TNPSC Current Affairs – June 10, 2022

0
51

C.A.10.06.2022 (Tamil Version)

 

  1. சென்னை உயர் நீதிமன்றத்தில் முதல் பெண் “சோப்தார்” நியமனம்

 சென்னை உயர் நீதிமன்றத்தில் முதல் பெண் ‘சோப்தார்’ நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பெண் நீதிபதிகளுக்கான ‘சோப்தாராக’ (செங்கோல் ஏந்தி செல்பவர்) செயல்படுவார். அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக பெண்கள் கால்பதித்து வருகின்றனர். நீதித் துறையிலும் பல்வேறு பணியிடங்களில் பெண்கள் அதிகளவில் பணிபுரிந்து வருகின்றனர். உயர் நீதிமன்ற நீதிபதிகள் தங்களது சேம்பரில் இருந்து நீதிமன்ற அறைக்குச் செல்லும்போது அவர்களுக்கு முன்பாக ‘சோப்தார்’ எனப்படும் உதவியாளர்கள் வெள்ளைநிற சீருடை மற்றும் சிவப்பு நிற தலைப்பாகை அணிந்து, மரியாதை நிமித்தமாகவும், நீதிபதிகளின் வருகையை உணர்த்தும் விதமாகவும் செங்கோலை ஏந்தியபடி சமிக்ஞை கொடுத்துக் கொண்டே செல்வர்.

 

அத்துடன் நீதிபதிகளுக்கு தேவையான சட்டப் புத்தகங்கள், வழக்கு தொடர்பான கோப்புகளை எடுத்துத் தருவது என நீதிபதிகளின் அன்றாடப் பணிகளுக்கு உதவிகரமாக செயல்படுவார்கள். அந்த வகையில் கடந்த ஆண்டு சென்னைஉயர் நீதிமன்றத்தில் காலியாக இருந்த 40 ‘சோப்தார்’ பணியிடங்கள் மற்றும் 310 அலுவலக உதவியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு உயர் நீதிமன்றதேர்வுக்குழு மூலமாக எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது.

 

அதில் பங்கேற்ற விண்ணப்பதாரர்களில் சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள பெண் நீதிபதிகளுக்கு பெண் ‘சோப்தார்’களை நியமிக்கும் வகையில் 20 பெண்‘சோப்தார்’கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.அவர்களில் சென்னை உயர் நீதிமன்ற வரலாற்றில் முதல் பெண்‘சோப்தாராக’ திலானி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.என்.மஞ்சுளாவின் சேம்பரில் பணியாற்றி வருகிறார். இவரைத் தொடர்ந்து இன்னும் பல பெண் ‘சோப்தார்’கள் நியமிக்கப்படவுள்ளனர்.

 

  1. காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதல் முறையாக நானோ யூரியாவை டிரோன் மூலம் பயிர்களில் தெளிப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதல் முறையாக நானோ யூரியாவை டிரோன் மூலம் வான்வழியாக தெளிப்பதால், விவசாயிகளுக்கு ஏற்படும் பயன்கள் குறித்து நேற்று செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதல் முறையாக தாங்கி கிராமத்தில் விவசாயி ஒருவரின் நெற்பயிரிட்டுள்ள வயலில் நானோ யூரியாவை டிரோன் மூலம் வான்வழியாக தெளிப்பது தொடர்பான செயல்முறை விளக்கம் விவசாயிகளுக்கு முதல் முறையாக செய்து காட்டப்பட்டது. இந்திய உழவர் உரக்கூட்டு நிறுவனமும், முத்தியால்பேட்டை தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கமும் இணைந்து நடத்திய செயல்முறை விளக்க முகாமினை நடத்தியன.

