TNPSC Current Affairs – Nov 28, 2022

0
43

CA 28.11.2022 (Tamil Version)

மத்திய செய்திகள்

 1. குடியரசு தின விழா தலைமை விருந்தினர் எகிப்து அதிபர் எல்-சிசி

 • தேசியத் தலைநகர் தில்லியில் வரும் ஜனவரி 26-இல் நடைபெறவிருக்கும் குடியரசு தின விழாவில் தலைமை விருந்தினராக எகிப்து அதிபர் அப்தல் ஃபதா எல்-சிசி பங்கேற்கவிருப்பதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.
 • இந்திய குடியரசு தின விழாவில் தலைமை விருந்தினராக எகிப்து நாட்டின் அதிபர் பங்கேற்கவிருப்பது இதுவே முதல்முறை என்று அந்த அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 • இந்தியா-எகிப்து இடையிலான தூதரக ரீதியிலான உறவுகள் நிறுவப்பட்டு 75-ஆவது ஆண்டை இரு நாடுகளும் கொண்டாடி வருகின்றன.
 • தலைமை விருந்தினராக நட்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்று சிறப்பிப்பது வழக்கம்.
 • 1950 முதலே இந்த வழக்கம் தொடர்ந்து வருகிறது.
 • 1952, 1953, 1966 ஆகிய ஆண்டுகளில் வெளிநாட்டுத் தலைவர்கள் பங்கேற்பின்றி குடியரசு தின விழா நடைபெற்றது.
 • கடந்த 2021-இல் அப்போதைய பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தபோதிலும் கரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக அவரது இந்திய பயணம் ரத்து செய்யப்பட்டது.
 • 2022-இல் 5 மத்திய ஆசிய நாடுகளின் தலைவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால், கரோனா சூழல் காரணமாக அவர்கள் பங்கேற்கவில்லை.
 • 2020-இல் பிரேஸில் அதிபர் ஜெயிர் பொல்சனாரோ தலைமை விருந்தினராகப் பங்கேற்றிருந்தார்.
 • 2016-இல் அப்போதைய பிரான்ஸ் அதிபர் பிரான்சுவா ஹொலாந்த்,
 • 2015-இல் அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா,
 • 2007-இல் ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் தலைமை விருந்தினர்களாகப் பங்கேற்றிருந்தனர்.

 2. வாராணசியில் மகாகவி பாரதியார் வாழ்ந்த வீட்டை புதுப்பிக்க பெருந்திட்டம்

 • வாராணசியில் மகாகவி பாரதியார் நான்கு ஆண்டு காலம் வாழ்ந்த வீடான ‘சிவமடத்தை’ புதுப்பிக்க பெருந்திட்டம் பரிசீலனையில் உள்ளது என்று வாராணசி மாவட்ட ஆட்சியர் எஸ்.ராஜலிங்கம் தெரிவித்தார்.
 • வாராணசியில் உள்ள ‘சிவமடத்தில்’ மகாகவி பாரதியார் சுமார் 4 ஆண்டுகள் வாழ்ந்துள்ளார். அந்த வீட்டில் தற்போது மகாகவி பாரதியாரின் வழிவந்தவர்கள் வசித்து வருகின்றனர்.
 • மகாகவி பாரதியாரின் இலக்கியப் படைப்புகள் எண்ம (டிஜிட்டல்) முறையில் நவீனமாக்கப்படும்.
 • சிவமடம்:
 • வாராணசியில் உள்ள அனுமன் காட் எனும் பகுதியில் 1898- ஆம் ஆண்டுமுதல் 1902 வரை பாரதியார் தனது அத்தை வீட்டில் வசித்தார். அப்போது அவருக்கு வயது பதினாறு.
 • அவர் காசியில் வாழ்ந்த காலத்தில் பண்டித மதன் மோகன் மாளவியா, அன்னி பெசன்ட், பால கங்காதர திலகர் முதலிய முக்கிய அரசியல் ஆளுமைகளைச் சந்தித்து அவர்களுடன் விவாதித்துப் பல்வேறு தெளிவுகளைப் பெற்றார்.
 • பாரதியைப் பற்றிய அறிமுக நூலை ஹிந்தி, ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் கே.வி. கிருஷ்ணன் எழுதியுள்ளார்..

மாநில செய்திகள்

 1. மெரீனாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான நாட்டின் முதல் நடைபாதை

 • மெரீனா கடற்கரையில் நாட்டின் முதல் மாற்றுத் திறனாளிகளுக்கான நடைபாதை திறந்து வைக்கப்பட்டது.
 • சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மெரீனா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளும் கடல் அலைகளை கண்டுகளிக்க ஏதுவாக சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 14 லட்சத்தில் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற மரப்பலகைகளால் நடைபாதை அமைக்கப்பட்டு உள்ளது.

