TNPSC Current Affairs – Aug 23, 2022

0
38

CA 23.08.2022(Tamil Version)

முக்கிய தினங்கள் 
 

1. அன்னா மாணி: (23 ஆகஸ்ட் 1918 – 16 ஆகஸ்ட் 2001)  

  • ஓர் இந்திய இயற்பியலாளர் மற்றும் வானிலை ஆய்வாளர். 
  • அவர் இந்திய வானிலை ஆராய்ச்சி துறையின் துணை இயக்குநராக பணி புரிந்தார்.  
  • அவர் வளிமண்டலவியல் கருவி மயமாக்கல் துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை அளித்தார்.  
  • அவர் சூரிய மற்றும் காற்று ஆற்றல் அளவீடுகள், ஓசோன் அளவீடுகள் ஆகியவற்றை ஆய்வு நடத்தி ஏராளமான ஆய்வேடுகளைப் வெளியிட்டார். 
  • அவர் 1976 ஆம் ஆண்டில் இந்திய வானிலை ஆராய்ச்சி துறை துணை இயக்குனராக ஓய்வு பெற்றார்.  
  • அவர் இரண்டு புத்தகங்களை எழுதியுள்ளார். அவை – 1980 ல் ‘The Handbook for Solar Radiation data for India மற்றும் 1981 ல் Solar Radiation over India.  
  • அவர் 1987ல் KR ராமநாதன் பதக்கம் வென்றார். 

மாநில செய்திகள் 

1. குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1000  

  • புதுவையில் 21 வயதுக்கு மேல் 55 வயதுக்குள்பட்ட ஏழைக் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 உதவித்தொகை வழங்கப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் முதல்வர் என்.ரங்கசாமி அறிவித்தார்.  
  • மாணவர்களுக்கு அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் ஒன் பிளஸ் டூ படித்து வரும் மாணவர்களுக்கு வரும் அரசு சார்பில் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும்.  
  • ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்.  
  • காரைக்கால் இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து  
  • காரைக்கால் துறைமுகம் இலங்கை காங்கேஷன் துறைமுகம் இடையே பயணிகள், சரக்கு கப்பல் போக்குவரத்து நிகழாண்டு தொடங்கப்படும்.  
  • சாகர்மாலா திட்டத்தின் கீழ் சென்னை துறைமுக கழகத்துடன் இணைந்து புதுவை துறைமுகத்தில் சரக்குகள் கையாளும் பணிகள் நிகழாண்டு முதல் செயல்பட தொடங்கும்.  

2. செம்மொழி தமிழ் விருது  

  • கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருது வழங்கும் விழா நடைபெற்றது.  
  • விழாவில் 2020 ஆம் ஆண்டுக்கான விருது தமிழ் பல்கலைக்கழகம் முன்னாள் துணைவேந்தர் மா.ராஜேந்திரனுக்கும் 2021 ஆம் ஆண்டுக்கான விருது முன்னாள் தமிழ் பேராசிரியர் .நெடுஞ்செழியனுக்கும், 2022 ஆம் ஆண்டுக்கான விருது பிரெஞ்சு நாட்டு அறிஞர் ழான் லூய்க் செவ்வியாருக்கும் வழங்கப்பட்டது.  
  • இந்த விருது இந்தியாவிலேயே மிக உயரிய அளவில் ரூபாய் 10 லட்சம் பரிசு தொகையும், பாராட்டுதலும், முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவம் பொறித்த நினைவுப் பரிசும் அடங்கியது.  

மத்திய செய்திகள் 

1. குறைந்தபட்ச ஆதரவு விலை: நான்கு துணைக் குழுக்கள் அமைப்பு  

  • வேளாண் விளைப் பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை நடைமுறை தொடர்பாக 4 துணை குழுக்கள் அமைக்கப்பட்டன.  
  • மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்திய தொடர் போராட்டங்களை அடுத்து அந்த சட்டங்கள் கடந்த ஆண்டு நவம்பரில் திரும்பப் பெறப்பட்டன.  
  • இந்நிலையில் குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பான குழுவின் முதல் கூட்டம் டில்லியில் நடைபெற்றது.  
  • கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆலோசனைகளின் படி வெவ்வேறு பணிகளை மேற்கொள்ளும் வகையில் நான்கு துணைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.  
  • முதல் குழுவானது இமயமலையை ஒட்டிய மாநிலங்களில் பயிர் சாகுபடி முறைகள் புதிய பயிர்கள் அறிமுகம் குறித்தும், இம்மாநிலங்களில் குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்வது குறித்தும் ஆராயும்.  
  • சுக்பால் சிங் தலைமையில் செயல்படவிருக்கும் இரண்டாவது குழு நுண்ணீர் பாசன முறையை விவசாயிகளை மையமாகக் கொண்டதாக மாற்றுவது, இதற்கான மானிய தேவைகள் குறித்து ஆலோசிக்கும்.  
  • மூன்றாவது குழு தேசிய வேளாண் விரிவாக்கம் மேலாண்மை நிறுவனத்தின் பிரதிநிதி தலைமையில் செயல்படும்.  
  • இது இயற்கை விவசாய நடைமுறைகள் குறித்து விவசாயிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான வழிகளை கண்டறியும்.  
  • இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் உள்பட சில உயர் ஆராய்ச்சி நிறுவனங்கள் தலைமையில் செயல்படவிருக்கும் நான்காவது குழு புதிய பெயர்கள் அறிமுகம், சாகுபடி முறைகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்.  

