Home TNPSC TNPSC Current Affairs – Aug 08, 2022

TNPSC Current Affairs – Aug 08, 2022

0

CA 08.08.2022(Tamil Version) 

மாநில செய்திகள்  

1. சென்னையில் அமெரிக்க கடற்படை கப்பல்  

  • அமெரிக்க கடற்படை கப்பலான சார்லஸ் டிரியூ பராமரிப்பு மற்றும் பழுது பார்க்கும் பணிகளுக்காக முதல் முறையாக சென்னை காட்டுப்பள்ளி கப்பல் கட்டும் தளத்திற்கு வந்தடைந்தது.  
  • காட்டுப்பள்ளியில் எல் அன்ட் டி நிறுவன கப்பல் கட்டும் தளம் செயல்படுகிறது. 

மத்திய செய்திகள் 

1. சிஎஸ்ஐஆர் முதல் பெண் தலைமை இயக்குநர்  

  • மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சித்துறை செயலாளராகவும், மத்திய அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலின் (சிஎஸ்ஐஆர்) தலைமை இயக்குனராகவும், என்.கலைச்செல்வி நியமிக்கப்பட்டுள்ளார்.  
  • சிஎஸ்ஐஆரின் 80 ஆண்டு கால வரலாற்றில் பெண் ஒருவர் தலைமை இயக்குனராக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.  
  • இவர் இரு ஆண்டு காலம் இப்பணியில் இருப்பார்.  
  • சிஎஸ்ஐஆர்-இன் கீழ் நாடு முழுவதும் 38 அறிவியல் ஆராய்ச்சி நிலையங்கள் உள்ளன. 

2. மாநில மொழிகளில் புகாரை பதிவு செய்ய வசதியாக புதிய நடைமுறை ஐஆர்டிஏஐ  

  • வாடிக்கையாளர்கள் மாநில மொழிகளில் புகாரை பதிவு செய்ய வசதியாக பீமா பரோசா என்ற மறுசீரமைப்பு செய்யப்பட்ட குறைதீர்ப்பு நடைமுறையை இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் ஐஆர்டிஏஐ விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.  
  • கடந்த 2011 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஒருங்கிணைந்த குறை தீர்ப்பு நடைமுறை (ஐஜிஎம்எஸ்) மேலும் செயல்திறன் மிக்கதாக மாற்றும் வகையில் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது என்று ஐஆர்டிஏஐ வட்டாரங்கள் தெரிவித்தனர். 
  • இதன்மூலம் காப்பீடு நிறுவனங்கள் புகார்களை கண்காணித்து குறைகளுக்கு விரைந்து தீர்வு காண முடியும். 

3.ஃபிடேதுணைத் தலைவர் 

  • சர்வதேச செஸ் கூட்டமைப்பு (ஃபிடே) தலைவராக அர்காடி வோர்கோவிச், துணைத் தலைவராக விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு செய்யப்பட்டனர். 
  • சென்னையில் ஃபிடே ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. 