 

  1. ஹரிவராசனம் பாடலின் நூற்றாண்டு விழா இலட்சினை- கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிடுகிறார்

1952-ம் ஆண்டு முதல் ஹரிவராசனம் பாடல் சபரிமலையில் இசைக்கப்பட்டு வருகிறது. புகழ் பெற்ற இந்த பாடலை கொன்னகத்து ஜானகி அம்மாள் என்பவர் 1923-ம் ஆண்டு இயற்றி உள்ளார். பாடல் இயற்றப்பட்ட நூற்றாண்டு விழாவை நாடு முழுவதும் கொண்டாட திட்டமிட்டுள்ளார்கள். ஹரிவராசனம் நூற்றாண்டு விழா குழு கூட்டம் சென்னை வானகரத்தில் நாளை (11-ந்தேதி) நடக்கிறது. ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெறும் இந்த விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நூற்றாண்டு விழா இலட்சினையை வெளியிடுகிறார். விழாவில் தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், இசைஞானி இளையராஜா, திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் அனந்த சோபன் உள்பட சுமார் ஆயிரம் பேர் பங்கேற்கிறார்கள்.

 

  1. பாரத் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு 2022-ம் ஆண்டுக்கான “ஆசிய பிரிட்டன் விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

 

  1. 44-வது செஸ் ஒலிம்பியாட் தொடர்: இலச்சினையை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான இலச்சினை மற்றும் சின்னத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். முதன்முறையாக தமிழ்நாட்டில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறவுள்ளது. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 28-ம் தேதி முதல் ஆகஸ்டு 10-ம் தேதி வரை இந்தப் போட்டித் தொடர் நடைபெறுகிறது. இப்போட்டியில் 186 நாடுகளைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட சர்வதேச சதுரங்க விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர். இப்போட்டியினை தமிழ்நாட்டில் நடத்துவது குறித்து முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாடு அரசு மற்றும் அகில இந்திய சதுரங்க கூட்டமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த மாதம் கையெழுத்தானது.

 

  1. கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விசிக அறிவிப்பு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு ‘அம்பேத்கர் சுடர் ‘ விருது வழங்கப்பட உள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை: “விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழகம் மற்றும் இந்திய அளவில் ஆண்டுதோறும் பல்வேறு சான்றோருக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பித்து வருகிறோம். சமூகம், அரசியல், பண்பாடு, கலை-இலக்கியம் போன்ற தளங்களில் சீரிய முறையில் தொண்டாற்றும் சிறப்புமிக்க தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு ஆளுமை வாய்ந்த சான்றோருக்கு “அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், அயோத்திதாசர் ஆதவன், காயிதேமில்லத் பிறை மற்றும் செம்மொழி ஞாயிறு ” ஆகிய விருதுகளை 2007 முதல் ஆண்டுதோறும் வழங்கிச் சிறப்பித்து வருகிறோம். இந்த ஆண்டு முதல் கூடுதலாக ‘மார்க்ஸ் மாமணி’ விருதும் வழங்குகிறோம். மறைந்த முதல்வர் கருணாநிதி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, எழுத்தாளர் அருந்ததி ராய், இலக்கியச் செல்வர் குமரிஅனந்தன், கே.எஸ்.அழகிரி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன், சொல்லின் செல்வர் ஆ.சக்திதாசன், பாவலர் வை.பாலசுந்தரம், பேராசிரியர் காதர்மொய்தீன், பேராசிரியர் ஜவாஹிருல்லா, ஏ.எஸ்.பொன்னம்மாள், கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் உள்ளிட்ட சான்றோர் பலருக்கு இதுவரை விசிக-விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

 

  1. குமாரி மாவட்டம் முத்தலக்குறிச்சி கிராமத்தில் “பாரத் நெட்” திட்டத்துக்கு “கேபிள்” பதிக்கும் வேலைகளை முதல்வர் ஸ்டாலின் காணொளி மூலம் தொடங்கி வைத்தார்.

 

  1. ஜூலை 18-ல் குடியரசுத்தலைவர் தேர்தல்

ஜூலை 18-ஆம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார்.  தற்போதைய குடியரசுத் தலைவரின் பதவிக் காலம் வரும் ஜூலை 24-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனையொட்டி வரும் 18-ஆம் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 25-ஆம் தேதிக்குள் புதிய குடியரசுத் தலைவர் பதவியேற்றுக் கொள்ள வேண்டும். இந்நிலையில், ஜூன் 29-ஆம் தேதி முதல் தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்யலாம். வேட்புமனுக்களை திரும்பப் பெற ஜூலை 2 கடைசி தேதி. தேர்தல் ஜூலை 18 ஆம் தேதி நடத்தப்பட்டு ஜூலை 21-ஆம் தேதியன்று முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

