TNPSC Current Affairs – Aug 25, 2022

0
34

CA 25.08.2022(Tamil Version)

மாநில செய்திகள் 

1. சாகித்ய அகாதெமி  

 • நிகழாண்டுக்கான (2022) யுவ புரஸ்கார் பால சாகித்ய புரஸ்கார் விருதுகளை சாகித்ய அகாதெமி அறிவித்துள்ளது.  
 • இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில் வெளியாகும் சிறந்த இலக்கிய படைப்புகளுக்கு இந்த விருது அளிக்கப்படுகிறது.  
 • தமிழ் மொழி பிரிவில் தனித்திருக்கும் அரளிகளின் மதியம் என்னும் கவிதை தொகுப்புக்காக தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் பி.காளிமுத்துவுக்கு யுவ பிரஸ்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.  
 • குழந்தைகளுக்கான பால சாகித்திய புரஸ்கார் விருது பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் ஜி.மீனாட்சி எழுதிய மல்லிகாவின் வீடு என்னும் சிறுகதை நூலுக்கு பால சாகித்திய புராஸ்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.  

மத்திய செய்திகள் 

1. பிரிட்டனுக்கான அடுத்த இந்திய தூதர்  

 • பிரிட்டன்கான அடுத்த இந்திய தூதராக மூத்த வெளியுறவு பணி அதிகாரி விக்ரம் கே.துரைசுவாமி  நியமிக்கப்பட்டுள்ளார்.  
 • பிரிட்டன்கான தூதர் காயத்ரி இஸ்ஸார் குமார் கடந்த ஜூன் 30-ம் தேதி ஓய்வு பெற்றார்.  
 • இந்திய வெளியுறவு பணி அதிகாரியான விக்ரம் கே.துரைசுவாமி 1992 ஆம் ஆண்டு பிரிவை சேர்ந்தவர்.  
 • வங்கதேசத்துக்கான இந்திய தூதராக கடந்த 2020 அக்டோபர் மாதம் இவர் பொறுப்பேற்றதிலிருந்து இந்தியா வங்கதேச உறவு வலுவடைந்தது குறிப்பிடத்தக்கது.  

2. உலகின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவை 

 • உலகிலேயே முதல்முறையாக ஹைட்ரஜனை எரிபொருளாக கொண்டு இயங்கும் ரயில்களின் சேவை ஜெர்மனியில் தொடங்கப்பட்டது.  
 • லோயர் சாக்சோனி மாகாணத்துக்கு வழங்கப்பட்டுள்ள 14 ஹைட்ரஜன் ரயில்கள் மூலம் நான்கு நகரங்களை இணைக்கும் 100 கிலோமீட்டர் ரயில் பாதையில் இந்த சேவை வழங்கப்படுகிறது.  

3. தாய்லாந்து பிரதமர் இடை நீக்கம்  

 • தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஓச்சா தனது பதவிக்கால வரம்பை மீறி ஆட்சி செலுத்தி வருகிறாரா என்பது குறித்து முடிவு செய்யும் வரை அவர் பதவியில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று அந்த நாட்டு அரசியல் சாசன நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.  

4. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு 

 • உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கன்டில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்குமார் சிங் பங்கேற்றார்.  

5.தண்ணீர் நாயகர் விருது  

 • பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையின் அடிப்படையில் தண்ணீர் சேமிப்பு மற்றும் நீர் ஆதாரங்களை பாதுகாத்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் மத்திய ஜல் சக்தி அமைச்சகம் ‘தண்ணீர் நாயகர்கள்’ என்ற போட்டியை தொடங்கியது.  
 • இந்த போட்டி மைக்கோவ் தளத்தில் மாதந்தோறும் நடத்தப்படுகிறது.  
 • கடந்த ஜூலை மாதத்திற்கான போட்டியில் வெற்றி பெற்ற ஆறு பேரின் பெயர்களை ஜல் சக்தி அமைச்சகம் நேற்று அறிவித்துள்ளது.  
 • இதில் சென்னை ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த புவனா பஞ்சநாத்தும் ஒருவர்.  
 • மழை நீர் சேகரிப்பு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருவதுடன் வீடு வீடாக சென்று அது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்காக தண்ணீர் நாயகர்கள் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  

