TNPSC Current Affairs – Aug 17, 2022

0
40

CA 17.08.2022(Tamil Version)

மத்திய செய்திகள் 

1. தலாக்ஹாசனும் முத்தலாக்கும் ஒன்றல்ல  

  • இஸ்லாமில் விவாகரத்து பெற ஒருமுறை கூறப்படும் உடனடி முத்தலாக்கும், மாதம் ஒருமுறை என மூன்று முறை கூறப்படும் தலாக்-இ-ஹசனையும் ஒன்றாக கருத முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.  
  • இஸ்லாமில் மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற கணவர் தலாக்கும், கணவரிடமிருந்து விவாகரத்து பெற மனைவி குலாவும் அறிவிக்கிறார்கள்.  
  • இதில் உடனடியாக விவாகரத்து அறிவிப்பதாக ஆண்களால் கூறப்படும் முத்தலாக்குக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  
  • தொடர்ந்து மூன்று மாதங்கள் அறிவிக்கப்படும் தலாக்ஹசனின் போது மூன்றாவது மாத அறிவிப்பில் இருவரும் சேர்ந்து வாழ விரும்பினால் இரண்டு மாதங்களாக அறிவிக்கப்பட்ட தலாக் செல்லாததாகிவிடும்.  
  • எனினும் மாதம் ஒருமுறை என தொடர்ந்து மூன்று மாதங்கள் ஆண்களால் அறிவிக்கப்படும் தலாக்-இ-ஹசன் உள்ளிட்ட அனைத்து வகையிலான தலாக் நடைமுறைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், இதனால் தனது வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது என்றும், காஜியாபாதை சேர்ந்த பேநஸீர் ஹீனா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.  
  • இருவரும் சேர்ந்து வாழ விரும்பவில்லை என்றால் இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 142 இன் கீழும் விவாகரத்து வழங்கப்படுகிறது.  
  • ஆகையால் இஸ்லாத்தில் விவாகரத்து பெற ஒருமுறை கூறப்படும் முத்தலாக்கும், மாதம் ஒருமுறை என மூன்று முறை கூறப்படும் தலாக்-இ-ஹசனும் ஒன்றாக கருத முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது. 

2.வாசுகிசரக்கு ரயில்  

  • நாட்டிலேயே நீளமான மற்றும் அதிக சரக்கு பெட்டிகளை எடுத்துச் செல்லக்கூடிய சூப்பர் வாசுகி சரக்கு ரயில் (3.5 கிலோமீட்டர் நீளம்) வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது.  
  • சத்தீஸ்கர் மாநிலம் கோர்பாவில் இருந்து மகாராஷ்டிரத்தின் நாகபுரிக்கு 295 சரக்கு பெட்டிகளில் 27,000 டன் நிலக்கரியை ஏற்றிக்கொண்டு இந்த ரயில் சாதனை பயணத்தை மேற்கொண்டது. 

3. இலங்கை வந்தது சீன உளவு கப்பல்  

  • சீன உளவு கப்பல் இலங்கை துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தது.  
  • சீனாவிடம் ராணுவம் மற்றும் விண்வெளி ஆய்வுக்காக 7 உளவு கப்பல்கள் உள்ளன.  
  • அவற்றில் யுவான் வாங்5 என்ற உளவு கப்பலும் அடங்கும்.  
  • அது 212 மீட்டர் நீளமும் 28 மீட்டர் அகலமும் கொண்டது.  
  • அதில் விண்வெளி ஆய்வு கருவிகள் உள்ளன. 
  • விண்வெளியில் இயங்கும் செயற்கை கோள்களையும், வானில் செலுத்தப்படும் ஏவுகணைகளையும் இந்த கப்பலால் ஆய்வு செய்ய முடியும்.  
  • இருக்கும் இடத்திலிருந்து 750 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடங்களை கண்காணிக்க முடியும். 
  • அந்த உளவு கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்குள் வந்து நங்கூரம் இட்டு நிறுத்தப்பட்டது. 