2. தாட்கோ  

  • தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களை பெறுவதற்கான ஆண்டு வருமான உச்சவரம்பு ரூபாய் மூன்று லட்சமாக உயர்த்தப்பட்டது.  
  • இதற்கான உத்தரவை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை வெளியிட்டது.  
  • தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பொருளாதார மேம்பாட்டு திட்டத்திற்கு குடும்ப ஆண்டு வருமானம் ரூபாய் 2 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.  
  • இந்தத் தொகை ரூபாய் 3 லட்சம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

3. போர்க்கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு  

  • உள்நாட்டிலேயே கட்டப்பட்ட விக்ராந்த் விமானம் தாங்கி போர்க்கப்பலை பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் இரண்டாம் தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.  
  • விமானம் தாங்கி போர்க்கப்பல்களை உள்நாட்டிலேயே கட்டுவதற்கான திட்டத்தை கடந்த 2007 ஆம் ஆண்டு மத்திய அரசு செயல்படுத்தியது.  
  • அத்திட்டத்தின் கீழ் முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலாக விக்ராந்த் சுமார் ₹20,000 கோடி மதிப்பில் கட்டப்பட்டது.  
  • கொச்சி கப்பல் கட்டுமான நிறுவனம் அந்த கப்பலை கட்டும் பணியை 2009 ஆம் ஆண்டு தொடங்கியது.  

4. தேசிய நோய் எதிர்ப்பியல் நிறுவனத்துக்கு புதிய இயக்குனர்  

  • தேசிய நோய் எதிர்ப்பியல் நிறுவனத்தின் (என்ஐஐ) புதிய இயக்குனராக மூத்த ஆராய்ச்சியாளர் தேவாசிஷ் மொஹந்தி நியமிக்கப்பட்டார்.  

5. மத்திய பிரதேசத்தில் சிமி பயங்கரவாத செயல்பாடுகள் வேரோடு அழிப்பு  

  • தடை செய்யப்பட்ட சிமி பயங்கரவாத இயக்கத்தின் செயல்பாடுகளை மத்திய பிரதேசத்திலிருந்து பாஜக அரசு வேரோடு அழித்துவிட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பெருமிதத்துடன் தெரிவித்தார்.  

6. மத்திய மண்டல கவுன்சில் கூட்டம் 

  • கடந்த 1957ஆம் ஆண்டு நாட்டில் 5 மண்டல கவுன்சில்கள் அமைக்கப்பட்டன.  
  • 1956 ஆம் ஆண்டு ஆண்டின் மாநிலங்கள் மறுசீரமைப்பு சட்டத்தின்படி அந்த கவுன்சில்கள் அமைக்கப்பட்டன.  
  • அந்த கவுன்சில்களின் தலைவராக மத்திய உள்துறை அமைச்சர் இருப்பார் . 
  • இந்நிலையில் மத்திய மண்டல கவுன்சிலில் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், உத்திரபிரதேசம், உத்தரகண்ட் ஆகிய நான்கு மாநிலங்கள் உள்ளன.  
  • அந்த கவுன்சிலின் கூட்டம் மத்திய பிரதேச தலைநகர் போபாலில் நடைபெற்றது.  

7. பராகுவேயில் மகாத்மா காந்தி சிலை  

  • பராகுவே தலைநகர் அசுன்சியானில் மகாத்மா காந்தி சிலையை வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.ஜெயசங்கர்  திறந்து  வைத்தார்.  

