TNPSC Current Affairs – July 16, 2022

0
46

C.A.15.07.2022 (Tamil Version)

  1. உலக இளைஞர் திறன் தினம் உலக இளைஞர் திறன் தின தீம் 2022 “எதிர்காலத்திற்கான இளைஞர் திறன்களை மாற்றுதல்”

 

  1. இந்தியா, இஸ்ரேல், அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளைக் கொண்ட ஐ2யு2 கூட்டமைப்பு, நடைமுறை ஒத்துழைப்புக்கான சிறந்த உதாரணமாகத் திகழ்வதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். ஐ2யு2 கூட்டமைப்பின் முதலாவது மாநாடு காணொலி வாயிலாக வியாழக்கிழமை நடைபெற்றது. அதில் பிரதமா் மோடி, அமெரிக்க அதிபா் ஜோ பைடன், இஸ்ரேல் பிரதமா் யாயிா் லபீட், ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபா் முகமது பின் சயீத் அல் நயான் ஆகியோா் கலந்துகொண்டனா். நீா், எரிசக்தி, போக்குவரத்து, விண்வெளி, சுகாதாரம், உணவுப் பாதுகாப்பு ஆகிய துறைகளில் முதலீடுகளை அதிகரிப்பதற்கு கூட்டமைப்பு உறுதி ஏற்றுள்ளது. சா்வதேச உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உணவுப் பூங்காக்களை அமைக்க இந்தியா நிலத்தை வழங்கும். இந்தியாவில் ஒருங்கிணைந்த உணவுப் பூங்காக்களை அமைப்பதற்காக சுமாா் ரூ.15,000 கோடியை ஐக்கிய அரபு அமீரகம் முதலீடு செய்யவுள்ளது. உணவுப் பூங்காக்களை மேம்படுத்துவதற்கான தொழில்நுட்பம் சாா்ந்த தீா்வுகளை அமெரிக்காவும் இஸ்ரேலும் வழங்கும். அந்நாடுகளைச் சோ்ந்த தனியாா் நிறுவனங்கள் இத்திட்டத்தில் ஒருங்கிணைந்து பணியாற்றும். ஐ2யு2 கூட்டமைப்பு நாடுகளின் ஒத்துழைப்பானது சா்வதேச வளா்ச்சிக்குப் பெருமளவில் உதவும்.

 

  1. பண்டல் செய்யப்பட்ட அரிசி, தானியங்கள் உள்ளிட்டவைகளுக்கு விதிக்கப்பட்ட 5% ஜிஎஸ்டி விதிப்பை மத்திய அரசு விலக்கிக் கொள்ள வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரிசி ஆலைகள், அரிசி மொத்த, சில்லறை விற்பனையாளா்கள் சனிக்கிழமை (ஜூலை 16) கடையடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனா். பஞ்சாப் மாநிலம், சண்டீகா் நகரில் அண்மையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பண்டல் (பேக்கிங்) செய்யப்பட்ட அரிசி, கோதுமை, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருள்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி விதிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

  1. தென் கொரியாவில் நடைபெற்ற ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா 3 தங்கம், 4 வெள்ளி, 1 வெண்கலம் என 8 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்து நிறைவு செய்துள்ளது.

 

  1. இந்தியாவின் முதல் குரங்கு காய்ச்சலை கேரளா பதிவுசெய்துள்ளது. புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனம் இந்த நோயை உறுதி செய்துள்ளது.

 

C.A.15.07.2022 (English Version)

  1. World Youth Skills Day 2022. Theme of World Youth Skills Day 2022 “Transforming Youth Skills for the Future”

 

  1. Prime Minister Narendra Modi said that the I2U2 consortium comprising India, Israel, USA and United Arab Emirates is a good example of practical cooperation. The first meeting of the I2U2 consortium was held on Thursday via video link. Prime Minister Modi, US President Joe Biden, Israeli Prime Minister Yair Labid, United Arab Emirates President Mohammed bin Saeed Al Nayan participated in it. The alliance has pledged to increase investments in water, energy, transport, space, health and food security sectors. India will provide land for setting up food parks to ensure foreign food security. The UAE will invest around Rs 15,000 crore to set up integrated food parks in India. The United States and Israel will provide technology-based solutions for developing food parks. Private companies from those countries will work together in this project. Cooperation between I2U2 countries will greatly help international development.

 

  1. Rice mills, rice wholesalers and retailers across Tamil Nadu have announced a strike on Saturday (July 16) to demand that the central government withdraw the 5% GST imposed on bundled rice and grains. In the recent meeting of the GST Council held in Chandigarh, Punjab, it has been announced that 5 percent GST will be levied on packaged food items including rice, wheat and pulses.

 

  1. India finished top with 8 medals including 3 gold, 4 silver and 1 bronze at the ISSF World Cup Shooting Championship held in South Korea.

 

  1. Kerala reports India’s first monkeypox case.National Institute of Virology, Pune had confirmed the disease.

 

Click here to download PDF: Download Now