TNPSC CUrrent Affairs – June 11, 2022

0
39

C.A.11.06.2022 (Tamil Version)

 

  1. ஆன்லைன் ரம்மி விளையாட்டின் தாக்கம் குறித்து ஆய்வு – ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையிலான குழு

ஆன்லைன் ரம்மி விளையாட்டின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் குழு அமைத்து அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தக் குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் அவசரச் சட்டம் விரைவில் இயற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

  1. புழல் அழிஞ்சியம்பாக்கம் நடுநிலைப் பள்ளியில் எண்ணும், எழுத்தும் கற்பித்தல் திட்டம்: ஸ்டாலின் ஜூன் 13-ல் தொடங்கி வைக்கிறார்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான எண்ணும், எழுத்தும் கற்றல் திட்டத்தை ஜூன் 13-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் 2025-ம் ஆண்டுக்குள் 8 வயதுக்கு உட்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் அடிப்படை கணிதத் திறனுடன், பிழையின்றி எழுத, படிப்பதை உறுதிசெய்யும் விதமாக ‘எண்ணும், எழுத்தும்’ திட்டத்தை செயல்படுத்த பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. இந்ததிட்டம் 2022-23-ம் கல்வியாண்டில் நடைமுறைக்கு கொண்டுவரப்பட உள்ளது. இதற்காக அரசுமற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரைபாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்குஏற்கெனவேதிறன் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கிடையே கோடை விடுமுறை முடிந்து 1 முதல் 10-ம்வகுப்பு வரையான மாணவர்களுக்கு ஜூன் 13-ம் தேதி பள்ளிகள்மீண்டும் திறக்கப்பட உள்ளன. பள்ளி திறக்கப்படும் முதல்நாளிலேயே எண்ணும், எழுத்தும் திட்டத்தையும் அமல்படுத்த முடிவாகியுள்ளது. இந்த திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டம் புழல் ஒன்றியம் அழிஞ்சியம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தொடங்கி வைக்கிறார்

 

  1. மாநிலங்களவைத் தேர்தலில் கர்நாடகாவில் போட்டியிட்ட மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெற்றி

மாநிலங்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் கர்நாடகாவில் போட்டியிட்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெற்றி பெற்றார். அங்கு 3 இடங்களை பாஜகவும் ஒரு இடத்தை காங்கிரஸ் கட்சியும் கைப்பற்றியுள்ளன. அதேநேரத்தில் ராஜஸ்தானில் 3 இடங்களில் காங்கிரஸும் ஒரு இடத்தை பாஜகவும் கைப்பற்றின. தமிழகம் உட்பட 11 மாநிலங்களில் காலியாகவிருக்கும் 57 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு ஜூன் 10-ல் தேர்தல் நடக்கும் என தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் தமிழகம் உட்பட 11 மாநிலங்களில் 41 இடங்களுக்கு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வாகினர். இதையடுத்து, மீதமுள்ள 16 இடங்களுக்கு போட்டி இருந்ததால் வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாநிலங்களில் தேர்தல் ஆணையம் செய்திருந்தது.

 

  1. தமிழகத்தில் காசநோய் பரவல் விகிதம் 19% அதிகரிப்பு

தமிழகத்தில் நிகழாண்டில் மட்டும் 40 ஆயிரம் போ் காசநோயால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனா். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 19 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. காசநோயை முழுமையாக ஒழிக்கும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன. 2025-க்குள் அந்நோயை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற இலக்குடன் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அதன் பயனாக காசநோய் பாதிப்பு தொடா்பான விழிப்புணா்வு மேம்பட்டு வருகிறது. தமிழகத்தைப் பொருத்தவரை காசநோயைக் குணப்படுத்தும் விகிதம் கணிசமாக உயா்ந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த நோயின் தாக்கத்தால் பாதிக்கப்படும் நோயாளிகளில் 84 சதவீதம் பேரை முதல் சிகிச்சையிலேயே குணப்படுத்துவதாகவும், தொடா் சிகிச்சைகள் மூலம் மீதமுள்ளவா்களையும் பூரண குணமாக்குவதாகவும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

 

C.A.11.06.2022 (English Version)

  1. Study on the impact of online rummy game – Panel headed by retired Judge K. Chandru

The government has ordered the formation of a panel headed by retired judge K. Chandru to study the impact of online rummy games. It has been announced that the emergency law will be enacted soon on the basis of the report submitted by this committee.

 

  1. Stalin launches Numeracy and Literacy Program at Middle East: June 13

Chief Minister MK Stalin launches the Numeracy and Literacy Program for Public School Students on June 13. The Department of School Education plans to implement the ‘Counting and Writing’ program in Tamil Nadu by 2025 to ensure that government school students under the age of 8 have the basic mathematical ability to read and write without error. The scheme is expected to be implemented in the 2022-23 academic year. To this end, skill training has been provided to teachers of 1st to 5th class maps in government and funded schools. Meanwhile, schools are set to reopen on June 13 for students in grades 1 through 10 after the summer holidays. It has been decided to implement the counting and writing scheme from the first day of school. Chief Minister MK Stalin inaugurates this project at Tiruvallur District Puhal Union Azhinjiyambakkam Panchayat Union Middle School

 

  1. Union Minister Nirmala Sitharaman has won the state assembly elections in Karnataka

Union Finance Minister Nirmala Sitharaman, who contested for the BJP in Karnataka, won the state assembly elections. The BJP has won 3 seats and the Congress one. In Rajasthan, meanwhile, the Congress won three seats and the BJP one. The Chief Electoral Officer (CEO) has announced that elections will be held on June 10 to fill the 57 vacant seats in 11 states, including Tamil Nadu. Of these, members were elected unopposed to 41 seats in 11 states, including Tamil Nadu. Subsequently, voting took place as there was competition for the remaining 16 seats. Arrangements for this were made by the Election Commission in the respective states.

 

  1. 19% increase in the spread of tuberculosis in Tamil Nadu

In Tamil Nadu alone, 40,000 people have been newly infected with tuberculosis this year. This is 19 percent more than last year. Central and state governments are making various efforts to eradicate tuberculosis. Various projects are being implemented with the aim of eradicating the disease by 2025. As a result, awareness of tuberculosis is improving. According to reports, the cure rate for tuberculosis in Tamil Nadu is increasing significantly. Health officials said that 84 percent of the patients affected by the disease were cured with first aid and the rest were completely cured with the help of therapies.

 

Click here to download PDF material: CA 11.06.2022