CA 23.08.2022(English Version)

Important days 

1. Anna Mani: (23 August 1918 – 16 August 2001) 

  • An Indian physicist and meteorologist. 
  • He served as Deputy Director of Indian Meteorological Department. 
  • He made significant contributions in the field of atmospheric instrumentation. 
  • He studied solar and wind energy measurements, ozone measurements and published numerous papers. 
  • He retired in 1976 as Deputy Director, Indian Meteorological Department. 
  • He has written two books. They are – The Handbook for Solar Radiation data for India in 1980 and Solar Radiation over India in 1981. 
  • He won the KR Ramanathan Medal in 1987. 

State news 

1. Rs 1000 per month for heads of households 

  • Chief Minister N. Rangaswamy announced in the financial report that Rs 1000 per month will be given to the heads of poor families between 21 and 55 years of age in Puduwai. 
  • Students studying Plus One Plus Two in government aided schools will be given free laptops by the government. 
  • Scheme of providing free bicycles to class IX students will be re-implemented. 
  • Shipping between Karaikal Sri Lanka 
  • Passenger and cargo shipping between Karaikal Port and Sri Lankan Gangeson Port will be started. 
  • Under the Sagarmala project, the cargo handling works at Puduwai Port in collaboration with the Chennai Port Corporation will commence from the date of completion. 

2. Classical Tamil Award 

  • Artist M. Karunanidhi classical Tamil award ceremony was held. 
  • In the ceremony, the award for the year 2020 was given to former Vice-Chancellor of Tamil University M.Rajendran, the award for the year 2021 was given to the former Tamil professor K.Nedunjehian, and the award for the year 2022 was given to the French scholar Lawn Luik Chevy. 
  • The award carries a prize money of Rs 10 lakh, the highest in India, a citation and a memento with the portrait of former Chief Minister Karunanidhi. 

Central News 

1. Minimum Support Price: Four Subgroups System 

  • 4 sub-committees have been set up on Minimum Support Price Procedure for Agricultural Commodities. 
  • The central government’s three new agricultural laws were withdrawn in November last year following a series of protests by farmers. 
  • In this context, the first meeting of the Committee on Minimum Support Price was held in Delhi. 
  • According to the suggestions made in the meeting, four sub-committees have been constituted to carry out different tasks. 
  • The first group will examine cropping systems in the Himalayan states on introduction of new crops and ensuring minimum support prices in these states. 
  • The second committee to be chaired by Sukhpal Singh will discuss the need to make micro-irrigation farmer-centric and the subsidy requirements for this. 
  • The third group will be headed by a representative of the National Agricultural Extension Management Institute. 
  • It will find ways to create awareness among farmers about organic farming practices. 
  • A fourth group headed by some top research institutes including the Indian Council of Agricultural Research will study and report on the introduction of new names and cultivation methods. 

2. Tatko 

  • The annual income ceiling for availing welfare schemes implemented by TADCO has been increased to Rs.3 lakhs. 
  • The order to this effect was issued by the Adi Dravidian and Tribal Welfare Department. 
  • The Economic Development Scheme for Adi Dravidian and Tribals implemented by TADCO had fixed annual household income of Rs 2 lakh. 
  • It is noteworthy that this amount has been increased to Rs.3 lakhs. 

3. Commitment to warship nation 

  • Prime Minister Narendra Modi will dedicate the indigenously built aircraft carrier ‘Vikrant’ to the nation on September 2. 
  • In 2007, the central government implemented the plan to build aircraft carriers locally. 
  • Vikrant was built as the first aircraft carrier under the scheme at a cost of around ₹20,000 crore. 
  • Cochin Shipbuilding Company started construction of the vessel in 2009. 

4. New Director for National Institute of Immunology 

  • Veteran researcher Devasish Mohanty appointed as new director of National Institute of Immunology (NII). 

5. Eradication of ‘Simi’ terrorist activities in Madhya Pradesh 

  • Union Home Minister Amit Shah proudly announced that the BJP government has rooted out the activities of the banned ‘SIMI’ terrorist movement from Madhya Pradesh. 

6. Central Zonal Council meeting 

  • In 1957, 5 Zonal Councils were formed in the country. 
  • The councils were constituted under the States Reorganization Act of 1956. 
  • The Union Home Minister will be the Chairman of the Councils. 
  • Meanwhile, Madhya Pradesh, Chhattisgarh, Uttar Pradesh and Uttarakhand have four states in the Central Zonal Council. 
  • The meeting of the council was held in Bhopal, the capital of Madhya Pradesh. 

7. Statue of Mahatma Gandhi in Paraguay 

  • External Affairs Minister S. Jayashankar inaugurated the statue of Mahatma Gandhi in Paraguay capital Asuncion. 

8. South Korea – US resumes joint war drills 

  • The US and South Korea have started a massive joint military exercise. 
  • This joint exercise is named Ulchi Freedom Shield