Home TNPSC TNPSC Current Affairs – Nov 17, 2022

TNPSC Current Affairs – Nov 17, 2022

0

CA 17.11.2022 (Tamil Version)

மாநில செய்திகள் 

 1. பூக்கடை காவல் நிலையத்துக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று 

  • சென்னை பூக்கடை காவல் நிலையத்துக்கு ‘ஐஎஸ்ஓ’ தரச்சான்றிதழ் வழங்கப்பட்டது. 
  • சென்னை பூக்கடை காவல் நிலையம் 1876-ஆம் ஆண்டு மதராஸ் பட்டணமாக இருந்தபோதே தொடங்கப்பட்ட மிகப்பழைமை வாய்ந்த காவல் நிலையம். 2006- ஆம் ஆண்டு இந்தக் காவல் நிலையத்துக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டது. 
  • இதன் தொடர்ச்சியாக, தற்போது காவல் நிலையம் தூய வெண்மை நிறமாக மாற்றம் செய்யப்பட்டது. 
  • இந்திய தர கவுன்சில்-  
  • இந்திய அரசாங்கத்தால் (QCI GOI) பாதுகாப்பு மற்றும் சுகாதார சான்றிதழுக்கான பணியிட மதிப்பீட்டுக்காக சர்வதேச தர கட்டுப்பாட்டுச் சான்றிதழான ஐஎஸ்ஓ 9001 : 2015 வழங்கி அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 

மத்திய செய்திகள் 

 1. 15.24 லட்சம் சுற்றுலாப் பயணிகள் இந்தியா வந்துள்ளனர் 

  • இவர்களில் அதிகபட்சமாக அமெரிக்காவிலிருந்தும், அதற்கடுத்து வங்கதேசத்திலிருந்தும் வந்துள்ளனர். 
  • கரோனா பெருந்தொற்று தடுப்பு விதிமுறைகள், விசா விதிமுறைகளில் கடந்த ஆண்டு கட்டுப்பாடுகள் சில விதிக்கப்பட்டிருந்தப்போதிலும் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. 
  • இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:  
  • கடந்த ஆண்டு இந்தியா வந்த மொத்த சுற்றுலாப் பயணிகளில் 74.39 சதவீதம் பேர் 10 நாடுகளைச் சேர்ந்தவர்கள்.  
  • மீதம் 25.61 சதவீதம் பேர் பிற நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். 
  • கடந்த ஆண்டு ஜன.1- ஆம் தேதிமுதல் டிச. 31-ஆம் தேதிவரை மொத்தம் 15 லட்சத்து 24 ஆயிரத்து 469 பேர் இந்தியா வந்துள்ளனர். 

மாநாடு 

 1. இந்தியாவிடம் ஜி20 தலைமைப் பொறுப்பு 

  • இந்தியாவில் அடுத்த ஆண்டு ஜி20 உச்சி மாநாடு நடைபெற உள்ள நிலையில், அந்தக் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியாவிடம் இந்தோனேசியா (நவ.16) ஒப்படைத்தது. 
  • இந்தோனேசியாவின் பாலி தீவில் தொடங்கிய ஜி20 உச்சி மாநாடு, உறுப்பு நாடுகளின் கூட்டுத் தீர்மானத்துடன் முடிவுற்றது. அதன்பிறகு நடைபெற்ற நிகழ்ச்சியில், கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை பிரதமர் நரேந்திர மோடியிடம் இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ ஒப்படைத்தார். 
  • அப்போது, ‘அனைத்து நாடுகளின் ஒருங்கிணைந்த முயற்சிகள் மூலமாக ஜி20 மாநாட்டை உலக நலனுக்கான செயலூக்கம் அளிக்கும் அமைப்பாக உருவாக்க முடியும்’ என்று பிரதமர் மோடி கூறினார். 
  • ஜி20ல் கட்டமைப்பில் ஆர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேஸில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், தென் கொரியா, மெக்சிகோ, ரஷியா, சௌதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, பிரிட்டன், அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் ஆகிய 20 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. 
  • உலகின் சுமார் 85 சதவீத பொருளாதார மதிப்பையும், சுமார் 75 சதவீத வர்த்தகத்தையும், சுமார் 65 சதவீத மக்கள் தொகையையும் ஜி20 கூட்டமைப்பு நாடுகளே கொண்டுள்ளன. 
  • தலைமைப் பொறுப்பு ஒப்படைப்பு 
  • கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை வரும் டிசம்பர் 1-ஆம் தேதியிலிருந்து அதிகாரபூர்வமாக இந்தியா ஏற்கவுள்ளது. 
  • அடுத்த உச்சி மாநாடு தலைநகர் தில்லியில் 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் நடத்தப்பட உள்ளது. 
  • ‘ஒரே பூமி; ஒரே குடும்பம்; ஒரே எதிர்காலம் என்ற இந்தியாவின் ஜி20 தலைமைப் பொறுப்பு கருப்பொருளில் அடங்கியுள்ளன என்று பிரதமர் மோடி கூறினார். 

