக்கிய நோக்கம்.
  • உலகிலேயே இந்தியாவில் தான் இணைய சேவைக்கான கட்டணம் குறைவாக உள்ளது.
  • 2014இல் 1 ஜிபி இணைய சேவை ரூபாய் 100 ஆக இருந்த நிலையில் தற்போது அதன் கட்டணம் ரூபாய் பத்தாக குறைந்துள்ளது.
  • நாட்டில் ஒவ்வொருவரும் சராசரியாக மாதத்திற்கு 14 ஜிபி இணைய சேவையை பயன்படுத்துகின்றனர்.
  • அதன் காரணமாக அவர்களின் செலவு ரூபாய் 4200ல் இருந்து ரூபாய் 150 ஆக குறைந்துள்ளது.

2. மத்திய பிரதேசத்தின் இந்தூர் நாட்டில் தூய்மையான நகரம்

  • மத்திய அரசின் வருடாந்திர தூய்மை மதிப்பீட்டில் நாட்டின் மிக தூய்மையான நகரத்துக்கான விருது மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகருக்கு வழங்கப்பட்டது.
  • ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட நகரங்களில் தூய்மையான நகரமாக மத்திய பிரதேசத்தின் இந்தூர் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்பட்டது.
  • தொடர்ந்து ஆறாவது முறையாக இந்த ஊருக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • இந்த ஊரின் மக்கள் தொகை சுமார் 35 லட்சம் ஆகும்.
  • ஆசியாவின் மிகப்பெரிய உயிரி இயற்கை எரிவாயு இந்த ஊரில் உள்ளது.
  • நகரில் 850 வாகனங்கள் மூலம் சேர்க்கப்படும் கழிவுகள் இந்த ஆலையில் எரிக்கப்பட்டு பெறப்படும் உயிரி இயற்கை எரிவாயுவால் நகரின் அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
  • மேலும் இயற்கை எரிவாயு விற்பனை உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் இந்தூர் மாநகராட்சி கடந்த ஆண்டு ரூபாய் 14.45 கோடி வருவாய் ஈட்டியது.
  • தூய்மையான நகரங்கள் பிரிவில் இரண்டாவது இடத்தை குஜராத்தில் உள்ள சூரத்தில் தக்க வைத்துக் கொண்டது.
  • மகாராஷ்டிர மாநிலம், நவி மும்பை மூன்றாவது இடம் பிடித்தது.
  • ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட தூய்மையான கங்கை நகரங்கள் பிரிவால் பிரிவில் உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவார் முதலிடம் பிடித்தது.
  • அந்த பிரிவில் உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி இரண்டாவது இடத்தையும், உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷ் மூன்றாவது இடத்தையும் பிடித்தன.

3. தமிழகத்திற்கு ரூபாய் 3500 கோடி வட்டி இல்லா கடன் விடுவிப்பு

  • தமிழகத்தின் பல்வேறு மூலதன செலவினங்களுக்கு மத்திய அரசு ரூபாய் 3500 கோடியை வட்டி இல்லா கடனாக விடுவித்துள்ளதாக தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
  • கடைசியாக ஜிஎஸ்டி கூட்டம் சண்டிகரில் நடைபெற்றது.
  • இதன் அடுத்த கூட்டம் ஆகஸ்டில் மதுரையில் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
  • மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடத்தப்பட வேண்டும்.
  • கடந்த நிதிநிலை அறிக்கையில் அனைத்து மாநிலங்களுக்கும் மூலதன முதலீடாக 50 ஆண்டுகளுக்கு ரூபாய் ஒரு லட்சம் கோடி வட்டி இல்லா கடனாக அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
  • இந்த சிறப்பு நிதி உதவிக்கு தமிழக அரசு ஏற்கனவே விண்ணப்பித்திருந்த நிலையில் ரூபாய் 3500 கோடி வட்டி இல்லா கடனை தமிழகத்திற்கு மத்திய அரசு விடுவித்து இருக்கிறது.
  • பல ஆண்டுகளுக்கு முன்பு  நெப்பர் என்கிற தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மதுரையில் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டும் அதற்கான நிதி ஒதுக்கீடு ஒதுக்கப்படாமல் இருந்தது.
  • இதற்கு  பதிலாக நைமர் என்கிற தேசிய மருத்துவ சாதன ஆராய்ச்சி நிறுவனத்தை மதுரைக்கு வழங்குமாறு கேட்கப்பட்டுள்ளது.
  • எய்ம்ஸ் நிறுவனமும் மதுரைக்கு வர இருப்பதால் ஹெச்சிஎல் ஹனிலென் போன்ற மருத்துவ பொறியியல் நிறுவனங்கள் மதுரையில் ஆய்வுகளை மேற்கொள்கின்ற நிலையில் ‘நைமர்’ மதுரையில் அமைந்தால் சிறப்பாக இருக்கும் என்றார் பழனிவேல் தியாகராஜன்.