விளையாட்டு செய்திகள் 

1. இந்திய கால்பந்து சம்மேளனத்துக்கு தடை  

  • விதிகளை மீறி செயல்பட்டதால் இந்திய கால்பந்து சம்மேளனத்துக்கு ‘பிபா’ திடீரென தடை விதித்துள்ளது.  
  • கால்பந்து அமைப்பில் பிரச்சனை:  
  • இந்திய கால்பந்து சம்மேளனத்தின் தலைவராக முன்னாள் மத்திய மந்திரி பிரபுல் பட்டேல் 2009 ஆம் ஆண்டு முதல் நீண்ட காலமாக பதவி வகித்து வந்தார்.  
  • இந்திய கால்பந்து சம்மேளன நிர்வாகிகள் தேர்தல் கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் நடத்தப்பட்டிருக்க வேண்டும்.  
  • ஆனால் தேர்தலை நடத்தாமல் இழுத்தடித்ததால் தலைவர் பதவியில் இருந்து பிரபுல் பட்டேலை கடந்த மே 18ஆம் தேதி சுப்ரீம் கோர்ட் அதிரடியாக நீக்கி உள்ளது.  
  • மேலும் இந்திய கால்பந்து சம்மேளனத்தை நிர்வாகிக்க கோர்ட் உத்தரவுப்படி முன்னாள் நீதிபதி .ஆர்.தேவ் தலைமையில் மூன்று பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டது.  
  • தேசிய விளையாட்டுக் கொள்கைக்கு உட்பட்டு இந்திய கால்பந்து சம்மேளனத்தின் நிர்வாகி விதிமுறையில் திருத்தம் மேற்கொள்ளவும் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.  
  • இதன் தொடர்ச்சியாக இந்திய கால்பந்து சம்மேளனத்தின் நிர்வாகிகள் தேர்தலை வருகிற 28ஆம் தேதி நடத்த நிர்வாக கமிட்டி ஏற்பாடுகளை செய்து வருகிறது.  
  • தலைசிறந்த முன்னாள் வீரர்கள், மாநில கால்பந்து சங்க நிர்வாகிகள் என மொத்தம் 67 பேர் வாக்களிக்க தகுதி படைத்தவர்களாக முதற்கட்ட பட்டியல் வெளியிடப்பட்டது.  
  • இந்திய கால்பந்து சம்மேளன நிர்வாகத்தில் மூன்றாம் தரப்பினரின் தேவையற்ற தலையீடு இருக்கிறது. 
  • இந்த தலையீடானது ‘பிபா’ அமைப்பின் விதிமுறைகளை மீறிய தீவிர செயலாக கருதப்படுகிறது.  
  • இதன் காரணமாக இந்திய கால்பந்து சம்மேளனத்தை உடனடியாக இடைநீக்கம் செய்வது என்று ‘பிபா’ கவுன்சில் ஒரு மனதாக முடிவு செய்துள்ளது. 

CA 17.08.2022(English Version)

Central News 

1. Talaq-e-Hasan and Triple Talaq are not the same things 

  • The Supreme Court said that instant triple Talaq, which is said once for divorce in Islam, and Talaq-e-Hasan, which is said thrice once a month, cannot be treated as the same thing. 
  • In Islam, the husband pronounces talaq to divorce his wife and the wife pronounces gula to divorce her husband. 
  • It prohibits triple talaq, which is said by men to declare instant divorce. 
  • In the case of Talaq-e-Hasan, which is notified for three consecutive months, if both parties wish to live together on the third month’s notice, the two months notice will become null and void. 
  • However, Benazir Heena from Ghaziabad had filed a petition in the Supreme Court demanding a ban on all types of talaq procedures, including talaq-e-Hasan, which is announced once a month by men for three consecutive months, and because of this, her life has been affected. 
  • Divorce is also granted under Article 142 of the Constitution of India if both parties do not want to live together. 
  • Therefore, the Supreme Court said that triple Talaq, which is said once for divorce in Islam, and Talaq-e-Hasan, which is said thrice once a month, cannot be treated as the same thing. 

2. ‘Vasuki’ freight train 

  • The country’s longest and highest-carriage ‘Super Vasuki’ freight train (3.5 km long) was launched. 
  • The train made a record journey from Gorba in Chhattisgarh to Nagpur in Maharashtra carrying 27,000 tonnes of coal in 295 coaches. 

3. A Chinese spy ship arrived in Sri Lanka 

  • Chinese spy ship arrived at Sri Lanka port. 
  • China has 7 spy ships for military and space exploration. 
  • They include the spy ship ‘Yuan Wang-5’
  • It is 212 meters long and 28 meters wide. 
  • It has space probes. 
  • This ship can detect space-borne satellites and air-launched missiles. 
  • Can monitor locations up to 750 km away from location. 
  • The spy ship came into Ambantota port and anchored. 

Sports news 

1. Football Federation of India banned 

  • ‘FIFA’ has suddenly banned the Indian Football Federation for violating the rules. 
  • Problem in football system: 
  • Former Union Minister Prabul Patel has been the President of Football Federation of India for a long time since 2009. 
  • Election of Football Federation of India Executive should have been held by December 2020. 
  • But the Supreme Court has removed Prabul Patel from the post of President on May 18th due to delay in holding the elections. 
  • Further, a three-member committee headed by former judge A.R.Dev was constituted as per the court order to administer the Football Federation of India. 
  • The court had also directed to amend the governing rules of the Football Federation of India in line with the National Sports Policy. 
  • Following this, the executive committee is making arrangements to hold the election of the administrators of the Football Federation of India on the 28th. 
  • A total of 67 eminent ex-players, State Football Association Executives who are eligible to vote have been released in the preliminary list. 
  • There is undue interference of third parties in the management of Football Federation of India. 
  • This intervention is considered a serious violation of the norms of the ‘FIFA’ system. 
  • Because of this the ‘BIBA’ Council has unanimously decided to suspend the Indian Football Federation with immediate effect.