விளையாட்டு செய்திகள் 

1. பதக்க வேட்டையை தொடரும் இந்தியா  

  • குத்துச்சண்டையில் மூன்று தங்கம், மும்முறை தாண்டுதலில் ஒரு தங்கம், ஒரு வெள்ளி, டேபிள் டென்னிஸில் ஒரு வெள்ளி, நடைபந்தயம், ஈட்டி எறிதல், ஹாக்கி, ஸ்குவாஷில் தலா ஒரு வெண்கலம் என பத்து பதக்கங்கள் ஒரே நாளில் கிடைத்தன. 
  • குத்துச்சண்டை: 
  • ஆடவருக்கான 51 கிலோ எடை பிரிவில் அமித் பங்கால், மகளிர்க்கான 48 கிலோ பிரிவில் நீது கங்காஸ், 50 கிலோ பிரிவில் நிகாத் ஜரீன் ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றனர். 
  • மும்முறை தாண்டுதல்: 
  • இந்தியாவின் எல்தோஸ் பால் தங்கமும், அப்துல்லா அபுபக்கர் வெள்ளியும் வென்று அசத்தியுள்ளனர். 
  • ஈட்டி எறிதல்: 
  • காமன்வெல்த் ஈட்டி எறிதலில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றிருக்கிறார் அன்னு ராணி
  • நடைப்பந்தயம்: 
  • ஆடவருக்கான பத்தாயிரம் மீட்டர் நடைப்பந்தயத்தில் இந்தியாவின் சந்தீப்குமார் வெண்கல பதக்கம் வென்றுள்ளார். 
  • டேபிள் டென்னிஸ்: 
  • ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதிச்சுற்றில் சத்தியன் / சரத் கமல் கூட்டணி வெள்ளி பதக்கம் பெற்றனர். 
  • ஸ்குவாஷ்: 
  • கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சவுரவ் கோஷல் / தீபிகா பலிக்கல் கூட்டணி வெண்கல பதக்கம் வென்றது. 

2.தங்கமகள்பவினா 

  • பாரா காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் டேபிள் டென்னிஸில் இந்தியாவின் பவினா படேல் தங்கப்பதக்கம் வென்றார். 

CA 08.08.2022(English Version) 

State news 

1. US Navy ship in Chennai 

  • US Navy ship Charles Drew arrives at Kattupalli Shipyard, Chennai for the first time for maintenance and repair work. 
  • L&T Company Shipyard operates at Kattupalli. 

Central News 

1. First Woman Director General of CSIR 

  • N. Kalachelvi has been appointed as the Secretary of Science and Industrial Research under the Union Ministry of Science and Technology and the Director General of the Central Council of Science and Industrial Research (CSIR). 
  • This is the first time in the 80-year history of CSIR that a woman has been appointed as Director General. 
  • He will be in this job for two years. 
  • There are 38 scientific research institutes across the country under CSIR. 

2. New Procedure to Facilitate Filing of Complaint in State Languages: IRDAI 

  • The Insurance Regulatory Authority of India (IRDAI) is soon to introduce a revamped grievance redressal procedure called ‘Bima Barosa’ to facilitate customers to file complaints in state languages. 
  • Introduced in 2011, the Integrated Grievance Redressal Procedure (IGMS) has been revamped to make it more efficient, IRDAI sources said. 
  • In this way the insurance companies can monitor the complaints and resolve the grievances quickly. 

3. Vice President of ‘FIDE’ 

  • International Chess Federation (FIDE) elected Arkady Vorkovich as President and Viswanathan Anand as Vice President. 
  • FIDE Annual General Meeting held in Chennai. 

Sports news 

1. India to continue medal hunt 

  • Three gold in boxing, one gold in triple jump, one silver, one silver in table tennis, one bronze each in walking race, javelin, hockey and squash were won on the same day. 
  • Boxing: 
  • Amit Pankal won gold in men’s 51 kg category, Neetu Kangas in women’s 48 kg category and Nikath Zareen in 50 kg category. 
  • Triple jump: 
  • India’s Eldos Pal won the gold and Abdullah Abubakar won the silver. 
  • Javelin throw: 
  • Annu Rani holds the distinction of being the first Indian athlete to win a medal in Commonwealth javelin. 
  • Walking race: 
  • India’s Sandeep Kumar wins bronze medal in men’s 10,000m walk. 
  • Table Tennis: 
  • Sathyan / Sarath Kamal won the silver medal in the men’s doubles final. 
  • Squash: 
  • India’s Saurav Ghoshal / Deepika Balikal combination won bronze medal in mixed doubles. 

2. ‘Golden daughter’ Pavina 

  • India’s Pavina Patel wins gold medal in table tennis at Para Commonwealth Games. 

Telegram Link – https://t.me/gkrsInstitute 

Exit mobile version