TNPSC Current Affairs – Aug 26, 2022

0
38

CA 26.08.2022(Tamil Version)

மாநில செய்திகள் 

1. தேசிய நல்லாசிரியர் விருது  

 • மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை செப்டம்பர் ஐந்தாம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.  
 • இந்த நாளில் சிறந்த ஆசிரியர்களுக்கு மத்திய அரசு சார்பில் தேசிய நல்லாசிரியர் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படும்.  
 • நிகழாண்டு தேசிய நல்லாசிரியர் விருதுக்கு நாடு முழுவதும் 46 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.  
 • ராமநாதபுரம் மாவட்டம் கீழம்பல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் கே.ராமச்சந்திரனுக்கு 2022 ஆம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.  
 • ஆசிரியர் கே.ராமச்சந்திரனின் செயல்பாடுகள்:  
 • இடைநிலை ஆசிரியரான கே.ராமச்சந்திரன் தனது கிராமத்தில் உள்ள பட்டதாரிகளுக்கு டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு பயிற்சி வழங்கி வருகிறார்.  
 • Students Skills என்ற பெயரில் Youtube இல் கீழம்பல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு என தனியாக கணக்கை தொடங்கி மாணவர்களின் தனித்திறனை வெளிக்கொணர்ந்து வருகிறார்.  
 • புதுச்சேரி ஆசிரியருக்கு விருது:  
 • புதுச்சேரி முதலியார் பேட்டை அர்ஜுன சுப்பராய நாயக்கர் அரசு உயர்நிலைப்பள்ளி அறிவியல் ஆசிரியர் தே.அரவிந்தராஜா தேசிய நல்லசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.  
 • பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு 30 வகையான நவீன உத்திகளை பயன்படுத்தி பாடம் நடத்தியது, மாணவர்களுக்கு கல்வியுடன் சமூக அக்கறை அறிவியல் ஆராய்ச்சிகளை வளர்த்தெடுத்தல், அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றுதல் உள்ளிட்டவற்றுக்காக அவர் தேர்வு செய்யப்பட்டார்.  

2. பள்ளி புத்தாக மேம்பாட்டு திட்டம்  

 • தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு புத்தாக்க நிறுவனமும், பள்ளிக் கல்வித் துறையும் இணைந்து மாவட்டங்களில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு முதல் +2 வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளி புத்தக மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.  
 • இதன் மூலம் மாணவர்களின் புதிய தொழில் கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பது, தொழில் முனைவோர் கலாச்சாரத்தை வளர்ப்பது, தொழில் முனைதல் மற்றும் தலைமைத்துவம் பண்புகளை உருவாக்குதல் போன்ற பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.  

மத்திய செய்திகள் 

1. ஐஎம்எஃப் செயல் இயக்குநர்  

 • சர்வதேச நிதியத்தின் ஐஎம்எஃப் செயல் இயக்குநராக முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் நியமிக்கப்படுவதாக மத்திய பணியாளர்கள் அமைச்சகம் தெரிவித்தது.  
 • தற்போது சர்வதேச நிதியத்தில் இந்தியா சார்பில் செயல் இயக்குநராக செயல்பட்டு வரும் சுர்ஜித் எஸ்.பல்லா கடந்த 2019 அக்டோபரில் இந்த பொறுப்பை ஏற்றார்.  
 • அவரது பணிக்காலம் அக்டோபர் 30-இல் நிறைவடைகிறது.  

2. டிஆர்டிஓ புதிய தலைவர்  

 • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறையின் செயலராகவும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) தலைவராகவும் விஞ்ஞானி சமீர் வி காமத்தை நியமிக்க நியமனங்களுக்கான அமைச்சரவை குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.  
 • இதன் தலைவராக இருந்த சதீஸ் ரெட்டி கடந்த 2018 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டார்.  
 • கடந்த 2020 ஆகஸ்ட் மாதத்தில் அவருக்கு இரு ஆண்டுகள் பதவிக்காலம் நீட்டிப்பு செய்யப்பட்டது.  