ராக்கெட் 

1.விக்ரம்எஸ்ராக்கெட் 

  • இந்திய விண்வெளி வரலாற்றில் முதல் முறையாக, தனியார் புத்தாக்க நிறுவனம் வடிவமைத்த ‘விக்ரம் – எஸ்’ ராக்கெட், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து (நவ.18) விண்ணில் ஏவப்படவுள்ளது. 
  • உலகளாவிய விண்வெளிவர்த்தகத்துக்கு ஈடு கொடுக்கும் வகையில், விண்வெளி ஆய்வில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை ஊக்குவிக்க இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) முடிவு செய்தது.  
  • இதற்காக 2020- ஆம் ஆண்டு ‘இன்ஸ்பேஸ்’ என்ற அமைப்பு நிறுவப்பட்டது. இதன்மூலம் ராக்கெட், செயற்கைக்கோள்களை வடிவமைக்கும் பணிகளை மேற்கொள்ள தனியார் நிறுவனங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது. 
  • அதன்படி, தெலங்கானா மாநிலம், ஹைதராபாதைச் சேர்ந்த ‘ஸ்கைரூட்’ எனும் ஏரோஸ்பேஸ் நிறுவனம், தனது ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்துவதற்காக இஸ்ரோவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.  
  • தற்போது வெவ்வேறு எடைகளை சுமந்து செல்லக்கூடிய மூன்றுவித ராக்கெட்டுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.  
  • அவற்றுக்கு இந்திய விண்வெளி திட்டத்தின் தந்தையான மறைந்த விஞ்ஞானி விக்ரம் சாராபாய் நினைவாக ‘விக்ரம்’ என்று பெயரிடப்பட்டது. 
  • அதில், அதிகபட்சம் 480 கிலோ எடையை சுமந்து செல்லக் கூடிய ‘விக்ரம்- எஸ்’ ராக்கெட்டை சோதனை முயற்சியாக விண்ணில் செலுத்துவதற்கு முடிவானது. 
  • இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் குழு வடிவமைத்த 3 ஆய்வு சாதனங்கள் இந்த ராக்கெட்டுடன் சேர்த்து அனுப்பப்படவுள்ளன.  
  • அவை புவி மேற்பரப்பில் இருந்து 120 கிமீ தொலைவில் நிலைநிறுத்தப்பட்டு, ஆய்வுப் பணிகளுக்கு பயன்படுத்தப்படவுள்ளன. 

 2. நிலவுக்கு ஆய்வுக் கலம்: 

  • நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்புவதற்கு முன்னோடியாக ஒரு விண் வெளிக்கலத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. 
  • ஃபுளோரிடா மாகாணம், கேப்கனாவெரலில் உள்ள ஏவுதளத்திலிருந்து அதிக சக்தி கொண்ட ராக்கெட் மூலம் அந்த ஆய்வுக்கலம் அனுப்பப்பட்டுள்ளது. 
  • ‘ஆர்டமிஸ்-1’ என்ற இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக கடந்த ஆகஸ்டில் மேற்கொள்ளப்பட்ட முயற்சி இரு முறை ஒத்திவைக்கப்பட்டது. 
  • அப்பல்லோ விண்கலத்திட்டங்கள் நிறுத்தப்பட்ட 50 ஆண்டுகளுக்குப் பிறகு, முதல் முறையாக நிலவுக்கு மனிதர்களை அனுப்புவதற்கான இந்த ஆய்வு திட்டத்தை நாசா உருவாக்கியுள்ளது.  
  • அதற்கு முன்னோட்டமாக, சோதனை முறையில் 3 மனித மாதிரிகளுடன் அந்த ஆய்வுக்கலத்தை ஏவ திட்டமிடப்பட்டிருந்தது.  
  • எனினும், ராக்கெட் எரிபொருள் கசிவு மற்றும் என்ஜின் கோளாறு காரணமாக அந்த திட்டம் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. 

நியமனம் 

 1. நீதி ஆயோக் உறுப்பினராக அரவிந்த் விர்மாணி நியமனம் 

  • நீதி ஆயோக்கின் முழு நேர உறுப்பினராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் விர்மாணி நியமிக்கப்பட்டார். 
  • அரவிந்த் விர்மாணி நிதி அமைச்சகத்தில் தலைமைப் பொருளாதார ஆலோசகராகவும், ரிசர்வ் வங்கியின் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவிலும் பணியாற்றியுள்ளார்.  
  • இந்தியா, வங்கதேசம், இலங்கை மற்றும் பூடானை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சர்வதேச நிதியத்துக்கான (ஐஎம்எஃப்) நிர்வாக இயக்குநராக இருந்துள்ளார்.  
  • பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் பிரதான பொருளாதார ஆலோசனைக் குழுவான நீதி ஆயோக்கில் தற்போது வி.கே. சரஸ்வத், ரமேஷ் சந்த் மற்றும் வி.கே.பால் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். 

