TNPSC Current Affairs – May 18, 2022

0
32

C.A.18.05.2022 (Tamil Version)

 

 1. ஐந்தாம் தலைமுறை அலைக்கற்றை தொழில்நுட்பத்தின் மூலமாக நாட்டின் பொருளாதார மதிப்பு 15 ஆண்டுகளில் சுமார் 35 லட்சம் கோடி வளர்ச்சியடையும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

 

 1. தற்போது 5ஜி தொழில்நுட்பம் அறிமுகப்படுத்துவதற்கான கட்டத்தை நாடு அடைந்துள்ளது. மேலும் 6ஜி தொழில்நுட்பத்தை 2030-ம் ஆண்டுக்குள் அமைப்பதற்கான ஆராய்ச்சி செயற்குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.

 

 1. உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளாக 5 நீதிபதிகள் பதவி உயர்வு: டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி விபின் சாங்கியை உத்தராகண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி அம்ஜத் ஏ.சயீதை ஹிமாச்சல பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ்.ஷின்டேயை ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி ராஷ்மின் எம்.சாயாவை குவாஹாட்டி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், தெலுங்கானா உயர் நீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயானை அதே நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாகவும் நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. இது தவிர தெலுங்கானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சதிஷ் சந்திர ஷர்மாவை டெல்லி உயர்நீதிமன்றத்துக்கு பணியிடை மாற்றம் செய்யவும் கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது

 

 1. உள்நாட்டு வடிவமைப்பில் உருவான போர்க்கப்பல்களை அமைச்சர் ராஜ்நாத் சிங்க் தொடங்கி வைத்தார். பாதுகாப்பு துறைக்கு தேவையான போர்க்கப்பல்கள் மற்றும் நீர்முழ்கி கப்பல்களை தயாரித்து தரும் மசகான் கப்பல் நிறுவனம் இந்த இரு கப்பலைகளையும் வடிவமைத்துள்ளது. ஐஎன்எஸ் சூரத் மற்றும் ஐஎன்எஸ் உதய்கிரி ஆகிய இரண்டு கப்பல்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் இரண்டு போர் கப்பல்களை அறிமுகம் செய்வது இதுவே முதல் முறையாகும். இது சூரத் போர்க்கப்பல் 15பி டெஸ்ட் ராயர்ஸ் திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட 4-வது கப்பலாகும்.

 

 1. அகில இந்திய காங்கிரஸ் துறைகளின் ஒருங்கிணைப்பாளர் கே.ராஜு தொகுத்த “தலித் உண்மைகள்”என்கிற ஆங்கில நூல் வெளியீட்டு விழா சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நேற்று (17.5.2022) நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின் இந்த நூலை வெளியிட்டார்.

 

 1. தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மருத்துவ சேவை வழங்கும் வகையில் ரூபாய் 46-கோடி செலவில் 256 நடமாடும் மருத்துவமனை வாகனங்களை முதல்வர் ஸ்டாலின் நேற்று (17.5.2022) தொடங்கி வைத்தார்.

 

 1. ஐஎஸ்எஸ்எஃப் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் மகளிர் 25 மீட்டர் பிஸ்டல் அணிகள் பிரிவில் இந்தியாவின் மானு பாக்கர், ஈஷா சிங், ரிதம் சங்வான் கூட்டணி தங்கப்பதக்கம் வென்றது.

 

 1. அரசுமுறை பயணமாக ஜமைக்கா சென்றுள்ள குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் அந்நாட்டு தலைநகரில் இந்திய சட்ட மேதை அம்பேத்கார் பெயரிட்ட சாலையை திறந்து வைத்தார்.

 

 1. மும்பை பங்கு சந்தையின் தலைவராக எஸ்.எஸ்.முந்த்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 

C.A.18.05.2022 (English Version)

 

 1. Prime Minister Narendra Modi has said that the country’s economic value will grow by about Rs 35 lakh crore in 15 years through fifth generation wave technology.

 

 1. The country is currently in the process of introducing 5G technology. The federal government has also set up a research working group to set up 6G technology by 2030.

 

 1. Five judges to be promoted to Chief Justice of India. The collegium has recommended the appointment of Mumbai Chief Justice SS Shinde as the Chief Justice of the Rajasthan High Court, Gujarat High Court Judge Rashmin M. Chaya as the Chief Justice of the Guwahati High Court and Telangana High Court Judge Ujjal Puyan as the Chief Justice of the same court. Apart from this, the collegium has also recommended the transfer of Telangana High Court Chief Justice Satish Chandra Sharma to the Delhi High Court.

 

 1. Minister Rajnath Singh inaugurated the warships, which were built in interior design. Both ships were designed by Masakan Shipping Company, which manufactures warships and submarines for the defense industry. Both INS Surat and INS Udaygiri have been launched. This is the first time two warships have been introduced simultaneously. This is the 4th ship built under the Surat Warship 15B Test Royers project.

 

 1. Raju, Coordinator, All India Congress Departments, published a book titled “Dalit Facts” at the Vepery Periyar Stadium, Chennai yesterday (17.5.2022). Chief Stalin published this book.

 

 1. Chief Minister Stalin yesterday (17.5.2022) inaugurated 256 mobile hospital vehicles at a cost of Rs 46-crore to provide medical services in all parts of Tamil Nadu.

 

 1. India’s Manu Packer, Isha Singh and Rhythm Sangwan won the gold medal in the women’s 25m pistol event at the ISSF World Cup Sniper Championships.

 

 1. President Ramnath Govind, who is on a state visit to Jamaica, inaugurated a road named after Indian legal genius Ambedkar in the country’s capital.

 

 1. SS Mundra has been appointed as the Chairman of the Mumbai Stock Exchange.

CLick here to download PDF material: CA 18.05.2022