TNPSC Current Affairs – Nov 12, 2022

0
27

CA 12.11.2022 (Tamil Version)

இந்திய செய்திகள் 

 1. இடஒதுக்கீடு உச்சவரம்பை 77%-ஆக உயர்த்த ஜார்க்கண்ட் பேரவையில் மசோதா நிறைவேற்றம் 

  • ஜார்க்கண்டில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் மகாக்கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. 
  • இங்கு மாநில அரசுப் பணிகளில் இடஒதுக்கீடு உச்சவரம்பு தற்போது 60 சதவீதமாக உள்ளது. இது, பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டையும் உள்ளடக்கியதாகும். 
  • இந்நிலையில், ஜார்க்கண்ட் சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டம் நடைபெற்றது. இதில், இடஒதுக்கீடு உச்சவரம்பை 77 சதவீதமாக உயர்த்துவதற்கான ஜார்க்கண்ட் அரசு பணி காலியிடங்கள் மற்றும் பணிகள் திருத்த மசோதா-2022 நிறைவேற்றப் பட்டது.  
  • அரசமைப்புச்சட்டத்தின் 9-ஆவது அட்டவணையில் இந்த திருத்தச் சட்டம் இடம்பெற்ற பிறகு, இடஒதுக்கீடு அதிகரிப்பு அமலுக்கு வரும் என்று மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த திருத்தச்சட்டத்தை 9-ஆவது அட்டவணையில் சேர்க்க மத்திய அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. 
  • தற்போது நிறைவேற்றப்பட்ட மசோதாவின்படி, பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு 26-இல் இருந்து 28 சதவீதமாக உயரும்.  
  • தாழ்த்தப்பட்டோருக்கு தற்போதுள்ள 10 சதவீத இடஒதுக்கீடு 12 சதவீதமாக அதிகரிக்கப்படும்.மிகவும் பிற்படுத்தப்பட்டோர், இதர பிற்படுத்தப்பட்டவகுப்பினர் முறையே 15, 12 சதவீத இடஒதுக்கீடு பெறுவர். 

 2. இந்தியாஅமெரிக்கா நிதி ஒத்துழைப்புக் குழு 

  • இந்தியா-அமெரிக்கா நிதி ஒத்துழைப்புக் குழுவின் ஆவது 9-கூட்டம் தில்லியில்  நடைபெற்றது. அதில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க நிதியமைச்சர் ஜேனட் யெல்லன் இந்தியா வந்துள்ளார்.  
  • கூட்டத்துக்குப் பிறகு வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான நிதியைத் திரட்டுவது தொடர்பாகக் கூட்டத்தின்போது விவாதிக்கப்பட்டது. 
  • பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள 2025-ஆம் ஆண்டு வரை ஆண்டுக்கு சுமார் ரூ.8 லட்சம் கோடியைத் திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
  • அந்த நிதியைக் கொண்டு வளர்ந்து வரும் நாடுகளுக்கு உதவவும் உறுதி ஏற்கப்பட்டுள்ளது. 

 3. சென்னைமைசூரு வந்தே பாரத் விரைவு ரயில் சேவை 

  • சென்னை-மைசூரு இடையிலான தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி பெங்களூரில் தொடக்கி வைத்தார். 
  • பிரதமர் மோடி, கிராந்தி வீரசங்கொல்லி ராயண்ணா ரயில் நிலையத்தில் சென்னை – மைசூரு வந்தே பாரத் ரயில் சேவையைத் தொடக்கிவைத்தார்.  
  • இந்திய அளவில் தொடங்கப்படும் 5-ஆவது வந்தே பாரத் விரைவு ரயில் சேவை இதுவாகும். 
  • இந்தியாவின் முதல் வந்தே பாரத் விரைவு ரயில் சேவை 2019ஆம் ஆண்டில் புதுதில்லி, கான்பூர்,அலாகாபாத்,வாராணசி இடையே இயக்கப்பட்டது.  
  • வந்தே பாரத் விரைவு ரயில் முழுக்க முழுக்க உள்நாட்டு தொழில்நுட்பத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. 
  • மேலும், ரயில்களுக்கு இடையிலான மோதலைத்தவிர்க்கும் தொழில்நுட்பமும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரயில் 52 விநாடி பூஜ்யத்தில் இருந்து மணிக்கு களில் 100 கி.மீ. வேகத்தில் பயணிக்கும். அதிகபட்சமாக மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் செல்லும் திறன் கொண்டதாகும். 
  • காசி தரிசனம் திட்டம் 
  • இதனிடையே, இந்திய ரயில்வே துறையின் பாரத் கெளரவ் ரயில் கொள்கையின்படி, கர்நாடக ஹிந்து அறநிலையத்துறை சார்பில் இயக்கப்படும் பாரத் கௌரவ் காசி தரிசனம் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடக்கி வைத்தார். காசி யாத்திரையை 8 நாள்களுக்கு மேற்கொள்ள சலுகைக் கட்டணத்தில் இந்த ரயில் இயக்கப்படுகிறது. 
  • காசி யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கு கர்நாடக அரசு தலா ரூ. 5 ஆயிரம் உதவித்தொகை வழங்குகிறது. 

