TNPSC Current Affairs – July 16, 2022

0
33

C.A.16.07.2022 (Tamil Version)

 1. உலக பாம்பு தினம் – உலகெங்கிலும் உள்ள பல்வேறு வகையான பாம்புகள் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க ஆண்டுதோறும் ஜூலை 16 அன்று அனுசரிக்கப்படுகிறது.

 

 1. தேசிய கல்வி நிறுவனங்கள் தரவரிசையில் சென்னை ஐஐடி ஒட்டுமொத்த பிரிவில் தொடர்ந்து 4-வது முறையாக முதலிடத்தை பெற்றுள்ளது. மேலும், தமிழகத்தைச் சேர்ந்த 8 கல்வி நிறுவனங்கள் முதல் 10 இடத்திற்கு வந்துள்ளதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். 2022-ஆம் ஆண்டு தேசிய கல்வி நிறுவனங்கள் தரவரிசைப் பட்டியலை மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று காணொலி வழியில் வெளியிட்டார். அதில் சென்னை ஐஐடி ஒட்டுமொத்தப் பிரிவிலும், பொறியியல் பிரிவிலும் தொடர்ந்து நான்காவது முறையாக முதலிடத்தைப் பெற்றுள்ளது. பல்கலைக்கழகங்கள் பட்டியலில் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சைன்ஸ் பெங்களூரு (indian institute of science) முதலிடத்தைப் பெற்றுள்ளது.

 

 1. தேசிய மின் ஆளுமை சேவைக்கான மதிப்பீட்டில், மத்திய அமைச்சக இணையதளங்களில் உள்துறை விவகார அமைச்சக இணையதளம் சிறப்பாக அமைக்கப்பட்டு முதலிடத்தை பெற்றுள்ளதாக மத்திய நிா்வாகச் சீா்திருத்தங்கள், பொதுமக்கள் குறைதீா்ப்புத் துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. மேலும், உள்துறை அமைச்சகத்திற்கு கீழேயுள்ள எண்ம (டிஜிட்டல்) காவல் தளத்திற்கு இரண்டாவது இடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 1. எதிரிகளிடம் ரேடாரில் சிக்காத வகையில் அதிநவீன தொழில்நுட்பங்களுடன் தயாரிக்கப்பட்ட ‘துனாகிரி’ போர்க்கப்பலை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி, மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற்றது.

 

 1. இந்தியாவின் கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் பறைசாற்றும் வாராணசி நகரம், எஸ்சிஓ அமைப்பின் கலாச்சார சுற்றுலா தலைநகராக அறிவிக்கப்பட்டுள்ளது

 

 1. இலங்கையின் இடைக்கால அதிபராக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்று கொண்டார். இதனிடையே, புதிய அதிபர் வரும் 20ம் தேதி தேர்வாவார் என தெரியவந்துள்ளது. இலங்கை அதிபராக இருந்த கோத்தபய, மக்களின் போராட்டம் காரணமாக இலங்கையில் இருந்து தப்பி மாலத்தீவு வழியாக சிங்கப்பூர் சென்றுள்ளார். அங்கிருந்து தனது பதவியை ராஜினாமா செய்து சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தனாவுக்கு இமெயில் அனுப்பினார். அவரது ராஜினாமா கடிதம் ஏற்று கொள்ளப்பட்டது.

 

C.A.16.07.2022 (English Version)

 1. World Snake Day – is observed annually on July 16 to raise awareness about the various species of snakes around the world.

 

 1. IIT Chennai has been ranked first in the overall category for the 4th time in a row in the National Institution Rankings. Also, Chief Minister M.K.Stalin congratulated 8 educational institutes from Tamil Nadu for making it to the top 10 places. Union Education Minister Dharmendra Pradhan released the ranking list of National Educational Institutions for the year 2022 through video yesterday. Out of which, IIT Chennai has bagged the top position in the overall category and in the engineering category for the fourth time in a row. In the list of universities, Indian Institute of Science Bangalore (Indian Institute of Science) has got the first position.

 

 1. In the assessment of the National e-Governance Service, the Department of Central Administrative Reforms and Public Grievances announced on Friday that the website of the Ministry of Home Affairs has been set up well and has been ranked first among the websites of the central ministries. It has also been informed that the second position has been given to the eighth (digital) police station below the Ministry of Home Affairs.

 

 1. A ceremony was held in Kolkata, West Bengal, to dedicate the warship ‘Dunagiri’, which has been manufactured with advanced technologies so that it cannot be detected by the enemy’s radar.

 

 1. The city of Varanasi, which exemplifies the culture and heritage of India, has been declared as the Cultural Tourism Capital of the SEO Organization

 

 1. Ranil Wickremesinghe was sworn in as the Interim President of Sri Lanka. Meanwhile, it has been revealed that the new president will be elected on the 20th. Gotabaya, who was the president of Sri Lanka, fled from Sri Lanka due to the people’s protests and went to Singapore via the Maldives. From there he resigned his position and sent an email to Speaker Mahinda Yaba Abeywardhana. His resignation letter was accepted.

Click Here to Download PDF: Download Now