திட்டம்

1. ‘வானவில் மன்றம்’ திட்டம்

 • அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு அறிவியல், கணித பாடங்களில் ஆர்வத்தை ஏற்படுத்த ‘வானவில் மன்றம்’ திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் தொடங்கி வைக்கிறார்.
 • திருச்சி காட்டூர் ஆதி திராவிடர் பெண்கள் உயர்நிலைப்பள்ளிக்கு செல்கிறார். அங்கு,அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு அறிவியல் மற்றும் கணித பாடங்களில் ஆர்வத்தை ஏற்படுத்தும்வகையில் ரூ.25 கோடி செலவில் ‘வானவில் மன்றம்’ திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

நியமனம்

1. இந்திய ஒலிம்பிக் சங்க தலைவராக பி.டி. உஷா

 • பி.டி. உஷா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
 • இதன் மூலம் ஐ.ஓ.ஏ.-யின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையை பெறப்போகிறார்.
 • ‘தங்க மங்கை’ என்று அழைக்கப்படும் பி.டி., உஷா, 1986-ம் ஆண்டு சியோலில் நடந்த ஆசிய விளையாட்டில் 4 தங்கப்பதக்கத்தை அறுவடை செய்தவர் ஆவார்.
 • 1984-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் மயிரிழையில் வெண்கலப்பதக்கத்தை நழுவவிட்டு 4-வது இடத்தைபெற்றார். மேல் சபை எம்.பி.யான அவர் இப்போது இந்திய விளையாட்டில் செல்வாக்குமிக்க பதவியை பிடிக்க உள்ளார்.

விளையாட்டு செய்திகள்

 1. கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த ஐ.பி.எல். இறுதி ஆட்டம்

 • 15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்டின் இறுதி ஆட்டம் கடந்த மே 29-ந்தேதி குஜராத் டைட்டன்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இடையே குஜராத் மாநிலம் அகமதாபாத் உள்ள நரேந்திரமோடி ஸ்டேடியத்தில் நடந்தது.
 • குஜராத் டைட்டன்ஸ் வாகை சூடிய இந்த ஆட்டத்தை ஒரு லட்சத்து 1,566 பேர் நேரில் கண்டுகளித்தனர். உலகில் 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிகம் பேர் நேரில் பார்த்த ஆட்டமாக இதை அங்கீகரித்து கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் வழங்கப்பட்டுள்ளது.

மனதின் குரல்

 • ஆளில்லா சிறியரக விமானங்கள் (ட்ரோன்கள்) துறையிலும் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. ஹிமாசலின் கின்னோர் பகுதியில் சில நாள்களுக்கு முன் ஆப்பிள் பழங்கள் ட்ரோன்கள் வாயிலாக எடுத்துச் செல்லப்பட்டன.
 • தசைசிதைவு நோய் சிகிச்சை மையம்:
 • மரபணு சார்ந்த அந்நோய், எந்த வயதினரையும் தாக்கும். அந்நோயால் பாதிக்கப்பட்டவரின் உடல் வலுவிழக்கத் தொடங்கும்.
 • அன்றாடப் பணிகளைக்கூட அவரால் செய்ய இயலாது. அத்தகைய நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்குப் பெரும் கவனம் தேவை. அத்தகைய சிகிச்சை மையம் ஹிமாசலின் சோலன் மாவட்டத்தில் செயல்பட்டு வருகிறது.
 • அந்த நோய் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே அதிகரிக்க வேண்டும்.
 • புத்தக வாசிப்பு:
 • மக்களிடையே புத்தக வாசிப்புபழக்கத்தை ஏற்படுத்த உத்தரபிரதேசத்தின் பன்சா கிராமத்தைச் சேர்ந்த ஜதின் லலித் சிங் என்பவர் ‘மக்கள் நூலகத்தை ஏற்படுத்தியுள்ளார்.
 • ஜார்க்கண்டை சேர்ந்த சஞ்சய் காஷ்யப் என்பவர் பள்ளி மாணவர்களிடையே புத்தக வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவித்து வருகிறார்.
 • அதனால் அவர் நூலக மனிதர் என உள்ளூர் மக்களால் போற்றப்படுகிறார். நூலகத்தைத் தொடங்க வேண்டும் என்ற அவரது கனவு தற்போது சமூக இயக்கமாக மாறியுள்ளது. அவர்களது பணிதொடர வேண்டும் என்றார் பிரதமர் மோடி.