3. விக்ராந்த் விமானம்  

 • உள்நாட்டிலேயே கட்டப்பட்ட முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் செப்டம்பர் இரண்டாம் தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட உள்ளது.  
 • கொச்சியில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார்.  
 • சில ஆண்டுகளுக்கு இதில் மிக்29கே போர் விமானங்கள் இயக்கப்பட உள்ளன.  
 • இப்போர்க்கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படுவதன் மூலம் 40,000 டன் எடைக்கு மேலான பிரிவில் உள்நாட்டிலேயே விமானம் தாங்கி போர்க்கப்பலை கட்டும் திறன் கொண்ட உயர்நாடுகள் குழுவில் இந்தியா கால் பதிக்க உள்ளது.  
 • தற்போது இந்தியாவிடம் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா என்கிற ரஷ்ய தயாரிப்பு விமானம் தாங்கி போர்க்கப்பல் மட்டுமே உள்ளது.  

4. ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்  

 • ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டியானது மாணவர்களிடையே புத்தாக்க கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது.  
 • சமூகம் அமைப்புகள் மற்றும் அரசு சார்ந்த பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வுகளை கண்டறிவதற்காக மாணவர்களின் தளமாக இது தொடங்கப்பட்டது. 

CA 26.08.2022(English Version)

State news 

1. National Best Writer Award 

 • Late former President Radhakrishnan’s birthday is celebrated as Teacher’s Day every year on fifth of September. 
 • On this day the best teachers will be felicitated by the Central Government with National Good Writer Awards. 
 • 46 people were selected across the country for this year’s National Good Writer Award. 
 • K. Ramachandran, primary school teacher of Kizambal Panchayat Union of Ramanathapuram District, has been announced for the National Good Teacher Award for the year 2022. 
 • Activities of Teacher K. Ramachandra: 
 • K. Ramachandran, a secondary teacher, is giving coaching for TNPSC competitive exam to graduates in his village. 
 • He has started a separate account for Keezambal Panchayat Union Primary School on YouTube under the name Students Skills and is bringing out the individual skills of students. 
 • Puducherry Teacher Award: 
 • Arjuna Subbaraya Nayak Government High School Science Teacher, Puducherry, Mudaliar Petty, T. Aravindaraja was selected for the National Good Writer Award. 
 • He was selected for teaching students in the school using 30 types of modern techniques, developing social concern science research with education for students, working with a sense of dedication etc. 

2. School Budget Development Plan 

 • The Tamil Nadu Entrepreneurship Development Innovation Institute and the School Education Department will implement a school book development program for the students studying in class IX to XII in government and government-aided high schools in the districts. 
 • Through this, various trainings like encouraging new business innovation, developing entrepreneurial culture, developing entrepreneurship and leadership qualities are provided to the students. 

Central News 

1. IMF Executive Director 

 • Former Chief Economic Adviser Krishnamurthy Subramanian has been appointed as the IMF Executive Director of the International Fund, the Ministry of Personnel has announced. 
 • Surjit S. Bhalla, who is currently acting as the Executive Director on behalf of India at the International Fund, assumed this responsibility in October 2019. 
 • His tenure ends on October 30. 

2. DRDO new chairman 

 • The Cabinet Committee on Appointments has approved the appointment of Scientist Sameer V Kamat as Secretary, Department of Defense Research and Development and Chairman, Defense Research and Development Organization (DRDO). 
 • Sathees Reddy, who was its chairman, was appointed in 2018. 
 • Last August 2020 his tenure was extended by two years. 

3. Vikrant Vimana 

 • INS Vikrant, the first indigenously built aircraft carrier, will be dedicated to the country on September 2. 
 • Prime Minister Narendra Modi is scheduled to participate in the event in Kochi. 
 • It will operate MiG-29K fighter jets for a few years. 
 • With the dedication of this warship to the country, India is set to join the group of top nations capable of indigenously building an aircraft carrier in the 40,000-plus ton category. 
 • At present, India has only one Russian-made aircraft carrier, INS Vikramaditya

4. Smart India Hackathon 

 • Smart India Hackathon competition is being conducted since 2017 to encourage innovation among students. 
 • It was started as a platform for students to find solutions to various problems related to community organizations and government.