  4. 108 அடி உயர கெம்பே கௌடா சிலை திறப்பு 

  • பிரதமர் மோடி, தேவனஹள்ளியில் உள்ள கெம்பே கௌடா பன்னாட்டு விமான நிலைய வளா கத்தில் 108 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள கெம்பே கௌடாவின் வெண்கலச் சிலை, பூங்காவை திறந்து வைத்தார். 
  • ‘வளமையின் சிலை’ என்று அழைக்கப்படும் கெம்பே கௌடா சிலையின் எடை 218 டன்னாகும். இந்தச் சிலையானது 98 டன் வெண்கலம், 120 டன் எஃகு உலோகங்களால் செய்யப்பட்டுள்ளது.  
  • கெம்பே கௌடாவின் வாள் 4 டன் எடை கொண்டாகும்.  
  • இந்தச் சிலையை சுற்றி 23 ஏக்கர் நிலத்தில் ரூ.84 கோடியில் கெம்பே கௌடா பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. 
  • 2ஆவது முனையம் 
  • முன்னதாக, பெங்களூரு, தேவனஹள்ளியில் அமைந்துள்ள கெம்பெ கௌடா பன்னாட்டு விமான நிலையத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 2-ஆவது முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.  
  • ரூ. 5 ஆயிரம் கோடியில் உருவாக்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் தோழமை முனையம்முழுக்க முழுக்க மூங்கில்களால் அமைக்கப்பட்டுள்ளது.  
  • புதிய முனையத்துக்கு ‘பூங்காவில் ஒரு முனையம்’ என பெயரிடப்பட்டுள்ளது. 
  • இந்த முனையத்தில் அமைக்கப்பட்டுள்ள தொங்கும் தோட்டங்கள் அதிசயமாகப் பார்க்கப்படுகிறது.  
  • விமான நிலையத்துக்கு நுழைவதற்கு முன், 10 ஆயிரம் சதுரமீட்டரில் அமைக்கப்பட்டுள்ள பசுமை சுவர்களைக் கடந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 

