Home GOVERNMENT EXAMS TNPSC Current Affairs – July 21, 2022

TNPSC Current Affairs – July 21, 2022

0
33

C.A.21.07.2022 (Tamil Version)

  • 21-07-22 இன்று சுதந்திர போராட்ட வீரரும், இலக்கியத்தில் முக்கிய படைப்பாளியுமான உமாசங்கர் ஜோஷி (1911). நோபல் பரிசு பெற்ற சிறந்த எழுத்தாளரும், பத்திரிக்கையாளருமான எர்னஸ்ட் ஹெமிங்வே (1899) ஆகியோரின் பிறந்த தினம்.

  • ஆப்பிரிக்க சிவிங்கியை மறு அறிமுகம் செய்யலாம் என உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது. தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் (NTCA) தாக்கல் செய்த மனுவுக்கு, உச்ச நீதிமன்றம் இந்த அனுமதியை வழங்கியது. ஆப்பிரிக்க சிவிங்கியை இந்தியாவில் எந்தப் பகுதியில் விடுவிக்க வேண்டும், அவற்றால் அங்கு வாழ முடியுமா, சூழல் ஒத்துக் கொள்ளுமா போன்றவற்றைக் கவனமாக ஆராய்ந்தபின், அவற்றைக் கொண்டு வரவேண்டும் என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இதன் அடிப்படையில் நமிபியாவில் இருந்து 8 சிவிங்கி புலிகளை கொண்டுவர இரு நாடுகளுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் புதன்கிழமை (20.7.2022) கையெழுத்தானது.

  • துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு முதலிடம்

தென் கொரியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா 15 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்து நிறைவு செய்துள்ளது. இதில் 5 தங்கம், 6 வெள்ளி, 4 வெண்கலம் அடக்கம்.

  • இலங்கை அதிபர் தேர்வு

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையின் புதிய அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கானத் தோ்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதிபர் தேர்தலில் மும்முனை போட்டி நிலவிய நிலையில் எம்.பிக்களின் ஆதரவைப் பெற்று இடைக்கால அதிபர் ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

  • உளவுத்துறைக்கு புதிய ஐ.ஜி

உளவுத்துறையின் புதிய ஐ.ஜி.யாக செந்தில்வேலனை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் உளவுத்துறை ஐ.ஜி. ஆசியம்மாள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு அமலாக்கத்துறை ஐ.ஜி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

  • மாத தவணை செலுத்த செயலி

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புதாரர்கள் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய தங்களது தவணைகளை எளிய முறையில் செலுத்திட வேண்டும் என்பதற்காக “நம்ம குடியிருப்பு” என்ற புதிய செயலி இன்றைய தினம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இந்த செயலியை குடியிருப்புதாரர்கள். தங்களது அலைபேசியில் பதிவிறக்கம் செய்து கொண்டு வாரியத்திற்கு செலுத்த வேண்டிய மாத தவணைத் தொகை, நம் குடியிருப்பு நம் பொறுப்பு திட்டத்திற்கான பராமரிப்பு தொகை, நிலுவைத் தொகை, போன்றவற்றை செலுத்தலாம். www.tnuhdb.tn.gov.in என்ற இணைய தள முகவரியில் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய தொகையினை கியூஆர் கோடு மூலமாகவும் செலுத்தலாம்.

C.A.21.07.2022 (English Version)

  1. 21-07-22 Uma Shankar Joshi (1911) today is a freedom fighter and a major creator of literature. Birth anniversary of Nobel Prize-winning author and journalist Ernest Hemingway (1899).

  • The Supreme Court recently ruled that African chives can be reintroduced. The Supreme Court granted this permission to a petition filed by the National Tiger Conservation Commission (NTCA). The Supreme Court has said that African chives should be brought after careful study of which area should be released in India, whether they can live there and whether the environment is suitable. Based on this, a memorandum of understanding was signed between the two countries on Wednesday (20.7.2022) to bring 8 chivingi tigers from Namibia.

  • Shooting: India tops

India finished top with 15 medals at the Shooting World Cup held in South Korea. This includes 5 Gold, 6 Silver and 4 Bronze.

  • Election of President of Sri Lanka

The vote to elect the new President of Sri Lanka, which is caught in a severe economic crisis, is over and the vote counting has been done. Official information has come out that Interim President Ranil Wickremesinghe has won the presidential election with the support of MPs.

  • New IG for Intelligence

The Tamil Nadu government has appointed Senthilvelan as the new IG of Intelligence. Also Intelligence I.G. Asiammal has been transferred and appointed as IG of Enforcement Department.

  • Monthly installment payment app

Tamil Nadu Urban Habitat Development Board has launched a new application called “Namma Kudiyiruppu” today for residents to pay their dues to the Board in a simple manner and the residents of this app. You can download it on your mobile phone to pay the monthly installments due to the board, the maintenance amount for our housing liability plan, arrears, etc. The amount due to the Board can also be paid through QR line at the website address www.tnuhdb.tn.gov.in.

 

Click here to download PDF: Download Now