TNPSC Current Affairs – May 20, 2022

0
47

C.A.20.05.2022 (Tamil Version)

 

 1. சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் பரிந்துரைகள் மத்திய மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதே நேரம் “கூட்டாட்சி தத்துவத்தை அடிப்படையாக கொண்டு  இயங்கும் நாடு என்ற அடிப்படையில் இரண்டு அரசுகளையும் வலியுறுத்தும் தகுதியை கவுன்சில் பரிந்துரைக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

* கடல்சார் போக்குவரத்துக்கு 5% ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி விதித்து 2017-ல் மத்திய பிறப்பித்த அறிக்கையை குஜராத் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நேற்று விசாரணைக்கு வந்த இந்த மனுவுக்கு தீர்ப்பளித்த நீதிபதிகள், குஜராத் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சரியானது என்று  தீர்ப்பளித்துள்ளது.

* சட்டப்பிரிவு 246ஏ இரு அரசுகளையும் சமமான அங்கீகாரம் படைத்ததாக அங்கீகரிப்பது போல சட்டப்பிரிவு 279 இரு அரசுகளும் தனித்தனியாக செயல்பட முடியாது என்பதை வலியுறுத்துகிறது.

 

 1. பாமாயில் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுவதாக இந்தோனேசியா அறிவித்துள்ளது. உள்ளூர் விவசாயிகளின் போராட்டத்தை அடுத்து இந்த முடிவை அந்நாட்டு அரசு எடுத்துள்ளது. இந்தோனேசியாவும் மலேசியாவும் உலக அளவில் பாமாயில் ஏற்றுமதியில் முன்னணி நாடுகளாக இருக்கிறது. உலக பாமாயில் உற்பத்தியில் 85% இந்த நாடுகளில் தான் இருக்கிறது. இதனால் நாட்டின் பொருளாதாரம் பாமாயிலேயே நம்பி இருக்கிறது.

 

 1. அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் விவரங்கள் மற்றும் அவர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகளின் விவரங்களை மாநில அளவில் இணைய உதவியின் மூலமாக பதிவேற்றம் செய்ய ஆஸ்திரேலிய அரசு அதிகாரிகளுடன் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை ஆலோசனை நடத்தி இருக்கிறது.

 

 1. ராமேஸ்வரத்தை போன்று திருவண்ணாமலை மற்றும் திருத்தணி போன்ற வழிபட்டு தலங்களையும் பிரசாத திட்டத்தில் சேர்த்து மேம்படுத்த மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலா துறை அமைச்சர் கிஷன் ரெட்டியிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக தமிழக சுற்றுலா துறை அமைச்சர் மா.மதிவேந்தன் தெரிவித்துள்ளார். ராமேஸ்வரத்தில் இந்த பிரசாத திட்டம் 5 திட்டங்களாக பிரிக்கப்பட்டு ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கியுள்ளது. இதில் அக்னீ படி தீர்த்தம், வாகனம் நிறுத்துமிடங்கள், நடைபாதைகள் சீர்படுத்துதல், படகுத்தளம் ஒளிவூட்டுதல் ஆகியவையும், இரண்டாம் கட்டமாக சுதேஷ் தரிசனம் திட்டமும் மத்திய அரசால் தொடங்கப்பட இருக்கிறது.

 

 1. அறிவுசார் ஆராய்ச்சி பூங்கா: தமிழ் நாட்டில் உள்ள திறன் மிக்க மனித வளத்தை மேலும் மேம்படுத்த மாநில பல்கலைக்கழகங்கள் தங்களின் வளங்களில் ஆராய்ச்சி பூங்காவை நிறுவ ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில் பாரதியார் பல்கலைக்கழகத்தில் அறிவுசார் ஆராய்ச்சி பூங்கா அமைக்கப்பட உள்ளது

 

 1. ஐக்கிய அரபு அமீரக விருது: திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் இதுவரை ரூபாய் 69,375 கோடி முதலீடு 2.25 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 131 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொழில்துறை வளர்ச்சிக்கு அரசு மேற்கொண்டு வரும் சீரிய முயற்ச்சிகளை பாராட்டும் வகையில் முதலீடு ஊக்குவிப்பு முகாமையான விருதை தமிழக தொழில்துறையின் வழிகாட்டி நிறுவனத்துக்கு ஐக்கிய அரபு அமீரகம் வழங்கி இருக்கிறது.

 

 1. கனடா தமிழ் இலக்கிய தோட்டம் அமைக்கப்பட்ட பின்னர் 2021-ம் ஆண்டுக்கான இயல் விருது தமிழ் இலக்கியம் மற்றும் பண்பாட்டு ஆய்வாளரான ஆ.இரா.வெங்கடாசலபதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல கட்டுரை பிரிவில் நீதிபதி சந்துருவுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 1. உக்ரைன்-ரஷ்யா நாடுகளுக்கு இடையிலான போர் சூழல் காரணமாக நடப்பு ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.4% அளவுக்கே இருக்கும் என்று ஐ.நா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 1. இஸ்தான்புல்லில் நடைபெற்ற உலக மகளிர் குத்துசண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் நிகாத் ஜரின் 52-கிலோ எடைப்பிரிவில் 5-0 என்ற கணக்கில் தாய்லாந்தின் ஜித் போங் ஜூடாமஸை தங்கப்பதக்கம் வென்றார்.