உலக செய்திகள் 

 1. உச்ச அளவில் சர்வதேச கரியமில வாயு வெளியேற்றம் 

  • சர்வதேச அளவிலான கரியமில வாயு வெளியேற்றம் நடப்பு 2022-ஆம் ஆண்டில் 4,060 டன் என்ற அளவைத் தொடும் என ஐ.நா. ஆய்வறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.  
  • இது கடந்த 2019- ஆம் ஆண்டில் பதிவான 4,090 டன் என்ற உச்ச அளவைவிட சற்றே குறைவாகும். 
  • ஐ.நா. 27-ஆவது பருவநிலை மாநாடு எகிப்தில் நடைபெற்று வரும் நிலையில், ‘சர்வதேச கார்பன் பட்ஜெட்’ என்ற ஆய்வறிக்கையின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.  
  • அந்த அறிக்கையில், ‘நடப்பாண்டில் சர்வதேச கரியமில வாயு வெளியேற்றம் 4,060 டன்னாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.  
  • இதே அளவில் கரியமில வாயு வெளியேற்றம் தொடர்ந்தால், பூமியின் வெப்பநிலையானது தொழில்புரட்சிக்கு முந்தைய அளவை விட 1.5 டிகிரி செல்சியஸ் அளவை இன்னும் 9 ஆண்டுகளில் எட்டிவிட 50 சதவீத வாய்ப் புள்ளது. 
  • கடந்த 2021-ஆம் ஆண்டில் சர்வதேச கரியமில வாயு வெளியேற்றத்தில் சீனா (31 சதவீதம்), அமெரிக்கா (14 சதவீதம்), ஐரோப்பிய யூனியன் (8 சதவீதம்) ஆகியவை முன்னிலையில் உள்ளன.  
  • இந்தியா 7 சதவீத கரியமில வாயுவை வெளியேற்றியது. நடப்பாண்டில் கரியமில வாயு வெளியேற்றம் சீனாவில் 0.9 சதவீதமும், ஐரோப்பிய யூனியனில் 0.8 சதவீதமும் குறையும் எனக்கணிக்கப்பட்டுள்ளது.  
  • ஆனால், அமெரிக்காவில் 1.5 சதவீதமும், இந்தியாவில் 6 சதவீதமும், சர்வதேச அளவில் 1.7 சதவீதமும் அதிகரிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. 

பொருளாதார செய்திகள் 

 1. இந்திய பொருளாதார வளர்ச்சி 7 ஆக குறையும் 

  • இந்தியாவின் பொருளாதாரம் நடப்பாண்டில் 7 சதவீதம் மட்டுமே வளர்ச்சி காணும் என மூடிஸ் மதிப்பாய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.  
  • சர்வதேச சூழல் காரணமாக, 7.7 சதவீதம் என்ற முந்தைய கணிப்பை அந் நிறுவனம் தற்போது குறைத்துள்ளது. 
  • இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2022-ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி கணிப்பு 7.7 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது. 
  • கடந்த 2021-ஆம் ஆண்டில் இந்தியப் பொருளாதாரம் 8.5 சதவீதம் வளர்ச்சி கண்டது. 2023-ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 4.8 சதவீதமாகவும், 2024- ஆம் ஆண்டில் 6.4 சதவீதமாகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.  
  • பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும் அந்நியச்செலாவணி கையிருப்பை அதிகரிக்கவும் இந்திய ரிசர்வ் வங்கியானது (ஆர்பிஐ) வட்டி விகிதங்களை மேலும் 0.5 சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. 
  • இந்தியப் பொருளாதார வளர்ச்சி கணிப்பை உலக வங்கி 7.5 சதவீதத்தில் இருந்து 6.5 சதவீதமாகவும், சர்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) 7.4 சதவீதத்தில் இருந்து 6.8 சதவீதமாகவும், ஆசிய வளர்ச்சி வங்கி 7.5 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாகவும் குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

CA 12.11.2022 (English Version)

Indian News 

   1. Jharkhand Assembly to increase reservation ceiling to 77% Passage of the Bill 

  • In Jharkhand, a grand coalition government of Jharkhand Mukti Morcha and Congress is taking place under the leadership of Chief Minister Hemant Soran. 
  • The reservation ceiling in state government jobs here is currently 60 percent. It also includes 10 percent reservation for economically backward classes. 
  • In this case, a special session of the Jharkhand Legislative Assembly was held. In this, the Jharkhand Government Job Vacancies and Jobs Amendment Bill-2022 to raise the reservation ceiling to 77 percent was passed. 
  • It is stated in the bill that after the inclusion of this amendment in the 9th Schedule of the Constitution, the increase in reservation will come into effect. Therefore, the central government has been urged to include this amendment in the 9th schedule. 
  • As per the bill passed now, reservation for tribals will increase from 26 to 28 percent. 
  • The existing 10 percent reservation for backward classes will be increased to 12 percent. Most backward classes and other backward classes will get 15 and 12 percent reservation respectively. 

   2. India-US Financial Cooperation Council 

  • The 9th meeting of India-US Financial Cooperation Committee was held in Delhi. US Treasury Secretary Janet Yellen has come to India to attend it. 
  • In a joint statement released after the meeting, the meeting discussed raising funds to tackle climate change. 
  • A target has been set to raise around Rs.8 lakh crore annually till 2025 to tackle climate change. 
  • It is also committed to help developing countries with that fund. 

