TNPSC Current Affairs – Aug 22, 2022

0
31

CA 22.08.2022(Tamil Version)

 
மாநில செய்திகள் 

1. சென்னைக்கு வயது 383  

 • 1639 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி தான் தமிழர்களின் அடையாளங்களில் ஒன்றாக திகழும் இந்நகரம் உருவானது.  
 • அன்றைய தினம் கிழக்கிந்திய கம்பெனியை சேர்ந்த பிரான்சிஸ்டே, ஆண்ட்ரூ கோகன் ஆகியோர் தங்களது உதவியாளர் பெரிதிம்மப்பா என்பவர் உடன் இப்போது  செயின் ஜார்ஜ் கோட்டை உள்ள இடத்தை வாங்கினார்கள்.  
 • அந்த இடத்தை இவர்களிடம் பெற்ற ஐயப்பன் மற்றும் வேங்கடப்பன் ஆகியோரின் தந்தையான சென்னப்ப நாயக்கர் என்பவரின் நினைவாக கோட்டைக்கு வடக்கில் உள்ள ஊர் சென்னப்பட்டினம் என்று அழைக்கப்பட்டது. 

மத்திய செய்திகள் 

1. ரசாயன, கதிர்வீச்சு உயர் சிகிச்சை மையங்கள்  

 • ரசாயனம் கதிர்வீச்சு உள்ளிட்டவற்றால் பாதிப்புக்கு உள்ளாகும் நபர்களுக்கு உயர் சிகிச்சை வழங்குவதற்கான மையங்களை தமிழகத்திலும், ஹரியானாவிலும் அமைக்க மத்திய சுகாதார அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.  
 • பெரும் தொழிற்சாலைகளில் அவ்வப்போது ரசாயன விபத்துக்கள் உள்ளிட்டவை ஏற்பட்டு வருகின்றன.  
 • போபால் விஷவாயு தாக்குதல், விசாகப்பட்டினம் எச்பிசிஎல் நிறுவனத்தில் விஷவாயு கசிவு, துக்ளக்காபாத் விஷவாயு கசிவு, கான்பூர் அம்மோனியா வாயுகசிவு உள்ளிட்ட விபத்துக்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.  
 • அதுபோன்ற விபத்துகளில் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மூன்றாம் ரக உயர் சிகிச்சை மையங்களை சென்னையில் உள்ள ஸ்டான்லி மருத்துவமனையிலும், ஹரியானாவின் ஜஜ்ஜார் எய்ம்ஸ் வளாகத்திலும் அமைக்க மத்திய சுகாதார அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.  

2. எம்க்யூ 9 பி வகை ட்ரோன்கள்  

 • அமெரிக்காவிடமிருந்து ஆயுதங்களை சுமந்து செல்லும் எம்கியூ 9-பி வகை ட்ரோன்களை இந்தியா கொள்முதல் செய்ய உள்ளது தொடர்பான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.  
 • அமெரிக்காவின் சான்டியாகோ பகுதியை தலைமையகமாகக் கொண்ட ஜெனரல் அட்டாமிக்ஸ் குளோபல் கார்ப்பரேஷன் என்ற தனியார் நிறுவனம் அந்த ட்ரோன்களை தயாரிக்கிறது.  

3. இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் பேருந்து பூனேயில் தொடக்கம்  

 • ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் இயங்கும் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட முதல் பேருந்து மத்திய அறிவியல் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் பூனேயில் தொடங்கி வைத்தார்.  
 • மத்திய அறிவியல் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலும் (சிஎஸ்ஐஆர்) – கேபிஐடி தனியார் நிறுவனம் இணைந்து இந்த பேருந்தை உருவாக்கியுள்ளனர்.  

விளையாட்டு செய்திகள் 

1. உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்  

 • 27 ஆவது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில்  ஆகஸ்ட் 22 ஆம் தொடங்கி 28ஆம் தேதி வரை நடக்கிறது.  

CA 22.08.2022(English Version)

State news 

1. Chennai is 383 years old 

 • On 22nd August 1639, this city, which is one of the symbols of Tamils, came into being. 
 • On that day, Francisday and Andrew Cogan of the East India Company along with their assistant Perithimappa bought the site where Fort Saint George is now. 
 • The town to the north of the fort was called Chennapatnam in honor of Chennappa Nayakkar, the father of Ayyappan and Vengadappan, who inherited the place from them. 

Central News 

1. Chemical and radiation advanced treatment centers 

 • The Union Health Ministry is planning to set up centers in Tamil Nadu and Haryana to provide advanced treatment for people affected by chemicals and radiation. 
 • Chemical accidents etc. occur from time to time in large industries. 
 • Accidents like Bhopal gas attack, Visakhapatnam HBCL gas leak, Tughlaqabad gas leak, Kanpur ammonia gas leak have caused huge impact. 
 • The Union Health Ministry plans to set up tertiary care centers at Stanley Hospital in Chennai and Jhajjar AIIMS campus in Haryana to treat victims of such accidents. 

2. MQ-9B type drones 

 • There has been progress in talks regarding India’s purchase of MQ-9-B weapon-carrying drones from the US. 
 • General Atomics Global Corporation, a private company headquartered in Santiago, USA, manufactures the drones. 

3. India’s first hydrogen bus launched in Pune 

 • Union Minister of State for Science Jitendra Singh inaugurated India’s first hydrogen-powered bus in Pune. 
 • Central Council of Scientific and Industrial Research (CSIR) and KPIT, a private company, jointly developed this bus. 

Sports news 

1. World Badminton Championship 

 • The 27th World Badminton Championship will be held in Tokyo, the capital of Japan from August 22 to 28.