Home GOVERNMENT EXAMS TNPSC Current Affairs – July 21, 2022

TNPSC Current Affairs – July 21, 2022

0
38

C.A.20.07.2022 (Tamil Version)

 1. சர்வதேச நிலவு தினம் 2022: ஜூலை 20, 1969 அன்று, அமெரிக்க விண்வெளி வீரர்களான நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் பஸ் ஆல்ட்ரின் ஆகியோர் சந்திர கிரகத்தை அடைந்த முதல் மனிதர்கள் ஆனார்கள்.

 

 1. பேரழிவு ஆயுதங்கள் தடுப்பு மசோதா

மாநிலங்களவையில் கடும் அமளிக்கு மத்தியில் பேரழிவு ஆயுதங்கள் தடுப்பு மசோதாவை வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அறிமுகம் செய்தார். பேரழிவை ஏற்படுத்தும்  ஆயுதங்களை கொள்முதல் செய்ய நிதியுதவி அளிப்பதை தடுப்பதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளதால் இந்த சட்ட திருத்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். பேரழிவு ஆயுதங்கள் தடுப்பு மசோதாவுக்கு மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

 1. எதிர்க்கட்சி துணைத்தலைவர்

சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி உதயகுமார் நியமிக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

 

 1. மாணவா்களிடம் கலைச்சொல்லாக்கத்தை ஊக்குவிக்க தமிழ் நுண் பயிலரங்கம்

தமிழ் நுண் பயிலரங்கம் வாயிலாக மாணவா்களிடம் கலைச்சொல்லாக்கச் சிந்தனையை ஊக்குவிக்கும் வகையில், தமிழக அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககமும் சவூதி அரேபியா மெய்நிகா் தமிழிருக்கையும் புரிந்துணா்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன.

 

 1. டிஜிபி தலைமையில் புலனாய்வுக் குழு

கள்ளக்குறிச்சி வன்முறை சம்பவம் தொடா்பாக விசாரிக்க சேலம் சரக டிஐஜி பிரவின் குமார் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு  உத்தரவிட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் பிளஸ் 2 மாணவி கடந்த 13-ஆம் தேதி மா்மமான முறையில் உயிரிழந்தார்.

 

 1. 3டி தொழில்நுட்பத்தில் ராக்கெட் உற்பத்தி செய்ய திட்டம்

சென்னை ஐஐடியால் உள்நாட்டிலேயே 5 ஜி தொழில் நுட்பம் தகவல் தொடர்பில் கண்டறியப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து 6 ஜி தகவல் தொழில் நுட்பம் வரும் போது, செயற்கை கோள் மூலம் தான் செயல்படுத்த முடியும். எனவே அதிகளவில் செயற்கை கோள்களை அனுப்பும் ராக்கெட் தொழிற்சாலையை சென்னை ஐஐடி கீழ் இயங்கும் Agnikul நிறுவனம் தொடங்கியுள்ளது. 3டி பிரிண்டிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ராக்கெட் தயாரிக்க உள்ளது.

இதன்மூலம் 72 மணி நேரத்தில் ராக்கெட் எஞ்சின் தயாரிக்க முடியும். அதற்கான திட்டங்கள் சென்னை ஐஐடி ஆராய்ச்சி மையத்தில் தொடங்கபட்டுள்ளது. அரசின் வீட்டு வசதி வாரிய வீடுகளை கட்டுவதற்கு 3டி பிரிண்டிங் தொழில் நுட்பம் பயன்படுத்த பட உள்ளது. சுற்று சூழல் தொடர்பான இலக்கை அடைவதற்கு ஆராய்ச்சி மையம் தொடங்க உள்ளது.

 

 1. ஆசிய பளு தூக்குதல்: தங்கம்

உஸ்பெகிஸ்தானில் உள்ள தாஷ்கண்ட் நகரில் ஆசிய யூத் மற்றும் ஜூனியர் பளு தூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் மகளிருக்கான 45 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் இளம் வீராங்கனை, 18 வயதான ஹர்ஷதா கருட், 157 கிலோ எடையை தூக்கி முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். இதே பிரிவில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீராங்கனையான செளமியா தேவி 145 கிலோ எடையை தூக்கி வெண்கலம் வென்றார்.

C.A.20.07.2022 (English Version)

 1. International Moon Day 2022: On July 20, 1969, American astronauts Neil Armstrong and Buzz Aldrin became the first humans to reach the Moon.

 

 1. Weapons of Mass Destruction Prohibition Bill

External Affairs Minister S. Jaishankar introduced the Prohibition of Weapons of Mass Destruction Bill amid heavy opposition in the Rajya Sabha. He said that this amendment has been made as there is a need to prevent the financing of the procurement of weapons of mass destruction. It is noteworthy that Lok Sabha approved the WMD Prohibition Bill.

 

 1. Deputy Leader of Opposition

Edappadi Palaniswami has announced that RB Udayakumar will be appointed as the Deputy Leader of the Legislative Assembly Opposition.

 1. Tamil mini-workshop to promote artistic expression among students

In order to promote artistic thinking among the students through Tamil mini-workshop, Tamil Nadu Government’s Senthamil Etymology Akaramudhali Project Directorate and Saudi Arabia Virtual Tamil University have entered into an MoU.

 1. An investigation team headed by DGP

Tamil Nadu Director General of Police C. Shailendra Babur has ordered the formation of a special investigation team under the leadership of Salem Saraga DGP Pravin Kumar to investigate the Kallakurichi violence incident. A Plus 2 student died tragically on the 13th in a private school hostel in Kaniyamur, Kallakurichi district.

 1. Project to manufacture rocket in 3D technology

IIT-Chennai has discovered 5G technology locally in information technology. After that, when 6G information technology comes, it can be implemented only through satellite. So Agnikul, a company run under IIT, Chennai, has started a rocket factory that will send more satellites. The rocket is to be manufactured using 3D printing technology.

With this a rocket engine can be made in 72 hours. Projects for this have been initiated at IIT Chennai Research Centre. 3D printing technology is to be used for construction of government housing board houses. A research center is about to be launched to achieve the goal related to environment.

 1. Asian Weightlifting: Gold

The Asian Youth and Junior Weightlifting Championships are being held in Tashkent, Uzbekistan. India’s youngest player, 18-year-old Harshada Garut, lifted 157 kg and won gold in the women’s 45 kg category. Another Indian competitor in the same category, Selamia Devi won bronze by lifting 145 kg.

 

Click here to download PDF: Download Now