 

  1. கோவை விமான நிலையத்தில், பயணிகளுக்கு வழிகாட்ட இரண்டு நடமாடும் ரோபோக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

கோவை  விமான நிலையத்தில் இரண்டு ரோபோக்களும், பயணிகளுக்கு உதவ பயன்படுத்தப்படும். பயணிகளுக்கு தேவையான தகவல்கள், உதவிகள், விமான நிலையத்தில் உள்ள வசதிகள் மற்றும் வழிகாட்டுதல்களை மேற்கொள்ளும். தற்போது ஆங்கில கட்டளைக்கு மட்டுமே செயல்பட்டு வரும் இந்த ரோபோ, விரைவில் தமிழ் உள்ளிட்ட மூன்று மொழிகளில் செயல்பட செயல்படும். செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தில், பயணிகளின் கேள்விகளுக்கு ஒலி வடிவிலான பதில்களை தரும் வகையில் அமைந்துள்ளது. விமான நிலையத்துகுள் நடமாடும் ரோபோ, பயணிகளை அணுகி அவர்களின் தேவைகளை கேட்கும். பயணிகள் உதவி மையத்துடன் தொடர்பு கொண்டு பேச உதவும். வீடியோகால் முறையில் உதவியாளருடன் பேசவும் முடியும்

 

  1. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட விலங்குகளுக்கான முதல் கொரோனா தடுப்பூசி அறிமுகம்

விலங்குகளுக்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் கொரோனா தடுப்பூசியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. அனோகோவாக்ஸ் என்ற அந்த தடுப்பூசி ஹரியானாவிலுள்ள தேசிய குதிரைகளுக்கான ஆராய்ச்சி மையம் உருவாக்கியுள்ளது. இதை மத்திய வேளாண்துறை அமைச்சர் தோமர் காணொளி வாயிலாக அறிமுகப்படுத்தினார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், `கொரோனாவின் டெல்டா மற்றும் ஒமைக்ரான் ஆகிய இரு திரிபுகளையும் நடுநிலைப்படுத்தக்கூடிய வகையிலான நோய் எதிர்ப்பு திறனை அனோகோவாக்ஸ் பெற்றுள்ளது. நாய்கள், சிங்கம், சிறுத்தை, எலிகள் மற்றும் முயல்களுக்கு இந்த தடுப்பூசி பாதுகாப்பானதாகும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

C.A.10.06.2022 (English Version)

 

  1. Chennai High Court appoints first lady “Sopdar”

Chennai High Court has appointed the first woman ‘Chopdar’. She will act as the ‘chopper’ (scepter bearer) for female judges. Women are following in the footsteps of men in all fields. Women are increasingly working in various fields in the judiciary as well. As the High Court judges walk from their chambers to the courtroom, their aides, known as ‘chopdars’, wear white uniforms and red turbans, signaling respectfully and carrying a scepter to signal the judges’ arrival. As well as assisting judges in their day-to-day work, such as picking up law books and case files needed by judges. In that regard, a written test was conducted by the High Court Selection Committee for various posts including 40 ‘Sopdar’ posts which were vacant in the Chennai High Court last year and 310 office assistants. Among the applicants, 20 female sophomores have been selected for the post of female judges in the Chennai High Court. Among them, Dilani has been appointed as the first female sophomore in the history of the Chennai High Court. He is serving in the Chamber of High Court Judge RN Manjula. She will be followed by several more female ‘chopdars’ to be appointed.

 

  1. Drone spraying of nano urea on crops for the first time in Kanchipuram district

The process of illustrating the benefits to the farmers of Kanchipuram district for the first time by spraying nano urea by air was demonstrated yesterday. For the first time in the village of Thangi in Kanchipuram district, the process of aerial spraying of nano urea by a drone in a paddy field of a farmer was explained to the farmers. The process demonstration camp was jointly organized by the Indian Farmers Fertilizer Corporation and the Muthialpet Primary Agricultural Cooperative Society.