6. சாதனை படைத்த இளம் விமானி  

 • பெல்ஜியம் நாட்டை சேர்ந்த இங்கிலாந்து வம்சாவளியான மேக் ரதர்போர்ட் என்கிற 17 வயது சிறுவன் விமானத்தில் தனியாக பறந்து உலகை சுற்றி வந்ததன் மூலம் தனியாக உலகை வளம் வந்து இளம் விமானி என்கிற சாதனையை படைத்துள்ளான்.  
 • மேக் ரதர்போர்ட்டின் இந்த சாதனை பயணம் பல்கோரியா தலைநகர் சோபியாவில் இருந்து கடந்த மார்ச் மாதம் 23ஆம் தேதி தொடங்கியது.  
 • மணிக்கு 300 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் உலகின் அதிவேக அல்ட்ரா லைட் விமானங்களில் ஒன்றாக ஷார்க் என்கிற விமானத்தில் பயணம் செய்த மேக் ரதர்போர்ட் மூன்று மாதத்தில் தன்னுடைய லட்சிய பயணத்தை நிறைவு செய்ய திட்டமிட்டு இருந்தார். 

விளையாட்டு செய்திகள் 

1. பாரா துப்பாக்கி சுடுதல்  

 • தென்கொரியாவில் நடைபெற்ற பாரா உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா 1 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலம் என பத்து பதக்கங்கள் வென்று நிறைவு செய்துள்ளது.  

CA 25.08.2022(English Version)

State news 

1. Sahitya Academy 

 • Sahitya Akademi has announced Yuva Puraskar Bala Sahitya Puraskar Awards for the current year (2022). 
 • The award is given to the best literary works published in 24 recognized languages ​​of India. 
 • Yuva Praskar Award has been announced to writer P. Kalimuthu from Tamil Nadu for his poetry collection ‘Thanithirukkum Aralikalin Madhiyam’ in the Tamil language category. 
 • The Bala Sahitya Puraskar Award for children has been announced for the short story ‘Mallikavin Veedu’ written by writer G. Meenakshi from Tamil Nadu in the Children’s category. 

Central News 

1. Next Indian ambassador to Britain 

 • Senior Foreign Service officer Vikram K. Duraiswamy has been appointed as the next Indian ambassador to Britain. 
 • Ambassador to Britain Gayatri Issar Kumar retired on June 30. 
 • Indian Foreign Service Officer Vikram K. Duraiswamy is a 1992 batch. 
 • It is noteworthy that India-Bangladesh relations have strengthened since he assumed responsibility as the Indian Ambassador to Bangladesh in October 2020. 

2. World’s first hydrogen train service 

 • World’s first hydrogen fueled train service started in Germany. 
 • The service is provided by 14 hydrogen trains provided to the state of Lower Saxony on a 100 km rail line connecting four cities. 

3. Thai Prime Minister suspended 

 • Thailand’s Constitutional Court has ordered Prime Minister Prayuth Chan-o-cha to step down pending a decision on whether he has exceeded his term limit. 

4. Shanghai Cooperation Organization 

 • Defense Minister Rajkumar Singh participated in the Shanghai Cooperation Organization Conference held in Tashkent, the capital of Uzbekistan. 

5. ‘Water hero’ award 

 • Based on the vision of Prime Minister Modi, the Ministry of Jal Shakti has launched a competition called ‘Water Heroes’ to create awareness about water conservation and conservation of water resources. 
 • This competition is held monthly at Mycove site. 
 • The Ministry of Jal Shakti yesterday announced the names of the six winners of the contest for the month of July. 
 • Bhuvana Panchanath from Alwarpet, Chennai is one of them. 
 • He has been selected for the Water Heroes Award for implementing the Rain Water Harvesting Scheme and creating awareness about it by going door to door. 

6. An accomplished young pilot 

 • A 17-year-old boy named Mac Rutherford of English descent from Belgium has made a record as a young pilot by flying solo around the world. 
 • This record journey of Mac Rutherford started from Sofia, the capital of Bulgaria, on the 23rd of March. 
 • Mac Rutherford, who traveled in ‘Shark’ one of the world’s fastest ultra-light aircrafts with a speed of 300 kilometers per hour, was planning to complete his ambitious journey in three months. 

Sports news 

1. Para shooting 

 • India has won 1 gold, 4 silver and 5 bronze medals in the Para World Cup shooting competition held in South Korea.