TNPSC Current Affairs – May 28, 2021

0
31

C.A.28.05.2022 (Tamil Version)

 

 1. “டூம்ப் ஆஃப் சாண்ட்” நாவலுக்காக முதன்முறையாக இந்திய எழுத்தர் கீதாஞ்சலி ஸ்ரீ-க்கு சர்வதேச புக்கர் விருது வழங்கப்பட்டுள்ளது. “ரெட் சமாதி” என்று ஹிந்தியில் எழுதப்பட்ட இந்த நாவல் 80 வயது பெண் தனது பதின்ம பருவத்தில் இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின்போது இன்னல்களை குறிப்பிடும் வகையில் இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது.

 

 1. எரிசக்தித்துறையில் நிலக்கரியின் பயன்பாட்டை 2035-க்குள் முடிவுக்கு கொண்டுவர ஜி 7 – நாடுகள் உறுதியேற்றுள்ளது.

 

 1. இலங்கை அதிபரின் அதிகாரத்தை குறைத்து நாடாளுமன்றத்துக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்க வகை செய்யும் 21-வது சட்ட திருத்த மசோதாவை விரைவில் நிறைவேறுவது என்று மூத்த அரசியல் தலைவர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

 1. தமிழகத்தில் சேலம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் பாரத் நெட் திட்டத்தை தொங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் சென்னை தலைமை செயலகத்தில் தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சர் மனோ தங்கராஜ் முன்னிலையில் கையெழுத்தானது. விழுப்புரம்,ஈரோடு, பெரம்பலூர், அரியலூர், கடலூர், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இருக்கும் 3001 ஊராட்சிகளும் பாரத் திட்டத்தின் மூலம் அகண்ட அலைக்கற்றை சேவையை பெரும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

 

 1. வருமானத்துக்கு அதிகமாக சொத்துகளை சேர்த்த வழக்கில் ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சௌதாலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், 50 லட்சம் அபராதமும் விதித்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 

 1. செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் ஆன்லைன் செஸ் போட்டியில் இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா இரண்டாம் இடம் பிடித்துள்ளார். இறுதிச்சுற்றில் சீன வீரர் டிங்லிரெனை எதிர்கொண்டார். மேலும் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சார்பில் விளையாட்டு வீரராக பிரக்ஞானந்தா இணைத்துக்கொள்ளப்பட்டார்.

 

 1. சென்னையில் நேற்று (27.5.2022) நடைபெற்ற விழாவில் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கர்பிணிகள் PICME 2.0 இணையதளத்தில் தங்கள் கர்பத்தை சுயமாக பதிவு செய்து ரிச் எண் பெறும் வசதியை தொடங்கி வைத்தார். PICME இணையத்தளத்தில் கர்ப்பிணிகளின் விவரங்கள் கர்பப்பதிவு முதல் குழந்தை பிறந்து 5 ஆண்டுகள் வரை பதிவு உள்ளது. இந்த இணையத்தளம் ஏப்ரல் 2008-ம் ஆண்டு தேசிய தகவலியல் மையத்தால் உருவாக்கப்பட்டது.

 

 1. செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஊட்டச்சத்து பூங்காவை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன் மற்றும் மா.சுப்பிரமணியன் ஆகியோர் நேற்று (27.5.2022) தொடங்கி வைத்தனர்

 

C.A.28.05.2022 (English Version)

 1. Indian writer Gitanjali Sri has been awarded the International Booker Prize for the first time for her novel “Tomb of Sand”. Written in Hindi as “Red Samadhi”, the novel is about an 80-year-old woman who suffered during her teenage years during the Indo-Pakistani partition.

 

 1. The G7 countries are committed to ending the use of coal in the energy sector by 2035.

 

 1. It has been reported that senior political leaders have decided that the 21st Amendment Bill, which seeks to reduce the powers of the Sri Lankan president and give additional powers to parliament, will be passed soon.

 

 1. Memorandums of Understanding (MoUs) were signed in 9 districts in Tamil Nadu, including Salem, in the presence of Information Technology Minister Mano Thankaraj at the Chennai General Secretariat. Minister Mano Thankaraj said that all the 3001 panchayats in Villupuram, Erode, Perambalur, Ariyalur, Cuddalore, Dharmapuri, Kallakurichi, Salem and Nilgiris districts will be able to avail broadband service through the Bharat project.

 

 1. Former Delhi Chief Minister Om Prakash Chaudhary has been sentenced to four years in jail and fined Rs 50 lakh by a Delhi CBI special court in a case of amassing wealth in excess of his income.

 

 1. Pragyananda, India’s youngest Grand Master, has finished second in the Chessable Masters online chess tournament. In the final, the Chinese player faced Dingliren. Pragyananda was also inducted as an athlete on behalf of Indian Oil.

 

 1. At a function held in Chennai yesterday (27.5.2022), Health Minister Subramanian launched the facility for pregnant women to register their pregnancy on the PICME 2.0 website and get a rich number. Pregnancy details on the PICME website are recorded from pregnancy to birth to 5 years. This website was created in April 2008 by the National Center for Informatics.

 

 1. Ministers Thamo Anparasan and Ma Subramanian inaugurated the Nutrition Park at Chengalpattu Government Medical College Hospital yesterday (27.5.2022).

Click here to download PDF material:CA 28.05.2022