CA 28.11.2022 (English Version)

Central News

   1. President El-Sisi of Egypt is the Chief Guest of the Republic Day Ceremony

 • The Ministry of External Affairs informed that the President of Egypt Abdel Fattah el-Sisi will be the chief guest at the Republic Day celebrations to be held on January 26 in the national capital, Delhi.
 • This is the first time that the President of Egypt will participate as the Chief Guest in the Indian Republic Day celebrations, according to a statement issued by the Ministry.
 • India-Egypt are celebrating 75 years since the establishment of diplomatic relations.
 • It is usual for the leaders of friendly countries to participate as chief guests.
 • This custom has continued since 1950.
 • In 1952, 1953 and 1966, Republic Day celebrations were held without the participation of foreign leaders.
 • In 2021, the then British Prime Minister Boris Johnson was invited, but his visit to India was canceled due to the increase in the spread of Corona.
 • In 2022, the leaders of 5 Central Asian countries were invited. However, they did not participate due to the Corona situation.
 • In 2020, Brazilian President Jair Bolsonaro participated as the chief guest.
 • In 2016, the then French President Francois Hollande,
 • In 2015, then US President Barack Obama,
 • In 2007, Russian President Vladimir Putin was the chief guest.

   2. A grand plan to renovate the house where Mahakavi Bharatiyar lived in Varanasi

 • Mahakavi Bharatiyar lived in Varanasi for four years Varanasi District Collector S. Rajalingam said that a grand plan to renovate ‘Shivamadam’ is under consideration.
 • Mahakavi Bharatiyar lived for about 4 years in ‘Shivamadam’ in Varanasi. The descendants of Mahakavi Bharatiyar are currently living in that house.
 • Literary works of Mahakavi Bharatiyar will be modernized in digital mode.
 • Shivamadam:
 • From 1898 to 1902, Bharatiyar lived in his aunt’s house at Hanuman Ghat in Varanasi. He was sixteen years old then.
 • During his stay in Kashi, he met important political personalities like Pandit Madan Mohan Malaviya, Annie Besant, Bala Gangadhara Tilak etc. and discussed with them and got various clarifications.
 • An introductory book on Bharati in Hindi, English and Tamil by Written by K.V. Krishnan.

State News

  1. Country’s first footpath for disabled people in Marina

 • Country’s first disabled footpath inaugurated at Marina Beach.
 • Under the Singara Chennai 2.0 project, a footpath was constructed with eco-friendly wooden planks at a cost of one lakh fourteen thousand at Marina Beach under Chennai Corporation to enable disabled people to enjoy the ocean waves.

Scheme

1. ‘ Vanavil manram’ scheme

 • Chief Minister M.K.Stalin inaugurates the ‘Vanavil manram ‘ program in Trichy to make government school students interested in science and mathematics subjects.
 • Goes to Trichy Kattur Adi Dravidar Girls High School. There, he is launching the “ Vanavil manram” project at a cost of Rs.25 crore to make government school students interested in science and mathematics subjects.

Appointment

1. Indian Olympic Association president P.T. Usha

 • P.T. Usha is elected unopposed.
 • With this she will get the honor of being the first woman president of IOA.
 • PT, Usha, popularly known as the Golden woman, bagged 4 gold medals at the 1986 Asian Games in Seoul.
 • In the 1984 Olympics, he missed out on a bronze medal in the 400m hurdles and finished 4th. An Upper House MP, he is now set to hold an influential position in Indian sports.

Sports News

  1. Guinness Book of World Records IPL The final game

 • 15th IPL The final match of 20 over cricket took place on May 29 between Gujarat Titans and Rajasthan Royals at the Narendra Modi Stadium in Ahmedabad, Gujarat.
 • one lakh one thousand five hundred and sixty six (101566) people witnessed this match which was hosted by Gujarat Titans. It has been recognized by the Guinness Book of World Records as the most watched match in 20-over cricket in the world.

Manatin kural

 • India is also progressing rapidly in the field of unmanned aerial vehicles (drones). A few days ago, apples were delivered by drones in Himachal’s Kinnore region.
 • Muscular Dystrophy Treatment Center:
 • The disease is genetic and can affect people of any age. The body of the person suffering from the disease will start to weaken.
 • He is unable to perform even daily tasks. Treating such patients requires great care. One such treatment center is functioning in Solan district of Himachal.
 • Awareness about that disease should be increased among people.
 • Book reading:
 • Jatin Lalit Singh from Bansa village of Uttar Pradesh has established ‘People’s Library’ to inculcate the habit of reading books among the people.
 • Sanjay Kashyap from Jharkhand is promoting book reading habit among school students. So he is admired by locals as a library man. His dream of starting a library has now turned into a social movement. Prime Minister Modi said that their work should continue.