4. மகாத்மா காந்தி பிறந்த நாள்

  • ஐநா சபையில் மகாத்மா காந்தி பிறந்த நாள், சர்வதேச அகிம்சை தினமாக கொண்டாடப்பட்டது.
  • அதையொட்டி நடந்த நிகழ்ச்சியில் மகாத்மா காந்தியின் ஹோலோகிராம்வடிவ சிறப்பு தோற்றம் இடம்பெற்றது.
  • இந்த கொண்டாட்டத்தின் போது ஐ.நாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி ருசித்ரா கம்போஜ், யுனெஸ்கோ அமைதி மற்றும் நிலையான வளர்ச்சிக்கான மகாத்மா காந்தி கல்வி நிறுவனம் சார்பில் ஒரு குழு விவாதத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
  • மகாத்மா சிறப்பு தோற்றம்:
  • அப்போது ஒரு சிறப்பு நிகழ்வாக மகாத்மா காந்தி ‘ஹோலோகிராம்’ வடிவத்தில் (முப்பரிமாண படிமம்) தோன்றி பேசும் சிறப்பு நிகழ்வு காட்டப்பட்டது.
  • இந்த பேச்சில் கல்வி பற்றி மகாத்மா காந்தியின் சிந்தனை குரல் வழியாய் வெளிப்பட்டது.

CA 02.10.2022(English Version)

Important days

1. 02.10.2022

  • Nation pays homage to Gandhiji and Shastri Ji on their birth anniversary on 2nd October.

Central News

1. 5G service is a new era

  • Prime Minister Modi launched the 5G service at the India Mobile Conference held in Delhi.
  • In the first phase, it is planned to provide training services in 13 cities namely Delhi, Chennai, Mumbai, Kolkata, Lucknow, Pune, Gandhinagar, Gurugram, Hyderabad, Bangalore, Chandigarh, Ahmedabad, Jamnagar.
  • Enma India:
  • Central Government’s ‘Enma Digital India’ scheme is based on four pillars namely equipment cost, Internet connectivity, internet service charges and Nmaa services.
  • The main objective of the Enma India Program is to develop the country and provide technological facilities to the people.
  • India has the lowest internet service charges in the world.
  • In 2014, 1 GB internet service was Rs 100, now its charge has come down to Rs 10.
  • Everyone in the country uses an average of 14GB internet service per month.
  • Because of that their cost has come down from Rs 4200 to Rs 150.

2. Indore in Madhya Pradesh is the cleanest city in the country

  • Madhya Pradesh’s Indore has been awarded the cleanest city in the country in the Central Government’s annual cleanliness rating.
  • Madhya Pradesh’s Indore was chosen as the cleanest city among cities with a population of over one lakh.
  • It has been awarded to this town for the sixth time in a row.
  • The population of this town is around 35 lakhs.
  • Asia’s largest bio natural gas is located in this town.
  • The city’s government buses are powered by bio-natural gas, which is produced by burning the waste generated by 850 vehicles in the city.
  • Also, the Indore Corporation earned a revenue of Rs 14.45 crore last year through activities including the sale of natural gas.
  • Surat in Gujarat retained the second position in the cleanest cities category.
  • State of Maharashtra, Navi Mumbai took the third position.
  • Uttarakhand’s Haridwar topped the Clean Ganga Cities category with a population of over one lakh.
  • In that category Varanasi of Uttar Pradesh was ranked second and Rishikesh of Uttarakhand was third.

3. Rs 3500 crore interest free loan waiver for Tamil Nadu

  • Tamil Nadu Finance Minister Palanivel Thiagarajan said that the central government has released Rs 3500 crore as interest-free loan for various capital expenditure of Tamil Nadu.
  • The last GST meeting was held in Chandigarh.
  • Its next meeting was announced to be held in Madurai in August.
  • GST Council meeting should be held once in three months.
  • In the last financial statement it was announced that Rs 1 lakh crore interest free loan will be given to all the states as capital investment for 50 years.
  • The central government has released an interest-free loan of Rs.
  • Several years ago, it was announced that a National Pharmaceutical Education and Research Institute called ‘Nepar’ would be set up in Madurai, but no funds were allotted for it.
  • In lieu of this, it has been asked to provide a National Medical Device Research Institute called ‘NAIMAR’ to Madurai.
  • As AIIMS is also coming to Madurai and medical engineering companies like HCL Honeylen are conducting research in Madurai, Palanivel Thiagarajan said it will be better if ‘Naimer’ is located in Madurai.

4. Birthday of Mahatma Gandhi

  • Mahatma Gandhi’s birthday was celebrated as the International Day of Non-Violence at the United Nations.
  • A special appearance of Mahatma Gandhi in the form of a ‘hologram’ was featured in the event.
  • A panel discussion was organized by UNESCO’s Mahatma Gandhi Institute for Peace and Sustainable Development on behalf of India’s Permanent Representative to the UN, Rusitra Kamboj, during the celebration.
  • Special appearance of Mahatma:
  • A special event was then shown where Mahatma Gandhi appeared in the form of a ‘hologram’ (a three-dimensional image) and spoke.
  • In this speech, Mahatma Gandhi’s thought about education was revealed through his voice.