TNPSC Current Affairs – Nov 30, 2022

0
38

CA 30.11.2022 (Tamil Version)

மாநில செய்திகள்

 1. கங்கைகொண்ட சோழபுரத்தில் அருங்காட்சியகம்

  • அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
  • சிமென்ட் காரிடர் திட்டம்:
  • அரியலூரில் கனரக வாகனங்களால் சாலைகள் சேதமடைவதைத் தடுக்கும் வகையில், சிமென்ட் காரிடர் திட்டம் செயல்படுத்தப்படும்.
  • புதை படிவப் பூங்கா:
  • அரியலூர் பெரம்பலூர் இடையேயான பகுதியில் ரூ.10 கோடி செலவில் புவியியல் புதை படிவப் பூங்கா அமைக்கப்படும்.

மத்திய செய்திகள்

 1. சில்லறை வர்த்தக எண்ம ரூபாய் திட்டம்

  • சில்லறை வர்த்தருத்துக்கான எண்ம டிஜிட்டல் ரூபாய் திட்டம் சோதனை அடிப் படையில் டிச.1 பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக இந்திய ரிசான் வங்கி (ஆர்பிஐ) தெரிவித்துள்ளது.
  • அரசின் நிதிப் பத்திரங்களை மொத்தமாகக் கொள்முதல் செய்யும் நடவடிக்கைகளில் எண்ம ரூபாயின் பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
  • அரசு நிதிப் பத்திரங்களை மொத்தமாகக் கொள்முதல் செய்யும் எஸ்பிஐ, யெஸ் வங்கி உள்ளிட்ட 9 வங்கிகளுக்கு சோதனை அடிப்படையில் எண்ம ரூபாயைப்பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.மும்பை, தில்லி, பெங்களூரு, புவனேசுவரம் ஆகிய 4 நகரங்களில் குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே பயன்படுத்தும் வகையில் சில்லறை வர்த்தக எண்ம ரூபாய் முதல் கட்டமாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
  • புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளுக்கு உண்டான மதிப்பே எண்ம ரூபாய்க்கும் இருக்கும் என ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

பொருளாதார செய்திகள்

 1. நெல் கொள்முதல் 9% அதிகரிப்பு

  • நாட்டில் காரீஃப், ரபி என இரண்டு பருவங்களிலும் நெல் விளைவிக்கப்படுகிறது.
  • கடந்த ஆண்டு காரீஃப் சந்தைப் பருவத்தில் மத்திய அரசு சார்பில் 7.59 கோடி டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.
  • நடப்பு காரீஃப் சந்தைப் பருவத்தில் (அக்டோபர் முதல் செப்டம்பர்) 7.75 கோடிடன் நெல் கொள்முதல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
  • மத்திய அரசு 3.06 கோடிடன் நெல் கொள்முதல் செய்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டம் வரை கொள்முதல் செய்யப்பட்ட 2.80 கோடி டன் நெல்லை விட 9 சதவீதம் அதிகம் என்று மத்திய உணவுத் துறையின் புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • நடப்பு சந்தைப் பருவத்தில் நெல் கொள்முதல்:
  • பஞ்சாப் 1.81 கோடி டன்
  • ஹரியானா 58.96 லட்சம் டன்
  • சத்திஸ்கர் 16.88 லட்சம் டன்
  • தெலுங்கானா 16.18 லட்சம் டன்
  • உத்திரபிரதேசம் 10.28 லட்சம் டன்

தரவரிசை

 1. இந்தியாவின் டாப்-10 பணக்காரர்கள்

  • அமெரிக்காவின் போர்ப்ஸ் இதழ், இந்தியாவின் டாப்-100 பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
  • இதில், இந்த ஆண்டு முதல் 100 பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ 2 லட்சம் கோடி அதிகரித்து, ரூ.64 லட்சம் கோடியை தொட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டாப்-10 பணக்காரர்களின் சொத்து மதிப்பு மட்டுமே ரூ.30.8 லட்சம் கோடியாக உள்ளது.
  • இப்பட்டியலில் குஜராத்தின் கவுதம் அதானி முதல் இடத்தை பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.12 லட்சம் கோடி.
  • அதானி ஆசியாவின் நம்பர்-1 பணக்காரராக உயர்ந்து விட்டாலும், இப்பட்டியலில் முதல் இடம் பிடிப்பது இதுவே முதல் முறை.
  • உலக பணக்காரர்கள் பட்டியலில் இவர் 3வது இடத்தில் உள்ளார்.
  • பணக்காரர்களின் சொத்து மதிப்பு:
  • கவுதம் அதானி 12,22,460
  • முகேஷ் அம்பானி 7,10723
  • ராதா கிருஷ்னன் தமானி 2,22.908
  • சைரஸ் பூனாவல்லா 1,73,642
  • ஷிங் நாடார் 1,72,834

CA 30.11.2022 (English Version)

State News

  1. Museum – Gangaikonda Cholapuram

  • Tamil Nadu Chief Minister M. K. Stalin said that a museum will be set up in Gangaikonda Cholapuram, Ariyalur district.
  • Cement Corridor Project:
  • Cement Corridor Project will be implemented in Ariyalur to prevent damage to roads by heavy vehicles.
  • fossil park:
  • Geological fossil park will be set up in the area between Ariyalur and Perambalur at a cost of Rs.10 crore.

Central News

  1. Digital Rupee Scheme

  • reserve bank of india (RBI) has announced that the digital rupee scheme for retail transactions will be rolled out on a trial basis on December 1.
  • Allowed for use of  digital rupees in bulk purchase of government securities.
  • 9 banks including SBI and Yes Bank, which purchase government securities in bulk, will be given digital rupees on trial basis. Permission was given to use.
  • In the first phase, retail eight rupees will be implemented in 4 cities namely Mumbai, Delhi, Bengaluru and Bhubaneswar for use by certain individuals only.
  • RBI has said that the value of the notes in circulation will be the same as the digital rupee.

Economic News

   1. 9% increase in paddy procurement

  • Paddy is grown in both seasons namely Kharif and Rabi in the country.
  • Last year 7.59 crore tonnes of paddy was procured by the central government during the kharif market season.
  • The central government plans to procure paddy worth 7.75 crore during the current kharif market season (October to September).
  • The central government has procured paddy worth 3.06 crores. This is 9 per cent more than the 2.80 crore tonnes of paddy procured during the same period last year, according to data from the central food department.
  • Purchase of paddy during current marketing season:
  • Punjab 1.81 crore tonnes
  • Haryana 58.96 lakh tonnes
  • Chhattisgarh 16.88 lakh tonnes
  • Telangana 16.18 lakh tonnes
  • Uttar Pradesh 10.28 lakh tones

Ranking

  1. Top-10 Richest People of India

  • America’s Forbes magazine has released the list of top-100 richest people in India.
  • In this, it is reported that the total assets of the 100 richest people have increased by Rs 2 lakh crore and touched Rs 64 lakh crore since this year. The wealth of the top-10 richest people alone is Rs 30.8 lakh crore.
  • Gujarat’s Gautam Adani has topped the list. His property is worth Rs.12 lakh crore.
  • Although Adani has emerged as Asia’s No.1 richest man, this is the first time he has topped the list.
  • He is 3rd in the list of the world’s richest people.
  • Property value of the rich:
  • Gautam Adani 12,22,460
  • Mukesh Ambani 7,10723
  • Radha Krishnan Damani 2,22.908
  • Cyrus Poonawalla 1,73,642
  • Shiv Nadar 1,72,834