 

 1. சர்வதேச துப்பாக்கி சுடுதல் சம்மேளனம் நடத்திய ஜூனியர் உலகக்கோப்பை போட்டியில் இந்திய 33 தங்க பதக்கங்களை வென்று முதலிடம் பிடித்துள்ளது.

 

 1. தென்கொரியாவில் நடைபெறும் உலகக்கோப்பை வில்வித்தை 2-ம் நிலை போட்டியில் ரீகர்வ் மகளிர் அணிகள் பிரிவில் இந்தியா வெண்கலப்பதக்கம் வென்றுள்ளது. இந்தியாவின் ரிதி போர், கோமாளிகா பாரி மற்றும் அங்கிதா பகத் 6-2 என்ற கணக்கில் சீனா அணியை தோற்கடித்து பதக்கத்தை உறுதி செய்தது.

 

 1. கார்கள், கைபேசிகள் உள்ளிட்ட அத்யாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதற்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது. “அவசர கால பொருளாதார திட்டத்தின்” கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 1. அனைத்து விதமான மாசுபாடு காரணமாக உலகிலேயே அதிகபட்சமாக இந்தியாவில் 23.5 லட்சம் பேர் உயிரிழந்து இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

C.A.20.05.2022 (English Version)

 

 1. The Supreme Court has ruled that the Goods and Services Tax (GST) Council recommendations do not restrict federal governments. At the same time, it has been suggested that the Council may recommend the right of both states to assert themselves on the basis of “a country operating on the principle of federalism.”

* The case was filed in the Supreme Court on behalf of the Central Government after the Gujarat High Court dismissed a report issued by the Center in 2017 imposing a 5% integrated GST on maritime transport. The judges, who heard the petition yesterday, ruled that the order issued by the Gujarat High Court was correct.

* Section 246A emphasizes that Article 279 states that the two states cannot act separately as they recognize the two states as having equal recognition.

 

 1. Indonesia announces lifting of ban on palm oil exports The government has taken this decision following the struggle of the local farmers. Indonesia and Malaysia are the leading exporters of palm oil globally. These countries account for 85% of world palm oil production. Thus the country’s economy is dependent on palm oil.

 

 1. The Tamil Nadu People’s Welfare Department is in consultation with Australian government officials to upload details of patients coming to government hospitals and the treatment provided to them through state-level internet assistance.

 

 1. Tamil Nadu Tourism Minister Ma Mathivendan has requested Central Culture and Tourism Minister Kishan Reddy to upgrade places of worship like Thiruvannamalai and Thiruthani like Rameswaram in the offering scheme. In Rameswaram this offering project has been divided into 5 projects and the initial phase work has started. The central government is to launch the Agni Padi Theertham, car parks, pavement repair, dock lighting and the second phase of the Sudesh Darshan project.

 

 1. Intellectual Research Park: An intellectual research park is to be set up at Bharathiar University as the state universities have already given their approval to set up a research park in their resources to further enhance the potential human resources in Tamil Nadu.

 

 1. United Arab Emirates Award: Since the DMK took over, 131 MoUs have been signed with an investment of Rs 69,375 crore to create 2.25 lakh jobs. The United Arab Emirates (UAE) has presented the Investment Promotion Campus Award to the Tamil Nadu Industry Guidance Company in recognition of the Government’s zealous efforts for industrial development.

 

 1. After the establishment of the Tamil Literary Garden of Canada, the Science Award for the year 2021 has been announced for IRA Venkatachalapathy, a researcher in Tamil Literature and Culture. Similarly, the award has been announced for Judge Chandru in the essay category.

 

 1. According to a UN report, India’s economic growth is expected to be 6.4% this year due to the war situation between Ukraine and Russia.

 

 1. At the World Women’s Boxing Championships in Istanbul, India’s Nikath Zarin defeated Thailand’s Jit Pong Judamus 5-0 in the 52-kg weight category to win the gold medal.

 

 1. India wins 33 gold medals at Junior World Cup hosted by International Sniper Federation

 

 1. India won the bronze medal in the recurve women’s team event at the 2nd level of the World Cup Archery in South Korea. India’s Rithi Bor, Komalika Bari and Angita Bhagat secured the medal by defeating China 6-2.

 

 1. The Pakistani government has banned the import of non-essential items, including cars and mobile phones. The order was reportedly issued under the “Emergency Economic Plan”.

 

 1. India has the highest death toll in the world at 23.5 lakh due to all forms of pollution.

Click here to download PDf material: CA 20.05.2022