TNPSC Current Affairs – May 21, 2022

0
38

 

C.A.21.05.2022 (Tamil Version)

 

 1. தமிழகத்தில் மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணிக்கும் மகளிரின் எண்ணிக்கை 40%-ல் இருந்து 61%-ஆக அதிகரித்துள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ். எஸ். சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

 

 1. ராமேஸ்வரம், மதுரை திருவண்ணாமலை கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்க அறநிலையத்துறை ஆலோசனை நடத்தி வருகிறது

 

 1. தூத்துக்குடி வாஞ்சி மணியாச்சி இடையே 26 கிலோமீட்டர் தொலைவுக்கு சாலை அமைக்க முதல்கட்டமாக ரூபாய் 28.53 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருவதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

 

 1. பிரதமரின் கதி சக்தி திட்டத்தின் கீழ், இந்திய ரயில்வே பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள இருக்கிறது. ஐசிஎப்-ல் தற்போது இரண்டு வந்தே பாரத் ரயில் தொடர்கள் தயாராகி வருகிறது. இந்த ரயில் தொடர்கள் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தயாரித்து அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்று 75 வந்தே பரத் ரயில் தொடர்கள் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் தயாரிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து ஐசிஎப்-ல் தயாரிக்கப்பட்ட 12000-மாவது எல்எச்பி பெட்டியை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

 

 1. மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருந்துகள் மற்றும் சிகிச்சை பெற்ற பயனாளிகளின் எண்ணிக்கை 1.05 கோடியை கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சர்க்கரை நோயாளிகள் மற்றும் உயர் ரத்த அழுத்த நோயாளிகள் அதிகம் பயனடைந்து இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 1. இந்திய போட்டி ஆணையத்தின் 12-வது ஆண்டு கூட்டம் டெல்லியில் வெள்ளிக்கிழமை (20.5.2021) நடைபெற்றது

 

 1. இஸ்தான்புல்லில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் 52 கிலோ பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற நிகாத் ஜரின் உலக சாம்பியன் பட்டம் வென்ற 5-வது இந்திய வீராங்கனை ஆவார்.

 

 1. கொரோனா பாதிப்புகள் வேகமாக பரவ வரும் வட கொரியாவில் அதை எதிர்கொள்ள இஞ்சி, மூலிகை தேநீர், போன்ற பாரம்பரிய மருந்துகளை அந்த நாட்டு அரசு ஊடகம் பொதுமக்களிடையே பரிந்துரை செய்து வருகிறது.

 

 1. ஆயல் இலக்கிய விருதுகள் 2022

வாழ் நாள் சாதனையாளர் – எஸ்.வி.ராஜதுரை

புனை இலக்கியத்துக்கான விருது – தேவிபாரதி

கவிதைக்கான விருது – யவனிகா ஸ்ரீராம்

 

இயல் இலக்கிய விருது 2021 – ஆ.ரா.வேங்கடாசலபதி(வரலாற்றாளர்)

புனைவுக்கான விருது – பா.அ.ஜயகரன்(பா.அ.ஜயகரன் கதைகள்)

அபுனைவுக்கான விருது- கே.சந்துரு (நானும் நீதிபதி ஆனேன்)

கவிதைக்கான விருது – ஆழியாள் (நெடுமரங்களாய் வாழ்தல்)

மொழிபெயர்ப்பு விருது – மார்த்தா ஆன் செல்பி

 

C.A.21.05.2022 (English Version)

 

 1. The number of women traveling in city buses for free has increased from 40% to 61% in Tamil Nadu. S. Sivasankar said.

 

 1. Rameswaram, Madurai Thiruvannamalai temples have been consulting to provide alms throughout the day

 

 1. Minister EV Velu has stated that Rs. 28.53 crore has been allocated for the first phase of the 26 km road between Thoothukudi and Vanchi Maniyachi and land acquisition is underway.

 

 1. Under the Prime Minister’s Kathi Shakti Plan, Indian Railways is to undertake various development works. Two Vande Bharat train series are currently being prepared at ICF. The train is scheduled to be launched in August this year. It is also said that 75 such Vande Bharat series will be completed by August next year. Following this, Railway Minister Aswini Vaishnav flagged off the 12000th LHP box made in ICF.

 

 1. The number of beneficiaries of drugs and treatments under the People Searching Medicine program has reportedly crossed 1.05 crore. According to the Department of Public Welfare, patients with diabetes and high blood pressure benefit the most.

 

 1. The 12th Annual Meeting of the Competition Commission of India was held in Delhi on Friday (20.5.2021)

 

 1. Nikath Zarin, the gold medalist in the 52 kg category at the World Championships in Istanbul, is the 5th Indian to win the World Championship.

 

 1. In North Korea, where corona infections are spreading fast, the state media has been recommending traditional medicines such as ginger and herbal tea to combat it.

 

 1. Aayal Literature Awards 2022
 • Lifetime Achievement – SV Rajathurai
 • Award for Fiction – Devi Bharati
 • Poetry Award – Yavanika Sriram

 

 • Iyal Literature Award 2021 – A.R. Venkatachalapathy-Historian
 • Fiction Award – PA Jayakaran (பா.அ.ஜயகரன் கதைகள்)
 • Chandru (நானும் நீதிபதி ஆனேன்)
 • Poetry Award – Azhiyal (நெடுமரங்களாய் வாழ்தல்)
 • Translation Award – Martha Ann Selby

Click here to download PDF material : CA 21.05.2022