 

  1. Governor RN Ravi releases the centenary emblem of Harivarasanam song

 

Harivarasanam song has been played in Sabarimala since 1952. This famous song was composed by Janaki Ammal of Konnakattu in the year 1923. They plan to celebrate the centenary of the song’s nationwide. Harivarasanam Centenary Committee Meeting will be held tomorrow (11th) at Vanakaram, Chennai. Governor of Tamil Nadu RN Ravi unveils the centenary emblem at the function which will be held at Srivaru Mandapam. About a thousand people including Telangana Governor Dr. Tamilisai Saundarajan, musician Ilayaraja and Travancore Devasam Board Chairman Anantha Soban are participating in the festival.

 

  1. Bharat Higher Education and Research Institute has been honored with the “Asia Britain Award 2022”.

 

  1. 44th Chess Olympiad Series: The logo was unveiled by Chief Stalin

 

Tamil Nadu Chief Minister MK Stalin today unveiled the logo and emblem of the 44th Chess Olympiad. The Chess Olympiad will be held in Tamil Nadu for the first time. The tournament will be held at Mamallapuram next to Chennai from July 28 to August 10. More than 2000 international chess players from 186 countries will take part in the tournament. A Memorandum of Understanding (MoU) was signed last month with the Government of Tamil Nadu and the All India Chess Federation in the presence of Chief Minister Stalin on hosting the tournament in Tamil Nadu.

 

  1. ‘Ambedkar Flame’ Award for Former Karnataka Chief Minister Chidramaiah: Vizika Announcement

Former Chief Minister of Karnataka Chidaramayya is to be given the ‘Ambedkar Flame’ award on behalf of the Liberation Tigers of Tamil Nadu. In this connection, the leader of the party Thirumavalavan has issued a statement: “On behalf of the Liberation Tigers of Tamil Eelam (LTTE), we have been presenting awards annually to various dignitaries in Tamil Nadu and India. Oli, Kamarasar Kathir, Ayodhya Das Athavan, Gaidemillath Pirai and Classical Sunday “awards have been presented annually since 2007. From this year onwards we have been presenting the ‘Marx Mamani’ Award in addition to the late Chief Minister Karunanidhi, Tamil Nadu Chief Minister MK Stalin, Dravidar Kazhagam President Editor. K. Veeramani, Writer Arundhati Roy, Literary Selvar Kumari Anandan, KS Alagiri, Pavalare Perunchithranar, Emotional Povalar Kasi Anandan, Sollin Selvar A. Sakthidasan, Pavalar Y. Balasundaram, Prof. Kathermoideen, Prof. Jawahirullah, A.S. Bonnam Jegannathan Ula Many of the Lita certifiers have so far been awarded the Vizika-Awards.

 

  1. Chief Minister Stalin started the work of laying cables for the “Bharat Net project” in Muthalakurichi village in Kumari district through video.

 

  1. Presidential election on July 18

Chief Election Commissioner Rajiv Kumar has announced that the presidential election will be held on July 18. The current president’s term ends on July 24. It has been announced that the next 18th presidential election will take place. The new president must take office by July 25. In this case, the petition can be filed to contest the first election on June 29. The last date for withdrawal of nominations is July 2. The Chief Electoral Officer (CEO) has announced that the elections will be held on July 18 and the results will be announced on July 21.

 

  1. At Coimbatore Airport, two mobile robots have been introduced to guide passengers.

Two robots will be used at the Coimbatore airport to assist passengers. This Carries information, assistance, facilities and guidance at the airport for travelers. Currently operating only on English commands, the robot will soon be available in three languages, including Tamil. In Artificial Intelligence (AI) technology, it is positioned to provide sound answers to passengers’ questions. The robot, which walks into the airport, approaches passengers and listens to their needs. Contact the Passenger Help Center to talk. You can also talk to the assistant via video mode

  1. Introduction of the first corona vaccine for animals made in India

The central government has introduced the first domestically produced corona vaccine for animals. The vaccine, Anokovox, was developed by the National Horses Research Center in Haryana. This was introduced by Union Agriculture Minister Tomar via video. According to the report, Anovax has the ability to neutralize both strains of the corona’s delta and omega. The vaccine is safe for dogs, lions, leopards, rats and rabbits.

Click here to download PDF Material CA 10.06.2022