CA 17.11.2022 (English Version)

State News 

   1. ISO Certificate for Pookadai Police Station 

  • Chennai Pookadai Police Station awarded ‘ISO’ certificate. 
  • Chennai Pookadai Police Station is the oldest police station established in 1876 when Madras was still a city. A new building was constructed for this police station in 2006. 
  • As a result, now the police station has been changed to pure white color. 
  • Quality Council of India- 
  • International Quality Control Certificate ISO 9001 : 2015 has been awarded by the Government of India (QCI GOI) for workplace assessment for safety and health certification. 

Central News 

   1. 15.24 lakh tourists visited India. 

  • Maximum number of them came from USA followed by Bangladesh. 
  • Tourist arrivals have increased even though some restrictions were imposed last year in terms of corona virus prevention regulations and visa regulations. 
  • Press release issued by Union Ministry of Home Affairs in this regard: 
  • 74.39 percent of the total tourist arrivals in India last year were from 10 countries. 
  • Remaining 25.61 percent are from other countries. 
  • Last year from Jan. 1 to Dec. A total of 15 lakh 24 thousand 469 people have come to India till 31st. 

Conference 

   1. India has G20 leadership responsibility 

  • With the G20 summit to be held in India next year, Indonesia (Nov.16) handed over the leadership of the confederation to India. 
  • The G20 Summit which started in Bali Island, Indonesia concluded with a joint resolution by the member states. In the event that followed, Indonesian President Joko Widodo handed over the leadership of the federation to Prime Minister Narendra Modi. 
  • At that time, Prime Minister Modi said, ‘Through the combined efforts of all countries, the G20 conference can be made an active body for global welfare’. 
  • Argentina, Australia, Brazil, Canada, China, France, Germany, India, Indonesia, Italy, Japan, South Korea, Mexico, Russia, Saudi Arabia, South Africa, Turkey, Britain, United States, European Union are members of G20 structure. 
  • The G20 countries account for about 85 percent of the world’s economic value, about 75 percent of trade, and about 65 percent of the population. 
  • Delegation of Leadership: 
  • India will officially take over the leadership of the federation from December 1. 
  • The next summit will be held in the capital Delhi on September 9 and 10, 2023. 
  • ‘One Earth; same family; one future’ Prime Minister Modi said that India’s G20 leadership is under the theme of . 

Rocket 

  1. ‘Vikram-S’ rocket 

  • For the first time in Indian space history, the ‘Vikram-S’ rocket designed by a private innovation company will be launched from Sriharikota, Andhra Pradesh (November 18). 
  • Indian Space Research Organization (ISRO) decided to encourage the participation of private companies in space exploration to offset the global space trade. 
  • In the year 2020, an organization named ‘Inspace’ was established for this purpose. Through this, permission was also given to private companies to design rockets and satellites. 
  • Accordingly, ‘Skyroot’, an aerospace company based in Hyderabad, Telangana, entered into an MoU with ISRO to launch its rockets. 
  • Currently three types of rockets are designed which can carry different weights. 
  • They were named ‘Vikram’ after the late scientist Vikram Sarabhai, the father of the Indian space programme. 
  • In it, the ‘Vikram-S’ rocket, which can carry a maximum payload of 480 kg, has been launched as a trial attempt. 
  • 3 probes designed by a team of students from India and abroad will be sent along with this rocket. 
  • They will be deployed at a distance of 120 km from the Earth’s surface and will be used for research purposes. 

  2. Spacecraft to Moon: 

  • The American space agency NASA has successfully launched a spacecraft, a precursor to sending humans back to the moon. 
  • The probe was launched by a high-powered rocket from the launch pad at Cape Canaveral, Florida. 
  • The attempt to implement this project, ‘Artemis-1’, which was launched last August, was postponed twice. 
  • 50 years after the end of the Apollo space program, NASA developed this exploration program to send humans to the moon for the first time. 
  • Prior to that, it was planned to launch the probe with 3 human samples in experimental mode. 
  • However, the project was shelved due to rocket fuel leakage and engine failure. 

Appointment 

   1. Appointment of Arvind Virmani as a member of Justice Aayog 

  • Former Chief Economic Adviser Arvind Virmani has been appointed as a full-time member of Justice Aayog. 
  • Arvind Virmani has served as Chief Economic Adviser to the Ministry of Finance and on the Technical Advisory Committee of the Reserve Bank. 
  • He has been the Managing Director of the International Monetary Fund (IMF) representing India, Bangladesh, Sri Lanka and Bhutan. 
  • Prime Minister Narendra Modi-led government’s main economic advisory body Neeti Aayog currently has V.K. Saraswat, Ramesh Chand and VK Paul are members. 

Exit mobile version