3. Chennai-Mysore Vande Bharat Express train service 

  • Prime Minister Narendra Modi inaugurated South India’s first Vande Bharat Express train service between Chennai and Mysore in Bangalore. 
  • PM Modi inaugurated the Chennai-Mysore Vande Bharat train service at Kranti Veerasangolli Rayanna Railway Station. 
  • This is the 5th Vande Bharat Express train service to be launched in India. 
  • India’s first Vande Bharat Express train service was launched in 2019 between New Delhi, Kanpur, Allahabad and Varanasi. 
  • Vande Bharat Express is designed and manufactured entirely based on indigenous technology. 
  • Also, collision avoidance technology between trains has been used. This train goes from zero to 100 kmph in 52 seconds. Travel at speed. Maximum speed is 180 kmph. Capable of speed. 
  • Kashi Darshanam Scheme: 
  • Meanwhile, Prime Minister Modi inaugurated the ‘Bharat Gaurav Kashi Darshanam’ train service operated by the Karnataka Hindu Charity Department as per the Bharat Gaurav Train policy of the Indian Railways. This train is operated at a concessional fare for 8-day Khasi Yatra. 
  • Government of Karnataka provides Rs. 5000 as scholarship. 

  4. Inauguration of 108 feet tall Kempe Gowda statue 

  • Prime Minister Modi inaugurated the 108-feet bronze statue of Kempe Gowda Park at the Kempe Gowda International Airport complex in Devanahalli. 
  • The statue of Kempe Gowda known as the ‘Statue of Prosperity’ weighs 218 tonnes. The statue is made of 98 tons of bronze and 120 tons of steel. 
  • Kempe Gowda’s sword weighs 4 tons. 
  • Kempe Gowda Park has been constructed around this statue on 23 acres of land at a cost of Rs.84 crore. 
  • Terminal 2: 
  • Earlier, Prime Minister Modi inaugurated the newly constructed Terminal 2 at Kempegowda International Airport located at Devanahalli, Bengaluru. 
  • Rs. 5,000 crore ‘Eco-Friendly Terminal’ is constructed entirely of bamboo. 
  • The new terminal is named ‘A Terminal in the Park’. 
  • The hanging gardens set up at this terminal are a sight to behold. 
  • Before entering the airport, there is a 10,000 square meter green wall to pass through. 

World news 

  1. Peak international carbon emissions 

  • International carbon dioxide emissions will reach 4,060 tonnes in 2022, according to the UN. The thesis warns. 
  • This is slightly lower than the peak of 4,090 tonnes recorded in 2019. 
  • UN As the 27th Climate Conference is being held in Egypt, the results of the paper ‘International Carbon Budget’ have been published. 
  • In the report, ‘current international carbon dioxide emissions are projected to be 4,060 tonnes. 
  • If carbon emissions continue at the same rate, there is a 50 percent chance that Earth’s temperature will reach 1.5 degrees Celsius above pre-industrial levels within 9 years. 
  • China (31 percent), United States (14 percent) and European Union (8 percent) are leading the global carbon emissions in 2021. 
  • India emits 7 percent carbon dioxide. Carbon dioxide emissions are projected to fall by 0.9 percent in China and 0.8 percent in the European Union this year. 
  • However, it is predicted to increase by 1.5 percent in the US, 6 percent in India and 1.7 percent internationally. 

Economic news 

  1. Indian economic growth will slow down to 7 

  • India’s economy will grow by only 7 percent this year according to Moody’s. 
  • Due to the international environment, the company has now reduced its earlier estimate of 7.7 percent. 
  • In the report released by the company, India’s gross domestic product (GDP) growth forecast for 2022 has been reduced from 7.7 percent to 7 percent. 
  • In the last year 2021, the Indian economy has seen a growth of 8.5 percent. Economic growth is projected to be 4.8 percent in 2023 and 6.4 percent in 2024. 
  • The Reserve Bank of India (RBI) is likely to hike interest rates by another 0.5 percent to curb inflation and boost foreign exchange reserves. 
  • It is noteworthy that the World Bank has reduced India’s economic growth forecast from 7.5 percent to 6.5 percent, the International Monetary Fund (IMF) from 7.4 percent to 6.8 percent, and the Asian Development Bank from 7.5 percent to 7 percent.